திங்கள், 29 ஆகஸ்ட், 2011

எழுந்துவா என் மகளே.. இணைந்து போராடுவோம்!







செங்கொடி என்ற பெயர் கொண்ட

தாயே..
தங்கையே ..
என் செல்ல மகளே!
ஏன் செய்தாயடி...

உனது பிஞ்சு மொழியால்
குரல் உயர்த்தி இருக்கலாம்.
உனது கோபத்தால்
இன்னும் அதிர்ந்திருக்கலாம்..

மரணம்தான் உனது
குரலா
அல்லது
தீர்வா.?
தற்கொலைகள் இதுவரை
தீர்வானதில்லையடி
என் சோதரி..

மக்களை திரட்டி
நடத்திய
போராட்டம்தான்
இதுவரை வென்றிருக்கிறது..

எழுந்துவா என்
தங்கையே..
மகளே..
இணைந்து
போராடுவோம்!

3 கருத்துகள்:

  1. தமிழ்நாடு இந்தியா என்னும் கூட்டாட்சியில் இருக்கும்வரை,
    தமிழனுக்கு உரிய பாதுகாப்பும், உரிமைகளும் கிடைக்கபோவதில்லை.
    இந்தியா என்னும் துரோகியை தமிழன் என்று இனம் காண்கிறானோ அன்றுதான் அவனுக்கு விடிவுகாலம்.
    நாம் பல வகையில் இந்திய தேசியத்தால் ஏமாற்ற பட்டாலும்
    மறந்து மீண்டும் அடுத்த எமாற்றத்துக்கு ஆயத்தமாகிறோம்.
    இந்தியா என்னும் அடிமை மோகத்தில் இருந்து விடுபடு தமிழா
    இந்தியா தமிழனின் துரோகி

    இவன்,
    புகல் - pugal.na@gmail.com

    பதிலளிநீக்கு
  2. முத்துக்குமாரை ஹீரோவாக்கியவர்கள் தான் செங்கொடியின் முடிவுக்கும் காரணம்! இதுவும் ஒரு வன்முறையே! உணர்ச்சிகளைத் தூன்டி, தற்கொலைகள் நிகழ்வது, போராட்டத்திற்கு இழுக்கு!

    தற்கொலை தற்குறித்தனமானது! இத்தகையத் தற்கொலைகளை ஆதரிப்போர் முதலில் தண்டிக்கப் பட வேண்டும்!

    தூண்டிவிடப்பட்ட உணர்ச்சிகளின் அடிப்படையில் இனி ஒரு தற்கொலை சம்பவம் நடக்கக் கூடாது!

    பதிலளிநீக்கு
  3. மிகச் சரியாய் செய்துள்ளீர்கள் ரமேஷ். நானும் ஒன்று போட வேண்டும்

    பதிலளிநீக்கு