

அன்பு நிறைந்த இணயதள வாசக நண்பர்களே!
இணைய தளத்தை ஆரோக்கியமான அரசியல் விவாதங்களுக்கு பயன் படுத்தும் முறை கொஞ்கம் கொஞ்சா£க சீரழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதிலும் தங்களை அக்மார்க் புரட்சியாளர்கள் என்று தங்களுக்கு தாங்களே முத்திரை குத்திக்கொள்ளும் சில அனானிகளும், த.நா.மா.லெ.க மற்றும் ம.க.இ.க வகையராக்களுகம் அவர்களை யாராவது விமர்சனம் செய்தால் விமர்சனம் செய்பவர்களை தரம் தாழ்ந்து கேவலமான வார்த்தைகளால் அசிங்கப்படுத்தி ஒன்று அவர்களை அடுத்த முறை விவாதம் நடத்த விடாமல் செய்வது அதையும் மீறி நின்றால் அடுத்தது அந்த பக்கம் தலை வைத்து படுக்காமல் ஓடிவிடுவது இந்த இரண்டு நிலையையே எடுத்து வருகின்றனர்.
அவர்களுக்கு இன்று தமிழகத்திலும், இந்தியாவிலும் முதல் வர்க்க எதிரி மார்க்சிஸ்ட் கட்சி மட்டும் தான்.
நந்திகிராமை முடிந்த அளவு அவதூறு செய்ய பயன் படுத்தினார்கள் அதை எதிர்த்து சந்திப்பு, விடுதலை போன்ற வளைத்தளங்களில் பதிலடி கிடைத்தவுடன் அடுத்து காரப்பட்டு விவகாரத்தை கையில் எடுத்து "பொய் பொய்யை தவிர வேறில்லை" என்ற அடிப்படையில் எழுதினார்கள். அதற்கும் சரியான பதிலடி கொடுத்த பின்பு அடக்கி வாசிக்க ஆரம்பித்தனர். தற்போது லால்கர் பிரச்சனை. மாவோயிஸ்டுகள் அத்வானி மற்றும் மம்தாவுடன் கொஞ்சி குலாவுவதை இவர்களால் கண்டிக்க முடியாது.
சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் தேவாரம் திருவாசகம் பாட நடந்த போராட்டத்தில் அவர்கள் மட்டுமே போராட்டம் நடத்தியதாய் பொய்யான தகவலை மீண்டும் மீண்டும் உலாவ விடுகின்றனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் 1000க்கும் மேற்பட்ட இளைஞர்களை திரட்டி போராட்டம் நடந்தப்பட்டது. அதில் ஆறுமுகசாமி உள்ளிட்டு ப.ம.க, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சி.பி.ஐ தோழர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துக்கொண்டனர். அதற்கு பின் அங்கு நடந்த பல போராட்டங்களில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவைகள் கலந்துக்கொண்டன. ஆனால் வெட்டி பரபரப்பும் வார்த்தை ஜாலங்களையும் முதலீடாக மற்றி, காவல் துறையுடன் மோதுவது போல சீன் போடும் இவர்கள் தற்போது நடராஜர் ஆலயத்தை விடுவிக்க ஆகப்பெறும் வேலையை தாங்கள் மட்டுமே செய்ததாக மார்தட்டுகின்றனர்.
ஒரு போராட்டட்தில் கலந்துக்கொள்ளும் மற்றவர்களை அங்கீகாரம் செய்யத்தெரியாத அல்லது அவர்களை கேவலப்படுத்தும் பாசிச சிந்தனையின் வெளிப்பாடுதான் இது. தங்களது கட்சியின் பெயரை வெளியே சொல்ல அசிங்கப்பட்டுக் கொண்டு அதாவது த.நா.மா.லெ.க என்ற பெயரை வெளியே சொல்ல வெட்கப்பட்டுக் கொண்டு பல்வேறு பெயர்களில் உலாவந்துக்கொண்டிருக்கின்றனர். அவர்களது கட்சி திட்டம் எப்படி காலாவதியானது என்று வரி வரியாக சந்திப்பு கிழித்து காயப்போட்ட பிறகு அதற்கும் பதில் சொல்ல தயாரில்லை. ஆனால் இணையதளத்தில் வேலை செய்யும் பல அப்பாவி இளைஞர்களை தங்களது போலி புரட்சிகர வசனங்களால் மூளை சலவை செய்து, வளைதளத்தில் எழுதியே புரட்சியை உண்டாக்கலாம் என்று முயற்சி செய்கின்றனர்.
கருத்துக்களை தூர எரிந்துவிட்டு வார்த்தைகளை தேடித்தேடி பொறுக்கி அவர்கள் எழுதுவது அவர்களுக்கே உரிய கலை. (தலைப்பு இப்போது புரிந்திருக்கும்) உதாரணமாக: "பாராளுமன்றம் பன்றிகளின் தொழுவம்" என்று மாமேதை லெனின் சொன்னதை பயன்படுத்தி மற்ற கட்சிகளை வீராவேசத்துடன் திட்டுவார்கள். ஆனால் "தேவையேற்படும் போது அதையும் கம்யுனிஸ்டுகள் பயன்படுத்த வேண்டும்" என்று அவரின் அடுத்த வரியை மறைத்து அல்லது மறந்து விடுவர். (இப்படி இவர்களது "கட்டிங் பீஸ்" பல உள்ளது தேவையெனில் எழுதுவோம்) ஒரு சம்பவம் குறித்து அவர்களின் பொய் எப்படி பட்ட அடிபடையற்றது என்பது பல முறை நிருபிக்கப்பட்டுள்ளது, வேண்டு மென்றால் இதற்கு பிண்ணூட்டம் அவர்கள் அனுப்பினால் மீண்டும் ஒரு முறை அவர்கள எத்துனை அய்யோக்கியதனமான பொய்யர்கள் என்று மீண்டும் ஒரு முறை நிருபனம் செய்யலாம்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களை சேர்ப்பதற்கென்றே அவர்கள் ஒரு பிரிவை வைத்துள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அவை சார்ந்த வர்க, வெகுஜன இயக்கங்கள் நடத்தும் மாநாடு பொதுக்கூட்டங்களில் துண்டு பிரசுரத்துடன் நுழைவது வேண்டுமென்றே கலகம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். அதேப்போல் தனிநபர்களை தாக்காமல் அவர்களால் எதையும் எழுத முடியாது. அவர்கள் எழுத்து நடையின் லட்சனம் அதுதான். கேட்டால் பெரிய லட்சிய கொம்பர்கள் போல கதையளப்பார்கள். எத்தனை பேர் அவர்களுக்கு பிண்ணூட்டம் அனுப்பினாலும் அத்தனை பிண்ணூட்டங்களையும் தங்களுக்கு தெரிந்த ஓரிரண்டு நபர்கள் அனுப்புவதாக கற்பனை செய்துக்கொண்டு தனிநபர் தாக்குதலில் இறங்குவார்கள். அவர்களின் நரகல் எழுத்து நடையை படிப்பவர்கள் உடன் கண்டு பிடித்து விடலாம். அவர்கள் அனானி போலவும், புனைப்பெயரிலும் எதை வேண்டுமானாலும் எழுதலாம் ஆனால் அதை எதிர்த்து எழுதுபவர்கள் அவர்களது முகவரி மற்றும் ஜாதகத்தை வெளியிட வேண்டும் என்று அடம் பிடிப்பார்கள். என்னே ஒரு ஜனநாயக மான்பு. இப்போது இந்த கட்டுரையின் பின்னுட்டத்தில் எத்துனை நரகல் நடை பதில் வரும் என்று பாருங்கள். ஒன்னு அப்படி வரும் இல்லை எனில் இதை படித்ததாக காட்டிக்கொள்ள மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் பொய்கள் ஆதாரத்துடன் அடுத்தடுத்து நிருபிக்கப் படும் என்று மேலே உள்ளது அல்லவா.
இன்னும் கூட பல அப்பாவி நண்பர்கள் அவர்களை புரட்சியாளர்கள் என்று நம்பிக்கொண்டு இருக்கிறார்கள். த.நா.மா.லெ.க வினர் புரட்சிகரமான வார்த்தைகளை பொறுக்குவார்களே அல்லாது எதையும் அவர்களால் களத்தில் நின்று செய்யமுடியாது. இலங்ககை பிரச்சினையில் அவர்கள் ஒருப்பக்கம் தமிழ் என்று கதைப்பார்கள், மறுபக்கம் புலிகளின் ஆதரவு முகம் காட்டுவார்கள், முத்துக்குமரனை வீரனாக சித்தரிப்பார்கள், மற்றொறுபுறம் அந்த அப்பாவி இளைஞனை கேவலப்படுத்துவார்கள், இலங்கை பிரச்சினையில் அவர்கள் நிலை என்ன என்று கண்டு பிடிப்பத்ற்குள் உங்கள் தலைமுடி பாதியாகிவிடும். இவர்கள் தொடர்ந்து அடையாளம் காட்டப்படுவார்கள் இணையதள வாசகர்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய கூட்டத்தை அடையாள படுத்தவே இந்த பதிவு இங்கு செய்யப்படுகிறது.
