சனி, 23 மே, 2009

ஓட்டுக்கு பணம்.... திருப்பி மணியாடர் அனுப்பிய இளைஞன்


நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல்கள் குறித்து பலவிதமான கருத்துக்களை நமது ஊடகங்கள் தினம் தினம் வெளியிட்டு வருகின்றனர். ஏதோ இந்திய நாட்டு மக்கள் எல்லாம் காங்கிரஸ் கட்சியின் பின்னால் அணிதிரண்டு நிற்பது போல மாயை உருவாக்கப்படுகிறது. தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் அடைந்த வெற்றிக்கு கொடுக்கப்பட்ட விலை பல ஆயிரம் கோடிகள். மதுரையில் நடந்த அத்துமீரல்களும், அடாவடிகளும் மக்கள் அறிந்ததுதான்.

நமது பக்கத்து யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் தற்போது வெற்றியடைந்துள்ள நாராயனசாமி புதுவையில் ஒரு ஓட்டுக்கு நூறு ரூபாய் கொடுத்து வெற்றியை வாங்கி உள்ளார். அவரது ஆட்கள் வீடு வீடாக பணம் கொடுத்து சென்றது பலரை அவமானப்படுத்தியது, பலரை கோபப்படுத்தியது. அப்படி கோபம் அடைந்த இளைஞன் சரவணன் அவரது பணத்தை அவருக்கே திருப்பி மணியாடரில் அனுப்பி, அவருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளான். அந்த இளைஞனை பாராட்டுவோம். அவனது சுயமரியாதை நமது இளைஞர்களுக்கு முன்னுதாரனமாக மாறட்டும்.

கடிதத்தை கிளிக் செய்து படிக்கவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக