அமெரிக்கா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அமெரிக்கா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 24 அக்டோபர், 2024

சுதந்திர அலையின் முதல் துளி நான்: ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாரின் உயில்.


 

மரண தாண்டவம் ஆடும் இஸ்ரேல்:

       ஹமாஸ் தாக்குதலைத் தொடர்ந்து காஸா மீதான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அக்டோபர் 7 ஆகும். கடந்த ஒரு வருடமாக, காசா ஒரு மிருகத்தனமான போருக்கு உட்பட்டுள்ளது, இதன் விளைவாக 41,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர், அவர்களில் பெரும்பாலோர் பெண்கள் மற்றும் குழந்தைகள். கட்டிட இடிபாடுகளுக்குள் குறைந்தது மேலும் 10,000 பேர் புதையுண்டுள்ளனர். பெரும்பாலான பிரதேசங்கள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. 

 இஸ்ரேலியர்கள் வேண்டுமென்றே பள்ளிகள் மற்றும் மருத்துவமனை வளாகங்களை குறிவைக்கின்றனர், ஏனெனில் அவர்கள் குடிமக்களுக்கு அடைக்கலம் தருகிறார்கள். இஸ்ரேலின் நடவடிக்கைகள் இனப்படுகொலைக்கு வழிவகுக்கும் என்று சர்வதேச நீதிமன்றம் அறிவித்த போதிலும், இஸ்ரேல் அத்தகைய இராணுவ நடவடிக்கைகளில் இருந்து விலகுமாறு கேட்டுக் கொண்ட போதிலும், இஸ்ரேல் பாலஸ்தீன மக்கள் மீதான தனது போரைத் தொடர்ந்தது. 

 இஸ்ரேல் தனது போரை நடத்தும் தண்டனையின்மைக்கு அமெரிக்கா வழங்கிய முழு ஆதரவின் காரணமாகும்.  அமெரிக்க காங்கிரஸின் இரு அவைகளும் சமீபத்தில் வருகை தந்த இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு அளித்த கைத்தட்டல் இந்த இழிவான ஆதரவை முழுமையாக அம்பலப்படுத்தியது. பிரதம மந்திரி நெதன்யாகு ஜனாதிபதி பிடனால் முன்மொழியப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கைக்கு உடன்பட மறுத்துவிட்டார். 

 இதற்கிடையில், எல்லை தாண்டிய ஷெல் தாக்குதல்கள் மற்றும் இஸ்ரேலிய ஆயுதப் படைகளுக்கும் லெபனானில் உள்ள ஹெஸ்பொல்லாவிற்கும் இடையேயான தாக்குதல்கள், பெய்ரூட் மற்றும் தெற்கு லெபனானில் உள்ள ஹெஸ்பொல்லா தலைவர்கள் மற்றும் பணியாளர்களை குறிவைத்து இஸ்ரேல் வியத்தகு முறையில் தீவிரமடைந்துள்ளது.

ஹிஸ்புல்லாவின் பல இராணுவத் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் மற்றும் அவர்களின் தொடர்பு வலையமைப்பு பேஜர்களின் வெடிப்பில் காணப்பட்டது. இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில், நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். லெபனான், சிரியா பிரதேசங்களில் குண்டுவீசி தாக்குதல் நடத்தும் இஸ்ரேலின் போர்க்குணமிக்க செயல் மற்றும் தெஹ்ரானில் ஹமாஸ் தலைவர் ஹனியே படுகொலை செய்யப்பட்டமை அனைத்தும் மேற்கு ஆசியாவில் மோதலின் விரிவாக்கத்திற்கு இட்டுச் செல்கின்றன. 

இந்த பின்னணியில்...

கடந்த ஆண்டு அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாரை தங்கள் படையினர் கொன்றுவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ”ட்ரோன்கள், ஒட்டுக்கேட்பு கருவிகள், உளவாளிகள் மூலம் ஆயிரக்கணக்கான இஸ்ரேலிய துருப்புகள் சின்வாரின் இருப்பிடத்தைக் கண்டறிய முயற்சி செய்த நிலையில், அவர் கொல்லப்பட்டது எந்த ஆச்சர்யத்தையும் அளிக்கவில்லை” என இஸ்ரேல் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார்.

 “இனப்படுகொலை வரலாற்றுக்குப் பின்னர், இஸ்ரேல் மக்களின் வரலாற்றில் மோசமான படுகொலையை அவர் நிகழ்த்தினார். ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்களின் கொலை மற்றும் நுற்றுக்கணக்கானோர் கடத்தப்பட்டதற்கு மூளையாகச் செயல்பட்ட பயங்கரவாதி, இன்று எங்களின் வீரமிக்க படையினரால் கொல்லப்பட்டார். நாங்கள் ஏற்கெனவே உறுதியளித்தது போன்று இன்று அவரைப் பழிதீர்த்துவிட்டோம்,” என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.

இப்படிதான் அமெரிக்க ஆதரவு ஊடகங்கள் ஊதித்தள்ளின. உண்மையில் உலகின் மிகப்பெரிய தீவிரவாத அமைப்புகள் எனில் அது அமெரிக்க ராணுவமும், இஸ்ரேல் ராணுவமும்தான். இந்த கட்டுரையின் துவக்கத்தில் உள்ள நிலையை உருவாக்கிய இஸ்ரேல் சின்வார் மரணத்தில் மகிழ்ச்சி அடைந்துள்ளது. ஆனால் கடந்த 2015ஆம் ஆண்டு அமெரிக்க வெளியுறவுத் துறை சின்வாரை “உலகளாவிய பயங்கரவாதி” (Specially Designated Global Terrorist) என அறிவித்தது. கடந்த மே 2021இல் காஸா முனையில் உள்ள இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் அவரது வீடு மற்றும் அலுவலகம் இலக்கு வைக்கப்பட்டது.

யார் இந்த அபு இப்ராஹிம்?

அபு இப்ராஹிம் எனப் பரவலாக அறியப்படும் 61 வயதான ஷஹீத் யஹ்யா சின்வார் (1962-2024) காஸா முனையின் கடைக்கோடி தெற்கில் கான் யூனிஸில் உள்ள அகதிகள் முகாமில் பிறந்தார். அவருடைய பெற்றோர் ஆஷ்கெலான் நகரை சேர்ந்தவர்கள். ஆனால், 1948ஆம் ஆண்டு இஸ்ரேல் நிறுவப்பட்டதைத் தொடர்ந்து, பாலத்தீனத்தில் பெருந்திரளான பாலத்தீனர்கள் தங்களின் முன்னோர்களின் வீடுகளில் இருந்து புலம்பெயர்ந்தனர். அதையடுத்து அவர்கள் அகதிகளாகினர். பாலத்தீனர்கள் இதை, “அல்-நக்பா” (al-Naqba) பேரழிவு என்று அழைக்கின்றனர். கான் யூனிஸ் ஆடவர் மேல்நிலைப் பள்ளியில் அவர் படித்தார். பின்னர், காஸாவில் உள்ள இஸ்லாமிய பல்கலைக் கழகத்தில் அரபு மொழியில் இளங்கலை பட்டம் பெற்றார்.

 கடந்த 1982ஆம் ஆண்டில் தனது 19வது வயதில் “இஸ்லாமிய நடவடிக்கைகளுக்காக” சின்வார் முதன்முறையாகக் கைது செய்யப்பட்டார். அதன்பின், 1985இல் மீண்டும் கைது செய்யப்பட்டார். அந்த நேரத்தில்தான் ஹமாஸ் அமைப்பின் நிறுவனர் ஷேக் அகமது யாசினின் நம்பிக்கையை சின்வார் பெற்றார்.

கடந்த 1987ஆம் ஆண்டு ஹமாஸ் நிறுவப்பட்டு, இரண்டு ஆண்டுகள் கழித்து, அல்-மஜ்த் (al-Majd) என அமைப்பிற்கு உள்ளேயே செயல்படும் பாதுகாப்பு அமைப்பை உருவாக்கினார். அப்போது அவருக்கு வயது 25 மட்டுமே.இஸ்ரேலிய வீரர்கள் இருவரை கடத்திக் கொலை செய்யத் திட்டமிட்டதாக, கடந்த 1988ஆம் ஆண்டு அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அதே ஆண்டு, பாலத்தீனர்கள் 12 பேரை கொலை செய்ததாக குற்றம் நிரூபிக்கப்பட்டு, நான்கு ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பட்டு, அதே ஆண்டில் அவர் கைது செய்யப்பட்டார்.

சின்வாரின் சிறை நாட்கள்:

தன்னுடைய இளம் பருவத்தின் பெரும்பகுதியை, 1988-2011 வரையிலான 22 ஆண்டுகளை அவர் இஸ்ரேலிய சிறைகளிலேயே கழித்தார். சில காலத்தை அவர் தனிமை சிறையிலும் கழித்தார். இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்ட சின்வார், ஹீப்ரு மொழியை சரளமாகக் கற்றார், இஸ்ரேல் செய்தித்தாள்களையும் அவர் வாசித்தார். இஸ்ரேலிய பணயக் கைதி ஒருவரை விடுவிப்பதற்குப் பதிலாக, பாலத்தீன, இஸ்ரேலிய அரபு சிறைக் கைதிகள் 1,027 பேரை விடுவிக்கும் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, சின்வார் 2011ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார்.

சின்வார் மீண்டும் காஸாவுக்கு திரும்பியபோது, ஹமாஸின் நிறுவன தலைவராக இஸ்ரேலிய சிறைகளில் தனது பெரும்பகுதி வாழ்க்கையைக் கழித்த பெருமைக்காக அவர் தலைவராக ஏற்றுக்கொள்ளப்பட்டார்.

சின்வார் எழுதிய இறுதி உயில்:

 யஹ்யா எனும் நான்; நாடுகடத்தலை தற்காலிகத் தாயகமாகவும் கனவை நித்தியப் போராக மாற்றிக் கொண்ட ஒரு அகதியின் மகன். தெருக்களில் கழிந்த குழந்தைப் பருவம், நீண்ட காலச் சிறைவாசம், நித்தமும் இம்மண்ணில் சிந்தப்பட்ட ஒவ்வொரு ரத்தத் துளிகளென என் வாழ்வில் நான் கழித்த ஒவ்வொரு நொடியும் என் கண்களுக்கு முன்பாக ஒளிர்ந்து கொண்டிருக்க இவ்வார்த்தைகளை எழுதுகிறேன்.

நான் 1962இல் கான் யூனிஸ் முகாமில் பிறந்தேன். ‘ஃபலஸ்தீனம்’ என்பது ஒரு கந்தலான நினைவாகவும் அரசியல்வாதிகளின் மேசைகளில் உள்ள சில வரைபடங்களில் இருந்து மறைந்தும் இருந்த காலம் அது. எனது வாழ்க்கை நெருப்புக்கும், சாம்பலுக்கும் இடையில் கழித்தன. ஆக்கிரமிப்பாளர்களின் நிழலில் வாழ்வது நிரந்தரச் சிறையில் வாழ்வததற்குச் சமம் என்பதை ஆரம்பத்திலேயே உணர்ந்தேன்!

இந்த மண்ணில் வாழ்வது சாதாரணமான ஒன்றல்ல என்பதை நான் எனது சிறு வயதிலிருந்தே புரிந்திருந்தேன். இங்கு பிறந்த எவரும் சுதந்திரத்திற்கான பாதை மிக நீண்டது என்பதைப் புரிந்தவர்களாயும், யாராலும் வெல்ல முடியாத ஆயுதங்களை இதயத்தில் சுமந்தவர்களாயும் இருக்க வேண்டும்.

ஆக்கிரமிப்பாளர்கள் மீது முதல் கல்லை எறிந்த சிறுவனிடமிருந்து, எங்கள் காயங்களை அமைதியாக வேடிக்கைப் பார்க்கும் உலகம், எமது குரல்கள் என கேட்கும் முதல் வார்த்தை ‘கற்கள்’ என்பதை கற்றுக்கொண்ட அந்தச் சிறுவனிடமிருந்து, உங்கள் அனைவருக்குமான எனது இறுதி உயிலைத் தொடங்குகின்றேன். 

ஒரு நபரின் மதிப்பானது அவரின் வயதைக் அடிப்படையாக கொண்டு அளவிடப்படுவதில்லை. மாறாக, அவர் தனது தாய்நாட்டிற்கு என்ன செய்தார் என்பதை அடிப்படையாக கொண்டுதான் கணக்கிடப்படுகிறது என்பதை நான் காஸாவின் தெருக்களில் இருந்து கற்றுக்கொண்டேன். சிறைவாசம், போர்கள், வலி, நம்பிக்கை ஆகியவற்றால் வரையறுக்கப்பட்டது எனது வாழ்க்கை. நான் முதன்முதலில் 1988இல் சிறையில் அடைக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டேன், இருந்தும் ‘பயம்’ என்பதை என்னை நெருங்க நான் அனுமதிக்கவில்லை.

அந்த இருண்ட சிறைக்கூடத்தினுல் ஒவ்வொரு சுவரிலும் உள்ள ஜன்னல்களைப் பார்த்தேன். அவை தொலைதூரத்து அடிவானத்தைக் காட்டின. சுதந்திரத்திற்கான பாதை அதன் ஒவ்வொரு இரும்புக் கம்பியிலிருந்தும் ஒளிர்வதைக் கண்டேன். சிறையிலிருந்தபோது, பொறுமை என்பது வெறும் அறநெறி மட்டுமல்ல அது ஒரு பேராயுதம் என்பதையும்; கடலை துளித்துளியாக குடிப்பது போன்றதொரு கசப்பான அனுபவம் என்பதையும் உணர்ந்தேன்.

சிறைச்சாலைளுக்குப் பயப்படக்கூடாது என்பதே என் விருப்பம். சிறை என்பது நமது சுதந்திரத்திற்கான நீண்ட பாதையின் ஒரு பகுதி மட்டுமே. சுதந்திரம் என்பது பறிக்கப்பட்ட உரிமை மட்டுமல்ல அது வலியில் பிறந்து பொறுமையால் கூர்தீட்டப்பட்ட ஒரு சிந்தனை என்பதை சிறை எனக்குக் கற்றுக் கொடுத்தது. 2011இல் “பணயக்கைதிகள் பரிமாற்றம்” (Loyalty of the Free) ஒப்பந்தத்தின் கீழ் நான் விடுவிக்கப்பட்ட தருணத்தில், நான் முன்பு போல் அல்லாமல் ஒரு வலுவான ஆளுமையாக வெளியானேன். எங்கள் போராட்டம் தற்காலிகமானது அல்ல என்பதும்; அதன் முடிவு எங்களின் கடைசி இரத்தத் துளியால் தான் நிலைநிறுத்தப்படும் என்பதுமே எங்களின் விதி என்பதை உறுதியாக நம்பினேன்.

விலைப்பேச முடியா கண்ணியத்துடன், மரணத்தை சந்திக்காத கனவோடு, ஆயுதத்தை உறுதியாகப் பிடிப்பதே என் விருப்பமாக இருந்தது. நமது எதிர்ப்பை கைவிட்டு விட்டு, நமது நியாயங்களை முடிவிலா பேச்சுவார்த்தைகளுக்கு ஒப்படைக்க வேண்டும் என எதிரி விரும்புகின்றான். எனவே நான் உங்களுக்கு ஒன்றைச் சொல்கிறேன்: “உங்கள் உரிமைகளை பேச்சுவார்த்தைக்கு உள்ளாக்காதீர்கள். அவர்கள் உங்கள் ஆயுதங்களை விட உங்கள் வலிமைக்கு பயப்படுகிறார்கள். எதிர்ப்பு என்பது நாம் தாங்கும் ஆயுதங்கள் மட்டுமல்ல; அது ஒவ்வொரு மூச்சிலும் புதுப்பிக்கப்படுகிற ஃபலஸ்தீனத்தின் மீதான நமது அன்பு. முற்றுகை மற்றும் ஒடுக்குமுறைக்கு மத்தியில் உயிர்வாழ்வதற்கான நமது உறுதி.

தியாகிகளின் இரத்தத்திற்கு எப்போதும் விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். இந்த முட்பாதையை நமக்காக விட்டுவிட்டு அவர்கள் கடந்து சென்றவிட்டனர். அவர்கள் தங்களது இரத்ததால் சுதந்திரத்திற்கான பாதையை வகுத்தனர். அரசியல் ஆதாயங்களுக்காகவோ அல்லது யாருடைய ராஜதந்திர விளையாட்டுகளுக்காகவோ அவர்களின் தியாகங்கள் வீணடிக்கப்படக் கூடாது. நமது முன்னோர்கள் ஆரம்பித்ததை செய்து முடிப்பதே நமது பணியாகும். அதற்கான விலை எவ்வளவு ஆனாலும் இந்தப் பாதையை விட்டு விலகாமல் நாம் இருக்க வேண்டும். இந்த பரந்த நிலம் நமக்கு எவ்வளவு குறுகலாக இருந்தாலும்; ஃபலஸ்தீனத்தின் வலிமையின் மையமாகவும், துடிக்கும் இதயமாகவும் காஸா எப்போதும் இருந்து வருகிறது, எப்போதும் இருக்கும்..

2017இல் காஸாவில் ஹமாஸின் தலைமைப் பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டபோது, அது தலைமை மாற்றமாக மட்டுமல்லாது “கற்களால் தொடங்கி துப்பாக்கிகளால் முன்னெடுத்துச் செல்லப்படுகின்ற எதிர்ப்பின் தொடர்ச்சியாக இருந்தது”. முற்றுகைக்கு உள்ளான எனது தேசத்தின் காயங்கள் என்னை தினமும் வேதனைக்குள் ஆழ்த்தின. சுதந்திரத்தை நோக்கி நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் ஒரு விலை உள்ளது என்பதை நான் அறிந்தேன். எனவே நான் உங்களுக்கு ஒன்றைச் சொல்கிறேன்: “சரணடைவதற்கான விலை இதைவிட மிக அதிகம். எனவே, வேர்கள் மண்ணைக் இறுகப்பிடித்திருப்பதை போல நீங்கள் இந்த நிலத்தை இறுகப்பிடித்துக்கொள்ளுங்கள். வாழ முடிவெடுத்திருக்கும் தேசத்தை எந்தப் புயலாலும் வேரோடு பிடுங்கி எறிய முடியாது!”.

அல் அக்ஸா புயலின் (Al-Aqsa Strom) போது நான் ஒரு கட்சி அல்லது இயக்கத்தின் தலைவனாக இருக்கவில்லை. மாறாக, சுதந்திரக் கனவு காணும் ஒவ்வொரு ஃபலஸ்தீனியரின் குரலாக மட்டுமே இருந்தேன். எதிர்ப்பு என்பது தேர்வுசெய்யபடக் கூடிய ஒரு பாதையல்ல, அது ஒரு கடமை என்பதை என் நம்பிக்கை எனக்குக் காட்டியது. ஃபலஸ்தீனியப் போராட்டத்தின் புத்தகத்தில் இந்தப் போர் ஒரு புதிய அத்தியாயமாக இருக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். இங்கு அனைத்து எதிர்ப்புக் குழுக்களும் ஒன்றிணைந்து, அனைவரும் ஒரே அகழியின் தோழர்களாய் குழந்தைகள், முதியவர்கள், கற்கள் அல்லது மரங்களைக் கூட விட்டுவைக்காத எதிரியை எதிர்கொள்வதற்காக.

நான் தனிப்பட்ட மரபுத்தொடர்ச்சி எதையும் விட்டுச் செல்லவில்லை. மாறாக, சுதந்திரக் கனவு கண்ட ஒவ்வொரு ஃபலஸ்தீனியனுக்கும், தன் உயிர்த் தியாகியான மகனைத் தோளில் சுமக்கும் ஒவ்வொரு தாய்க்கும், எதிரியின் வஞ்சகத் தோட்டாக்களால் சிதைக்கப்பட்டு வேதனையில் துடிக்கும் தன் மகள் கதறி அழுததைப் பார்த்த ஒவ்வொரு தந்தைக்குமாய் சேர்த்து ஒரு கூட்டு மரபை விட்டுச் செல்கிறேன்.

‘எதிர்ப்பு வீண் போகாது!’ என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும் என்பதே எனது இறுதி விருப்பம். இது வெறும் தோட்டாக்களின் தாக்குதல் அல்ல; இது கண்ணியத்துடனும், மரியாதையுடனும் வாழும் வாழ்க்கை. சிறையும் முற்றுகையும் ‘இந்தப் போர் நீண்டது, இந்தப் பாதை கடினமானது’ என்பதை எனக்குக் கற்றுக் கொடுத்ததுதான் என்றாலும், சரணடைய மறுக்கும் நாடுகள் தங்கள் கைகளால் அற்புதங்களை உருவாக்குகின்றன என்பதையும் நான் கற்றுக்கொண்டேன்.

உலகம் உங்களுக்கு நீதி வழங்கும் என்று எதிர்பார்க்காதீர்கள். என் வாழ்நாள் முழுவதும் நாம் படும் துன்பங்களை இந்த உலகம் மிக அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்ததை நான் என் கண்களால் பார்த்திருக்கிறேன். “நீதிக்காகக் காத்திருக்காதீர்கள்! நீங்களே நீதியாகுங்கள்!!” ஃபலஸ்தீனத்தின் கனவை உங்கள் இதயங்களில் வாழவையுங்கள். ஒவ்வொரு காயத்தையும் ஆயுதமாகவும், ஒவ்வொரு கண்ணீர்த் துளியையும் நம்பிக்கையின் ஊற்றாகவும் மாற்றுங்கள்.

இதுவே எனது விருப்பம்: “உங்கள் ஆயுதங்களை கீழே போட்டு விடாதீர்கள், கற்களை கீழே போடாதீர்கள், உங்கள் தியாகிகளை மறக்காதீர்கள், உங்கள் கனவைப் விலைப் பேசாதீர்கள் அது உங்கள் ‘உரிமை’ ”.

நாம் இங்கேயே இருப்போம். நம் மண்ணிலும், நம் இதயங்களிலும், நம் குழந்தைகளின் எதிர்காலத்திலும் இருப்போம். நான் இறக்கும் வரை நேசித்த நிலத்தை, தலை குனியாத மலை போல் என் தோள்களில் நான் சுமந்த கனவான ஃபலஸ்தீனத்தைப் பாதுகாக்கும்படி உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

நான் விழுந்தால் என்னுடன் நீங்களும் விழ வேண்டாம்; மாறாக, தரையில் விழாத நம் கொடியை என் கையிலிருந்து எடுத்துக் கொள்ளுங்கள். நமது சாம்பலிலிருந்து எழும் வலிமையான தலைமுறைக்காக, எனது இரத்தத்திலிருந்து பாலம் கட்டுங்கள்.

மீண்டும் புயல் எழும் வேளையில் ஒருவேளை நான் உங்களிடையே இல்லாமல் போனால்; சுதந்திர அலையின் முதல் துளி நான் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இந்த பயணத்தை நீங்கள் முடிக்க வேண்டும் என்றே நான் உங்களுடன் வாழ்ந்தேன்.

அவர்களின் தொண்டையில் முள்ளாக இருங்கள், திசைத் திரும்பா புயலாக இருங்கள், ‘நீதிக்காக நிற்கிறோம்’ என்பதை இந்த உலகம் அறியும் வரை ஓயாதீர்கள். நாம் செய்திகள் பதிவு செய்யும் வெற்று எண்கள் மட்டுமல்ல!'

 

-------------------------------------------------------------------------------------------------------------------

அரபு மூலத்திருந்து உருது மொழியாக்கம்: டாக்டர் முஹ்யுத்தீன் காஜி

உருதிலிருந்து ஆங்கில மொழியாக்கம்: The Companion

தமிழாக்கம்: ஃபஹ்ருத்தீன் அலி அஹ்மத். V

 

திங்கள், 7 நவம்பர், 2011

நவம்பர் புரட்சியும் வால் ஸ்டிரீட் போராட்டமும்







செப்டம்பர் மாதம்தான் அது நடந்தது. உலகம் அதிர்ந்து பார்த்த, யாரும் நெருங்க முடியாது என யூகிக்கப்பட்ட அமெரிக்காவின் ராணுவ தலைமையகம் உள்ளிட்ட இரட்டைகோபுர தாக்குதல். அது நடந்து 10 ஆண்டுகள் வேகமாய் ஓடிவிட்டது. இதோ 2011 மீண்டும் அதே செப்டம்பரில் அமெரிக்காவின் தலைவலி துவங்கியுள்ளது. அமெரிக்க ராணுவ தலைமையகம் யாருக்காக படுகொலைகளை உகலம் முழுவதும் செய்து வருகிறதோ அந்த முதலாளிகளின் தலைமையகமான வால் ஸ்டிரீட்டை கைப்பற்றுவேம் என்று பேர்க்குரல் எழுப்புகிறார்கள் அமெரிக்க மக்கள். 

செப்டம்பரில் சிலநூறு போராளிகள் துவங்கியப் போராட்டம் இரண்டு மாதங்களில் பல்லாயிரக் கணக்கான மக்களை வீதியில் இறக்கியுள்ளது. இரட்டைக் கோபுர தாக்குதலுக்கூட அதிராதா அமெரிக்க "வால் ஸ்டிரீட் நம் வாழ்க்கையைக் கைப்பற்றியதால், நாம் வால் ஸ்டிரீட்டை கைப்பற்றுவோம்" என மக்கள் போராடுவதை பார்த்து பதறி துடிக்கிறது. எங்களுக்கு வேலை இல்லை. குடியிருக்க வாடகை வீடு இல்லை. தண்ணீர் வரி கட்ட முடியாததால், குடிநீரும் ரேஷன்தான். நாங்கள் நடுத்தெருவுக்கு வந்துவிட்டோம். எங்கள் உடல் உழைப்பை, அதன் மூலம் கிடைத்த பணம், வசதிகளை எல்லாம் வர்த்தக, தொழில், நிதி நிறுவன பணமுதலைகள் ஆக்ரமித்துக்கொண்டு, எங்களை அடிமையாக்கி விட்டன. மக்களுக்கு நல்லது செய்யத்தான் அரசு. ஆனால், பட்ஜெட்டில் வரி போடுவது, மானியத்தை ரத்து செய்வதெல்லாம் அதன் பின்னால் உள்ள இந்த பண முதலைகள் நிர்ணயிக்கின்றனர். ஓட்டு போட்டு அரசை தேர்ந்தெடுப்பது நாங்கள் ஆனால், ஆட்சியில் அமர்ந்திருப்பவர்களை கையில் போட்டு ஆதிக்கம் செலுத்தி நாட்டை நடத்துவது இந்த பண முதலைகளா? எங்களுக்கு சமத்துவம் வேண்டும்; அமெரிக்காவில் உள்ள எல்லா வளங்களை, பணத்தை, வசதியை ஒரு சதவீத பண முதலைகள் அனுபவிக்க, 99 சதவீதம் அப்பாவி மக்கள் ஒதுக்கப்படுவதா? நாகரிக அடிமை வாழ்க்கையை அனுபவிப்பதா? விடமாட்டோம் இனி.எங்கள் வாழ்க்கையை நீங்கள் முடக்கினீர்கள் இதோ உங்களை நாங்கள் முடக்க வருகிறோம் என அணிதிரண்டுள்ளனர்.

  அமெரிக்காவில் 10 கோடி மக்கள் வறுமையில் தவிக்கிறார்கள். 5 கேடிப்பேருக்கு மருத்துவக் காப்பீடு இல்லை. 2.5 கேடிப் பேருக்கு வேலை இல்லை. இருப்பினும் பணக்காரர்களுக்கு வரிவிலக்கு தாராளமாக வழங்கப்படுகிறது. அமெரிக்காவின் குடியரசுக்கட்சியும் ஜனநாயகக் கட்சியும் பெயர்கள்தான் வேற்றுமையுடையவை அவை இரண்டும் முதலாளிகளின் கைக்கூலி கட்சிகள்தான். அவர்களின் நிதியால்தான் இவர்கள் மாறிமாறி ஆட்சியை பிடிக்கின்றனர். ஆகவேதான் வால் ஸ்டிரீட் முற்றுகையை வர்க்கப்பேர் என்று புரிந்துக்கொண்டு ஆட்சியாளர்கள் அலறுகின்றனர். முதலாளித்துவப் பெருளாதாரத்தை வீழ்த்துவதற்கு நடக்கும் உலகு தழுவிய கம்யூனிஸ்டு சதி என்று அச்சுறுத்துகின்றனர். பாக்ஸ் நியூஸ் என்ற தெலைக்காட்சி வால் ஸ்டிரீட்டை எது தாக்குகிறதே அதுதான் உலகின் முதன்மை அபாயம் என அறிவிக்கிறது.

வர்க்க போர் என்ற சொல்லாடல் ஏன் உலக முதலாளிகளை, அல்லது ஏகாதிபத்திய சக்திகளை ஏன்அச்சுறுத்துகிறது?? அதுதான் நவம்பர் புரட்சியின் வெற்றி. 

நவம்பர் 7- உழைக்கும் வர்க்கத்தின் பெருமையை, வலிமையை இந்த பூவுலகம் உணர்ந்த நாள். அன்றுதான் ரஷ்ய தேசத்தில் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் ஒரு புதிய அரசு முறை அமைந்தது. ஆஹா என்றெழுந்தது பார் யுகப்புரட்சி என்று மகாகவி பாரதி பாடிய புரட்சி. இந்த உலகை தங்கள் உழைப்பால் உருவாக்கிய தொழிலாளர்கள் மனித தன்மையில்லாமல் சுரண்டப்பட்டனர். பாட்டாளிகளின் உழைப்பை முதலாளிகளும் நிலப்பிரபுக்களும் ஒட்டச்சுரண்டினர். மாமேதை லெனின் தலைமையில் தொழிலாளி வர்க்கப் புரட்சி ஜாரின் சர்வாதிகார ஆட்சிக்கு முடிவு கட்டியது. 

இந்தப்புரட்சியைத் தொடர்ந்து சோவியத் யூனியன் என்ற அதுவரை உலகம் கண்டிராத புதிய அரசுமுறை அமைந்தது. உழைக்கும் மக்களின் உதிரத்தை குடித்து கொள்ளையடித்து சேர்க்கப்பட்ட சொத்துக்கள் அனைத்தும் பொதுவுடைமை ஆக்கப்பட்டன. லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் நிலமற்ற கூலி ஏழை விவசாயிகளுக்கு பிரித்து கொடுக்கப்பட்டன. தொழிற்சாலைகள் அனைத்தையும் நிர்வகிக்கும் பொறுப்பு தொழிலாளிகளிடமே விடப்பட்டது.அதுவரை இருந்த வாழ்க்கை முறை முற்றிலும் மாறியது. மக்கள் ஆட்சியாளர்களை சந்திக்கும் முறை மாறி அரசு மக்களை சந்தித்தது. மக்கள் வாழ்க்கை முன்னுக்கு நிறுத்தப்பட்டு அவர்களுக்கான வாழ்க்கை உத்திரவாதம் செய்யப்பட்டது. அதனால்தான் முதலாளித்துவ நாடுகளில் கூட தவிர்க்க இயலாமல் சில சலுகைகளை தொழிலாளர்களுக்கு முதலாளிகள் வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. சேமநல அரசு என்ற சொல்லாடல் இதன் பின்தான் வந்தது.

சோவியத் யூனியனிலும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் சோசலிச அமைப்பு முறைக்கு பின்னடைவு ஏற்பட்டபோது, இனி சோசலிசத்திற்கு எதிர்காலம் இல்லை என்றனர். ஆனால் இன்றைக்கு அமெரிக்காவிலேயே தொழிலாளர்கள் போராடுகிறார்கள். இதன் கதிர்வீச்சு ஐரோப்பிய கண்டத்தையும் கடந்து உலகம் முழுவதும் பரவி வருகிறது. ஏற்கனவே பிரிட்டன், பிரான்சு,  கிரீஸ், ஸ்பெயின், பேர்த்துகல், இத்தாலி என்று கடந்த 3 ஆண்டுகளாக தாவிப்பரவும் போராட்டம் இஸ்லாமிய நாடுகளிலும் பற்றியுள்ளது. 

பின்லேடனுடன் ஆயுதம் சுமந்த எகிப்து இளைஞர்கள் ஆயுதங்களை தூர எரிந்து உழைப்பதற்கு வேலை கொடு! பசித்தவனுக்கு உணவு கொடு என போராட்டகளத்தில் குதித்தனர். இருப்பவருக்கும் இல்லாதவருக்குமான போராட்டம் உலக அரங்கில் உக்கிரமாக நடந்து வருகிறது. இந்தியாவில் தாராளமயமாக்கல் கொள்கை செயல்படுத்தப்பட்டபிறகு தொழிலாளர்களைச் சுரண்டுவது அதிகரித்துள்ளது. பன்னாட்டு நிறுவனங்கள் நம்நாட்டுச் செல்வங்களை கொள்ளையடிப்பதோடு தொழிலாளர்களின் உரிமைகளையும் ஒடுக்க முயல்கின்றன.

இப்போது நம்முன் ஒரே கேள்விதான் முன் நிற்கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கொள்கைகளை இந்திய அரசாங்கம் கடைபிடிக்கிறது. மக்களை கொள்ளையடிக்கிறது. அமெரிக்க மக்கள் சுரண்டலுக்கு எதிராக அணிதிரண்டு நிற்கின்றனர். போராடுகின்றனர். இந்திய அரசு அமெரிக்க அரசை பார்க்கிற போது, இந்திய மக்கள் அமெரிக்க மக்களை பார்க்க வேண்டாமா? அவர்கள் போராடுகின்றனர். நாம் என்ன செய்யப்போகிறோம்? 

வெள்ளி, 4 நவம்பர், 2011

அமெரிக்கா - அல்கொய்தா : என்னுடைய இரண்டாவது புத்தகம்


உறுத்தும் உண்மைகள்

                                                                                                                               -க. உதயகுமார்



அமெரிக்காதான் தீவிரவாதம் மற்றும் உலக குற்றங்களின் தலைவனாக திகழ்கிறது என்ற பயங்கரவாதி பின்லேடன் கூறிய பேட்டி எவ்வளவு சரியானது என்பதை இந்த நூல் மிகச் சரியாகவே தோலுரித்துக் காட்டுகிறது.

உலகின் பல நாடுகளிலும் தனக்கு ஆதரவாக பல்வேறு பயங்கரவாத குழுக்களை உருவாக்குவதிலும், அவர் களுக்கு உதவுவதிலும் கை தேர்ந்த அமெரிக்கா. அல் கொய்தா என்ற பயங்கரவாத அமைப்பையும் உருவாக்கியது.
சோவியத் யூனியனுக்கு எதிரான பனிப்போரில் அன்று ஆப்கானிதானின் ஜனாதிபதியாகத் திகழ்ந்த டாக்டர் நஜிபுல்லாவை படுகொலை செய்து தூக்கில் தொங்கவிட இந்த அமைப்பு அமெரிக்காவிற்கு தேவைப்பட்டது. அதற்காகவே பேணி வளர்க்கப்பட்டது.என்றென்றும் இந்த தாலிபான்கள் தனக்கு துணையாக இருப்பார்கள் என அமெரிக்கா தப்பு கணக்கு போட்டது.

80 பக்கங்களைக்கொண்ட இந்த நூலில் மிக ஆழமான பல விஷயங்கள் இடம் பெற்றுள்ளன. பாகிதானில் பின்லேடன் கொல்லப்பட்ட விதம்; ஒசாமாவின் சிறு வாழ்க்கை வரலாறு; அல்கொய்தா என்ற உலகளாவிய பயங்கரவாத அமைப்பு உருவான விதம்; என ஒரு புறமும் மறுபுறம் கொலம்ப அமெரிக்காவின் பஹாமா தீவு கண்டுபிடிப்பில் துவங்கி கோடிக்கணக்கான செவ்விந்தியர்கள் கொல்லப்பட்டும்; அவர்களை அடிமையாக்கியும் அவர்கள் உழைப்பில் அமெரிக்கா உருவாக்கப்பட்ட விதம் வரை மிக தத்ரூபமாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்ல; கடந்த நூற்றாண்டில் அமெரிக்கா பல்வேறு நாடுகளில் நடத்திய அரசியல் படுகொலைகள்; ஆட்சி கவிழ்ப்பு முயற்சிகள், ராணுவ தலையீடுகள் என மொசாம்பிக் என ஜாம்பியா, ஈரான், கியூபா, வியட்நாம் காங்கோ, சிலி, நாடுகளில் அமெரிக்கா நடத்திய அட்டூழியங்களும் படுகொலைகளையும் திரைக் காட்சியாக சித்தரிக்கிறது இந்நூல்.

இந்த விவரங்கள் இளைய தலைமுறை வாசகர்களுக்கு அமெரிக்காவின்  பயங்கரவாதத்தை தோலுரித்துக் காட்டிட பயன்படும். அமெரிக்கா ஒரு பசு அல்ல; பசுதோல் போர்த்திய புலி என்பதை அம்பலப்படுத்த உதவிடும்.

ஒரு பயங்கரவாத நாட்டிற்கு (அமெரிக்கா) எதிராக இன்னொரு பயங்கரவாத அமைப்பு நடத்தியுள்ள தாக்குதலை பட்டியலிட்டு காட்டுகிறார் நூலாசிரியர் பயங்கரவாதத்தை விதைக்கிற பயங்கரவாத அமைப்புகளைத் தொடர்ந்து ஆதரிக்கிற அமெரிக்கா திருந்தாதவரை அல்லது அவர்களை திருத்தாத வரை இத்தகைய நடவடிக்கைகளை தடுத்த நிறுத்த இயலாது என்ற வாசகம் முற்றிலும மிக சரியானது.

இளைய தலைமுறை எழுத்தாளரான எஸ்.ஜி. ரமேஷ்பாபு. இந்நூலை மிக தேர்ந்த நூலாசிரியர் வரிசையில் நின்று உருவாக்கியுள்ளார். இந்நூலின் விவரங்கள், அதனை கோர்வை படுத்தி கூறியுள்ள முறை மற்றும் எழுத்து நடை... அனைவரும் படிக்க தூண்டுவதாக இருக்கிறது. நூலாசிரியரின் இந்த முயற்சிக்கு உறுதுணையாக இருந்து இந்நூலைக்கொண்டு வந்த பாரதி புத்தகாலயம் பாராட்டுக்குரியது.

அமெரிக்க அல்கொய்தா
இருபயங்கரவாத வரலாறு
எஸ்.ஜி. ரமேஷ்பாபு
வெளியீடு: பாரதிபுத்தகாலயம்,
7, இளங்கோ தெரு,
சென்னை - 600 018.
பக். 80, விலை ரூ.40/-

30.10.11 தீக்கதிர் நாளிதழில் வந்த நூல் அறிமுகம்

வெள்ளி, 10 டிசம்பர், 2010

அமெரிக்காவை திட்டாதிர்கள் மூடர்களே!!!!


எது நடந்தாலும் அமெரிக்காவை குறை சொல்றது ஒரு பேஷனா போயிடுச்சு சார்!  அதுவும் இந்த கம்யுனிஸ்டுகாரனுவ எதெடுத்தாலும் அமெரிக்காவை தொடாம பேசறதே இல்ல. அமெரிக்கா இல்லன்னா நம்ப நாட்டுக்கு கரண்டு பஞ்சம் வந்திடும் தெரியுமா? பின்ன பஞ்சத்த போக்கத்தான் அமெரிக்காவோட  நம்ப பிரதமரு அணுசக்தி ஒப்பந்தம் போட்டாரு. அத போயி இந்த கம்யுனிஸ்ட் கட்சிகாரனுவ எதிர்கிறாங்க. சரி அதவுடுங்க நம்ப முன்னாள் சனாதிபதி அய்யா அப்துல் கலாம அமெரிக்க விமான நிலையத்துல தடவி பார்த்து சோதன  போட்டபையாகட்டும், நம்ப மந்திரி சார்சு பெர்னாட்ச ஆடிய உருவி அமெரிக்காகாரங்க சோதனை போட்டப்பையும் நம்ப ஏதாவது கோவப்பட்டோமா?  நாமும் அமெரிக்காவும் நன்பேண்டா!!!!   அதனாலதான்  அதெல்லாம் கண்டுக்கப்படாது.

சதாம் உசேன கொன்னா என்னா? அந்த நாட்டு மக்களை கொன்னா என்ன? அவ்வுளவு ஏன்? தோ... இங்க   இருக்குற விடியோவ பாருங்களேன் .. இரண்டு பத்திரிகை நிருபர்களை அமெரிக்க ராணுவம் கொலை செய்யறத! அமெரிக்க ஆர்மிகாரனுவ பேசிக்கிட்டே ... கிண்டல் செஞ்சிட்டே ... பதர பதர ஓடுபவர்களை விரட்டி கொல்வதை.  சரி அதவுடுங்க சார் . இத பாத்துட்டு  நிங்க டென்சன் ஆகி அமெரிக்காவை திட்டி பதிவு போட்டா அல்லது எங்கியாவது பேசினா நம்ப பிரதமர் கோச்சிக்க போறாரு . ராசா விவகாரம், ஆதர்ஷ் விவகாரம் என  எதா இருந்தாலும் சிரிப்பாரு. ஆனா அமெரிக்காவை திட்டுனா தாங்காது அவருக்கு. நம்ப தமிழ்நாட்டுல தின சனி பத்திரிகை மன்னிக்கவும் மலர் பத்திரிகையில் அப்புறம் வாசகர் கடிதம் வரும் . நமது இந்தியர்கள் வேளை செய்து சம்பாதிக்கும் தேசமான அமெரிக்காவை திட்டாதிர்கள் மூடர்களே என.