1.
சமீபத்தில் சாம்பல் தேசம்... என்ற வலைப்பூவை பார்க்க நேர்ந்தது.
என்னைப் பற்றி... பெருசா ஒண்ணும் இல்ல... கற்றது கை மண்ணளவு. தோலில் சுரணை சற்று அதிகம் இருப்பதால் மற்றவர்களின் விரோதத்தை சம்பாதித்துக் கொள்வது வழக்கமாகிவிட்டது. என்ற சுவராசியமான அறிமுகத்துடன் காட்சியளித்த வலைப்பூவில் தற்போதுள்ள நாற்பத்துநான்காவது இரட்சகனும்..... பாகம் 2 ல் ஒரு பகுதி இது
”வியட்நாம் மீது போர் தொடுத்து நாபாம் குண்டுகளை வீசி வியட்நாம் மக்களைப் படுகொலை செய்த அமெரிக்க தீவிரவாதிகளில் முக்கியமான பாத்திரம் வகித்த ஹென்ரி கிஷ்ஷிங்கருக்கு 1973 நோபல் அமைதிப்பரிசு வழங்கப்பட்டது. பாலஸ்தீன மக்களைக் கொன்றுகுவித்த இஸ்ரேலின் மெனாக்கம் பெகினுக்கு இதே பா¢சு வழங்கப்பட்டது. லட்சக்கணக்கான ஆஃப்கன் மக்களைக் கொலைசெய்யக் காரணமாக இருந்த அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டருக்கு 2002ஆம் ஆண்டு இதே பரிசு வழங்கப்பட்டது.
தொடர்ந்து கிறிஸ்டோபர் கொலம்பஸ், ஜெனரல் டயர், ஹிட்லர், ஹிரோஷிமா-நாகசாகியில் அணுகுண்டு வீசிய ஹாரி ட்ருமன், ரோட்னிகிங்கை அடித்து நொறுக்கிய போலீஸ்காரர்கள், நாதுராம் கோட்சே, நரேந்திரமோடி போன்றவர்களுக்கு அடுத்தடுத்து நோபல் அமைதிப்பரிசு வழங்க வேண்டும் என்று அமெரிக்க ஆதரவாளர்களும், ஊடகங்களும் மனுப்போடலாம்.”
நீக்ங்களும் படியுங்களேன்.....
2.
அதேபோல ச.தமிழ்ச்செல்வன் அவர்கள் பேராச்சி கண்ணன் எடுத்த நேர்காணலை ( 2011 அக் 30-த சண்டே இந்தியன் இதழில்) தமிழ்வீதியில் பதிந்துள்ளார். அதில் இன்றைய தமிழக யதார்த்ததை ஒரு பதிலில் அடக்கியுள்ளார். நீங்களும் படியுங்கள்.
கடந்த 6 ஆண்டுகளாக தமிழகத்தை குறுக்கும் நெடுக்குமாய் பயணம் செய்து இருக்கிறீர்கள். தமிழகம் எப்படி இருப்பதாகக் கருதுகிறீர்கள்?
தமிழகத்தில் இளைஞர்கள், இளம் பெண்கள் யாரும் சொந்த ஊர்களில் இல்லை. ஏனெனில் பிழைப்பிற்கு இங்கே வழியில்லை. பிழைப்புத் தேடி இடம் பெயர்ந்து அலைகின்றனர். நான் பார்த்த பெரிய துயரம் இது. அடுத்த துயரம் அழிக்கமுடியாத சாதிய உணர்வு. அது மக்களிடையே இறுகிப் போய் உள்ளது. சிறுபான்மையினராக இருக்கும் மக்களான அருந்ததியினர், அரவாணிகள் எல்லோரும் தங்கள் குரலை வலுவாக உயர்த்தி வெளிவந்துள்ளனர். மாற்றுத்திறனாளி கள் இன்று ஒருங்கிணைந்துள்ளனர். ஒடுக்கப்பட்ட அனைவரும் இன்று வெளிவந்துள்ளனர். அடுத்து அணி திரட்டப்பட்ட தொழிலாளர்கள் வர்க்கம் குறைந்துவிட்டது. தொழிலாளர்கள் அனைவரும் ஒப்பந்த முறையில் வேலைக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மனிதாபிமானமற்ற, இரக்கமற்ற, அறிவில்லாத நாற்கர சாலைகள் வந்துள்ளன. இதனால் கிராமங்கள் துண்டாகிக் கிடக்கின்றன. இதில் சாதாரண மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. அடுத்து தமிழகத்தில் குடிப்பழக்கம் அதிகமாகியுள்ளது. தொழிலாளிகள், படைப்பாளிகள், இளைஞர்கள் என அனைவரும் போதைக்கு அடிமையாகியுள்ளனர். ஏனெனில் பிரச்னைகள் அதிகமாகி விட்டன. பிரச்னைகளைச் சமாளிக்க தெரியாமல் அல்லாடுகின்றனர். பொருளாதாரப் பிரச்னைகளை பண்பாட்டுத் தளத்தில் வைத்துத் தீர்க்க முயற்சி செய்கின்றனர். இதனால் அதிலிருந்து தப்பிக்க போதைக்கு அடிமையாவதும், கோவிலுக்குச் செல்வதும், சினிமாவிற்குச் சென்று மகிழ்ச்சியாக இருப்பதும் அதிகரித்துள்ளது.
3.
மேலும்.. மாற்று தளத்தில் ப சிதம்பரம் குறித்த ஒரு பதிவு மிகவும் அர்த்தங்கள் நிறைந்த கேள்வியை எழுப்பி நிற்கிறது.... இந்த தளத்தையும் பாருங்கள்...
அட்ரஸ் இல்லாத கட்சியொன்றை வைத்து, அதில் ஒரு எம்.பியாகி, பிறகு நாட்டுக்கே நிதிமந்திரி ஆன கதையெல்லாம் எவ்வளவு நேர்மையானது? சென்ற பாராளுமன்றத் தேர்தலில் தனது தோல்வியை வெற்றியென அறிவிக்க வைத்ததில் எவ்வளவு தருமம் ஓளிந்திருந்தது? முதலாளிகளைப் பார்த்ததும் பல்லிளித்து, பலகோடி எழை மக்களின் வாழ்க்கையைக் கெடுத்து சீரழித்த உங்கள் கொள்கை எவ்வளவு அறம் சார்ந்தது? நாக்கு எப்படியெல்லாம் புரண்டு பேசும் என்பதற்கு புது அகராதியே வகுத்த தங்கள் அரசியல் எவ்வளவு அப்பழுக்கற்றது? அமெரிக்காவுக்கு சேவகம் செய்வதற்காக பிறவியெடுத்த உங்கள் வாழ்க்கை எவ்வளவு ஒழுக்கமானது?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக