எனது மகன் சூர்யா நான்காவது படிக்கின்றான் .. அவனது பள்ளியில் கற்றுவந்த ஒருபாடல் இது... கண்டிப்பாக ஆசிரியர்கள் கற்றுக்கொடுத்தது அல்ல... குழந்தைகள் கற்றுக்கொடுத்திருக்க வேண்டும்... நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் ஒன்று இப்பாடலின் கடைசி வரியின்போது சூர்யா அருகில் நின்றது தான் தவறாகி போனது... ஒன்றுமில்லை ஜென்டில் மேன்.. ஒரு குத்து ஓங்கி விழுந்தது அவ்வுளவுதான்.
புக் புக்
என்னா புக்?
படிக்கிற புக்
என்னா படி?
வாச படி
என்னா வாச?
அம்மாவாச
என்ன அம்மா ?
டீச்சர் அம்மா
என்னா டீச்சர் ?
கணக்கு டீச்சர்
என்னா கணக்கு?
மொட்ட கணக்கு
என்னா மொட்ட ?
திருப்பதி மொட்ட
என்னா திரி ?
விளக்கு திரி
என்னா விளக்கு ?
குத்து விளக்கு
என்னா குத்து ?
கும்மாங்குத்து !!! இத்தகைய பாடல்கள் இருந்தால் எழுதுங்களேன் .
