திங்கள், 2 மே, 2011

தொலைந்தான் பின்லேடன் ஹா ஹா ஹா ????????????



இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவித்துக்கொள்வது என்னவென்றால் இனி உலகத்தில் தீவிரவாதமோ .. பயங்கரவாதமோ.. மனித குண்டு வெடிப்போ ... தற்கொலைபடை தாக்குதலோ .. பேருந்து மற்றும் கார் வெடிகுண்டுகளோ ... ராக்கெட் தாக்குதலோ குறிப்பாக விமான தாக்குதலோ இருக்காது.

 உலக மக்கள் அனைவரையும் இனி அமெரிக்க என்கிற நமது உலக அரசாங்கம் பாதுகாக்கும். எனவே இனிமேல் இந்தியாவை நோக்கி அமெரிக்க போர் விமானங்கள் வந்தாலும்  பூ மாலைகளை துவி வரவேற்க மக்கள் சித்தமாய் இருக்க வேண்டுமென அமெரிக்காவின் நம்பிக்கைக்குறிய ஒரிஜினல்  கைப்புள்ளை இந்திய மாநிலம் வேண்டுகோள் விடுக்கிறது.

ஏனெனில் 

தொலைந்தான் பின்லேடன் ஹா ஹா ஹா ......



இதுவரை உலகில் அகிம்சையை மட்டும் போதித்து வருகிற அமெரிக்க தேசத்தின் எதிரி தொலைந்தான். அவன்  அமெரிக்க எதிரி மட்டுமல நமது எதிரியும் ஆவான்.  எனவே இப்போது தொலைந்தது அமரிக்காவின் எதிரி  மட்டுமல்ல... நமது இந்தியாவின் எதிரியும் அழிந்ததற்கு சமம். ஆகவே இனி இந்தியா பாக்கிஸ்தானிடம் கிரிக்கெட்டில் தோல்வி அடையாது . காஷ்மீர் பிரச்சனை தீர்ந்துவிடும். குறிப்பாக தமிழகத்தில்  மின்சார வெட்டு இருக்காது ...  (எம்மாதான் யோசிக்கிறது )

ஒருவேளை வேறு யாரையாவது  பின்லேடனை  போல அமேரிக்கா உருவாக்கினால் ..????
மன்னிக்கவும். யாரவது தானாக உருவானால் மிண்டும் அமெரிக்க சட்டம் தனது கடமையை செய்யும். 

  இந்த இனிய வேளையில் யாரும் இராக் குறித்தோ.. லிபியா குறித்தோ... எகிப்த்து குறித்தோ யோசிக்க வேண்டாம் என தமிழக அரசின் நிரந்தர முதல்வரும் சி.பி. ஐ புகழ் கனிமொழியின் தந்தையுமான கலைஞர் கருணா .. வேண்டுகோள் விடுத்துள்ளார்.

(இப்படி சம்பந்தமே இல்லாமல் மாறி மாறி பல விசயங்கள் நாளை முதல் அனைத்து பத்திரிக்கையிலும் வரும் ...  தினமலர் உள்ளிட்ட பல பத்திரிகைகளில் வாசகர்கடிதம் என்ற பெயரில் பல பேர் எழுதி குவிக்கப்போகிறார்கள் எனவே தமிழாக மக்களை தயார் படுத்த இந்த பதிவு இடப்படுகிறது)

இது தான் பின்லேடன் மரணம் குறித்த முதல்  காணொளி ??


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக