மேற்குவங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மேற்குவங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 29 ஆகஸ்ட், 2012

மம்தா பானர்ஜியும் சில கார்டுன்களும்... இதய நோயளிகள் பார்க்க வேண்டாம்??

ஜாதவ்பூர் பல்கலைக்கழக பேராசிரியர் அம்பிகேஷ் மகாபத்ர, மம்தாவை பற்றிய ஒரு கார்ட்டூனை மெயில் மூலம் 65 பேருக்கு  அனுப்பினார். முன்னாள் ரயில்வேதுறை அமைச்சர் தினேஷ் திரிவேதியை எப்படி கட்சியைவிட்டு வெளியேற்றுவது என்று மம்தாவும், முகுல்ராயும் ஆலோசனை செய்வதாக அக் கார்ட்டூனின் கருத்து இருந்தது. கார்ட்டூனில் மம்தாவின் தலையில்லாத உருவம் வரையப்பட்டிருந்தது. கார்ட்டூனின்  தலைப்பாக " Our CM Has Lost Her Head   " என குறிப்பிடப்பட்டிருந்தது. 

விமர்சனம் என்பது மம்தாவுக்கு எப்போதும் பிடிக்காது ஆதலால்... அம்பிகேஷ் கைது செய்யப்பட்டார். அதோடு மட்டுமில்லாமல் திரிணாமுல் கட்சி தொண்டர்களால் கொலை மிரட்டலுக்கு ஆளானார்.  15 க்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்களால் அவர் கடுமையாக தாக்கப்பட்டார். தான் ஒரு CPM கட்சி   தொண்டர் என எழுதித்தரும்படி திரிணாமுல் தொண்டர்களால் மிரட்டப்பட்டார். தன் உயிருக்கு பாதுகாப்பு வேண்டுமென்று காவல் துறையில்  புகார் செய்யுமளவுக்கு அம்பிகேஷ் திரிணாமுல் தொண்டர்களின் கொலை மிரட்டலுக்கு ஆளானார். மேலும்  அம்பிகேஷ்,  சென்குப்தா என்பவருடைய மெயில்   IDயை பயன்படுத்தி கார்ட்டூனை அனைவருக்கும் அனுப்பி யிருந்ததால் சென்குப்தாவும் கைது செய்யப்பட்டார். மேற்குவங்க  போலீஸ்,   சமூக வலைத்தளங்களில் மம்தாவின் நன்மதிப்பை குறைக்கும் வகையில்  வேண்டுமென்றே எழுதப்பட்டு வரும்   கருத்துக்களை நீக்கும்படி Face Book  போன்ற வலைத்தளங்களுக்கு கடிதம் எழுதப்போவதாக அறிவித்துள்ளது.

இப்படியான காலகட்டத்தில் அக்கா மம்தா குறித்த சில கார்டுன்களை இப்போது நாம் பார்க்கலாம்.. இவையெல்லாம் இணையதளங்களிலுருந்து எடுக்கப்பட்டவைதான்.. அம்மையாருக்கு தெரியவில்லை உண்மை எவ்வுளவு அடக்குமுறைகளையும் மீறி வெளியே வரும் என்பது.
































வியாழன், 17 நவம்பர், 2011

பயங்கரவாதிகளை விட ஆபத்தானவர்கள் நக்ஸல்கள் - மம்தா பானர்ஜி கண்டுபிடிப்பு


வினை வித்தைத்து வினை அறுத்த கதை


புருலியா மாவட்டத்தில் நக்ஸல்களால் சுட்டுக் கொல்லப்பட்ட திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தொண்டர் ஒருவரின் உறவினர்களுக்கு ஆறுதல்.  

மேற்கு வங்க மாநிலம் புருலியா மாவட்டம் பெலராம்பூர் பகுதியில் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் 2 பேரை நக்ஸல்கள் 2 நாள்களுக்கு முன்பு சுட்டுக் கொன்றனர். சுட்டுக் கொல்லப்பட்ட திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்களின் குடும்பத்தினரை சந்தித்த பின் மம்தா "நக்ஸல்களுக்கு எதிரான வேட்டையை 4 மாதங்களுக்கு அரசு நிறுத்தி வைத்தால், நாங்களும் தாக்குதல் நடத்த மாட்டோம் என்று நக்ஸல்கள் அறிவித்திருந்தனர். ஆனால் இந்த அறிவிப்பு வந்த ஒரே நாளிலேயே அவர்கள் தாக்குதல் நடத்தி திரிணமூல் காங்கிரஸச் சேர்ந்த 2 பேரைக் கொன்றுள்ளனர்" என்றார்.
"பயங்கரவாதிகளை விட நக்ஸல்கள் ஆபத்தானவர்கள்.இந்த கொடுமையான தாக்குதலை எங்கள் அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். அவர்கள் தொடர்ந்து கொலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது நாம் வாயில் விரலை வைத்துக் கொண்டு வேடிக்கை பார்க்க முடியாது". 
"நக்ஸல்கள் திருந்தி வாழ நினைத்தால் அவர்கள் ஆயுதங்களைப் போட்டுவிட்டு சரண் அடையவேண்டும். அப்போது அவர்களுக்குத் தேவையானவற்றை அரசு செய்து கொடுக்கும். பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது மாநில அரசின் பொறுப்பு. நக்ஸல்களுக்கு பண உதவியையும், தங்க இடவசதியையும் சிலர் அளித்து வருவதாக அரசுக்குத் தெரியவந்துள்ளது. நக்ஸல்களுக்கு புகலிடம் தருபவர்களை அரசு கண்காணித்து வருகிறது. இதுபோன்ற நபர்கள் குறித்து பொதுமக்கள் விழிப்பாக இருக்கவேண்டும். எல்லாரும் கெட்டவர்கள் என்று நான் கூறவில்லை. ஆனாலும் பொதுமக்கள் விழிப்புடன் இருப்பது நல்லது. குறிப்பாக ஹ¨க்ளி மாவட்டத்திலுள்ள உத்தர்பரா பகுதியில் கண்காணிப்பை பலப்படுத்துவது அவசியம்". 

இதெல்லாம் அம்மா மம்தா கக்கிய முத்துக்கள்.

"மேற்கு மிதுனபுரி, புருலியா மாவட்டங்களில் நக்ஸல் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அப்பகுதியில் போலீஸார் புதன்கிழமை நடத்திய தேடுதல் வேட்டையில் ஏராளமான ஆயுதங்கள் கிடைத்துள்ளன. இன்சாஸ் ரைபிள்கள் 2, ஏகே 47 ரக துப்பாக்கிகளில் பயன்படுத்தக்கூடிய தோட்டக்காள், 60 கிலோ வெடிபொருள்கள், கண்ணி வெடிகள், ஜெலட்டின் குச்சிகள், வயர்கள் ஆகியவை புர்னபாணி பகுதியில் கிடைத்துள்ளன" இது போலீஸ் கண்காணிப்பாளர் பிரவீண் திரிபாதி சொன்னது.

# அதுசரி இந்த நக்சல்களுடன் கைகோர்த்து மார்க்ஸிஸ்ட் கட்சி ஊழியர்கள் நூற்றுக்கணக்கானோரை படுகொலை செய்த போது அவர்கள் தீவிரவதிகளாக, பயங்கரவாதிகளாக என மம்தாவின் கண்ணுக்கு தெரியாதது ஏன்?
# வெடிகுண்டுகளுடன் வந்த அந்த பயங்கரவாதிகளுக்கு திரினாமூல் கட்சி தலைவர்கள் தங்களது இல்லங்களில் தஞ்சம் அளித்தது, உணவும் அளித்தது ஏன்?

# மேற்கு மிதுனபுரி மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகங்களை நக்சல்கள் கொளுத்தி  விளையாடிய போது அம்மையார் அப்பாவியாக இருந்தது ஏன்?


# தான் ஆட்சிக்கு வருவதற்காக நக்ஸல்கள் படுகொலை செய்தால் அவர்கள் தியாகிகள், புரட்சியாளர்கள். தங்கள் கட்சியினரை படுகொலை செய்தால் அவர்கள் பயங்கரவாதிகள்  அப்படிதானே மம்தாஜி?

# நக்ஸல்கள் சுயரூபம் தெரிந்துதான் அவர்களை மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிராக கூலிப்படையாக பயன்படுத்தினீர்கள் இல்லையா மம்தாஜி?


# இரண்டு பக்கம் கூருள்ள கத்தியை பயன்படுத்தினால் இதுதான் நடக்கும் என்பதை அறியாதவார நீங்கள்?

# சி.ஐ.ஏ பணத்தை பயண்படுத்தி, நக்சல்களை கூலிப்பட்டாளமாய் ஏவி ஆட்சியை பிடித்தீர்கள். சரி. வினை விதைத்தால் அதை அறுவடை செய்துதானே ஆக வேண்டும்.  இது அறுவடை காலம் அம்மையே?

இது துவக்கம்தான்.
பாவம் உங்களை நம்பியவர்கள்.
வேண்டுமானால் பாருங்கள்
இதற்காகவும்
அங்கு மார்க்சிஸ்டுகள்தான்
போராட போகிறார்கள்.
அதாவது அப்பாவிகளின் உயிரை பாதுகாக்க ..
ஏனெனில் மனித உயிரின்
மகத்துவம் அவர்களுக்கு தெரியும்.


ஞாயிறு, 17 ஜூலை, 2011

தமிழக மம்தாயிஸ்டுகளுக்கு மகிழ்ச்சியான செய்தி?



அறுபது வயது முதியவரான பிரஜா பௌரி வேறுவழியில்லாததனால்தான் இந்த முடிவுக்கு வந்தார். ‘உயிரே போனாலும் சரி, சொந்த நிலத்தைவிட்டு வெளியேறமாட்டேன்’ என்பதே அந்த முடிவு. “நீங்கள் என்னை அடிக்கலாம்; கொல்லலாம்; ஆனால் உயிருள்ள வரை என் நிலத்தை விட்டுத் தரமாட்டேன். அதற்காக இந்த மண்ணிலேயே என் உயிரை விடுவேன்” - இந்த தீரமிக்க உறுதிக்கு முன்னால் திரிணாமுல் குண்டர்களும் பழைய நிலச்சுவான்தாரும் பின்வாங்கினர். நிலத்திற்கு பாதுகாப்புத் தரவேண்டுமெனக் கோரி நிலப் பட்டாவுடன் அரசு அலுவலகங்களுக்கும், காவல் நிலையத்திற்கும் ஏறி இறங்கியும் பயன் ஏதும் ஏற்படாத போது தான் அவர் தன் நிலத்தை தானே பாது காக்க முன்வந்தார். பாங்குரா மாவட்டத்தைச் சேர்ந்த இந்துப்பூர்க்கு அருகில் உள்ள சாக்ளதோடு என்ற கிராமத்தைச் சேர்ந்த பிரஜா பௌரி தனித்துவிடப்பட்ட ஒற்றை ஆளல்ல. மற்ற விவசாயிகளும் இப்போது அவருக்கு ஆதரவாக உள்ளனர். அவரது நிலத்தைப் பறிக்க வருவோரை விவசாயிகளும் அவருடன் சேர்ந்து எதிர்க் கிறார்கள்

முதியவர் பிரஜா பௌரிக்கு கிர்மணிப் பூர் கிராமத்தில் 38 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்திற்கு 1990 ல் இடது முன்னணி அரசு பட்டா வழங்கியது. இந்நிலத்தில் விவசாயம் செய்துதான் இவரது குடும்பம் வாழ்கிறது. சாக்ளதோடு கிராமத்தில் மகர்பௌரி, ஸ்வபன் பௌரி, பிரஹலாத் பௌரி, அன்ன பௌரி, சாவித்ரி பௌரி, ரஸனா பௌரி ஆகியவர்களின் பட்டா நிலங் களைத் தட்டிப் பறிப்பதற்கு பழைய பெரும் நிலச்சுவான்களின் குண்டர் படையும் திரி ணாமுல்காரர்களும் முயன்றாலும் இவர்களின் எதிர்ப்பெல்லாம் பலனளிக்கவில்லை. உபரி நிலத்தை நிலமில்லாத ஏழை விவசாயிகளுக்குப் பட்டா போட்டு வழங்கும் இடது முன்னணி அரசின் முடிவுக்கு எதிராக நிலப்பிரபுக்கள் உச்சநீதிமன்றம் வரை சென்று வழக்குப் போட்டனர். ஆனால், அரசாங்கத்தின் உத்தரவை சட்ட விரோத மானது என்று அறிவிக்க நீதிமன்றம் தயாரில்லை. குத்தகைக்கு விவசாயம் செய்பவர்களுக்கு நிலத்தில் நிரந்தரமாக விவசாயம் செய்வதற்கான உரிமை இல்லையென்று இவர்கள் நீதிமன்றத்தில் வாதாடினர். ஆனால் இப்போதைய நிலை அப்படியே தொடர வேண்டு மென்றும், குத்தகைக்கு விவசாயம் செய்பவர்களை அதிலிருந்து வெளியேற் றக்கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது

நிலத்தைக் கைப்பற்றும் முயற்சியை என்ன விலை கொடுத்தேனும் எதிர்ப்போம் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சூர்யகாந்த மிஸ்ராவும் தெரிவித்துள்ளார்.போராட்டங்கள் மூலம் தான் விவசாயிகள் நிலத்தின் உரிமையாளர்கள் ஆனார்கள். வங்கத்தில் 1990 வரை இத்தகைய போராட்டங்கள் நடைபெற்றன. நிலச்சீர் திருத்தத்தைச் சீர்குலைக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். மம்தாவின் ஆட்சியில் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டியவர்களே சட்டத்தை மீறுவதற்கு உதவுகிறார்கள். நீதி மீறப்படுவதை போராட்டங்கள் மூலமாகவும் நீதிமன்றம் மூலமாகவும், எதிர்ப்போம் என்றார் சூர்யகாந்த மிஸ்ரா.

மேற்குவங்கத்தில் தொடர்ந்து சி.பி.எம் ஊழியர்களை படுகொலை செய்தனர் . பின்பு தொழிற்சங்க ஊழியர்கள் மீது, அதன் பின்  அலுவலகங்கள் மீது தாக்குதல் தொடர்கிறது. இதோ அடுத்த கட்டமாக நிலங்களை இழந்த நில முதலைகளை திருப்திபடுத்தும் பணியை மம்தா கட்சியினர் துவக்கி உள்ளனர். ஆக மேற்குவங்கத்தில் உரிமைகளை பறிக்கும் செயல் துவங்கிவிட்டது. தமிழகத்தில் மேற்குவங்க ஆட்சிக்கு எதிராக தொடர்ந்து தூற்றிவந்த மம்தாயிஸ்டுகள் இப்போது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என நம்பலாம்.