மார்க்சிஸ்ட் கட்சி அனுபவமும், இளமையும் கைகோர்க்கும் பேரியக்கம்!
மாநாடு என்று சொன்னால் அது அம்மா அழைக்கிற, அய்யா அழைக்கிற, அப்பா அழைக்கிற மாநாடுகளாகவே பார்த்து பழக்கப்பட்டவரக்ள் நமது செந்தமிழ் நாட்டு மக்கள். வானுய கட்டவுட்டுகளும், தலைவா வாழ்க, தலைவி வாழ்க என்ற முழக்கங்கள் செவிப்பறையை கிழிக்கும். அங்கு கலந்துக்கொள்பவர்கள் எப்படிபட்டவர்கள் அவர்களின் வாழ்வியல் பின்னணி என்ன என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது. ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20 வது மாநில மாநாடு நாகப்பட்டினத்தில் பிப்ரவரி 22ம் தேதி துவங்கி 25ம் தேதி வரை நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்டவர்கள் பின்னணி சமூக மாற்றத்தை விரும்பும் மக்களுக்கு மிகவும் உற்சாகம் அளிக்கும் தகவலாகும்.
தமிழகம் மற்றும் புதுவையில் இருந்து இம்மாநாட்டில் மாவட்ட மாநாடுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பங்கேற்றவர்களின் எண்ணிக்கை 632. பார்வையாளர்களாக 34 பேர் பங்கேற்றனர். 533 ஆண்களும், 99 பெண்களும் பிரதிநிதிகளாக மாநாட்டில் கலந்து கொண்டனர். மொத்த பிரதிநிதிகளில் பெண்களின் பங்கேற்பு 16 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.
இளமையின் துடிப்பும், முதுமையின் அனுபவமும் ஒருசேர பெற்றது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்பது மாநாட்டில் பங்கேற்றவர்களின் வயது வரம்புகளைக் கண்டால் தெரிந்துகொள்ள முடியும். மாநாட்டில் பங்கேற்றவர்களில் 25 வயதிற்குட்பட்டோர் 16 பேர், 31 வயதிற்குட்பட்டோர் 26 பேர், 40 வயதுக்குட்பட்டோர் 116 பேர், 50 வயதிற்குட்பட்டோர் 192 பேர், 60 வயதிற்குட்பட்டோர் 203 பேர், 70 வயதிற்குட்பட்டோர் 69 பேர், 80 வயதிற்குட்பட்டோர் 10 பேர் மாநாட்டில் கலந்து கொண்டனர். திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது இளைஞர் தமிழ்ச்செல்வன் மாநில மாநாட்டில் கலந்துகொண்ட இளம் வயது பிரதிநிதியாவார். இவர் இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவர். சுதந்திரப்போராட்ட வீரர் என்.சங்கரய்யா, மாநாட்டில் பங்கேற்ற மூத்த பிரதிநிதியாவார். இந்த இரண்டு அறிவிப்புகளையும் வெளியிட்ட போது அரங்கம் அதிர கரகோஷம் எழுப்பப்பட்டது. 90 வயது நிரம்பிய தோழர் என்.சங்கரய்யா மாநாட்டு நிகழ்வுகளில் நான்கு நாட்களும் பங்கேற்று சிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாநாட்டில் பங்கேற்றவர்களில் பட்டப் படிப்பு படித்தவர்கள் 141 பேர், பட்டமேற் படிப்பு படித்தவர்கள் 102 பேர். தொழிற்கல்வி படித்தவர்கள் 48 பேர், +2 வரை படித்தவர்கள் 141 பேர், 10 ஆம் வகுப்பு வரை படித்தவர்கள் 106 பேர். மாநாட்டில் பங்கேற்ற அனைவரும் கல்வியறிவு பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாநாட்டில் பங்கெடுத்ததில், தொழிலாளி வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் 249 பேர், விவசயத்தொழிலாளர்கள் 85 பேர், ஏழை விவசாயிகள் 127 பேர், மத்தியதர விவசாயிகள் 50 பேர் ஆவர். மாநாட்டில் 159 தலித் தோழர்கள் பங்கெடுத்தனர். பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள் 2 பேர், 11 இஸ்லாமியர்கள், 32 கிறிஸ்தவர்கள், 428 பிறசாதியினர் கலந்துகொண்டனர்.
கட்சியில் முழுநேர ஊழியராக பணியாற்றும் 366 பேர் மாநாட்டில் கலந்து கொண்டனர். சுயதொழில் புரிவேர் 31 பேர், இல்லத்தரசிகள் 9 பேர், தனியார் துறை ஊழியர்கள் 10 பேர், கல்வி பயில்வேர் 10 பேர், விவசாயத்தொழி லாளிகள் 47 பேர், தொழில் முறை பணியில் உள்ளவர்கள் 19 பேர், வேலைவாய்ப்பற்றேர் 60 பேர், மாற்றுத்திறனாளிகள் 4 பேர் மாநாட்டில் கலந்து கொண்டனர். பிற கட்சியில் இருந்து மார்க்சிஸ்ட் கட்சியின் மீது பற்றுகொண்டு வந்தவர்களில் திமுகவைச் சேர்ந்தவர்களே அதிகம். அதற்கு அடுத்து காங்கிரஸ், அதிமுக, சிபிஐ என பலர் கட்சிக்கு வந்துள்ளனர். இதில் நேரடியாக மார்க்சிஸ்ட் கட்சியில் சேர்ந்து மாநாட்டில் பங்கெடுத்தவர்களின் எண்ணிக்கை 492 பேர்.
இதுவரை நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடுகளில் அதிகம் முறை பங்கெடுத்தவர் என்ற பெருமையை சுதந்திரப்போராட்ட வீரர் என்.சங்கரய்யா பெற்றுள்ளார். இதுவரை நடைபெற்ற 19 மாநாடுகளில் அவர் கலந்து கொண்டுள்ளார். அதே போல சுதந்திரப்போராட்டத்தில் நேரடியாக பங்கெடுத்த இருவர், இம்மாநாட்டில் பங்கெடுத்தனர். ஒருவர் என்.சங்கரய்யா, மற்றெருவர் என்.வரதராஜன்.
அதே போன்று 17 முறை மாநாட்டில் பங்கெடுத்தவர் ஒருவர். 16 முறை மாநாட்டில் பங்கெடுத்தவர் ஒருவர். 13 முறை மாநாட்டில் பங்கெடுத்தவர்கள் 2 பேர், 12 முறை மாநாட்டில் பங்கெடுத்தவர்கள் 4 பேர், 11 முறை மாநாட்டில் பங்கெடுத்தவர்கள் 11 பேர், 10 முறை மாநாட்டில் பங்கெடுத்தவர்கள் 16 பேர். 9 முறை மாநாட்டில் பங்கெடுத்தவர்கள் 16 பேர். 8 முறை மாநாட்டில் பங்கெடுத்தவர்கள் 16 பேர். 7 முறை மாநாட்டில் பங்கெடுத்தவர்கள் 25 பேர். 6 முறை மாநாட்டில் பங்கெடுத்தவர்கள் 36 பேர். 5 முறை மாநாட்டில் பங்கெடுத்தவர்கள் 49 பேர், 4 முறை மாநாட்டில் பங்கெடுத்தவர்கள் 49 பேர், 3 முறை மாநாட்டில் பங்கெடுத்தவர்கள் 84 பேர், 2 முறை மாநாட்டில் பங்கெடுத்தவர்கள் 83 பேர். அதே போல முதல் முறையாக மாநாட்டில் பங்கெடுத்தவர்கள் 232 பேர்.
இதே போன்று 1947 ஆம் ஆண்டிலிருந்து 1963 ஆம் ஆண்டு வரை கட்சியில் சேர்ந்தவர்கள் 8 பேர், 1964 லிருந்து 76 வரை கட்சியில் சேர்ந்தவர்கள் 103 பேர், 1977 முதல் 1991 ஆம் ஆண்டு வரை கட்சியில் சேர்ந்தவர்கள் 325 பேர்,1992 முதல் 2002 வரை கட்சியில் சேர்ந்தவர்கள் 36 பேர். 2008 முதல் கட்சியில் சேர்ந்தவர்கள் 7 பேர். மாநாட்டில் பங்கெடுத்ததில் அதிகம்பேர் வாலிபர் அரங்கத்தைச் சேர்ந்தவர்கள்தான். எண்ணிக்கை 179 பேர். அதற்கு அடுத்து தொழிற் சங்கங்களைச் சேர்ந்த 150 பேரும், மாணவர் அரங்கத்தைச் சேர்ந்த 144 பேரும், மாதர் சங்கத்தைச் சேர்ந்த 52 பேரும், விவசாயிகள் 17 பேரும், விவசாயத் தொழிலாளர்கள் 17 பேரும், கலை இலக்கிய அரங்கத்தைச் சேர்ந்த 13 பேரும், அறிவியல் அரங்கத்தைச் சேர்ந்த ஒருவரும் பங்கெடுத்துள்ளனர்.
தியாகத் தழும்புகளால் அணிசெய்யப்பட்ட கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்பதை நாடறியும். மக்களுக்கானப் போராட்டங்களில் பங்கெடுத்தவர்கள் அதிகம் பேர் உள்ள கட்சி என்பதை நாகையில் நடைபெற்ற மாநில மாநாடு பறைசாற்றியது. மாநாட்டில் பங்கெடுத்தவர்களில் சிறை சென்றவர்கள் 336. இதில் அதிகநாள் சிறை சென்றவர் தோழர் என்.சங்கரய்யா. அவர் சிறை சென்ற ஆண்டுகள் 8. அதே போல 3 ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை அனுபவித்தவர் என்ற பெருமையும் அவரையே சேர்ந்துள்ளது. 2 முதல் 3 ஆண்டு வரை சிறை சென்றவர் 3 பேர், 1 முதல் 2 ஆண்டு வரை சிறை சென்றவர்கள் 3 பேர், 6 மாதம் முதல் 1 ஆண்டு வரை சிறை சென்றவர்கள் 6 பேர், 6 மாதம் சிறை சென்றவர்கள் 23 பேர், 3 மாதம்வரை 54 பேர், 30 நாட்கள் வரை சிறை சென்றவர்கள் எண்ணிக்கை 246. தலைமறைவு வாழ்க்கை அனுபவித்தவர்கள் எண்ணிக்கை 78 பேர். ஆட்சியாளர்களின் கொள்கைகளுக்கு எதிராக சமரசமற்ற போராட்டதை நடத்தி வரும் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்பதை இந்த தகுதி ஆய்வறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக