குஜராத் துவங்கி கோவை வரை.................
இந்திய தேசத்தின் நிழல் கருமையாய் இருப்பதை காவியாய் மாற்ற நூற்றாண்டுகளாக இந்துத்துவ சக்திகள் முயன்றுகொண்டே இருக்கின்றனர். இந்தியாவை இந்துக்களின் நாடாக மாற்ற அவர்கள் செய்யும் கலவரங்களும், படுகொலைகளும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. அவர்கள் செய்யும் நேரடிக் கலவரங்கள் உடனடியாக மதச்சார்பற்ற சக்திகளால் கண்டிக்கப்படுகிறது. எதிர் வினையாற்றப்படுகிறது. ஆனால் இந்திய ஆளும் அதிகார வர்க்கத்தில் அவர்கள் ஊடுருவி சட்டப்பூர்வமாய், நீதியின் பெயரால், அதிகாரத்தின் பெயரால், அறத்தின் பெயரால் செய்யும் கொலைகளும் தவறுகளும் வெளியில் தெரிவ தில்லை. இது காவி அதிகாரிகள் மீதான விசாரணைக் காலம். அதிகார அடுக்குகளில் மறைந்து நின்று பல்லிளிக்கும் இந்துத்துவம் குஜராத் துவங்கி கோவை வரை நடத்திய அராஜகத்தின் அம்பல காலம் இது.
“குற்ற எண்ணிக்கையின் அடிப்படையில் ஒப்பிடும் போது இந்தியாவில் செயல்படும் குற்றவாளிக் கும்பல்களில் எதுவும் நிறுவனப்படுத்தப்பட்ட குற்றவாளிக் கும்பலாகிய இந்திய போலிசின் அருகே கூட நெருங்க இயலாது. ரொம்பவும் பொறுப் புணர்வுடன் இதை நான் சொல்கிறேன்” இது அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.என்.முல்லா அவர்கள் உத்தரப் பிரதேசத்திலுள்ள ஷாகாபாத் காவல்துறையினர் குறித்த தீர்ப்பில் 1961 ஆம் ஆண்டு குறிப்பிட்ட வாசகங்களாகும். இந்தத் தீர்ப்பை பார்த்து அதிர்ந்த உத்தரப்பிரதேச அரசு காவல்துறையில் நல்லவர்களும் இருக்கிறார்கள் அவர்கள் பொருட்டாவது இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மேல்முறையீடு செய்தது. இந்த முறையீட்டை தள்ளுபடி செய்த நீதியரசர் முல்லா கூறினார் “ஒரு கூடை நாறிய மீன்களில் நல்லமீனை தேடும் முட்டாள் நானல்ல” என்றார்*. பாவம் இன்றைய காவல் துறையின் வளர்ச்சியை அறியாதவர். நீதியரசர் இன்று தீர்ப்பளித்திருந்தால் “நல்ல மீன்களே இல்லாத நாறிய கூடையில் நல்ல மீனை தேடச் சொல்லாதே” என்று கோபப்பட்டிருப்பார்.
இந்தியாவில் மனித உரிமை மீறல்கள் சம்பந்தமான புகார்களில் 60 சதம் காவல்துறையின் மனித உரிமை மீறல்கள்தான் பதிவாகிறது. பதிவானவைகள்தான் 60 சதம் பதிவாகாமல் இன்னும் எத்தனையோ? காவல் நிலையக் கொலைகள், கடுமையான சித்திரவதைகள், பாலியல் கொடூரங்கள், மூன்றாம்தர சித்திரவதைகள், என்கவுண்டர் கொலைகள் என பட்டியல் நீண்டுகொண்டே இருக்கிறது. அதைவிட மிகப்பெரிய அவலம் குஜராத்தில் தங்களது பதவி உயர்வுக்காக இஸ்லாமிய மக்களை போலி என் கவுண்டரில் படுகொலை செய்வது அதிகரித்துக்கொண்டே இருப்பது.
யாருக்காக? எதற்காக?
கடந்த 2010 ஜூலை மாதம் 22 ஆம் தேதி சி.பி.ஐ அதிகாரிகளால் ஒரு முன்னாள் அமைச்சர் வீட்டின் கதவில் விசாரணை சம்மன் ஒட்டப்பட்டது. அந்த அமைச்சரின் வீட்டுக் கதவில் அது ஒட்டப்பட்ட காரணம் அதை அவர் வாங்காததுதான். அந்த அமைச்சர் அமித் ஷா. குஜராத்தின் நரேந்திர மோடி அரசின் உள்துறை இணை அமைச்சராக இருந்தவர். மத்திய புலனாய்வுத் துறையால் கைது செய் யப்பட்ட இவர் சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டு 3 நாள் விசாரனை செய்யப்பட்டார். இவர்மீது மத்திய புலனாய்வுத் துறை விசாரணை செய்யும் காரணத்தை அறிய 2005 நவம்பர் 26 தேதியில் நடந்த சம்பவத்தை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.

அன்றைய தினம் சொராபுதின் ஷேக் மற்றும் அவர் மனைவி கௌசர் பீ ஆகியோர் ஆந்திரப் பிரதேச அரசு வாகனத்தில் மகா ராஷ்ட்ராவில் குஜராத் காவல்துறையால் விசாரணை என்ற பெயரில் கடத்தப்படுகின்றனர். இருவரும் பிணங்களாக அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் இஸ்லாமிய தீவிரவாதிகள் என முத்திரை குத்தப்பட்டனர். அந்த என்கவுண்டர் கொலையை பார்த்த ஒரே சட்சி துள்சி பிரஜாபதி அவரும் மார்ச் 2006 ஆம் ஆண்டு என்கவுண் டரில் காவல்துறையால் படுகொலை செய்யப்படுகிறார். சொராபுதின் ஷேக் மரணத்திற்கு நீதி கேட்டு, சொராபுதின் ஷேக் தீவிரவாதி அல்ல என சொல்லி அவரது அண்ணன் ரபாபுதின் உச்சநீதிமன்றத்தின் கதவுகளை தட்டுகிறார். உச்சநீதி மன்றம் மத்திய புலனாய்வுத் துறையை இவ்வழக்கை விசாரணை செய்யச்சொல்லி பணிக்கிறது. மத்திய புலனாய்வுத்துறை இந்த என்கவுண்டர் கொலைகள் திட்டமிட்ட கொலை என்றும் இதில் அந்த மாநில முன்னாள் உள்துறை துணை அமைச்சர் சம்பந்தபட்டிருக்கிறார் என அவரை கைது செய்தது.
மற்றொரு சம்பவம். 2004 ஜூன் 15 இஸ்ரத் ஜஹன், ஜாவீத் ஷேக், சீஷன் ஜோஹர், அம்ஜத் அலி ரானா ஆகிய நண்பர்கள் அகமதாபாத் அருகில் உள்ள நரோடாவில் காரில் பயணம் செய்யும் போது குஜராத் காவல்துறையால் என் கவுண்டரில் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களுக்கு லஷ்கர்-இ-தொய்பா என்ற தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாக காவல்துறை திரைக்கதை எழுதியது.
ஆனால் இதுவும் போலி என்கவுண்டர் கொலைகள் என மத்திய புலனாய்வு அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதற்கு கொல்லப்பட்ட இளம் பெண் இஸ்ரத்தின் தாயார் ஷமீமா நீதிமன்றத்தின் கதவை தட்டியதுதான் காரண மாகும். இப்படி குஜராத்தில் கடந்த சில ஆண்டுகளில் 34 என்கவுண்டர் கொலைகள் நடந்துள்ளது. இவைகள் ஒவ்வொன்றையும் விசாரித்தால்தான் இன்னும் உண்மைகள் வெளிவரும். இந்தப் படுகொலைகள் நடந்திட காரணம், ஆட்சியில் உள்ள இந்துத்துவ மதவெறியர்கள் மத்தியில் தங்களது பராக்கிரமங்களைக் காட்டி பதவி உயர்வு பெறத் துடிக்கும் அதிகார வர்க்கத்தின் பதவி வெறியாகும். மற்றொன்று இஸ்லாமிய தீவிரவாதம் என்ற பூதத்தை காட்டி இந்துத்துவ வெறியை முடிந்த அளவு மக்கள் மனங்களில் விதைப்பது. இந்த மதவெறிதான் ஆர்.எஸ்.எஸ் காணும் அகண்டபாரதம் என்பதை உருவாக்கும் என நினைக்கின்றனர். பாட்னா, அஜ்மீர், கான்பூர், மலேகாவ், தானே, கோவா, நாந்தட், ஹைதராபாத் அகிய இடங்களில் இந்து மதவெறியர்கள் வைத்த வெடிகுண்டுகள் குறித்த விசாரணை ஒவ்வொன்றாக வெளிவந்துகொண்டிருக்கும் சூழலில் அவர்கள் அம்பலப்பட்டு நிற்கும் நிலை உருவாகி உள்ளது. இஸ்லாமிய தீவிரவாதம் என்ற பூதம் குஜராத்தில் மட்டுமல்ல தமிழகத்திலும் பயன்படுத்தப்பட்டு அப்பாவி இஸ்லாமிய இளைஞர்கள் பழிவாங்கப்பட்டதும் நடந்தது.
குஜராத் வடிவம் மாறி கோவையில்...
2006 ஜூலை மாதம் கோவையில் வெடி குண்டுகளுடன் தீவிரவாதிகள் கைது, தொடர் குண்டு வெடிப்பு நடத்தி தமிழகத்தில் நாசவேலைக்கு சதி, கோவையை அடுத்து சேலத்துக்கும் ஆபத்து, போலிஸ் அலுவலகங்களை தகர்க்க சதி என்று பத்திரிகைகள் கொட்டை எழுத்துகளில் செய்திகளை வெளியிட்டன.1998 பிப்ரவரி 14ஆம் தேதி நடந்த கொடூர குண்டு வெடிப்பு சம்பவத்தின் ரணங்கள் இன்னும் மக்கள் மனங்களில் இருந்ததால் மக்கள் அதிர்ந்து போனார்கள். மேலும் நமது ஊடகங்கள் தங்கள் வசதிக்கும் கற்பனைக்கும் தகுந்தவாறு செய்திகளை முந்தித்தந்தனர். இந்து தலைவர்களை தீர்த்துக்கட்ட சதி, கோவையில் கைதான தீவிரவாதிக்கு கேரள குண்டு வெடிப்பில் தொடர்பு, மும்பை தீவிரவாதிகளுடன் தொடர்பு, என்று அடுத்த நாளும் தொடர்ந்தது. ஒசாமா பின்லேடன் கோவை வந்து தீவிரவாதிகளுக்கு திட்டம் தீட்டி தந்தார் என்று மட்டும்தான் எழுதவில்லை. நீண்ட தாடி, தலப்பாக்கட்டுடன் யாரும் கண்ணில் தட்டுப்படாத காரணத்தால் இதை எழுதவில்லை போலும். தீவிர வாதிகள் கைது செய்யப்பட்டதால் சதி அனைத்தும் முறிய டிக்கப்பட்டது என்று ஊடகங்கள் கூறி முடித்தன.

என்ன நடந்தது? 2006 ஜூலை 22 அன்று நள்ளிரவில் ஹாரூன் பாஷா, மாலிக் பாஷா, அதீக்குர் ரஹ்மான் (எ) போலேசங்கர், ரவி (எ) திப்புசுல்தான், சம்சுதீன் உள்ளிட்ட ஐந்து பேரை கோவை போலிசார் கைது செய்தனர். பைப் குண்டுகள், மேப்புகள் கைப்பற்றப்பட்டன. சதியை திறமை யாக முறியடித்த உளவுத்துறை உதவி ஆணையர் ரத்தின சபாபதி, போத்தனூர் பி-13 இன்ஸ்பெக்டர் பால்ராஜ் ஆகியோருக்கு கமிஷனர் கரண் சின்கா பாராட்டு.
அப்போது தமிழகத்தின் அனைத்து செய்திகளும் பின்னுக்குப் போய் மீடியாக்களில் இந்த வெடிகுண்டு குறித்த விவாதங்களே ஆக்கிரமித்திருந்தது. ஆனால் காவல்துறையினர் தயாரித்த கதையில் ஆங்காங்கு ஓட்டை இருந்ததால், காவல்துறையின் நடவடிக்கையில் சந்தேகம் கொண்ட பத்திரிகைகள் மறுபக்கத்தை தேட ஆரம்பித்தன. சில தகவல்களைத் திரட்டின. ஆனாலும் சதியின் முழுபரிமாணத்தையும் அவர்களால் காணமுடியவில்லை. அதே நேரத்தில் கைதான ஹாருன் பாஷா குறித்து இருந்த நன்மதிப்பு முறையான நீதிவேண்டும் என கோவை முஸ்லிம் ஐக்கிய ஜமா அத் உள்ளிட்ட பல இஸ்லாமிய அமைப்புகள் களம் இறங்கிவிட்டது.
கமிஷனர் உள்ளிட்ட உயரதிகாரிகளிடமும் முறையிட்டன. அதிகார வர்க்கத்திற்கு மனு போட்டனர். எதிர்ப்புக் குரல் வலுக்கவே, முதலில் உதவிகமிஷனர் நிஜாமுதீன் தலைமையில் விசாரணை நடந்தது. சில சந்தேகங்களை எழுப்பியதோடு விடை காணாமலே அவரும் விடைபெற் றார். வழக்கு சிபிசிஐடி-யின் வசம் போனது. அதன் சிறப்புப் புலனாய்வுக்குழு தலைவராக ஆர்.பாலன் களமிறங்கினார். ஏறத்தாழ 15 மாதகாலம் கடுமையான விசாரணையை மேற்கொண்டார். நிதானமாக உண்மைகளை உறுதி செய்துகொண்டார். அவர் எடுத்திருக்கும் வழக்கு மிகவும் நுட்பம் வாய்ந்தது மட்டுமல்ல, தேசபாதுகாப்போடு சம்பந்தபட்டது. எனவே அறிவியல் பூர்வமான தரவுகளையும் சேமித்துக்கொண்டார். அவரது விசாரணையின் துவக் கத்திலேயே தமிழக காவல்துறையின் கேவலமான வன்மம் மிகுந்த அணுகுமுறை தெரிந்தது. இருப்பினும் நீண்ட விசாரணைக்குப் பின் தன்னுடைய இறுதி அறிக்கையில், கீழ்வருமாறு எழுதி முடித்தார் “பி-13 போத்தனூர் காவல் நிலையத்தில் குற்ற எண் 1067/2006 இல் இந்திய தண் டனை சட்டப்பிரிவு 120 (பி) 2/இ- வெடிபொருட்கள் சட்டம் 1908, பிரிவு-5இன் கீழ் பதிவு செய்யப்பட்ட முதல் தகவலறிக்கை மற்றும் வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்ட தாகச் சொல்லப்பட்டு, அதற்காக தயாரிக்கப்பட்ட கைப்பற்றல் மகஜர்கள் அனைத்தும் ஜோடிக்கப்பட்டவை, பொய்யானவை என்று என்னுடைய விசாரணையில் தெரிய வந்தது. மேலும் என்னால் பதிவு செய்யப்பட்ட சாட்சி யங்களும், வாக்குமூலங்களும் மேற் கூறப்பட்ட தகவல் களை அறுதியிட்டு உறுதிப்படுத்துகின்றன. எனவே, இது பொய் வழக்கு என்று கூறி இவ்வழக்கை நான் முடிக்கிறேன்.’’
அவர் நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்த அறிக்கையில் மேலும் கூறுகிறார் “காவல்துறை அதிகாரிகளைத் தவிர, மற்ற சாட்சிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த அனைத்து சாட்சியங்களும், மேற்படி வழக்கும் முற்றிலும் பொய்யாக புனையப்பட்ட வழக்கு என்பதையும், மேலும் இந்த வழக்கில் கூறப்பட்டதைப் போல வெடிகுண்டுகள் ஏதும் கைப்பற்றப்படவில்லை என்பதையும் உறுதிப்படுத்தும் விதமாக உண்மைகள் வெளிவந்துள்ளது” என்று கூறுகிறார். அதாவது காவல் துறையினர் தீவிரவாதிகள் என்று கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து வெடிகுண்டு கைப் பற்றப்படவில்லை. அப்படியாயின் ஏது அந்த வெடி குண்டு? யார் செய்தது? யார் போலிஸ் வசம் கொடுத்தது? வெடிகுண்டு செய்பவர்களோடு காவல்துறைக்கு உறவா? அல்லது அவர்களே வெடிகுண்டுகளை செய்தார்களா? தமிழக அரசாங்கம் விசாரித்ததா? விசாரிக்க வேண்டாமா? உண்மை வெளிவந்துவிட்டதால் வெடிகுண்டே இல்லை என்று கூறுவார்களா? அப்படியெனில் வெடி குண்டு வழக்கு ஏன் புனையப்பட்டது?
அடுத்து காவல்துறையினர் எப்படி திருட்டுத்தனமாக நடந்துக்கொண்டனர் என்பதற்கு அசைக்க முடியாத அத்தாட்சியை தருகிறார். குற்றம்சாட்டபட்டு கைது செய் யப்பட்ட 5 நபர்களின் வீட்டுக்கும் ஆய்வாளர் பால்ராஜ் என்பவர் தன்னுடன் ஒரு உதவி ஆய்வாளர், எட்டு தலைமைக் காவலர்கள், ஒரு காவலர், ஒரு கிராம நிர்வாக அலுவலர், ஒரு வருவாய் அலுவலருடன் சென்று கைது செய்ததாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவை அனைத்தும் பொய்யானவையாகும். எப்படி கண்டுபிடிக்கப்பட்டது தெரியுமா. இவர்கள் அனைவரும் சென்று கைது செய்யப்பட்டதாக கூறும் நேரத் தில் காவல்நிலையங்களில் நடக்கும் வருகைப் பதிவு நிகழ் வில் (ரோல் கால்) போத்தனூர் மற்றும் குனியமுத்தூர் காவல் நிலையங்களில் கலந்துகொண்டதாக காவல் நிலைய பொது நாட்குறிப்பில் பதியப்பட்டுள்ளது. ஆக இவர்கள் கைது செய்யச்சென்றது பொய்யாக இருக்க வேண்டும். அல்லது காவல் நிலையத்தில் பொய்யாக எழுதி இருக்க வேண்டும். இரண்டும் உண்மையாக இருக்க முடியாது. இது அப்பட்டமான விதிமீறல். அதே போல கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் அலுவலருடன் சென்றதாகச் சொன்னதும் பொய்யானதுதான். இதை விசாரணையில் அவர்களே ஒப்புக்கொள்கின்றனர். இன்னும் நிறைய விபரங்கள் காவல்துறையை அம்பலப் படுத்துகிறது அந்த அறிக்கை.
யார் குற்றவாளிகள்...
பொய்வழக்கு புனையப்பட்டு சிறைக்குள் அடைக்கப்பட்ட அந்த இளைஞர்களின் வாழ்க்கையில் அந்த நேரத்தில் அடைந்த துன்பத்தை வார்த்தைகளால் வடிக்க முடியாது. ஒரு மாதகால சிறைவாசம், விசாரணையில் பட்ட மன உலைச்சல். அந்த ஐந்து குடும்பங்களும் அடைந்த வேதனை. சமூகத்தில் பட்ட அவமானங்கள். குண்டு மீண்டும் வெடிக்குமோ என்ற பீதி. அதனால் அதிர்ந்து போன அப்பாவி மக்கள். இதற்கெல்லாம் என்ன நடவடிக்கை? இந்த காயத்திற்கு மருந்திடுவது யார்? சி.பி. சி.ஐ.டி அறிக்கை அளித்து இரண்டு மூன்று ஆண்டுகளாகி யும் பொய்யான குற்றச்சாட்டு புனைந்து பீதியை உண் டாக்கிய போலீஸ் அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. எந்த தண்டனையுமின்றி வெடிகுண்டு தயாரிப் பாளர் ரத்தினசபாபதி அதே கோவையில் மது விலக்கு பிரிவு கூடுதல் கண்காணிப்பாளராக தொடர்கிறார். இந்த சம்பவம் நடந்தது கலைஞர் ஆட்சியில்தான். காவல் துறையின் மீது குற்றம்சாட்டப்பட்டதும் அவர் ஆட்சியில் தான். சிறுபான்மையினர் நலன் காப்பதாக தம்பட்டம் அடித்துக்கொள்ளும் கலைஞர் இதுவரை மவுனம் சாதிப் பது எதனால். மைனாரிட்டி திமுக என அதிமுக தலைவி பேசியதை பார்த்து கொதித்தெழுந்து கோவையில் பேசிய முதல்வர் “ஆமாம் நாங்கள் மைனாரிட்டிதான் அதாவது மைனாரிட்டியை ஆதரிக்கும் மைனாரிட்டிகளின் ஆட்சி” என்று வார்த்தை ஜாலங்களை வீசுகிறார். வார்த்தைகளை அடுக்கி விளையாடும் எளிதான காரியமல்ல இது. குஜராத்தைப் போல அதிகாரத்தின் அடுக்குகளில் மறைந்து தனது கோரமுகத்தை இந்துத்துவா நிறுவுவதை எதிர்த்து சமர் புரிய வேண்டிய தருணம் இது. பெரியாரின் சுண்டு விரலை பிடித்து வந்ததாக தம்பட்டம் அடிப்பவர் என்ன செய்ய போகிறார்?
(ஆதாரம்: கோவை போலீஸ் நடத்திய வெடிகுண்டு நாடகம். இலக்கிய சோலை- 25, பேரக்ஸ் சாலை, பெரியமேடு, சென்னை-600003)

CPI(M) supported Madhani in Kerala.Now Kerala is in getting more communalised than ever before. The incident in Coimbatore is an attempt by police to book the innocent and seek the rewards. Many innocents are treated like that.Dont apply your pervese logic in all the cases.In Pandiammal case too police did so and the innocents were forced to confess that they killed her.The party that shamelessly runs after muslim votes and appeases muslims cannot claim that it is secular. You are more critical of Modi than Pakistan which trains islamic fundamentalists against India.
பதிலளிநீக்குCriticise Modi but you should also criticise islamic militancy and forces that support that.Who exiled Taslima?. Who shared dias with mullahs in Mumbai?.Which party sought PM's intervention in Danish Cartoon controversy?.
Even before RBI permitting islamic financing in India Kerala govt. tried to introdue that with a company to appease muslims.
Dr.Swamy intervened and court granted stay.That is your record
on secularism.
if you have guts write a post abt islamists fundamendalists.. you dont have guts to write about them and you are barking needlessly about hindus..
பதிலளிநீக்குஅன்புள்ள நண்பா வணக்கம், தங்களுடைய பெயர் தெரியவில்லை. வேண்டாம் என நினைக்கிறீர்களா? சரிதான் உங்கள் வீரம் வெல்லட்டும். அது இருக்கட்டும். நான் இந்த கட்டுரையில் இஸ்லாமியாய அடிப்பதிவாதிகளை ஆதரித்து எழுதி இருப்பதை போல தாங்கள் கோபப்படுவது சரியா? இந்த தேசத்தில் எவன் ஒருவன் மக்களை கொல்ல குண்டு வைத்தாலும் நான் அவனுக்கு எதிரியே. அது ஆர்.எஸ்.எஸ் ஆ அல்லது அல் உமாவா என்பதல்ல கேள்வி.
பதிலளிநீக்குஆனால் தாங்கள் ஒன்ரை புரிந்துக்கொள்ள வேண்டும் இந்த நாட்டில் இஸ்லாமிய மதவாதம் தலைத்தூக்க இந்து அடிப்படைவாதம்தான் காரணம் உன்பது வரலாற்று உண்மை.இன்றுவரை இந்து மதாவதிகள் செய்த கொலைகள்தான் அதிகம் என்பதை யாரும் மறுக்க முடியாது.
சரி தொடர்ந்து விவாதிப்போம்.
நான் எனது வலைதளத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளையும், கிருத்துவ மத அடிப்படை வாதிகளையும் விமர்சனம் செய்து எழுதியுள்ள் கட்டுரைகளையும் தாங்கள் படிக்கவும்.
காவி பயங்கரவாதம் என்று உள்துறை அமைச்சர் சொன்னதும் அப்ப்டியெல்லாம் சொல்லக்கூடாதுன்னு குதிக்கிராங்களே மாலேகான், ச்ம்சவுதா எக்ஸ்பிரஸ், ஹைதாரபாத் மெக்கா மசூதி,அஜ்மீர் தர்கா இதிலெல்லாம் யார் குண்டு வைச்சா? இது வரை இஸ்லாமிய அடிப்படைவாதிகள் வைத்த குண்டுவெடிப்பையெல்லாம் இஸ்லாமிய பயங்கரவாதம்னு சொல்லும்போது இனிக்கிது.
பதிலளிநீக்குஉண்மையைச் சொன்னா ஒத்துக்கணும். நரேந்திரமோடியை சிபிஐ விசாரனை பண்ணக்கூடாதுன்னு தானே ஓடி வந்து அணுசக்தி இழப்பீட்டு மசசோதாவுக்கு ஆதரவு தந்தது காவிக்கூட்டம்.
தோழா வணக்கம் . இந்த கற்றுரையின் கரு என்னவென்று தெரியாமல் அந்த பெயர் சொல்லாத மனிதர் அலங்கரிகிறார் ...
பதிலளிநீக்குஇந்து மதத்தை அவர் தூக்கிநிறுத்தட்டும். இந்து, முஸ்லிம் , கிறிஸ்டியன் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும் . அந்த பாதிகப்பட்ட இளைஞர்களின் வாழ்கையை இன்றைய முதல்வர் யோசிக்க வேண்டும். சமந்தப்பட்ட காவல் துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற உங்களுடைய ஆதங்கம் நாயமானது... வாழ்த்துக்கள் தோழா ....
அரிகரன் தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி "நரேந்திரமோடியை சிபிஐ விசாரனை பண்ணக்கூடாதுன்னு தானே ஓடி வந்து அணுசக்தி இழப்பீட்டு மசசோதாவுக்கு ஆதரவு தந்தது காவிக்கூட்டம்." என்ற உங்கள் கூற்று மிகவும் சரியானது.
பதிலளிநீக்குஉதயா தங்கள் பின்னூட்டத்த்ற்கு நன்றி
பதிலளிநீக்கு///இஸ்லாமிய தீவிரவாதம் என்ற பூதத்தை காட்டி இந்துத்துவ வெறியை முடிந்த அளவு மக்கள் மனங்களில் விதைப்பது. இந்த மதவெறிதான் ஆர்.எஸ்.எஸ் காணும் அகண்டபாரதம் என்பதை உருவாக்கும் என நினைக்கின்றனர்.///
பதிலளிநீக்குமிக சரியான வாசகங்கள். இங்கு மதத்தின் பெயரால் அரசியல் பிழைப்பு நடத்துபவர்கள் தான் ஏதேனும் பிரச்சனைகளை கையில் எடுத்துகொண்டு பல புராண பொய்களை கூறி, மக்கள் மனதில் வெறுப்புணர்ச்சியை வளர்கிறார்கள். சாதாரண கடவுள் நம்பிக்கை உள்ள
மக்களை எல்லாம் இந்துவா வெறி ஊட்டி, அவர்களை தங்கள் வாக்கு வங்கியாக மாற்றும் அற்பமான நோக்கத்தை விட எதுவும்மில்லை. அதற்காக எத்தனை கலவரம் செய்யவும் அதில் அப்பாவி மக்களை பலிகொடுக்கவும் தயாராக உள்ளவர்கள்.
அனைத்து சிறுபான்மை சமூகத்தினரையும் இந்த நாட்டை விட்டு ஊட்டிவிட்டால் எந்த நாடு சொர்கபுரி ஆகிவிடுமா?
///இஸ்லாமிய தீவிரவாதம் என்ற பூதத்தை காட்டி இந்துத்துவ வெறியை முடிந்த அளவு மக்கள் மனங்களில் விதைப்பது. இந்த மதவெறிதான் ஆர்.எஸ்.எஸ் காணும் அகண்டபாரதம் என்பதை உருவாக்கும் என நினைக்கின்றனர்.///
பதிலளிநீக்குமிக சரியான வாசகங்கள். இங்கு மதத்தின் பெயரால் அரசியல் பிழைப்பு நடத்துபவர்கள் தான் ஏதேனும் பிரச்சனைகளை கையில் எடுத்துகொண்டு பல புராண பொய்களை கூறி, மக்கள் மனதில் வெறுப்புணர்ச்சியை வளர்கிறார்கள். சாதாரண கடவுள் நம்பிக்கை உள்ள
மக்களை எல்லாம் இந்துவா வெறி ஊட்டி, அவர்களை தங்கள் வாக்கு வங்கியாக மாற்றும் அற்பமான நோக்கத்தை விட எதுவும்மில்லை. அதற்காக எத்தனை கலவரம் செய்யவும் அதில் அப்பாவி மக்களை பலிகொடுக்கவும் தயாராக உள்ளவர்கள்.
அனைத்து சிறுபான்மை சமூகத்தினரையும் இந்த நாட்டை விட்டு ஊட்டிவிட்டால் எந்த நாடு சொர்கபுரி ஆகிவிடுமா?
ஹிந்து தர்மம் அழிந்தால் உலகமே அழிந்துவிடும் ,இதில் உள்ள ஆலம் உங்கள்ளுக்கு தெரியாது.விவேகானந்தர் எதிர்பார்த்த ஒரு இயக்கம்தான் rss .பாரதத்தை விவேகானந்தரை விட அதிகமாக நேசித்தவர்கள், புரிந்துகொண்டவர்கள் யாறும் இல்லை.இந்திய ஹிந்து நாடாக மாறினால்தான் இந்தியாவை காப்பாற்ற முடியும் .இந்திய காப்பட்ட்ற பட்டால்தான் உலகம் காப்பாற்றப்படும்.
பதிலளிநீக்கு