அந்த மனிதர் மீது ஆயிரம் விமர்சனங்கள் இருக்கிறது. ஆனால் அந்த மனிதர் எளிமையானவர். அவரின் எளிமை மீது பலர் கேள்வி எழுப்புகின்றனர். அதை நாம் புறம்தள்ள முடியாது. அவர் எளிமையாக இருக்க பலகோடி செலவானதாக விமர்சனங்கள் இருக்கிறது. அதுவும் தெரியும். தென்னாப்பிரிக்காவிலிருந்து அவர் மிகவும் தாமதாமாய்தான் இந்தியா வந்தார். அதுவரை காங்கிரஸ் செய்யாத பலவைகளை அவர் செய்தார். முக்கியமாக உழைப்பாளி மக்களை அவர் சுதந்திரப் போராட்டத்தில் இடுபட செய்தார்.
அவர் சனாதானவாதியா?
ஆம்.
அவர் மனுதர்மத்தை ஏற்றுக்கொண்டவர்தானே?
ஆம்
அவர் பிர்லா மாளிகையில் வாழ்தவர்தானே?
ஆம்
இருப்பினும் அவரிடம் கற்றுக்கொள்ள எதுவே இல்லையா?
இருக்கிறது..!
எளிய மக்களை அவர்கள் உணர்வின் அடிப்படையிலிருந்து போராட அழைத்தார்.. வாழ்வின் சகல மட்டங்களிலும் மக்கள் உணர்வுடன் கலந்திருக்கும் உப்பை அவர் தேர்ந்தெடுக்க அதுதான் காரணம். உப்பு சத்தியாகிரகத்தின் வடிவமும், கைராட்டை போராட்ட வடிவமும் அதுதான்.
ஏகாதிபத்திய துணிகளை எதிர்க்க உள்ளூரில் துணியை செய்யுங்கள் என்றார்.
காந்தியிடம் கற்றுக்கொள்ள நிறைய இருகிறது.
உள்ளூர் சமூகம் சார்ந்த போராட்டங்களை கையில் எடுத்து வெற்றியடைந்தவர் அவர். அந்த வடிவங்கள் நமக்கு தேவைப்படுகிறது.
அக்டோபர் 2
அவரை நினைப்போம். அவரை விமர்சனங்களை முன்வைத்து தூக்கி எரியாமல், அவரின் ஆளுமையின் மையத்தில் இருக்கிற மக்கள் திரட்சியை கவனத்தில் கொள்வோம்.
இங்கு பிறந்ததில் சிறந்தது என்பதாலேயே, நீ மாத்மாவானாய்!
பதிலளிநீக்குவாழ்க நீ எம்மான்...
Pattali makkalai Koottaka odukki vaikka Tatakkal endradutha thathuvame GANDHIYAM....
பதிலளிநீக்குHe is the main person for the hanging of Bhagath Singh...
gandhi -he commented>>if those (Bhagath singh's)struggles continue, I afraid, The India's freedom will fall in the hands of ROWDIES/KALI PAYALS..
--THAT GANDHI refused to represent and rescue the three mortals life convictions from the British government...
O Gandhi /O Gandhi..Yun Geethai nayakanum...
Seethai nayakanum
auyhangalai konde akkiramangalai azhitha podu -
engalai muttum ahimsaiyai kadaipidikka sollukirayee? Jnayama ?
Yun police karan BHAGAVAT GEETHAI PUTHAKATHHAL ADIKKATTUM ENGALAI...
Salem sivappanathen Thola ???
--VIMALAVIDYA@GMAIL.COM