கார்ட்டூனுக்கு நன்றி : வினவு இணைய தளம் |
சிதம்பரம் நாவலர் பள்ளியில் 1987 ஆம் ஆண்டு 10 வகுப்பு படிந்த எங்கள் நண்பர்கள் 40 கக்கும் மேற்பட்டோர் ஒரு வாட்ஸ் ஆப் குழுவில் உள்ளோம். திருமண நிகழ்வுகள் உள்ளிட்டு பல நிகழ்வுகளில் சந்தித்துக்கொள்வோம். அதில் அனைத்து கட்சிகளையும், லயன்ஸ் கிளப் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நண்பர்களும் உண்டு. அந்த குழவில் சங்கிகள் கருத்து அதிகரிக்கத் துவக்கியதும். நானும் விவாதிக்கத் துவக்கினேன். வழக்கம் போல அரசியல் பேசாதீர்கள் நண்பர்களே என பல குரல்கள் எழுந்தது. 37 ஆண்டுகள் தொடரும் நட்பு, அதை இப்போதும் தொடர நினைக்கும் உணர்வுகள் முக்கியமென கருத்தி அதில் கருத்து மோதல்களை நிறுத்தினோம். எல்லோரும் கட்டுப்பட்டு அமைதியாக இருக்கிறோம்.
ஆனால் அதன் பிறகு என் அன்புக்குரிய சங்கி நண்பன் ஒருவன் தனிப்பட்ட முறையில் என்னுடன் விவாதிப்பான். 10 வகுப்பு படிக்கும் போது நானும் அவனும் சைக்கிளில் சுற்றிய நினைவுகள் எப்போதும் எனக்கு உண்டு. எனது நண்பன் நல்லவனே..
ஆனால், அபத்தமாக ஆர்எஸ்எஸ் இணையக் கூலிகளின் அனுப்பும் foreword செய்திகளை அனுப்பிக்கொண்டே இருப்பான். (100ல் 80 சதம் சங்கிகளுக்கு சொந்தமாக எதுவும் எழுத தெரியாது என்பது ஒரு பக்கம் இருக்கட்டும்) பல நாள் என் நண்பன் எழுதிய பதிவுகளைக் கடந்து செல்வேன். இன்று நடந்த அபத்த விவாதத்தைச் சொன்னால் சங்கிகள் விவாத அழகை நீங்கள் ரசிப்பீர்கள் என்பதற்காக இந்த விவாதம்.
என நண்பன் கீழ்க்காணும் படத்தை பதிவிட்டார்
இதற்கு நான் அளித்த பதில்
"தப்பு தம்பி தப்பு சுதந்திரத்தையே காட்டிக் கொடுத்தவனும், _ _ டி கொடுத்தவனும் ஆட்சி நடத்துகிறான் அதான் இந்தியா வல்லரசா மாறல"
சங்கி: ஹையோ ஹையோ
நான் கீழ் காணும் படத்தைப் பதிவிட்டேன்
சங்கி: பணமாகுவது முஸ்லீம்..
நான்: எந்த விவரமும் தெரியாமல் ஃபார்வேர்ட் பண்ணாத தலைவா இந்தியாவுடைய மாட்டுக்கறி ஏற்றுமதியில் லாபம் கொழிக்கும் 10 நிறுவனங்கள் இந்து பார்ப்பனர்களுடையது உண்மையும் மூளையும் இருந்தால் நீ ஏன் பிஜேபியில் இருக்க..
என்று பதிலிட்டு கீழ்க்காணும் படத்தைப் பதிவிட்டேன்.
சங்கி: உனக்குத்தான் அமெரிக்கா பெரிசு… எல்லாரும் அப்படியா…
நான்: நீ சொன்னது பொய் அதைத்தான் கேட்டேன்
சங்கி: எதை சொன்னாலும் ஏத்துக்குற ஆள் நீ இல்லை. நீ தோல்வியை தழுவும்போது உடனே அடுத்த கேள்விக்கு ஒடுவ… எந்த ஒரு முடிவுக்கு வர மாட்ட… உன்னை சொல்லி குற்றமில்லை . உன்ன train பண்ண விதம் அப்படி…
நான்; மாட்டுக்கறி பற்றி சொல்லு கேட்க்கிறேன், நீதான் ஓடி ஒளிக்கிறாய் ஏனெனில் உன் RSS பம்பரை அது
சங்கி: உன் அரசியலுக்கு நான் ஊறுகாய் இல்லை
நான்:அது சரி மாட்டுகறிக்கு வா, மாட்டுக்கறி ஏற்றுமதியில் இந்துக்கள் தான் முதலிடம் என்ன சொல்ற?
சங்கி: ஆதாரம்
நான்; இப்பதான் அறிவோட விவாதிக்க வர நல்லது.
என சொல்லிவிட்டு கீழ் காணும் பிபிசி செய்தியி பதிவு செய்து, "அதுவும் வெட்கம் இல்லாமல் இஸ்லாமியர் பெயரில் நிறுவனம்" என பதிவிட்டேன்.
இறைச்சிக் கூடங்களின் இந்து முதலாளிகள் என்ன சொல்கிறார்கள்?
(சுமார் 400 ஏக்கர் பரப்பில் அமைந்திருக்கும் அல் கபீர் எக்ஸ்போர்ட்ஸ் என்ற மிகப்பெரிய இறைச்சிக் கூடத்தின் உரிமையாளர் சதீஷ் சபர்வால். அல் நூர் எக்ஸ்போர்ட்சின் உரிமையாளர் சுனில் சூத். மேலும் அரேபியன் எக்ஸ்போர்ட்ஸ் பிரைவெட் லிமிடெட் நிறுவனத்தின் உரிமையாளர் சுனில் கபூர். உள்ளிட்ட பல தரவுகளுடன் மேற்கண்ட கட்டுரை உள்ளது )
சங்கி: BBC ஒரு fraud.
(இதுதான் சங்கிகள் மூளை சலவை செய்யும் முறை. ஆதாரத்துடன் மாட்டினால் ஒன்று மண்டியிட்டு மன்னிப்பு கோருவது அல்லது ஆதாரத்தையே பொய் என புறம் தள்ளுவது.)
நான்: நன்றி, மத்திய அரசின் ஆதாரம் வேண்டுமா அல்லது அதுவும் fradu ஆ குறைந்த பட்ச நேர்மை வேண்டும் நண்பா 🙏
சங்கி:
ஒரே விஷயம்தான்.
ஒரு 50
வருஷம் தள்ளி
போ.அப்புறம்
பாக்கலாம். (அதாவது இன்னும் 50 ஆண்டுகளுக்கு பாஜக ஆட்சியாம்)
நான்:
இன்னும்
4 வருடம்
பாஜக காலி காத்திரு, பொய்யும்
நேர்மையற்ற அரசியலும் நிலைக்காது.
சங்கி: கனவுதான். இரு
நான்: திசை திருப்பாத மாட்டுக்கறி விஷயம் இன்னும் முடியல
சங்கி: மாட்டுக்கறி நீ சாப்பிடு, கம்யூனிஸ்ட் நேர்மை உலகமே வியக்கும்..…
நான்: மாட்டுக்கறி குறித்த அரசின் தரவுகள் வேண்டுமா
சங்கி: Junior raagul
நான்: மாட்டுக்கறி அரசியல் உண்மை தெரிய வேண்டாமா உனக்கு?
சங்கி:
நீ சொல்றது
எல்லாமே பொய் தான் வெளி வேஷம்!
நான்: மத்திய அரசு போய் சொல்லுமா?
சங்கி: நீ பொய் சொல் வ!
நான்: மத்திய அரசு சொன்னால் நம்புவியா. இந்து முதலாளிகள் மாட்டுக்கறி வியாபாரம் குறித்து குறந்த பட்ச அறிவு நாணயத்துடன் விவாதம் நடத்து நண்பா!
சங்கி: இன்றைய பொழுது மாட்டுகரியா??
நான்:
மத்திய அரசு
ஒரு பிராடு அதன் தரவுகள் பொய்
என ஒப்புக்கொண்டு அடுத்த
செய்தியை போடு நண்பனே॥
சங்கி: நீ மட்டும் கேள்வி கேக்கலாம். நான் கேக்க கூடாதா?
நான்: மாட்டுக்கறி குறித்த விவாதத்தை நீ துவக்கினாய். நான் ஆதாரம் கொடுத்ததும், பி.பி.சி ஒரு பிராடு செய்தி சேனல் என்றாய். சரி மத்திய அரசின் தரவுகளை தரவா என்றால் ஓடுகிறாய். உன் கேள்விகளுக்கு எப்போவதும் வரவேற்பு உண்டு. முதலில் ஒரு விவாதத்தை முடிப்போம் வா
சங்கி: நீ அங்கேயே நில்லு.
நான்: அப்பா மோதி அரசு ஒரு பிரடு என நீ ஒப்புக்கொள் மோதி அரசின் புள்ளி விபரம் தவறு என சொல்!
சங்கி: சரி fraud ன்னே vachchukkuvom .உங்களால் என்ன செய்ய முடியும்.
நான்:
மவனே கரெக்டா
வந்தியா .. இதுதான்
திமிரு .. இதுதான்
ஆணவம்.. இதுதாம்
பாசிசம். புரியுதா?
பாஜகவிடம்
கேள்வி கேட்டா இப்படிதான்
திமிராக பேசும்.
சங்கி: சரி, அதுக்கு என்ன…
நான்: ஆக இந்த விவாததில் இரண்டு ஒப்புதல் கொடுத்துள்ளாய் 1. மாட்டுக்கறியை ஏற்றுமதி செய்வதில் இந்துக்கள் உள்ளனர். 2. மோதி அரசு பிராடு. நன்றி
சங்கி: இதை மக்கள்கிட்ட சொல்லு.
நான்: மக்கள் தான் உங்கள் பருப்பை எடுத்து விட்டார்களே. கடந்த தேர்தலில் பெரும்பான்மை இல்லை. இன்னும் நான்கு வருடம் கடந்து சங்கு !
சங்கி: நினைப்பு பொழப்பை கெடுக்குமாம்… கனவுதான்
நான்: அயோத்தி ராமன் தன்னை நிரூபித்து விட்டான் நண்பா, உண்மை! அயோத்தியில் மோதிக்கு ஆப்பு
சங்கி: சிரிப்பு படம்
நான்: இதுதான் கதறல் எப்பூடி
சங்கி: அயோத்தியை மட்டும் வச்சு நாட்டை ஆள முடியாது.
நான்: செம தல, ராமர் அவர் தொகுதியில் ஆப்பு அடித்தார் பாத்தியா
சங்கி:
யேதோ உன்னால
ஒரு 20 நிமிஷம்
பொழுது போச்சு. Thanks....
நான்: பொய், பித்தலாட்டம், அய்யோக்கியதான் செய்யும் மோதி மாற்றும் அவரது குழு நீண்ட நாள் ஏமாற்ற முடியாது பார்ப்போம்
சங்கி: சிரிப்பு
நான்: சமாளி தல.. வேற வழி?
சங்கி: சிரிப்பு
நான்: இன்னும் கதறுவா காத்திரு
(அரை மணி நேரம் கடந்து)
சங்கி: I am waiting…
-------------------------------------------------------------------
இந்த விவாதத்தில் இந்துக்கள் மாட்டுக்கறி நிறுவனம் நடத்துவது குறித்து எந்த விபரமும் தெரியாமல் எனது நண்பன் பேசியிருக்க வேண்டும் என நீங்கள் நினைத்தால் அது தவறு. அவர்களுக்கு உண்மை தெரியும் எனினும் இஸ்லாமிய எதிர்ப்பு என்ற ஒற்றை திட்டத்துடன் அவர்கள் ஆர்.எஸ். எஸ் தலைமையால் மூளைச் சலவை செய்யப்படுகின்றனர்.
தினமும் காவி இணையக் கூலிகள் தயாரிக்கும் மீமஸ், பொய் செய்திகள், தனிப்பட்ட வன்மம் நிறைந்த தாக்குதல்கள், ஆபாச வசவுகள் நூற்றுக்கணக்கில் இத்தகையவர்களுக்கு அனுப்பப்படுகிறது. எதையும் ஆராயாமல், சரி பார்க்காமல் இவர்கள் இவைகளை அனைவருக்கும் அனுப்பி வருகின்றனர். அதுமட்டுமல்ல இவைகள் எல்லாம் உண்மை என இவர்கள் மனதார நம்புகின்றனர். இதுதான் பிரச்சினை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக