ஞாயிறு, 13 அக்டோபர், 2024

நிலம் வீடு கொடுத்தோருக்கு வேலை கொடுக்காமல் வேலையை விற்பனை செய்த என்எல்சி நிர்வாகம்



 

 








முதலில் 2024 அக்டோபர் 10 ம் தேதி நடந்த போராட்ட செய்தியை (தீக்கதிர் நாளிதழ்) பார்த்துவிடலாம்

என்எல்சி நிறுவனத்திற்கு நிலம், வீடு, மனை கொடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்திற்கு தர வேண்டிய வேலையை பணத்திற்காக ஏஎம்சி ஷார்ட்டேம் என்ற பெயரில் வேலையை விற்பனை செய்த என்எல்சி நிர்வாகத்தை கண்டித்து நெய்வேலி ஆர்ச் கேட் எதிரே தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் வியாழனன்று (அக்.10) ஆர்ப்பாட்டம் நடை பெற்றது

 

    இதில் திண்டுக்கல் மக்களவை உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம்  தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். என்எல்சி நிறுவனம் 2000 ஆண்டு முதல் 2013 வரை கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு சுரங்க இயக்குனர் மற்றும் விவசாயத்துறை அமைச்சர் ஆகியோர் வாய்க்கால் வெட்டிய பகுதி உட்பட அனைத்து கிராமங்களுக்கும் கருணை தொகை கொடுத்துவிடுங்கள் என்று கூறியும், ஒரு சில கிராமங்களுக்கு கொடுக்காமல் இருப்பதை வழங்க வலியுறுத்தியும், நிலம் கொடுத்து 35 ஆண்டுகளாகியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு 2013 நில எடுப்புச் சட்டத்தின் கீழ் நிரந்தர வேலை கொடுக்க வேண்டும் என்று சொல்லியும், நிரந்தர வேலை கொடுக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிரந்தர வேலை வழங்க வேண்டும். நிலம் கொடுத்த வர்களுக்கு ஒரே சீனியாரிட்டி கடைபிடித்து வேலை வழங்க வேண்டும், கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் இருந்த ஆழ்துளை கிணற்றிற்கும்  இழப்பீடு வழங்க வேண்டும், மின் இணைப்பை கேட்கும் இடத்திற்கு மாற்றித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

 

இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஜி.ஆர். ரவிச்சந்திரன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்முன்னாள் மாநில துணைச் செயலாளர் ஜி.மாதவன்,  மாவட்ட துணைத்தலைவர் எஸ்.தட்சிணாமூர்த்தி , பி.கற்பனை செல்வம், விவசாயிகள் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.பிரகாஷ், பொருளாளர் டி.கிருஷ்ணன், துணை செயலாளருக்கு பி.வாஞ்சிநாதன், மிகிழ் வளையமாதேவி ஊராட்சி மன்றத் தலைவர் . சண்முகம் உள்ளிட்ட ஏராளமானோர் கடந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் விவசாய சங்க மாவட்ட பொருளாளர் ஆர். ராமச்சந்திரன் நன்றி கூறினார்

 

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் இந்திய அரசுக்குச் சொந்தமான ஒரு பழுப்பு நிலக்கரிச் சுரங்க நிறுவனம். இந்தியப் பொது நிறுவனங்களில் நவரத்னா வகையினைச் சேர்ந்தது. நெய்வேலியில் அமைந்துள்ள இந்நிறுவனம் வருடத்துக்கு 30.6 மில்லியன் டன் பழுப்பு-எரிபொருள் உற்பத்தி செய்கிறது. கோடிக்கணக்கான ருபாய் லாபமீட்டினாலும் நிலம் கொடுத்தோருக்கு உரிய இழப்பீடும் வேலையும் வழங்க மறுத்து வருகிறது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பல ஆண்டுகளாக போராடி வருகிறார்கள்.

 

அடுத்து என்னதான் கோரிக்கை முழுமையாக பார்ப்போம்! 

 

NLC-க்கு நிலம், வீடு, மனை, தாவரங்கள் உள்ளிட்ட வாழ்வாதரத்தை இழந்த, தங்கள் சகல வாழ்வையும்  கொடுத்த விவசாயிகள் விவசாய தொழிலாளர் கூட்டமைப்பு முன் வைத்துள்ள கோரிக்கைகள். முதலில் இதை படியுங்கள்.

 

1. 2000 முதல் 2013 வரை கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு சுரங்க இயக்குநர் மற்றும் விவசாயத்துறை அமைச்சர் ஆகியோர் வாய்க்கால் வெட்டிய பகுதி உட்பட அனைத்து கிராமங்களுக்கும் கருணைத் தொகை கொடுத்து விடுங்கள் என்று கூறியும் ஒரு சில கிராமங்களுக்கு கொடுக்காமல் இருப்பதை உடனடியாக வழங்க வேண்டும்.

2. நிலம் கையகப்படுத்தப்பட்ட 35 ஆண்டுகள் ஆகியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு 2013 நில எடுப்புச் சட்டத்தில் நிரந்தர வேலை கொடுக்க வேண்டும். வழக்கம் போல அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் கொடுக்க வேண்டும் என சொல்கின்றனர். ஆனால் இன்றுவரை நிரந்தர வேலை கொடுக்கவில்லை. 1989-2006 வரை நிலம் கொடுத்தவர்களுக்கு 25% வேலைவாய்ப்பு 2007-2013 வரை நிலம் கொடுத்தலர்களுக்கு 25% வேலைவாய்ப்பு 2014 முதல் நிலம் கொடுத்தவர்களுக்கு 50% வேலைவாய்ப்பு என்னு பிரிக்கின்றது நிர்வாகம். ஆனால் 90% நிலம் 2013-க்குள் எடுக்கப்பட்டுவிட்டது. ஆகவே, நிலம் கொடுத்தவர்களுக்கு ஒரே சீனியாரிட்டி கடைப்பிடித்து வேலை வழங்க வேண்டும்.

3. 2000 ஆண்டு முதல் NLC -யால் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் உள்ள ஆழ்துளை கிணறுகளுக்கு விவசாயத்துறை அமைச்சர் மற்றும் சுரங்க இயக்குநர் இழப்பீடு கொடுத்துவிடுங்கள் என்று கூறியதன் பேரில் மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு)அவர்கள் இழப்பீடு வழங்க ஆர்டர் போட்டும் என்.எல்.சி. நிர்வாகம் வழங்க மறுக்கிறது. கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் இருந்த அனைத்து ஆழ்துளை கிணற்றிற்கும் இழப்பீடு உடனடியாக வழங்கவேண்டும் மின் இணைப்பை அவர்கள் கேட்ட இடத்திற்கு உடனடியாக மாற்றி தரவேண்டும்.

4. நிலம் கையகப்படுத்தல் சட்டம் 2013-ல் வாழ்வாதாரம் உயர்த்தி வழங்கப்பட வேண்டும் என்று சொன்ன பிறகும் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு 2017 முதல் ரூ. 1,09,500/- வாழ்வாதாரத் தொகையை கொடுத்து மக்களை ஏமாற்றி உள்ளது. ஆகவே, இன்றைக்கு கொடுக்கும் ரூ. 17,00,000/- லட்சம் வாழ்வாதாரத்தை பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வழங்க வேண்டும்.

5. ஊஆதனூர், கத்தாழை மற்றும் மேல்வளையமாதேவியில் அரசால் கொடுக்கப்பட்ட அனைத்து பட்டாக்களுக்கும் இழப்பீடு மற்றும் மாற்று மனை உடனடியாக வழங்க வேண்டும்.

6. ஊஆதனூரில் ஊராட்சி நிதியால் கட்டப்பட்ட 5 வீடுகளை NILC இடித்து விட்டது. அந்த வீட்டிற்கான இழப்பீட்டை வழங்க வேண்டும்.

7. கீழ் வளையமாதேவி ஊராட்சிக்கு உட்பட்ட பழைய மணல்மேடு கிராமத்தை 2014-ஆம் ஆண்டு காலி செய்தும் இதுவரை எந்த பயனும் அவர்களுக்கு கொடுக்கப்படவில்லை. எட்டு நபர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்படவில்லை இதனை உடனே வழங்க வேண்டும்.

8. மும்முடிசோழன் கிராமத்தில் 170 குடும்பங்கள் 2001-2003 மற்றும் 2007-ல் எடுக்கப்பட்டு ஒரு தவணைத்தொகை மட்டும் கொடுக்கப்பட்டு இதுவரை உரிய இழப்பீடு தொகை கொடுக்காத காரணத்தால் தற்பொழுது புதிய சட்டத்தின்படி அனைத்து சலுகைகளும் கிடைக்க வேண்டும்.

9. NLC - யால் நிலம் கையகபடுத்தப்பட்ட கிராமங்களில் உள்ள குத்தகை பயிர் செய்தவர்கள் மற்றும் கூலி தொழிலாளர்களுக்கும் R&R சட்டம் 30/2013 -ல் Sec -3 (II) -ல் வாழ்வாதாரம் மற்றும் வேலை வாய்ப்பு கொடுக்கவேண்டும் என்று கூறியுள்ளது. அதனை உடனடியாக வழங்க வேண்டும்.

10. NLC -யால் பாதிக்கப்பட்ட பகுதியில் அனைத்து வசதியும் கொண்ட பல்நோக்கு மருத்துவமனை மற்றும் கல்லூரி ஒவ்வொரு கிராமத்திலும் சமுதாய கூடம் உடனடியாக அமைத்து கொடுக்க வேண்டும்.

11. தீர்ப்பு (Award) கொடுப்பதில் பிரட்சனைகள் இருக்கும்பட்சத்தில் வழிகாட்டு மதிப்பு(Guideline Value) மட்டுமே நீதிமன்றத்தில் வைப்பீடு செய்யப்படும் தொகைக்கு வழக்கு முடிந்தவுடன் வட்டியுடன் வைப்பீடு செய்த தொகை கிடைக்கிறது. இழப்பீட்டு தொகையில் வழிகாட்டு மதிப்பு போக பாக்கி உள்ள அதிக இழப்பீடு தொகை NLC நிர்வாகமே வைத்துக் கொள்கிறது. வழக்கு முடிந்தவுடன் அத்தொகைக்கு வட்டி ஏதும் கொடுப்பதில்லை. ஆகவே, இழப்பீட்டின் மொத்த தொகையும் நீதிமன்றத்தில் வைப்பீடு செய்ய வேண்டும். இதுவரை NLC நிர்வாகம் வைத்துள்ள தொகைக்கு தீர்ப்பு (Award) தேதியிலிருந்து வட்டியுடன் கொடுக்கப்பட வேண்டும்.

12. நிலம் தொழிற்துறை நோக்கங்களுக்கான சட்டத்தில் கையககப்படுத்தப்படுகிறது. கனிம வள சட்டத்தில் கையகப்படுத்தப்பட வேண்டும். இதனால் விவசாயிகளுக்கு ராயல்டி கிடைக்க வாய்ப்புள்ளது.

   

போராட்டம் முடிந்ததும் நெய்வேலி அதிபரை சந்தித்து கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

 



 

நெய்வேலி நிலமெடுக்கும் பிரச்சினை குறித்து அடுத்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக