மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!

                                                      மம்தா மாவோயிடுகள் சதியாலோசனை (இன்டியான் வான்கோர்ட்)

இந்திய நாட்டின் ஒரிசினல் புரட்சியாளர்கள் யார் என்பதை இன்டர் நெட்டில் தொடர்ந்து அறிவித்து வருகிறது "வினவு" என்ற வலைத்தளம். இந்த வினவு தங்களைத் தாங்களே ஐ.எஸ்.ஐ தரச் சான்று பெற்ற "அக்மார்க்  புரட்சியாளர்கள்" என்று முத்திரைக்குத்திக் கொள்பவர்களின் வலைத்தளமாகவும் செயல்படுகிறது.
இந்த வினவு புதிய ஜனநாயகம் இதழிலிருந்து ஒரு கட்டுரையை பிரசுரம் செய்துள்ளது. ஆக்கபூர்வமான எந்த மாற்றையும் எப்போதுமே சொல்லாத, எல்லோரையும் கண்டபடி திட்டினால் பிரபலமாகலாம் என்ற துக்ளக் பாணி அரசியல் செய்துவருகிறது வினவு, பேருந்து கட்டணம் உயர்ந்தால் பேருந்தில் புலம்பிக்கொண்டே செல்லும் பயணி போல இணையத்தில் புரட்சி வரும் என காத்திருக்கும் பாவப்பட்ட ஜீவன்களின் கூடாரமாய் காட்சியளிக்கிறது.

எல்லோரும் அய்யோக்கியன், நான் மட்டும் நல்லவன் என்று புலம்புவதையும்
அரசியல் கட்சிகள் எல்லாம் ஓட்டு பொறுக்கிகள் என்று வார்த்தைகளை பொறுக்கி கதையடிப்பதையும் செய்து வருகிறது, கடந்த சில ஆண்டுகளாக "கோயபல்ஸ்" பாணியில் பொய்களை திரும்பத் திரும்பச் சொல்லும் பழக்கத்திற்கும் அடிமையாகி உள்ளது அந்த வலைத்தளம். இதற்கு நல்ல உதாரணம் மேற்கண்ட கட்டுரை "ஹர்மத் வாஹினி சி.பி.எம் இன் குண்டர் படை" இந்த கட்டுரையில் எத்துனை பொய்கள் என பார்க்கலாம்...

       //”எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற கதையாக, இத்தனை நாளும் தங்களுக்கு ஹர்மத் வாகினி என்ற பெயரில் எந்தக் குண்டர் படையும் இல்லை என்று கோயபல்ஸ் பாணியில் புளுகி வந்த சி.பி.எம். கட்சி, இப்போது அது உண்மைதான் என்று வேறு வார்த்தைகளில் ஒப்புக் கொண்டிருக்கிறது. இந்த முகாம்கள் மாவோயிஸ்டு தாக்குதலிலிருந்து சி.பி.எம். ஊழியர்களைக் காப்பதற்கானது என்றும், இந்த ஊழியர் முகாம்களில் ஆயுதங்களோ, ஆயுதப் பயிற்சியோ கிடையாது என்றும் மே.வங்க சி.பி.எம். கட்சித் தலைமை அண்மையில் அறிவித்துள்ளது."//
       இதுதான் கட்டுரையின் துவக்கம். அதாவது தங்களிடம் குண்டர் படை இருப்பதாக சி.பி.எம் கட்சியே ஒப்புக்கொண்ட அர்த்தம் தொனிக்கும் வார்த்தை விளையாட்டு இது. மாவோயிஸ்டுகள் கொலை செய்ய வந்தால் சி.பி.எம் கட்சியினர் சாகனுமே அல்லாது எதிர்த்து நிற்கக் கூடாது என்ற விருப்பத்தின் வெளிப்பாடு இது. சி.பி.எம் ஊழியர்களை பாதுகாக்க அதில் இருக்கும் இளைஞர்கள் அணி திரண்டால் தவறு. பொய்யான பிரச்சாரத்தை மக்களிடம் பரப்பி, பீதியை உண்டாக்கி, ஆயுதங்களுடன் மக்களிடம் கொள்ளையடித்த மாவோயிஸ்டுகள் இப்போது விரட்டப்படுகின்றனர். இதை பொறுத்துக்கொள்ள முடியாத புலம்பல் இது. இதில் அபத்தமான ஒரு பொய் இருக்கிறது. "ஹர்மத் வாஹினி" என்பது சி.பி.எம் கட்சி சார்பானது அல்ல..... அது மாவோயிஸ்ட் மற்றும் மம்தாயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட, அவர்களால் வீடுகளை இழந்த, உடமைகளை பறி கொடுத்த மக்களின் கூட்டமைப்பு என்பது கூட தெரியாமல் கட்டுரை எழுதுகின்றனர். அடுத்த பாரா கீழே வருகிறது....

     //  "கடந்த 2009-ஆம் ஆண்டில், மே.வங்கத்தின் லால்கார் வட்டாரத்தில்
பழங்குடியின மக்களின் பேரெழுச்சியைத் தொடர்ந்து அதுநாள் வரை அப்பகுதியில் ஆதிக்கம் செலுத்திவந்த சி.பி.எம். கட்சியின் ஊழல் பெருச்சாளிகளும் சமூக விரோதிகளும் போலீசாரும் மக்களால் அடித்து விரட்டப்பட்டனர். சி.பி.எம். கட்சி அலுவலகங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. இப்போராட்டத்தை மாவோயிஸ்டுகள் ஆதரித்து முன்னெடுத்துச் செல்லத் தொடங்கியதும், பயங்கரவாத பீதியூட்டி மத்திய-மாநில அரசுகளின் கூட்டுப்படைகள் அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டன. போலீசு அடக்குமுறைக்கு எதிரான மக்கள் கமிட்டியை நிறுவிப் போராடிவந்த பழங்குடியின முன்னணியாளர்கள் கைது செய்யப்பட்டும், மோதல் என்ற பெயரில் படுகொலை செய்யப்பட்டும் அரசு பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டும் போராட்டம் கடுமையாக ஒடுக்கப்பட்டது."//

       சி.பி.எம் ஊழல் கட்சி என்று முதலாளித்துவப் பத்திரிக்கைகள் கூட சொல்லத் துணியாத ஒரு பொய்யை கட்டமைத்து அதற்கு பழங்குடியின மக்களின் பேரெழுச்சி என முலாம் பூசி இருக்கின்றனர். ஆனால் நடந்ததை வேறு வழியில்லாமல் ஒப்புக்கொண்டுள்ளனர். அதாவது சி.பி.எம். கட்சி அலுவலகங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன என்பதுதான் அது. மம்தாயிஸ்டுககளான மாவோயிஸ்டுகளின் நோக்கம் அதுதான். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளை நெருங்கும் ஒரு மக்கள் ஆட்சியை வீழ்ந்த அரசியல் ரீதியாக முடியாது என்ற காரணத்தினால் கொலைபாதக வழியை பின்பற்றுகின்றனர். இது கூட அவர்களது சொந்த புத்தி கிடையாது. 1977 ஆம் ஆண்டு சித்தார்த் சங்கர் ரே என்ற காங்கிரஸ் தலைவர் பயன்படுத்தியதுதான். அதன் விளைவை கங்கிரஸ்காரர்கள் இன்னும் அனுபவித்து வருகின்றனர். இவர்கள் இனிமேல்...

       இந்தியாவில் அதிகமான மக்களுக்கு நிலங்களை பங்கிட்டு கொடுத்த மேற்குவங்க அரசு தொழில்துறையில் தோல்வி அடைந்து விட்டதாக மம்தாவும் காங்கிரசும் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்தனர். தொழிற்துறையில் அந்த அரசு செய்த சாதனைகளை மறைத்துவிட்டனர். மேலும் தொழிற்சாலைகளை துவக்க நிலங்கள் தேவைப்பட்டது. அதற்குதான் சிங்கூர், நந்திகிராம், லால்கர் ஆகிய பகுதிகளில் மக்கள் ஒப்புதலுடன் நிலங்கள் எடுக்கப்பட்டது. ஆனால்  மம்தா - மாவோயிஸ்ட் - முதலாளித்துவ ஊடகங்கள் கூட்டணி அமைத்து தொழிற்சாலை அமைக்க அரசாங்கமே நிலங்களை பிடுங்க வருவதாக பொய் பிரச்சாரத்தை செய்தன. நம்பிய அப்பாவி மக்களை ரட்சிக்க வருவதாக ரவுடிகளையும், கொலைகாரர்களையும் திரட்டி, அவர்கள் கையில் செங்கொடியையும் ஆயுதத்தையும் கொடுத்து மம்தா கலவரத்தை தூண்டினார். அங்கிருந்த ஓரிரண்டு மாவோயிஸ்ட் தலைவர்கள் இந்த கலவரத்திற்கு வர்க்க சாயம் பூசினார்கள். மாவோவின் தத்துவங்களை வலைத்து திரித்து தத்துவ விளக்கம் கொடுத்தனர். மார்க்சிஸ்ட் கட்சியின்

நூற்றுக்கணக்கான ஊழியர்கள் படுகொலை செய்யாப்பட்டனர். கிட்டதட்ட மூன்று மாதங்கள் மம்தாவின் கட்டளையை ஏற்று மத்திய அரசு கண்டுக் கொள்ளவில்லை, மாநில அரசு மாவோயிஸ்டுகளை பேச அழைத்துக்கொண்டு இருந்ததால் ஆயுதம் ஏந்தவில்லை. இதன் விளைவு சி.பி.எம் கட்சியின் 350 ஊழியர்கள் கொள்ளப்பட்டனர். "போலீசு அடக்குமுறைக்கு எதிரான மக்கள் கமிட்டி" என்ற பெயரில் அப்பாவி பழங்குடி மக்கள் மீது பழி போட்டு மாம்தாயிஸ்டுகள் ஆடிய கொலைதாண்டவத்திற்கு பதிலடி கிடைக்க துவங்கியதும் அது  அரசு பயங்கரவாதம் என்று பிரச்சாரம் செய்யப்படுகிறது.

       லால்கார் மக்களின் பேரெழுச்சியில் விரட்டியடிக்கப்பட்ட மாவோயிஸ்டுகள் இப்போது போக்கிடம் இல்லாமல் அலைவதை மம்தாவால் பொருத்துக்கொள்ள முடியவில்லை. ஏனெனில் அவர்களின் ஆயுத பலத்தை வைத்து சில இடங்களை வெற்றி பெற்றார். அவர்கள் இல்லாமல் இனி வெற்றி என்பது சாத்தியமில்லை. "சி.பி.எம்.கட்சி பல பகுதிகளில் ஹர்மத் வாகினி எனப்படும் ஆயுதமேந்திய குண்டர்படைகளைக் கட்டியமைத்துத் தாக்குதல் நடத்தி வருகிறது என்று திரிணாமுல் காங்கிரசு தலைவி மம்தா பானர்ஜி தொடர்ந்து குற்றஞ் சாட்டி வருகிறார். கூட்டுப் படைகளை இப்பகுதியிலிருந்து விலக்க வேண்டும் என்றும் சி.பி.எம். குண்டர்படைகளை வெளியேற்றி ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும் என்றும் கோரி திரிணாமுல் காங்கிரசு கட்சி போராட்டங்களை நடத்தி வருகிறது" என்று இக்கட்டுரை முலமாக மம்தாவுக்காக கவலைப்பட்டு கண்ணீர் வடிக்கின்றது வினவு வலைதளம்.  உண்மையை உணர்ந்த பழங்குடி மக்கள் பேரெழுச்சியால்  கடந்த செப்டம்பர் மாதத்தில் தாரம்பூர், ராம்கார், பிராகடா முதலான பகுதிகளில் சி.பி.எம். தமது கட்சி அலுவலகங்களை மீண்டும் திறந்து,  மம்தா மற்றும் மாவோயிஸ்ட் கட்சியின் குண்டர்படைத் தலைவர்கள் கொலுத்திய அலுவலகங்கள் அவை தற்போது மாவோயிஸ்டுகளால் ஊருக்குள் நுழைய முடியவில்லை. மார்க்சிஸ்ட் கட்சி தலைமையில் மக்கள் வெற்றி ஊர்வலங்களை நடத்தி லால்கார் பகுதியை மாவோயிஸ்டுகளிடமிருந்து விடுவித்தனர். இதை கூட வினவு திரித்து எழுதி அற்பசந்தோஷமடைகிறது.

       மாவோயிஸ்டுகளுக்கும் ( பாவம் மாவோ ) வினவுக்கும் மிகவும் பிடித்த மம்தவை தொடர்ந்து புகழ்ந்தால் என்னவாகும்? அக்மார்க் புரட்சிகர வினவு மீது அதை படிக்கும் அப்பாவி வாசகர்களுக்கு சந்தேகம் வருமல்லவா? எனவே தங்களது புகழ்பெற்ற வாசகத்தை பயன் படுத்தி சில வரிகள் " சி.பி.எம். கட்சி விரட்டியடிக்கப்பட்டதைச் சாதகமாக்கிக் கொண்டு இப்பகுதியில் ஓட்டுப் பொறுக்கும் நோக்கத்தோடு திரிணாமுல் காங்கிரசு காலூன்றத் துடிக்கிறது" இப்போது மம்தாவையும் விமர்சனம் செய்துவிட்டார்களாம்!? ஆஹா என்ன அருமை? மம்தாயிஸ்டுகள் மக்களிடம் அடிவாங்க முடியாமல் விட்டுவிட்டு ஓடிப்போன கிராமங்களுக்குப்  பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் மாறுவேடத்தில் வெடிகுண்டுகளுடன் நுழையும் மாவோயிடுகள் பிடிக்கப்பட்டு மக்களால் நையபுடைக்கப்படுவதை வெறு வழி இல்லாமல் உள்ளூர் பத்திரிக்கைகள் எழுதிக்கொண்டிருக்கின்றன.

       கடந்த செப்டம்பரில் கேஜூரி நகரைக் கைப்பற்றுவதற்கான போட்டாபோட்டியில் மாவோயிஸ்டு குண்டர்களும் திரிணாமுல் குண்டர்களும் நடத்திய மோதலில் சி.பி.எம். கட்சியை சார்ந்த  இருவர் கொல்லப்பட்டுள்ளனர். மாவோயிஸ்டுகள் வெடிகுண்டுகளை வீசியும் துப்பாக்கியால் சுட்டும் தாக்குதலை வெறியோடு நடத்தினர். தொடரும் இத்தகைய வன்முறை வெறியாட்டங்களால், வருமாண்டில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல் கொடிய வன்முறைத் தேர்தலாகவே இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் எச்சரிக்கின்றனர். எனவே வன்முறையாளர்களை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என எழுதியும் வருகின்றனர். ஆனால் மேற்குவங்க அரசு மாவோயிஸ்டுகளை பழிவாங்க துடிக்காமல், திசைத்தவரிய அவர்கள் வாழ்க்கையை பாதுகாக்க திட்டமிடுகிறது. உண்மை இவ்வாறு இருக்க தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கட்சியை அவதூறு செய்வதற்கு தொடர்ந்து வினவு போன்ற வலைதளங்களும், பு.ஜ போன்ற பத்திரிக்கைகளும் முதலாளித்துவ பத்திரிக்கைகளையும் தாண்டி பணியாற்றுகின்றன.

       அதுவும் மேற்குவங்க உளவுத்துறையின் அறிக்கையை, ப.சிதம்பரத்தின் கடிதத்தை யெல்லாம் மேற்கோள் காட்டி எழுதுகின்றனர். எதற்கும் ஆதாரம் இல்லை என்பது ஒருபக்கம் இருக்கட்டும் மாவோயிஸ்டுகள் என்கிற மம்தாயிஸ்டுகள் கையில் பயங்கர ஆயுதம் இருந்தால் அது புரட்சியின் எழுச்சி மார்க்சிஸ்டுகள் கையில்   தடி  இருந்தால் அது சமூக பாசிசமாம்! எப்படி இருக்கிறது இவர்கள் கதை. ஆயுதம் அல்ல பிரச்சனை அதை பயன் படுத்தும் தத்துவம்தான் முக்கியம். இதுவரை மேற்குவங்கத்தில் நிலபிரபுகளான காங்கிரஸ் மற்றும் மம்தா கட்சியை சார்ந்த நிலபிரபுக்கள் எத்தனையோ அநீதிகளை மக்களுக்கு இழைத்துள்ளனர். அவர்களை அழித்தொழிக்க முடியாத அல்லது விரும்பாத, அவர்களை நோக்கி சுட்டு விரலைக்கூட நீட்டாதவர்கள் அங்குள்ள மாவோயிஸ்டுகள். ஆனால் உழைப்பாளி மக்கள் கையில் நிலங்களை கொடுத்து நிலபிரபுகளின் கொட்டத்தை அடக்கிய மார்க்சிஸ்டுகளை அழித்தொழிப்பது எந்த வர்க்க நலனை காக்க என்பதை தமிழக அக்மார்க் புரட்சியாளர்கள் விலக்குவார்களா? அவர்களின் கையில் இருக்கும் ஆயுதம் வரட்டு தத்துவத்தின் பிடியில் இருப்பதால் உழைப்பாளி மக்களை கொல்கிறது, கொள்ளையடிக்கிறது.  இந்த உண்மை தெரிந்தும் மார்க்சிஸ்டுகள் மீது குற்றம் சுமத்தி தண்டனை வழங்கும் நீதிபதிகளாக நமது தமிழக ஐ.எஸ்.ஐ புரட்சியாளர்கள் மாறிவருவது வருத்தத்திற்கு உரியது.

       தொடர்ந்து பொய்பிரச்சாரம் செய்து வந்த கோயபல்ஸ் என்ன ஆனான் என்பதை உலகம் அறியும் ஆனால் வினவு??
 

11 comments

  1. alagumukilan Says:
  2. Nearamum Arivum pothamaiyal en pondroar thikaithirunthapothu sariyana pathil elutha thodangiulla SGR kku vaalthukkal

     
  3. kumaresan Says:
  4. யாரும் விடைகளைத் தேட விடமால் வினவிக்கொண்டே காலத்தை ஓட்டி முடித்துவிட முயல்கிறவர்களுக்கு தத்துவம், அரசியல், நடப்பு ஆகிய மூன்று தளங்களிலும் நின்று எதிர்வினையாற்றியிருக்கிறீர்கள். மார்க்சிஸ்ட்டுகளை எதிர்ப்பது ஒரு கவர்ச்சியாகிவிட்டது.

     
  5. kumaresan Says:
  6. \\\ஹர்மத் வாஹினி" என்பது சி.பி.எம் கட்சி சார்பானது அல்லது அது மாவோயிஸ்ட் மற்றும் மம்தாயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட, அவர்களால் வீடுகளை இழந்த, உடமைகளை பறி கொடுத்த மக்களின் கூட்டமைப்பு என்பது கூட தெரியாமல் கட்டுரை எழுதுகின்றனர்\\\ இந்த வரிகள் தவறான பொருள் தருகின்றன. “... சி.பி.எம். கட்சி சார்பானது அல்ல...” என்றிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். திருத்திடுக.

     
  7. Anonymous Says:
  8. குட்டிச்சுவர் பார்ட்டியான வினவு கம்பெனிகளின் பித்தலாட்ட அரசியலை தோலுறித்துள்ளது இக்கட்டுரை
    வாழ்த்துக்கள் தோழர் ரமேஷ்பாபு
    அன்புடன்
    புதூர் சிபி

     
  9. தோழர் நாராயணன் தங்களது பின்னூட்டத்திற்கு நன்றி.. உங்களை போன்ற தோழர்கள் எழுதத் துவங்குவது மிகவும் உதவியாக இருக்கும்.

     
  10. தோழர் குமரேசன் தங்களது பின்னூட்டத்திற்கு நன்றி.. தங்களின் திருத்தம் சரியானதுதான். திருத்திவிட்டேன். நன்றி. அது எழுத்து பிழை. தொடர்ந்து மார்க்சிச்டுகளை குறிவைத்து தாக்கும் வினவு பார்ட்டிகள் இத்தகைய எதிர்வினைகளுக்கு கள்ள மவுனம் சாதிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். ஒருவேலை இதற்கு பதில் அல்லது எதிர்விணை என்ற பெயரில் வசைமாறி பொழியத்துவங்குவார்கள். பார்த்துக்கொண்டே இருங்கள்.

     
  11. தோழர் புதூர் சிபி வணக்கம். தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. அவர்கள் குறித்த உங்கள் கருத்து மிகவும் சரி.

     
  12. Anas Says:
  13. தோழ‌ர் அருமையான‌ க‌ட்டுரை.இந்த‌ க‌ட்டுரைய‌ பாத்த‌ வின‌வுக்கு வ‌யிறு வீங்கி இருக்கும்.....என்ன‌ ப‌ன்ன‌ குடிகார‌னுக்கு வாக்க‌ப்ப‌ட்ட‌ அடிவாங்கிதான‌ ஆவ‌னும்.அதுமாதிரி தான். C.P.M .எதிர்பு வ‌ந்துட‌ எதாவ‌து எழுதுவ‌து தான் அவ‌ர்க்ளின் நோக்க‌ம் ......வாட‌ பேசுவோம்னா போதும் எங்க‌ போவானுக‌னு தெரிய‌து........

     
  14. hariharan Says:
  15. வினவு “புரட்சியாள்ர்கள்” மம்தா வை ஆதரிக்கும் நிலையில் இருக்கிறார்கள். மம்தா யாருடைய நலன்களுக்காக அரசியல் நடத்துகிறார் என்பது அவர்களுக்கு தெரியாதா?

    மக்களை மிரட்டிஆதரவு பெற்ற மாவோயிஸ்ட் பயங்கரவாதிகள் தற்போது மேற்குவங்கத்தில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளார்கள். வேற எந்த மாநிலத்திலும் ஆளும் அரசியல் கட்சிகள் இந்த பயங்கரவாதிகளுகெதிராக மக்கள் இயக்கம் நடத்தியதில்லை.

     
  16. Unknown Says:
  17. சகோதர யுத்தம்!

    வன்முறையே புரட்சி எனும் போது, கொள்கையே கேள்விக்குறியாகிறது! கொண்ட கொள்கை காலப்போக்கில் திரிந்து, அடையாளமே வினவாகிறது! (போலிப் பட்டம் - உபயம்: வினவு!)

    இந்தியாவில் மாவோ தீவிரவாதம், கம்யூனிசத் தொட்டிலில் வளர்ந்ததுதானே?

    இப்போது
    வளர்த்த கடா மாரில் பாய்கிறது!

     
  18. நல்ல பதிவு தோழர்...

    நம்மைப்பார்த்து 'வினவு' 'வினவு' என்று சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.. ஆனால் வினவினால் எந்த விடையும் கிடைக்காது, மாறாக வசைமொழிதான்....

     
bookmark
bookmark
bookmark
bookmark
bookmark