எனது மகன் சூர்யா நான்காவது படிக்கின்றான் .. அவனது பள்ளியில் கற்றுவந்த ஒருபாடல் இது... கண்டிப்பாக ஆசிரியர்கள் கற்றுக்கொடுத்தது அல்ல... குழந்தைகள் கற்றுக்கொடுத்திருக்க வேண்டும்... நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் ஒன்று இப்பாடலின் கடைசி வரியின்போது சூர்யா அருகில் நின்றது தான் தவறாகி போனது... ஒன்றுமில்லை ஜென்டில் மேன்.. ஒரு குத்து ஓங்கி விழுந்தது அவ்வுளவுதான்.
புக் புக்
என்னா புக்?
படிக்கிற புக்
என்னா படி?
வாச படி
என்னா வாச?
அம்மாவாச
என்ன அம்மா ?
டீச்சர் அம்மா
என்னா டீச்சர் ?
கணக்கு டீச்சர்
என்னா கணக்கு?
மொட்ட கணக்கு
என்னா மொட்ட ?
திருப்பதி மொட்ட
என்னா திரி ?
விளக்கு திரி
என்னா விளக்கு ?
குத்து விளக்கு
என்னா குத்து ?
கும்மாங்குத்து !!! இத்தகைய பாடல்கள் இருந்தால் எழுதுங்களேன் .
பாஸ் நீங்க சொன்னத நான் ஸ்கூல் படிக்கும்போதே இருந்தது.. இப்ப எதுவும் ஞாபகமில்ல ஞாபக படுத்தினதுக்கு தேங்க்ஸ்.. கொஞ்ச ஞாபகம் இருக்குற சில வரி இங்கே.,,
பதிலளிநீக்குஅதோ பாரு காரு
காருக்குள்ள யாரு..???
நேரு..
நேரு என்ன சொன்னாரு
நல்லா படிக்க சொன்னாரு..
அன்பு தோழருக்கு நன்றிகள்...
பதிலளிநீக்குஉங்கள் சூர்யாவின் பாடலுக்கும்..
நான் பள்ளி செல்லும் போது இது போன்ற பாடல்கள் சொல்லி கொடுத்து இருக்கிறார்கள். ஆனால் அந்த பாடல்கள் மறைந்துவிட்டன என்று இருந்தேன். ஆனால் எங்கோ ஒரு மூலையில் தன் உயிரை பிடித்துகொண்டு வளருவதை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.
அன்பு குட்டி தோழன் சூர்யாவுக்கு ஒரு பெரிய வாழ்த்து...
(ஜென்டில் மேன்.. ஒரு குத்துவிருக்கு )
ஆசை
பதிலளிநீக்குதோசை
அப்பளம்
வடை!!!
தம்பி கூர்மதியன், க.கோபி, middleclassmadhavi உங்கள் அணைவருக்கும் பின்னூட்டம் இட்டமைக்காக நன்றி
பதிலளிநீக்கு