சினிமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சினிமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 8 டிசம்பர், 2011

கோச்சடையன்: சூப்பர் ஸ்டார் படம் குறித்த அபூர்வ தகவல்கள் (படங்களுடன்)





கோச்சடையன் என்ற பெயர்தான் சரியான தமிழ்! இதை கோ சடையன் என்றும், கோ கோ சடையன் என்று ஸ்டைலாக அழைப்பது தவறு என தமிழ் ஆர்வளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

இப்போது பார்ப்போம்...

கோ என்றால் மன்னன், மாடு எனவாறு பல அர்த்தங்கள் உண்டு என்பதை தமிழ் ஆர்வளர்கள் அறிவார்கள். 

கோ கோ என்றால்? யாரறிவார்?

கோ கோ என்றால் ஒரு இந்தியவிளையாட்டாகும். களத்தில் உள்ள 9 பேர்களையும் தொட்டு புறம் போக்குவதே எதிரணி ஆட்டக்காரரின் நோக்கமாகும். சடுகுடு விளையாட்டைப் போன்றது எனினும் இது அதனிலும் வேறுபட்டது. களத்தில் ஓர் அணியின் வீரர்கள் ஓர் வரிசையில், அடுத்தடுத்தவர்கள் எதிர்திசையை நோக்கியவாறு அமர்ந்திருப்பர். எதிரணி இரண்டு அல்லது மூன்று வீரர்களை களத்தில் இறக்குவர். அமர்ந்திருக்கும் அணியின் நோக்கம் எதிரணியின் போட்டியாளரை துரத்தி தொட்டு வெளியேற்றுவது. ஆனால் அவர்கள் ஒரே திசையில்தான் ஓட வேண்டும்; 

அமர்ந்திருப்பவர்களுக்கிடையே குறுக்கே புக முடியாது. மாற்றாக ஓடும் எதிரணியினர் அவ்வாறு குறுக்கே செல்லலாம். துரத்துபவர்கள் வரிசையின் கடைசி வரை ஓடி அதன் பின்னரே மற்ற திசையில் ஓட முடியும். துரத்தும் பணியை தனக்கு முதுகு காட்டி அமர்ந்து கொண்டிருக்கும் நபரிடம் மாற்றி விடலாம். அப்போது கோ என ஒலி எழுப்புவர். இது துரத்துபவர் மாறுவதைக் குறிக்கும். எந்த அணி குறைந்த நேரத்தில் எதிரணியின் அனைத்து வீரர்களையும் வெளியேற்றுகிறார்களோ அவர்களே வெற்றி பெற்றவர்கள்.

சரி நாம் கோச்சடையன் படத்திற்கு வருவோம்..

ஆங்கிலத்தில் சிந்த்திதுத் தமிழில் எழுதவோ அல்லது பேசவோ செய்கின்ற காலக் கட்டத்தில் வாழ்கின்ற காரணத்தால் ஒரு தவறு நேர்ந்துவிட்டது. ரணதீரன் என்ற பெயரிலேயே விக்கிபீடியாவில் எழுதப்பட்டிருந்ததால் ஆங்கில விக்கிபீடியாவை அடிப்படையாகக் கொண்டு கோச்சடையான் என்ற பெயர் பரவிவிட்டது. ஏன்டா அம்பி ரணதீரன் என்பது ரந்தீர், ரன்டீன், ரணம்தினம் என்றெல்லாம் ஆகாமல் எப்படி கோச்சடையன் ஆனது என குழ்ம்பவேண்டாம் சூப்பரு ஸ்ஸ்டாரு நடிப்பதால்..

ரணதீரன் கோச்சடையன் என்று சேர்த்து அழைப்பதே சரி. திரைத்துறையினர் அவர்கள் ராசிக்கு ஒற்றெழுத்தை விட்டு விடுவார்கள். தேவை இல்லாத இடத்தில் சேர்த்துக் கொள்வார்கள். எப்படியோ ஏழாவது அறிவுக்குச் சமமாகவோ அல்லது அதைவிட ஒருபடி கீழாகவோ அல்லது ஐந்து அறிவை பயன்படுத்தியோ ஒரு படம் தந்தாகவேண்டும்.  சினிமாகாரர் நினைத்தால் சாதாரணப்பெயரும் முக்கியத்துவம் பெறும். அருணாசலம், பாபா, படையப்பா, நாயகன், கஜினி, சிவாஜி, அட்ராசக்கை, அவளின்டே ராவு கதா, ஷகிலா போன்ற வரிசையில் கோச்சடையன்.

அது சரிங்க கதை சரியா தப்பான்னு கேட்க்க மாட்டோம் வரலாறு முக்கியம் (வரலாறு முக்கியம் அமைச்சரே..) அதைச்சொல்லுங்கள். அப்போதுதான் தமிழர்கள் நரம்புகள் துடிக்கும், குடிக்கும், கடிக்கும், படிக்கும், முடிக்கும்,  வெடிக்கும்... அதலினால் வரலாறு முக்கியம்.

ரணதீரன் கி.பி. 670 முதல் 710 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான். அரிகேசரியின் மகனான இவன் தனது தந்தை கி.பி. 670 ஆம் ஆண்டளவில் இறந்தபின்னர் அரியணை ஏறினான். கடல் போன்ற சேனை உடையவன் எனப்படுகிறான். ரணதீரன் கோச்சடையன் என அழைக்கப்பட்டான். செங்கோல் தென்னன், வானவன், செம்யன், மதுரகருநாடகன், கொங்கர்கோமான், மன்னர் மன்னன் போன்ற பல பட்டப் பெயர்களைக் கொண்டிருந்தான். (வைரமுத்து வகையற்றாகள் வயிறு எரிய வேண்டாம் உங்களுக்கு இவ்வாறான பட்டங்கள் 2015ல் கிடைக்கும்)

இதற்குச் சான்றாக வேள்விக்குடிச் செப்பேடு இருப்பது குறிப்பிடத்தக்கது. படையெடுத்துச் சென்ற இவன் முதலில் சேரநாட்டை வென்றான். பின்னர் சோழநாடு, கொங்கு நாடு வென்று அனைவரையும் கப்பம் கட்டுமாறு ஆணையிட்ட இவன் மருதூரில் நடைபெற்ற போரில் பொதிய மலைத் தலைவன் ஆய்வேளையும், மங்கலபுரத்தில் மாரதரையும் வெற்றி கொண்டவனாவான்.

சாளுக்கிய மன்னனான விக்கிரமாதித்தனுடன் போர் புரிந்து வெற்றி பெற்றுப் பட்டம் பெற்றான் ரணதீரன். இவ்வாறு வேள்விக்குடிச் செப்பேடும் கேந்தூர்க் கல்வெட்டும், கூறுவது குறிப்பிடத்தக்கது. ரணதீரன் ஆட்சிக் காலத்தில் மதுரைக்கு வந்து அங்கு பாண்டியன் மகளை மணந்து, சோழ மன்னன் ஒருவனையும் சந்தித்தார். திருவாலவாய் இறைவனையும், திருப்பரங்குன்றப் பெருமானையும் பின் வணங்கினார் எனப் பெரிய புராணம் மற்றும் சுந்தரர் தேவாரமும் கூறுவதும் குறிப்பிடத்தக்கது. (பெரிய-கழறி-91-2) (சுந்தரர் தேவாரம் திருப்பரங்குன்றப் பதிகம்-பாட்டு-11).

இடைக்காலப் பாண்டியன் ரணதீரன் கி.பி. 710 ஆம் ஆண்டில் மரணமடைந்தான்.

  வேள்விக்குடிச் செப்பேடும் கேந்தூர்க் கல்வெட்டும் "சூப்பர் ஸ்டார்" ரஜினிகாத்ந் என்கிற ரண்தீரன் கோச்சடையன் பேசிய பஞ்ச் டயலாகை குறித்து வைத்துள்ளது. 

(ஏன்யா பேதி தர்மனை நம்பும் இந்த ஊர் நம்ம கோச்சடையனை நம்பாது?# டவுட்டு)

(இது ரஜினிகாந்த் படம் எதுவும் நடக்கலாம்) 

வசனங்கள் பின்வருமாறு....

"தம்பி என் பேருதான் கோச்சடையன்.. நான் அடிச்சா நீ கோ கோ மடையன்"

"தம்பி என் நாடு பாண்டி.. நான் போவேன் உன்னை தாண்டி"

"கண்ணு.. எங்கிட்ட இருக்கு சேனை.. உங்கிட்ட இருக்குறது பானை"

"தம்பி.. அனுஷ்காவும் அரியனையும் ஒன்னுதான். ரெண்டு மேலையும் ஆசை வரும், ஆனா தூரத்திலிருந்தான் பாக்க முடியும் .. ஹிஹாஹா ஹா ஹா" 

(போங்கடா நீங்களும் உங்க பஞ்ச் டயலாக்கும்)  டீக் ஹை.. (சரியா)

(இவ்வாறான சம்பந்தமில்லாத கதைகளையும், வார்த்தைகளையு கேட்டும், பேசியும், பார்த்துப் பார்த்து பழகிய மூத்த தமிழ்குடி மக்கள் கோச்சடையனையும் வாழ்வைப்பார்கள் என்ற நம்பிக்கையில் படம் எடுக்கப்படுகிறது) 

சனி, 3 டிசம்பர், 2011

”மண்”மோகன் சிங் வகையறாக்களுக்கு மகாகவி பாரதியார் பாடிய சினிமா பாடல்..


(தினமணியில் வந்த கருத்து படத்திற்கும் இந்த பாடலுக்கும் எவ்வித சம்மதமும் இல்லை.. இல்லை இல்லவே இல்லை என்பதையறிக ..). 

நடிப்பு சுதேசிகள் 

நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமு மின்றி, 
வஞ்சனை சொல்வா ரடீ! - கிளியே! 
வாய்ச் சொல்லில் வீரரடி. 

கூட்டத்தில் கூடிநின்று கூவிப் பிதற்ற லன்றி, 
நாட்டத்தில் கொள்ளா ரடீ! - கிளியே! 
நாளில் மறப்பா ரடீ 

சொந்த அரசும்புவிச் சுகங்களும் மாண்பு களும் 
அந்தகர்க் குண்டாகு மோ? - கிளியே! 
அகலிகளுக் கின்ப முண்டோ ? 

யந்திர சாலை யென்பார் எங்கள் துணிகளென்பார், 
மந்திரத் தாலே யெங்கும் - கிளியே! 
மாங்கனி வீழ்வ துண்டோ ! 

உப்பென்றும் சீனி என்றும் உள்நாட்டுச் சேலை என்றும் 
செப்பித் திரிவா ரடீ! - கிளியே! 
செய்வ தறியா ரடீ! 

அச்சமும் பேடி மையும் அடிமைச் சிறு மதியும் 
உச்சத்திற் கொண்டா ரடீஸ்ரீ - கிளியே 
ஊமைச் சனங்க ளடீ! 

ஊக்கமும் உள்வலியும் உண்மையிற் பற்று மில்லா 
மாக்களுக் கோர் கணமும் - கிளியே 
வாழத் தகுதி யுண்டோ ? 

மானம் சிறிதென் றெண்ணி வாழ்வு பெரிதென் றெண்ணும் 
ஈனர்க் குலகந் தனில் - கிளியே! 
இருக்க நிலைமை யுண்டோ ? 

சிந்தையிற் கள்விரும்பிச் சிவசிவ வென்பது போல் 
வந்தே மாதர மென்பார்! - கிளியே! 
மனத்தி லதனைக் கொள்ளார் 

நாட்டில் அவமதிப்பும் நாணின்றி இழி செல்வத் 
தேட்டில் விருப்புங் கொண்டே! - கிளியே! 
சிறுமை யடைவா ரடீ! 

சொந்த சகோ தரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும் 
சிந்தை இரங்கா ரடீ! - கிளியே! 
செம்மை மறந்தா ரடீ! 

பஞ்சத்தும் நோய்க ளிலும் பாரதர் புழுக்கள் போல் 
துஞ்சத்தும் கண்ணாற் கண்டும் - கிளியே! 
சோம்பிக் கிடப்பா ரடீ! 

தாயைக் கொல்லும் பஞ்சத்தைத் தடுக்க முயற்சி யுறார் 
வாயைத் திறந்து சும்மா - கிளியே! 
வந்தே மாதர மென்பார்!

திங்கள், 28 நவம்பர், 2011

"WHY THIS கொலவெறி டீ" பாடல் எழுத காரணம் என்ன? - புலனாய்வு (ஹும் ..ரொம்ப முக்கியம்)




நடிகர் தனுஷ் எழுதி அவரது சொந்த குரலில் பாடிய இந்த பாடல் இப்போது மிகவும் பிரபலமாக பேசபடுகிறது அல்லது பேசவைக்கப்படுகிறது. இந்த பாடல் எப்படிபட்டது? ஏன் எழுதப்பட்டது? என்ற ஆராய்ச்சிகள் நடக்கத்துவங்கியுள்ளது. நல்ல வேலை கலைஞர் ஆட்சி இப்போது இல்லை, இருந்திருந்தால் இநத் ஆண்டின் சிறந்த பாடல் ஆசிரியராகவும் சிறந்த பின்னணி பாடகராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பார் தனுஷ். ஏனெனில் அவர் சூப்பர் ஸ்டாரின் மருமகன் என்ற கூடுதல் தகுதி கொண்டவராயிற்றே..

 இன்று இந்த பதிவு எழுதும் நேரம் வரை இணையத்தின் வழியாக இந்த பாடலை 55 லட்சம் பேர் பார்த்திருப்பதாக புள்ளிவிபர புலிகள் அறிவித்து உள்ளனர். இந்த இம்சைகள் ஒருபக்கம் இருக்க இந்த பாடல் பின் நவீநத்துவ பாடலாக இருக்கலாம் என பின் நவீநத்துவ வாதிகள் கட்டுரை எழுத கொலைவெறி எடுத்து அலையும் தகவலும் வெளியாவது பீதியை கிளப்புகிறது. நமது பிளாக்கர்களுக்கு (அதாங்க வலைப்பூ மன்னர்களுக்கு) அடிச்சு துவைச்சு காயப்போட ஒரு சூப்பர் மேட்டர் கிடைத்த சந்தோஷத்தில் இருப்பது மட்டும் ஒரு ஆறுதலான நிகழ்வு.

 இது ஒருபுறம் இருக்க இந்த பாடலை அவர் எழுத கீழ்கண்ட காரணங்களும் இருக்கலாமா என "அரசியல் நோக்கர்கள்" கருதுகிறார்கள். இது குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். (யார்ரா இவனுவ அரசியல் நோக்கர்கள் என தாங்கள் குழம்புவது புரிகிறது! எல்லா பத்திரிக்கைகளும் தங்கள் சொந்த கருத்துக்களை இப்படிதானே எழுதுகிறார்கள். நாமும் எழுதுவோம்!?)

 "WHY THIS கொலவெறி டீ"
 உழைப்பாளி மக்கள் பைகளிலிருந்து அதிகார பூர்வமாக பகல் கொள்ளையடிக்க தமிழக அரசு அநியாயமாக உயர்த்தியுள்ள பேருந்து கட்டண உயர்வை மனதில் வைத்து இவர் எழுதினார் என ஒரு பகுதியினரும்.. இல்லை இல்லை அவர் பேருந்தில் பயணம் செய்பவர் அல்ல அதனால் அது குறித்து இல்லவே இல்லை என ஒரு பகுதியினரும் வாதிடுகின்றனர்.

 ஏழைக் குழுந்தைகளின் உணவாக பசியாற்றிய பால் விலையை ஏற்றி அக்குழந்தைகளுக்கு இலவசமாக "பால்தெளி சடங்கை" நடத்தியுள்ள கொடுமையை கண்டு சகிக்காமல் "பொல்லாதவன்" தனுஷ் பொங்கி எழுந்து எழுதியிருக்கலாம் என பலரும் வாதிடுகின்றனர்.

 அதுக்கூட இல்லை.. 400 யூனிட் வரை மின்சாரத்தை நுகர்ந்தவர்கள் உயர்வதற்கு முன்பாக ரூ.670ஐ கட்டணமாக செலுத்தினார்கள். இவர்கள் உயர்வுக்கு பின்னர் ரூ.1,300ஐ இரட்டிப்பான நிலையில் செலுத்த வேண்டி யுள்ளது. 600 யூனிட்டுக்கு மேல் மின்சாரத்தை நுகர்ந்தவர்கள் கட்டண உயர்வுக்கு முன்னால் ரூ.1,100ம். கட்டண உயர்வுக்கு பின்னர் அவர்களே ரூ.2,375ஐ மின் கட்டணமாக செலுத்த வேண்டிய அதிரடி உயர்வை அம்மா அரசு தமிழக மக்கள் மீது திணித்துள்ளதை கண்டித்துதான் இந்த பாடல் எழுதப்பட்டதோ எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

 அல்லது.. பரமக்குடி துப்பாக்கிச்சூடு, அண்ணா நூலக இடமாற்றம், சமச்சீர் கல்விக்கு ஆப்பு, மக்கள் நல பணியாளர்கள் குடும்பங்களி நடுரோட்டில் நிற்க வைத்தது போன்ற சம்பவங்களை வைத்து அவர் எழுதி இருக்கலாம் என சொல்கிறார்கள். அதில் வரும் வாழ்க்கையே டார்க்கு, பிளாக்கு போன்ற வார்த்தைகள் சூட்சுமமாக இவைகளை உணர்த்துவதாக சொல்கிறார்கள். அதிமுக அரசின் கொள்கைகளை அம்பலப்படுத்திய தனுஷ் இன்னும் பல பாடல்களை எழுத வேண்டும் என்றும் "அரசியல் நோக்கர்கள்" கூறுகிறார்கள்.

 ஆகவே நண்பர்களே.. இந்த பதிவின் நோக்கம் கீழ்காணும் ஒரே ஒரு "நல்ல" நோக்கத்திற்காக எழுதப்பட்டுள்ளது என்பதை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

 அதிமுக நண்பர்கள் இதை "கவனித்து"  படித்து அதன் "விளைவாக" இனிமேல் தனுஷ் பாடல் எழுதுவதை நிறுத்தலாம் என்ற ஆசையின் விளைவே இந்த பதிவு.

செவ்வாய், 8 பிப்ரவரி, 2011

குடிசைகள் இல்லாத சென்னையா? சென்னைக்கு வெளியே குடிசைகளா?

 சமிபத்தில் இணையதளங்களில் ஒரு குறும்படம் அதிகம்பேரால் பார்க்கப்பட்டது. அது சமூக பிரச்சனையை பேசுகின்ற படம் என்பதுதான் ஆச்சரியமான செய்தி. குடிசை மக்கள் வாழ்வுரிமை இயக்கம் வெளியிட்டுள்ள "யாருக்காக சிங்கார சென்னை" என்கிற படம்தான் அது. இந்தியாவின் நான்காவது பெரிய நகரமான சென்னையில் உள்ள கூவம் நதி, பக்கிங்காம் கால்வாய், அடையாறு ஏரி ஆகியவைகளின் கரையில் வாழ்ந்த ஆயிரக்கனக்கான மக்களின் வாழ்க்கை  தமிழக அரசாலும், தனியார் முதலாளிகளாலும், பன்னாட்டு தொழில் நிறுவனங்களாலும் மொத்தமாக சூரையாடப்படும் வன்மத்தை பேசுகிறது இந்தபடம். மொத்தமாய் நகரத்துக்கு வெளியே வழித்து எறியப்படும் உழைப்பாளி மக்களின் வாழ்க்கையயின் அடுத்தப் பக்கத்தை காட்டுகிறது. புதிய இருப்பிடத்தின் வலியை சொல்கிறது.

சென்னை உள்ள கூவத்தை சீரமைக்க தமிழக அரசுடன் சீன நிறுவனம் ஒப்பந்தம் என்ற ராஜ் தொலைகாட்சி செய்தியுடன் குறும்படம் துவங்குகிறது. மு.க.ஸ்டாலின் நகரில் திடீரென ஒருநாள் டோக்கன் கொடுக்கப்படுகிறது. வேறு இடத்தில் உங்களுக்கு வீடு ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சொல்லுகின்றனர். முழுமையாக டோக்கன் கொடுத்து முடிக்கும் முன்பு வீடுகள் இடிக்கப்படுகின்றது. தங்கள் வீட்டில் சிக்கிய பொருட்களை எடுக்கச்செல்லும் இளைஞர்கள் காவல்துறையால் நையப்புடைக்கப்படுகின்றனர். இப்படியாக கரயோரங்களில் உள்ள பல நகர்கள் திடீரென காலிசெய்யப்படுகின்றது. பல நகர்கள் திடீரென தீப்பற்றி எரிகிறது. 2009 இல் மட்டும் 22 சேரிப்பகுதிகளில் தீப்பிடித்து 128 குடிசைகள் எரிந்து சாம்பலானது. இதை தொடர்ந்து இந்த பகுதிகளில் உள்ளவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

சென்னையை சுற்றி புதிதாக வருகின்ற நோக்கியா, மோட்ரோல, நிசான், ஜின்டால் போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் பொருட்கள் சென்னை துறைமுகம் மூலமாக வெளிநாடுகளுக்கு செல்லவேண்டி இருப்பதால் அவர்களுக்கு வசதியாக சாலைகளும் ரயில் பாதைகளூம் போடப்படுகிறது. இதற்குதான் உழைப்பாளி மக்கள் வீடிகள் இடித்து நொறுக்கப்படுகிறது. உதாரணமாக பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக 9 கிலோ மீட்டர் தூரம் துறைமுகத்திற்கு பாலம் கட்ட திட்டமிடப்பட்டது. ஆனால் அவ்வழியில் பல தியேட்டர்களும், ஷாப்பிங் மால்களும், தனியார் கட்டிடங்கள் இருப்பதால் திட்டம் மாற்றப்பட்டு மதுராவயல் முதல் துறைமுகம்வரை 19 கிலோமீட்டர் தூரத்திற்கு இரண்டாயிரம் கோடி முதலீட்டில் சரக்கு லாரிகளும் கார்களும் மட்டும் போகும் நவீன சாலை அமைக்கும் பணி திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மட்டும் பனிரெண்டாயிரம் குடிசைகள் இடிக்கப்பட உள்ளது.

    இப்படிபட்ட இடங்களிலுருந்து விரட்டப்படும் மக்கள் எங்கே குடியேற்றப்படுகிறார்கள்? சென்னைக்கு வெளியே ஆவடி கேம்ப் பக்கம் கோரையில் அம்பத்தூர், கொரட்டூர், அயன்பாக்கம் ஆகிய ஏரிக்கரைகளிலிருந்து விரட்டப்பட்ட ஆறாயிரம் குடும்பங்கள் எந்தவித அடிப்படை வசதியும் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். வேளச்சேரிக்கு அருகில் கண்ணகிநகரில் இப்படி விரட்டப்பட்ட பதினாராயிரம் குடும்பங்கள் வசிக்கின்றனர். ஒவ்வொரு வீடும் 160 சதுர அடிக்குள் முடக்கப்பட்டுள்ளது. கிட்டதட்ட 75 ஆயிரம் மக்கள் வசிக்கும் இப்பகுதியில் ஒரு அடிபடை வசதிகள் இல்லாத உயர்நிலைப் பள்ளியும் ஒரே ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. கழிப்பிடம் செல்வது அங்குள்ள பெண்களுக்கு தினமும் நரக வேதனைதான். இன்னொரு பகுதி செம்மாஞ்சேரிக்கு பக்கம் உள்ள பொட்டல்வெளி ஆறாயிரம் குடும்பங்கள் அனாதரவாக அலைந்து திரிகின்றனர். இங்கு ஒவ்வொரு வீடும் 140 சதுர அடிக்குள் முடிந்து போகிறது. இவையெல்லாம் இலவச வீடுகள் என நினைத்துவிடாதீர்கள் மாதம் 350 ரூபாய்வீதம் பதினைந்து ஆண்டுகளுக்கு கட்டவேண்டும். அதாவது இந்த ஆறாயிரம் குடியிருப்புகள் மூலம் மட்டும் நூற்றிநாற்பது கோடி அரசுக்கு வருமானம்.
    தங்கள் பிழைப்பை மாநகரத்திற்குள் வைத்துள்ள உழைப்பாளி ஊருக்கு வெளியே விரட்டப்பட்டதால் தினமும் பிழைப்புக்கு பேருந்து வசதியற்ற இடங்களிலிருந்து எப்படி வருவார்கள்? பலவகையான வாகனங்களின் துணையுடன் வந்துசெல்ல ஒருநாளைக்கு அவர்களுக்கு 30 அல்லது 40 ரூபாய் தேவைப்படும். மாநகராட்சி பள்ளிகளில் படித்த குழந்தைகள் பலகிலோமீட்டர் பயணம் செய்து படிக்க வசதி மற்றும் வழி இல்லாத காரணத்தால் இடைவிலகளை சந்திக்கின்றனர். பன்னாட்டு நிறுவனங்களுக்கும், தனியார் முதலாளிகளுக்கும் சேவைசெய்ய ஆட்சியாளர்கள் துடிப்பதை இந்த ஆவண - குறும்படம் தோலுறிக்கிறது. மாநகர தெருக்களில் மக்களிடம் காட்டவேண்டிய படம் இது.
 அப்படி மக்களிடம் சென்றால் கீழ்கானும் கேள்வியை அவர்களிடம் எழுப்ப முடியும். சென்னை மாநகர மேயரும், துனை முதல்வரும் குடிசையிலா சென்னை என்ற வார்த்தைக்குள் புகுந்துக்கொண்டு எளிய மக்களின் குடிசைகளை சென்னைக்கு வெளியே தூக்கி எறிகிறார்கள்.. அப்படியானால் நீங்கள் இந்த ஆட்சியை....?
http://www.youtube.com/watch?v=Wf2gMDHu3cI&feature=player_embedded
http://www.youtube.com/watch?v=qbozBv2MTvQ&feature=player_embedded

வெள்ளி, 4 ஜூன், 2010

இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் - பேசும் அரசியல்

                                  1
கலை கலைக்காக மட்டுமே என்ற சொல்லாடல் வழக்கொழிந்து அது மக்களுக்கானது என்று பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் இந்த விவாதம் இன்றும் தொடரவே செய்கிறது. மக்களுக்கானது என்றான கலையை மிக எளிதாக ஆளும் வர்க்கம் தனதாக்கியது. அதனால்தான் 90 களின் துவக்கத்தில் பஞ்சாயத்துவாரியாக விஞ்ஞான வளர்ச்சியின் முக்கிய கண்டுபிடிப்பான தொலைக்காட்சிகள் வழங்கப்பட்டது.
ஊரின் மையத்தில் மக்களை திரட்டிய அந்த சாதனம் சமூக நடவடிக்-கைகளை கேள்விக் கேட்காமல் ஏற்றுக்கொள்ள வைக்க வீட்டின் நடுநாயகமாக அந்த மந்திரப்பெட்டி அமர்ந்தது. வண்ண வண்ண விளம்பரங்களால் வசீகரம் செய்த அந்த தொலைக்காட்சி ஒரு அழுத்தமான இடத்தை பிடித்தது. காலகாலமாய் மக்கள் செய்த நுகர்வை நுகர்வுக் கலாச்சாரமாக மாற்றியது. இனி பொருட்களின் பெயரை சொல்லாமல் வாங்க முடியாது என்ற நிலையை உருவாக்கியது.
உலகமயம் பண்பாட்டு சாதனங்களில் ஒன்றான ஊடகத்தை தனது அழுத்தமான வாகனமாக மாற்றி ஆண்டுகள் பல ஆகிறது. ஒரு காலத்தில் திரைப்படங்களை மூலதனமாகக் கொண்டு ஆட்சியை பிடித்தார்கள். திரைப்படங்கள் சமூக விழுமியங்களை தீர்மானித்தது. ஆனால் திரைப்படங்களை விளம்பரம் செய்து ஓடவைக்க தொலைகாட்சி ஒரு முக்கிய ஊடகமாக இன்று காட்சியளிக்கிறது. இருப்பினும் இன்றும் திரைப்படங்களுக்கென்ற இடம் அப்படியே உள்ளது. ஆனால் இந்த ஊடகத்தை மிகச் சிலரே கலை மக்களுக்கானது என்ற அடிப்படை சித்தாந்த உணர்வுடன் இன்று கையாளுகின்றனர்.
இது பிரக்ஞை பூர்வமான நடவடிக்கை. இதன் பின்னால் அழுத்தமான அரசியல் இல்லை என்றால் இது சாத்தியமல்ல.
கோடிகளில் புழங்கும் சினிமாத்துறையை லாபம் கிடைக்க வேண்டும் என்ற உணர்வுடன் அணுகுவது தவறல்ல, அதுதான் ஈடுபடுபவர்களை நிலைத்திருக்க வைக்கும். ஆனால் பணம் மட்டுமே பிரதானம் என்பதுதான் பிரச்சனை. படத்தை தயாரித்த தயாரிப்பாளருக்கு லாபமும் கிடைக்க வேண்டும் அதே நேரத்தில் இந்த ஊடகத்தை மக்களுக்காகப் பயன்படுத்த வேண்டும் என்று நினைக்கும் ஊடக இயக்குனர்கள் எத்துனை பேர் என்பது கேள்விக்குறியே.
சமீபத்தில் பேராண்மை, ஈ, காதல், கல்லூரி, வெயில், சுப்பிரமணியபுரம், நாடோடிகள், இம்சையரசன் 23ம் புலிகேசி, அறை எண் 305ல் கடவுள், அங்காடிதெரு, மாயாண்டி குடும்பத்தார் போன்ற வெற்றிப் படங்கள் பிரமாண்டங்களை பின்தள்ளி வாழ்வியலை, அரசியலை பேசிய படங்கள். ஆனால் இந்த படங்களை நமது ஆட்சியாளர்கள் எதிர்கொண்டவிதம் அவர்களின் வன்மம் மிக்க நுண்அரசியலின் வெளிப்பாடாய் அமைந்தது. முழுமையாக நகைச்சுவை பின்னணியாகக் கொண்டு அரசியல் பேசிய இம்சையரசன் 23ம் புலிகேசி சிறந்த நகைச்சுவை படம் மட்டுமே என்றனர். வடிவேலு எவ்வுளவு சிறப்பாக நடித்தாலும் அவர் சிறந்த நடிகருக்கான விருதை பெற முடியவில்லை. அதாவது உலகமய எதிர்ப்பு எல்லாம் நகைச்சுவை சார்ந்தது. அடுத்து இதைவிட கொடுமை ஒன்று நடந்தது. ஈ என்ற திரைப்படத்தில் மிகச் சிறப்பாக சமூக அவலத்தைக் கண்டு கோபப்படும் இளைஞன் வேடத்தில் நடித்த பசுபதிக்கு சிறந்த நகைசுவை நடிகருக்கான விருது கொடுத்ததுதான். அதுசரி! அந்த வருடம் சிறந்த நடிகர் ரஜினிகாந்த் என்பது முக்கியமான செய்தியல்லவா?
ஒரு சிறு வட்டத்தின் புறக்கணிப்பு இருப்பினும் மக்கள் ஆதரவுடன் வெற்றியடைந்த, கலையை மக்களுக்கு அர்ப்பணிக்கும் உண்மையான கலைஞன் தன்னை சமரசம் செய்து கொள்ள மாட்டான். அதன் வெளிப்பாடுதான் இயக்குனர் ஜனநாதன் ஈ படத்திற்கு அடுத்து பேராண்மையை எடுத்ததும். இயக்குனர் சிம்புதேவன் இம்சையர சனுக்குப் பிறகு  இரும்புக்கோட்டை முரட்டு சிங்கத் தையும் இயக்கியது. இந்த இரும்புக் கோட்டை முரட்டு-சிங்கம் ஊடகத்தை எப்படி வெற்றிகரமாய் மக்களுக்கு அவர்களது வாழ்வியலை சொல்ல பயன்படுத்த வேண்டும் என்ற புரிதல் கொண்ட திரைப்படம்.
                                    2
கற்பனையில் மிதந்துவரும் அது ஒரு தனி உலகம். ராணி காமிக்ஸிலும், முத்து காமிக்ஸிலும் நாம் பார்த்து வியந்த உலகம். தொப்பி தாங்கிய தலையும் இடையில் தொங்கும் துப்பாக்கியும் வேகமாய் ஓடும் குதிரையும் லாவகமாய் அதன் மீது அமரும் மனிதர்களும் நம்மை ஆட்கொள்வர். ஆங்கிலத்தில் பலதை பார்த்து மிரண்ட நமக்கு, தமிழில் காமிரா மாமேதை கர்ணன் மட்டுமே காட்டிய உலகம் அது. அதன் பெயர் “கௌபாய்’’ உலகம். மின்னல் வேகத்தில் சுடும் துப்பாக்கி. நாகரிகங்களை அறியாத ஆனால் மனித மாண்புகளை தெரிந்த, அதனாலேயே ஏமாற்றப்படும் செவ் விந் தியர்கள் இருக்கும் களம் அது. அந்த பிருமாண்ட மான உலகில் நடக்கும் கதையிது.   
லிட்டர் குவளையை கையில் வைத்திருக்கும் நீதி தேவதையின் முன்பும், “நான் சொல்லுவதெல்லாம் உண்மை’’ என அமிதாப்பச்சன் படத்தின் மீதும் சத்தியம் செய்யும் ஷோலே புரத்தில் உள்ள நீதி மன்றம். அங்கு  டெக்ஸாஸ் முள்ளங்கியை பாதுகாக்க முடியாத சிங்காரத்தை விசாரனை செய்து தூக்கு தண்டனை விதிக்கின்றனர். தப்பிக்க ஒரே வழி அந்த முள்ளங்கியை கண்டு பிடிப்பதுதான். ஆனால் சிங்காரத்தால் அது முடியாது. எனவே அவனுக்கு தூக்கு முடிவாகிறது.
அவனை தூக்கிலிடும்போது தூக்குக்கயிற்றை சுட்டு அவனை நான்கு பேர் காப்பாற்றுகின்றனர். காப்பாற்றியவர்கள் சொல்வது இதுதான். ஜெய்சங்கர்புரத்தை காக்க இரும்புக்கோட்டையை எதிர்த்து அவன் சிங்கமாய் நடிக்க வேண்டும். அப்படி எனில் சிங்கம் என்னவானான்? அதுதான் மர்மம். சரி அப்படி நடித்தால் சிங்காரத்திற்கு என்ன கிடைக்கும். அவன் தேடும் டெக்ஸாஸ் முள்ளங்கி கிடைக்கும்!. ஆகவே அவன் நடிக்க ஒப்புக்கொள்கிறான். இரும்புக்கோட்டை போடும் நிபந்தனையை ஏற்று புதையலை நோக்கி நடந்து அதை வென்று தருகிறான்.  
இரும்புக்கோட்டையினை ஏன் முரட்டு சிங்கம் எதிர்க்க வேண்டும். ஏனெனில் இரும்புக்கோட்டை என்ற கிராமம் பக்கத்தில் உள்ள பல ஊர்களை அடக்கியாள நினைக்கிறது. அதனால் அது எதையும் செய்யத் தயாராகிறது. நாடுகளுக்குள் மோதலை விதைக்கிறது. அணு ஆயுத ஒப்பந்தம் போடுகிறது. அதன் இறுதி இலக்கு உலகில் யாருக்கும் கிடைக்காத புதையலை கண்டடைவதுதான். இந்த இரும்புக்கோட்டையால் பாதிக்கப்பட்ட கொஞ்ச மேனும் மானமுள்ள ஜெய்சங்கர்புர மக்கள் அந்த இரும்புக்கோட்டையை எதிர்க்க நினைக்கின்றனர். எனவே அந்த இரும்புக்கோட்டைக்கு பீதியை கிளப்பும் சிங்கத்தின் தலைமையில் போராட நினைக்கிறனர். ஆனால் சிங்கத்தை பேச்சு வார்த்தைக்கு அழைக்கும் இரும்புக்கோட்டையின் தலைவன் அதாவது அநீதி விளக்கை உயர்த்தி பிடிக்கும், கொடிய வில்லன்களின் குளவிளக்கு அசோகனின் அக்காள் மகன் ஒற்ரைக்கண்ணன் அநீதியாக சிங்க த்தை படுகொலை செய்கிறான். எனவே இந்த நடிப்பு சிங்காரம் சிங்கமாக மாறுகிறான்.
இரும்புக்கோட்டைக்கும் ஜெய்சங்கர்புறத்துக்கும், செவ்விந்தியர்களுக்கும் ஏற்படுத்தும் சிண்டுமுடிப்பு வேலைகளை முறியடித்து அவர்களுடன் இணைந்து புதையலை சிங்கம் கண்டுபிடிக்கிறான். ஆனால் புதையல் கைக்கு கிடைத்ததும் சொன்னது போல மற்ற பகுதிகளுக்கு விடுதலைதர இரும்புக்கோட்டை மறுக்கிறது. அங்கு நடக்கும் மோதலில் இரும்புக்கோட்டை தலைவன் அழிக்கப்பட அனைவருக்கும் விடுதலை கிடைக் கிடைக்கிறது.
கதை சுருக்கம் மேலே சொன்னதுதான்.
                                   3
ஆனால் இந்த கதையை திரைப்படமாக்கி இருக்கும் விதம் பிருமாண்டமானது. பல ஆண்டுகள் கழித்து நமது கண்முன்னே ஒரு கௌபாய் படம் பரவசம் கொள்ளச் செய்கிறது. படத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது பிரமிப்பூட்டும் செட்டிங் மற்றும் வெளிப்புற இடங்களின் தேர்வு. நடிகர்கள் தேர்வு, இசை, ஒளிப்பதிவு, ஆடைவடிவமைப்பு, கதைகளம், என அனைத்தும் அனைத்து துறைகளும் சிம்புதேவனின் திறமைக்கு சான்றாக உள்ளது. செவ்விந்தியராக வரும் பாஸ்கியும் அவரது மொழிபெயர்ப்பாளராக வரும் நடிகரும் நிச்சயம் நகைச்சுவை நடிப்பின் உச்சம் தொடுகின்றனர்.
படம் முழுவதும் ஏகாதிபத்திய சக்திகளின் தலைமைப் பாத்திரம் வகிக்கும் அமெரிக்காவை தோலுரித்து தொங்கவிடும் நுட்பமான காட்சி அமைப்புடன் நகர்கிறது. அதுமட்டுமல்ல சமகால அரசியலின் நையாண்டியும் ஊடாக வருகிறது. இரும்புக்கோட்டையின் சின்னம் கழுகு, அங்கு நிற்கும் கொடிய வில்லன்களின் குலவிளக்கு அசோகனின் கையில் தீப்பந்தம் அதை பார்க்கும் உங்களுக்கு அமெரிக்க சுதந்திரதேவியின் சிலை நினைவுக்கு வராமல் போகாது. அடுத்து இரும்புக்கோட்டை தலைமை அடியாள் உலக்கை சிகப்பு என்ற வார்த்தையை கண்டு நடுங்குவது நோக்கப்பூர்வமானது. இரும்புக்கோட்டைக்கு எதிரான புரட்சியாளர்களை கைது செய்து கொலை செய்யும் காட்சிக்கு முன் நடக்கும் சம்பவம் கியூபா உள்ளிட்டு பலநாடுகள் மீது அமெரிக்க பொருளாதார தடையால் வஞ்சிப்பதை நினைவூட்டும் காட்சி.
 மேய்ச்சல் நிலத்தில் வாழும் புரட்சியாளர்கள் இருக்கும் கிராமத்தில் உள்ள ஆடு மாடுகளை தூக்கிலிட நிற்கவைத்துவிட்டு உலக்கை சொல்கிற வசனம் “உங்களை கொல்லுவதல்ல எனது நோக்கம், உங்களை அடிமைப்படுத்த, எங்கள் காலடியில் மண்டியிட வைக்க, எரியரத புடுங்கினா கொதிக்கிறது தானா அடங்கும்’’
திருவிழாவில் பட்டாசு வெடிக்கக் கூட தடையுடன் அணுகுண்டு ஒப்பந்தம் போடுவதும், அந்த நேரத்தில் தத்தித் தத்தி நடந்து சென்று ராகவன் கேட்கும் கேள்வியும் குபீர் சிரிப்பை வரவைத்தாலும் ஜார்ஜ் புஷ்ஷிடம் அடங்கி நிற்கும் மன்மோகன்சிங நினைவுக்கு வருவதை தவிர்க்கமுடியவில்லை. செவ்விந்திய மக்களையும் ஜெய்சங்கர்புறத்து மக்களையும் துரோகம் செய்து மோதவிடும் காட்சிகள் மூன்றாம் உலகநாடுகள் மத்தியில் பகைமையை விதைக்கும் அமெரிக்காவின் இயல்பான குணத்தின் காட்சிபடுத்தல்.    
பல ஆண்டுகளுக்கு முன்பு இனி சாலையில் போக வேண்டும் என்றால் கூட பணம் கட்ட வேண்டும் என்று இடதுசாரிகள் கூறியபோது கிண்டல் செய்தவர்கள் இன்று தமிழ்நாட்டில் எங்கு சென்றாலும் சுங்கச்சாவடியை தாண்டியே செல்கின்றனர். அதற்கான பகடியும் இப்படத்தில் உண்டு. பாலைவனம், காட்டாறு, காடு, மலைகளைக் கடந்து கடுமையான சிரமங்களுக்கு இடையில் புதையலைத் தேடி செல்லும் குழுவினர் சந்திக்கும் “டோல்கேட்’’ அக்மார்க் அரசியல். ஸ்பான்சர் இல்லாத இடமே இல்லையென்றான நிலையும் முக்கியகட்டத்தில் வருகிறது. புதையல் கிடைத்ததாக நினைத்து திறக்கும் பாறையில் இருக்கும் விளம்பரம் இதற்கு நல்ல உதாரணம். இந்த வெளிப்புற இடத்தை பராமரிப்பது “பப்பீ ஜவுளி ஸ்டோர்’’ கடை தீப்பிடித்தால் தப்பித்து ஓடும் வசதியுடன் கூடியது என்ற வாசகத்துடன் வரும் நையாயாண்டி இது. அடுத்தும் ஒரு முக்கியமான காட்சி. புதையல் குறிப்பு இருக்கும் பெட்டியினுள் இருக்கும் கேள்வி “வெளியில் உள்ள தமிழன் தாக்கப்பட்டால்”  தமிழ் நாட்டில் உள்ள தமிழன் என்ன செய்வான் 1. மிகுந்த மகிழ்ச்சியுடன் கிரிக்கெட் பார்ப்பான் 2. திரைப்படம் ரிலீஸ் அன்று நடிகர் கட்டவுட்டுக்கு பாலபிஷேகம் செய்வான் 3. தொலைக்காட்சி நாடகங்கள் பார்ப்பான் 4. டீக்கடையில் அமர்ந்து வெட்டிக்கதை பேசுவான். விடை நமது கலாச்சார பெருமை மிகுந்த “டீக்கடை வெட்டிக்கதை”.
                                    4
இந்த படம்  இயல்பாக பார்வையாளனை நோக்கப்பூர்வமாக சிரிக்கவைத்து ஊடாடுகிறது.இப்படி படம் முழுவதும் நிகழ்கால அரசியலை, ஏகாதிபத்திய அரசியலை அம்பலப்படுத்திக்-கொண்டே செல்கிறது. சமீபத்தில் இப்படி ஒருபடம் வந்ததில்லை என்பது உண்மைதான். பல நண்பர்-கள் நம்முடன் இந்தப் படத்தில் பல விமர்சனங்களை சுட்டிக்காட்டினர். அழகியல் குறித்து, நடிகர்கள் ஏராளம் இருந்தும் அவர்களுக்கு போதிய காட்சிகள் அமையவில்லை, இப்படி அரசியலை சொன்னால் படம் வெற்றியடையுமா? என்றெல்லாம். ஆனால் சுறா, சிங்கம், வில்லு, அசல், என அறைத்த மாவை மீண்டும் மீண்டும் அவர் அவர் பாணியில் அறைத்துக் கொடுப்பதைவிட இப்படி புதியன எடுக்கும் துணிச்சலான முயற்சிகளை தமிழக மக்கள் கைதட்டி வரவேற்பு செய்வார்கள். மசாலா படங்களை, ஆபாசம் நிறந்த படங்களை எடுத்துவிட்டு தன்னிடம் உள்ள ஊடக விளம்பர பலத்தால் படங்களை ஓட வைக்க முயல்பவர்கள் சொல்லும் வசனம் இதுதான் “மக்கள் விரும்புவதைத்தான் நாங்கள் எடுக்கிறோம்” அது எவ்வுளவு ஏமாற்று வாசகம் என்று அனைவருக்கும் தெரியும். இந்த வசனங்களை நிறுத்த வேண்டும் எனில் இத்தகைய அரசியல் பேசும் படங்கள் ஓடவேண்டும். இத்தகைய படங்கள் ஓடும் போதுதான் மக்கள் எதை விரும்புகிறார்கள் என்பதை அவர்களுக்கு சொல்ல முடியும்.

செவ்வாய், 17 நவம்பர், 2009

அது என்ன?


மனிதர்கள் அவசரமான வாழ்க்கைக்கு பழகிக்கொண்டிருக்கும் உலகில், நுட்பமான உணர்வுகள், பாசம், தனிமை, ஏக்கம், உறவுகளுக்கான துடிப்பு, ஆத்மாத்தமான நட்பு என்பவைகள் எல்லாம் கேள்விக் குறியாக மாறிக்கொண்டிருக்கிறது.தன் அளவில் மனிதநேயத்திற்காக ஏங்கும் மனித வாழ்க்கை சுற்றும் முற்றும் பார்க்க மறுக்கிறது. பிழைப்புக்கான வாழ்வாதார போட்டியை உலகமயம் பின்னால் இருந்து இயக்கிக் கொண்டிருக்கிறது நம்பிக்கை உள்ளவர்களின் கடவுள் போல..
நீங்கள் செல்லும் சாலைகளில், பேருந்தில், மின்சார தொடர்வண்டியில், திரையரங்குகளில் சோகத்தை மறைக்கும் சுருக்கம் விழுந்த முகங்களுடன், நரைகூடி, கண்களில் மெல்லிய தேடல் கொண்ட வயதானவர்களை சந்தித்திருக்கிறீர்களா? அப்போது உங்களுக்கு என்ன தோன்றும்? உங்களது வயதான பெற்றோர்கள் நினைவுக்கு வருவார்களா? அல்லது வெற்றிலைக் கறைபடிந்த அல்லது மூக்குப்பொடியின் வாசம் கமழும் அல்லது திருநீரின் வாசம் நிரம்பிய உங்கள் பிரியமான தாத்தாவை ஏன் அப்பா நம்முடன் வைத்துக்கொள்ள மறுக்கிறார் என்ற எண்ணம் உதித்ததுண்டா? வயதானவர்களின் ஏக்கம் எப்படிபட்டது என்று ஒரு கணமேனும் உங்கள் நினைவுகளில் அசைபோட நேரம் ஒதுக்குவீர்களா? ஆம் எனினும் இல்லை எனினும் உங்களுக்காகத்தான் இந்த வாட் இஸ் தட்? அது என்ன?
**********
சமீபத்தில் என்னுடைய ஆர்குட் வலைதளத்தில் அரவிந் மணி என்ற நண்பர் ஒரு வீடியோக் காட்சியை அனுப்பி இருந்தார். அது மூன்று நிமிடங்கள் மட்டுமே ஓடும் கிரேக்க குறும்படம். 2007ல் வெளிவந்தது. படத்தின் பெயர் ‘அது என்ன? (வாட் இஸ் தட்)’.
ஒரு படைப்பு அல்லது படைப்பாளி எங்கு வெற்றியடைகிறான் எனில் அவனது படைப்பை வாசகன் அல்லது ரசிகன் பார்த்து அல்லது படித்து முடித்ததும் அவனுக்கு அந்தப் படைப்பில் பேச நிறைய இடம் இருக்க வேண்டும். அதாவது பார்வையாளனை அவனது படைப்பு சார்ந்த பங்கேற்பாளனாக உள்ளடக்க வேண்டும். பார்வையாளனுக்கும் அந்தப் படைப்பில் பேச மிச்சம் வைக்க வேண்டும். உலகின் சிறந்த படைப்புகளில் எல்லாம் இது நிகழ்ந்துள்ளது.
60 - 70 ஆண்டுகளை இந்த மண்ணில் கழித்த, தனது அனுபவத்தில் ஆயிரக்கணக்கான மனிதர்களை கடந்துவிட்ட வயதான மனிதனுக்கு என்ன வேண்டும்? நம்மால் ஆயிரம் பொருட்களை வாங்கிக்கொடுக்க முடிந்தாலும் அவர்களுக்கானது அதுவல்ல. குளிரூட்டபட்ட அறையும் தொலைகாட்சிப்பெட்டியும் அவர்களது தனிமையைப் போக்கிடுமா? இல்லை... அவர்களுக்குத் தேவை, தனது வளர்ந்துவிட்ட குழந்தைகளுடன் தினமும் கொஞ்ச நேரம் பேசவேண்டும் அவ்வுளவுதான். மூன்று மணிநேரம் ஒரு திரைப்படம் சொல்லுவதை இந்தப் படம் ஐந்து நிமிடங்களில் சொல்லி அந்த வெற்றியைப் பெறுகிறது. வாருங்கள் படத்தினுள்..
***********
ஒரு சுவற்றின் மீது கேமிரா மெல்ல மெல்ல நகரும். சுவற்றின் இறுதியில் ஒரு பச்சைநிறக் கதவு, அங்கிருந்து கேமிரா தூரத்தில் தோட்டத்தின் சிமெண்ட் பலகை மீது இருவர் அமர்ந்திருப்பதைக் காட்டும். அடுத்த காட்சி ஒரு முதியவரின் முகம் அருகாமைக் காட்சியாக காட்டப்படும். அதே போல பாதிமுகம் தெரிய ஒரு இளைஞன் செய்தித்தாள் படித்துக்கொண்டிருப்பான். அடுத்த காட்சியில் முதியவரும் இளைஞனும் அமர்ந்திருப்பார்கள். அவர்களின் வலதுபுறம் கேமிரா நகரும். ஒரு செடி. அந்த செடியின் மீது ஒரு குருவி வந்து அமரும்.
அந்த முதியவர் கேட்பார் "அது என்ன"?
செய்தித்தாள் படித்துக்கொண்டிருக்கும் அவரது மகன் முகம் திருப்பி அந்தக் குருவியைப் பார்த்து "அது சிட்டுக்குருவி" என்று சொல்லிவிட்டு மீன்டும் செய்தித்தாளில் முகம் புதைப்பான்.
அடுத்து அருகாமைக் காட்சியாக அந்த சிட்டுக்குருவி வந்து போகும். குருவியின் பின்னாலிருந்து குருவியும் அந்த இருவரும் சேர்த்து காட்சியாக்கப்படுவர்.
மீண்டும் அந்த முதியவர் கேட்பார் "அது என்ன''?
கொஞம் அலுப்புடன் அவரது மகன் "இப்பதானே சொன்னேன்.. அது சிட்டுக்குருவி" என கூறிவிட்டு செய்தித்தாளை உதறி மீண்டும் படிக்கத்துவங்குவான்.
அந்த குருவி மேலே எழுந்து பறக்கத்துவங்கும். நிமிர்ந்து பார்க்கும் முதியவர் வெய்யிலுக்கு நெற்றியில் கைவைத்து அதை பார்த்துக்கொண்டிருப்பார். அது அவர்களது இடப்புறம் சென்று அமரும்.
அந்த முதியவர் மீண்டும் கேட்பார் "அது என்ன"?
கொஞ்சம் எரிச்சல் மற்றும் கோபத்துடன் அவரது மகன் "சிட்டுக்குருவிப்பா அது சிட்டுக்குருவி சி.ட்.டு.க்.கு.ரு.வி..."
அந்த முதியவரின் சோகமான முகம் அருகாமைக் காட்சி.
அவர் மீண்டும் கேட்பார் "அது என்ன"?
கோபத்தின் உச்சத்திற்கு செல்லும் அவரது மகன், முகம் சிவக்க "என்ன செய்றீங்கன்னு தெரியுதா? நான் எத்துணைவாட்டி சொல்லுறேன்... அது சிட்டுகுருவின்னு.. நான் சொல்றது உங்களுக்குப் புரியுதா" அவன் உச்சஸ்தாயில் கத்த..
அவர் சோகமாக எழுவார், தளர்ந்த நடையுடன் வீட்டை நோக்கி நடக்கத் துவங்குவார். நொடிப்பொழுதில் கொஞ்சம் நிதானித்த அவன் அவரைப் பார்த்து "எங்க போறீங்க"? என்பான்
அவர் அவனை நோக்கித் திரும்பாமல் பொறு என்பது போல சைகைகாட்டி வீட்டை நோக்கிச் செல்வார்.
அங்கு இருந்த சிட்டுக்குருவி பறந்து செல்லும். அது இல்லாத அந்த இடம் வெறுமையாய் இருக்கும். தான் அப்படி கோபப்பட்டிருக்க வேண்டாமோ என்று அவன் யோசிக்கும் போது அவனது தந்தை கையில் ஒரு டைரியுடன் வருவார். அவன் அருகில் அமர்ந்து அதில் ஒரு பக்கத்தைத் தேடி அவனிடம் கொடுத்து படிக்கச் சொல்லுவார். இடது புறத்திலிருந்து இருவரின் முகமும் அருகாமைக் காட்சியாக திரை முழுவதும் தோன்றும்.
அவன் மௌனமாய்ப் படிக்க அவர் "சத்தமாய் படி" என்பார்.
அவன் அந்த பக்கத்தை படிக்க துவங்குவான். இன்று என் செல்ல மகனுக்கு மூன்று வயது. என்னுடன் தோட்டத்தில் அமர்ந்திருந்தான். எங்கள் முன்னால் ஒரு சிட்டுக்குருவி. எனது மகன் அது என்னவென்று தொடர்ந்து இருபத்தியோரு முறை கேட்டான், நானும் அவன் கேட்ட இருபத்தியோரு முறையும் அது சிட்டுக்குருவி என்று பதில் சொன்னேன்.
நான் பதில் சொல்லும் ஒவ்வொரு முறையும் அவன் அதே கேள்வியை என்னிடம் கேட்பான் மீண்டும் மீண்டும்...
அவனுக்கு மூளை கோளாறு அல்ல.. அந்த வயதுக்கான உணர்வுகள், என்மீது உள்ள பிரியத்தால்.. மீண்டும் மீண்டும் என்னோடு உரையாடும் ஆர்வதில் கேட்பான் எனது ஏதுமறியாத செல்ல மகன்.
ஆயிரம் உணர்வுகளை தேக்கி உணர்வற்றது போல் இருக்கும் அவரது முகம் அருகாமைக் காட்சியாய் வந்து போகும்.
அவனது கை அன்னிச்சையாய் நாட்குறிப்பை மூடும். அவனது தந்தையை கட்டியணைத்து முத்தம் கொடுப்பான்.
அவர்களது உருவங்களின் பின்புறத்திலிருந்து கேமிரா பின்னோக்கி நடந்து ஒரு மரத்தின் மேல் நோக்கி ஊர்ந்து செல்லும். உச்சியில் ஒரு கிளையின் மீது சிறகுகள் படபடக்க பறந்து அந்த சிட்டுக்குருவி அமரும்.
படம் முடிந்து பெயர்கள் ஓடத்துவங்கும். பெயர்கள் மட்டுமல்ல நமது சிந்தனைகளும்....