மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!

இங்குள்ள  விடியோக்களை கடைசியாக பார்த்துக்கொள்ளலாம். முதலில் பதிவை படித்துவிடுங்கள்.
கடந்த சில தினங்களாக தினமும் செய்திகளில் தவராமல் இடம் பிடித்த சாய்பாபா 24.04.11 அன்று  இறந்தர். ஒரு மனிதனாக அவரை நான் நினைப்பதால் அவருக்கு அஞ்சலி. அவரை மகா அவதாரமாக நம்பிய அப்பாவி பக்தர்களுக்கு அனுதாபங்கள். ஆனால் அவரது மரணத்தை மிகவும் பரபரப்பாக்க தொடர்ந்து செய்திகளை போட்டு தாக்கிகொண்டே இருக்கிறார்கள் ஒன்னறை லட்சம் விவசாயிகள் இந்த  நாட்டில் தற்கொலை செய்துகொண்ட போது கொஞ்சமும் கவலைப்படாமல் கல்நெஞ்சத்துடன் இருந்த பிரதமர் துவங்கி பல அரசியல் பிரமுகர்கள், பெருமுதலாளிகள், விளையாட்டு வீரர்கள் என அனைவரும் ரொம்ப பீலிங்குடன் அறிக்கை விடுகின்றனர். பாபாசாமி 96 வயதில்தான் சாவேன் என்று சொல்லி முன்னடியே இறந்துவிட்டாறேன்னு  யாரும் அதிர்ச்சியடைந்ததாக தெரியவில்லை. அவரபத்தி பலவித கதைகள் கிளப்பிவிடப்படுகிறது. உதாரணத்திற்கு கீழே ஒன்று. 

சாய்பாபா 1926-ம் ஆண்டு நவம்பர் 23-ந் தேதி ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் பிறந்தார். தந்தை பெயர் ராஜு ரத்னாகரம், தாயார் பெயர் ஈஸ்வரம்மா.   சாய்பாபாவின் தாயார் ஈஸ்வரம்மா ஒரு நாள் கிணற்றில் தண்ணீர் இறைத்து கொண்டிருந்தார். அப்போது வானில் இருந்து வந்த அதிசய ஒளி ஈஸ்வரம்மா வயிற்றில் புகுந்தது போன்று இருந்தது. அதன் பிறகு ஈஸ்வரம்மா கர்ப்பம் ஆனார்.  குறிப்பிட்ட காலம் கடந்ததும் அவருக்கு குழந்தை பிறந்தது. சத்ய நாராயண ராஜு என்று குழந்தைக்கு பெயர் சூட்டினார்கள். 

சிறு பருவத்திலேய சாய்பாபா எல்லா துறைகளிலும் சிறந்து விளங்கினார். நாடகம், இசை, நடனம், கதை எழுதுதல், பாடல், என தொட்ட துறைகளில் எல்லாம் பிரகாசமாக இருந்தார்.    1940-ம் ஆண்டு மார்ச் 8-ந் தேதி சாய்பாபா தனது சகோதரருடன் விளையாடி கொண்டிருந்தார். அப்போது அவரை தேள் கொட்டி விட்டது. இதனால் அவர் சில மணி நேரம் தன்னிலை மறந்தவராக மாறிவிட்டார். அதன் பிறகு சிரிப்பது, அழுவது, மவுனமாக இருப்பது என முற்றிலும் மாறுபட்ட நபராக தோன்றினார்.  இதனால் பயந்துபோன பெற்றோர்கள் அவரை டாக்டரிடம் அழைத்து சென்றனர். அவர்கள் சாய்பாபாவை பரிசோதித்து விட்டு நரம்பு தளர்ச்சி நோய் தாக்கி இருப்பதாக கூறினார்கள். அதற்கு சிகிச்சை அளித்தும் எந்த மாற்றமும் இல்லை. மத குருக்கள், சாமியார்களிடம் அழைத்து சென்றனர். பலன் கிடைக்கவில்லை. 

    இந்த நிலையில் 1940-ம் ஆண்டு மே 23-ந் தேதி சாய்பாபா வீட்டில் இருந்த அனைவரையும் அழைத்தார். திடீரென தனது கையில் இருந்து கற்கண்டை வரவழைத்து அவர்களுக்கு கொடுத்தார். அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர். ஆனால் தந்தை ராஜு ரத்னகரம் கோபம் அடைந்து ஏன் இப்படி மாய மந்திர வேலை செய்கிறாய் என்று கூறி திட்டினார். அதற்கு சாய்பாபா நான் யார் தெரியுமா? சீரடி சாய்பாபாவின் மறு பிறவி என்று கூறினார்.  சத்ய சாய்பாபா பிறப்பதற்கு 8 ஆண்டுகளுக்கு முன்புதான் சீரடி சாய்பாபா இறந்திருந்தார். இந்த நிலையில் சத்யசாய்பாபா நான் தான் சீரடி சாய்பாபாவின் மறுபிறவி என்று அவர் கூறியதால் அனைவரும் வியப்படைந்தனர். இந்த தகவல் சுற்று வட்டார பகுதி முழுவதும் பரவியது. அதுவரை சத்ய நாராயணராஜுவாக இருந்த அவர் சத்ய சாய்பாபா என்று அழைக்கப்பட்டார்.   

தனது கை,கால்களில் இருந்தும் உடல்களில் இருந்தும் திடீரென பல்வேறு பொருட்களை எடுத்து காட்டி எல்லோரையும் அதிசயிக்க வைத்தார். இதனால் அவரது புகழ் தென்இந்தியா முழுவதும் பரவ தொடங்கியது. 1944-ம் ஆண்டு பக்தர்கள் அனைவரும் சேர்ந்து சாய்பாபாவுக்கு புட்டபர்த்தியில் கோயில் கட்டி கொடுத்தனர். அங்கு பக்தர்கள் குவிய தொடங்கினார்கள். இதனால் விரிவான கோவில் கட்டப்பட்டது. அதற்கு பிரசாந்தி நிலையம் என்று பெயர் சூட்டினார்கள். 100 ஏக்கர் நிலம் கோவிலுக்காக வாங்கப்பட்டது. 1948-ல் அங்கு சாய்பாபா ஆசிரமத்தை கட்டினார். 1954-ல் சிறு ஆஸ்பத்திரி ஒன்றை கட்டி இலவச மருத்துவ சிகிச்சை வழங்கினார்.  அவருடைய அருளாசி, அதிசயங்களால் கவரப்பட்டு இந்தியா முழுவதிலும், வெளிநாடுகளிலும் சாய் பாபாவுக்கு பக்தர்கள் உருவானார்கள். 

இந்தியா முழுவதும் சாய்பாபா சுற்றுப்பயணம் செய்தார். தனது உடலில் இருந்து லிங்கம், விபூதி, மோதிரம், கடிகாரம் என பொருட்களை வரவழைத்து பக்தர்களுக்கு கொடுத்தார். அவரை கடவுளின் அவதாரமாகவே பக்தர்கள் கருதினார்கள்.  இந்தியா முழுவதும் சத்ய சாய்பாபா ஆசிரமங்கள் உருவாயின. 137 நாடுகளில் அவருக்கு பக்தர்கள் உருவானார்கள். பக்தர்கள் ஏராளமான பணத்தை ஆசிரமத்தில் கொட்டினார்கள். இவற்றை பொது மக்களின் நல்ல காரியங்களுக்காக செலவிட்டார்.  குடிநீர், சுகாதாரம் போன்ற பணிகளுக்காக அதிக அளவில் செலவிட்டார். தற்போது உலகில் 114 நாடுகளில் 1200 இடங்களில் சத்ய சாய்பாபா மையங்கள் உள்ளன. சாய்பாபா ஆசிரமத்தின் சொத்து மதிப்பு ரூ.2 1/2 லட்சம் கோடிக்கு மேல் இருப்பதாக கூறப்படுகிறது.
 இவை மட்டுல்ல இன்னூம் கதை இருக்கிறது கேளுங்கள்

பாபா செய்யும் அற்புதங்களை வெறும் மேஜிக் என்று சொல்கின்றனர். சொல்பவர்களால் அந்த மேஜிக்கைச் செய்து காட்ட முடியுமா? சும்மா வெறும் கையில் விபூதி வரவழைப்பதல்ல. நோயை குணமாக்குவது, ஒரே நேரத்தில் இரு இடங்களில் தோன்றுவது, இறைக் காட்சி அளிப்பது என்பதை மாஜிக் என்று பிதற்றுபவர்களால் செய்து காட்ட முடியுமா? என்றும்,

ராமனின் அவதாரமாகத் தோன்றிய ஷிர்டி பாபாவின் மறுபிறவியே புட்டபர்த்தி பாபா என்பதும், அவர் ஸ்ரீ கிருஷ்ணரின் அருள் சக்தியோடு இவ்வுலகில் அவதரித்துள்ளார், மறுபிறவியில் அவர் பிரேமசாயி ஆக அவதரிப்பார் என்றும்.

தான் மறுபிறவியில் பிரேம சாயியாக மைசூருக்கு அருகில் உள்ள கிராமத்தில் அவதரிக்கப் போவதாக பாபா முன்னரே குறிப்பிடுள்ளது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்ல; பாபாவின் முற்பிறவி அன்னையான ஸ்ரீமதி ஈஸ்வராம்பா சில வருடங்களுக்கு முன்னால் மீண்டும் மறுபிறவி எடுத்துள்ளார். அவர் வயிற்றிலேயே பாபா மீண்டும் பிரேம சாயி ஆக அவதரிக்க இருக்கிறார். இதை பாபா குறிப்பிட்டுள்ளது மட்டுமல்ல; பிரேம சாயி அவதாரத்தில் அவர் க்ருஹஸ்தராகவும் தோன்ற இருக்கிறார்.
அதெல்லாம் சரிதாம்பா 96 வயதில் இறப்பேன் என்று சொன்ன பாபா ஏன் பத்தாண்டுகள் முன்னால் இறந்துட்டாறேன்னு கேட்டல் அவர் விரைவிலேயே பிரேம சாயி அவதாரம் எடுத்து மேலும் மக்கள் பணியை முழு வீச்சில் செய்யத்தான் பத்து வருஷம் அட்வான்ஸா போயிட்டதா சொல்றாங்களே இது நியாயமா சார்.

7 comments

 1. bandhu Says:
 2. //http://www.dinamalar.com/News_Detail.asp?Id=230655//
  பாபாவின் சுய சரிதையை போட்ட நீங்கள் அவர் செய்த சமூகப்பணிகளை மட்டும் போடவில்லை! இத்தனை சமூகப்பணிகளை யார் செய்திருந்தாலும் அவர் கடவுளே! மந்திரத்தில் மாங்காய் வரவழைக்க தேவையில்லை! இவ்வளவு செய்தவர் போனவுடன் 'அவர் சொன்னது நடக்கவில்லையே' என்று கேள்வி கேட்பது நகைப்புக்குரியது! ஒன்று மட்டும் நிச்சயம். கேள்விகேட்கும் நாமெல்லாம் மறைந்துவிடுவோம். கேள்விகளும் மறைந்துவிடும். அவர் செய்த சமூக சேவை செயல்கள் (கிருஷ்ணா தண்ணீர் சென்னைக்கு கொண்டு வந்தது போன்ற) என்றும் நிலைக்கும்!

   
 3. பிரியமுள்ள நண்பர் Bandhu வணக்கம். பின்னூட்டத்திற்கு நன்றி.
  சமூக சேவை செய்பவ்ர்கள் மந்திர தந்திரங்களை செய்வது ஏன் என்பதுதான் கேள்வி. மேஜிக் நிகழ்வுகளின் மூலம் மக்களை வசியம் செய்வது சரியா? (மந்திரத்தில் மாங்காய் வரவழைக்க தேவையில்லை என்றுதான் நானும் சொல்கிறேன்) அவரது சேவைகளை எல்லா ஊடகங்களும் முழுங்கும் போது நான்வேறா எழுத வேண்டும்.
  அதுசரி கிருஷ்ணா நீர் எப்ப சென்னைக்கு வந்தது.

   
 4. சாய் பாபா - ஒரு மாறுபட்ட அனுபவம்

  http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_25.html

   
 5. சிறப்புண்ணா. பாவி போல தெரியுது அதான் பகவான் சொன்ன 10 வருசத்தன் முன்னடியே முடிச்சுட்டு எமன் கூப்பிட்டுடாரு போல இருக்கு ஆமா இவரு என்ன தப்பு செஞ்சாரு இப்படி 10 வருசம் முன்னாடியே போக

   
 6. Unknown Says:
 7. நீ என்ன தொழில் வேண்டுமானாலும் செய், எப்படி வேண்டுமானாலும் பணம் ஈட்டு. அது பொருட்டே அல்ல. சமூகத்தில் நல்லவன் என்று பெயர் எடுக்க கோவிலுக்கு அள்ளிக்கொடு. ஏழைகளுக்கு கிள்ளிக்கொடு. நீ கடவுளாய் பார்க்கப்படுவாய். - ஒரு ஆங்கில நாவலின் வசனம். # கொஞ்ச வருசத்துக்கு முந்தி கடவுள ஒருத்தன் கத்திய யெடுத்துகிட்டு கொல்ல தொரதினப்ப வேட்டிய தூக்கி கட்டிகிட்டு ஓடினாரே அந்த கட‌வுள மறந்துருங்க‌

  சம்பத்

   
 8. நீ என்ன தொழில் வேண்டுமானாலும் செய், எப்படி வேண்டுமானாலும் பணம் ஈட்டு. அது பொருட்டே அல்ல. சமூகத்தில் நல்லவன் என்று பெயர் எடுக்க கோவிலுக்கு அள்ளிக்கொடு. ஏழைகளுக்கு கிள்ளிக்கொடு. நீ கடவுளாய் பார்க்கப்படுவாய். - ஒரு ஆங்கில நாவலின் வசனம். # கொஞ்ச வருசத்துக்கு முந்தி கடவுள ஒருத்தன் கத்திய யெடுத்துகிட்டு கொல்ல தொரதினப்ப வேட்டிய தூக்கி கட்டிகிட்டு ஓடினாரே அந்த கட‌வுள மறந்துருங்க‌

  சம்பத்

   
 9. நீ என்ன தொழில் வேண்டுமானாலும் செய், எப்படி வேண்டுமானாலும் பணம் ஈட்டு. அது பொருட்டே அல்ல. சமூகத்தில் நல்லவன் என்று பெயர் எடுக்க கோவிலுக்கு அள்ளிக்கொடு. ஏழைகளுக்கு கிள்ளிக்கொடு. நீ கடவுளாய் பார்க்கப்படுவாய். - ஒரு ஆங்கில நாவலின் வசனம். # கொஞ்ச வருசத்துக்கு முந்தி கடவுள ஒருத்தன் கத்திய யெடுத்துகிட்டு கொல்ல தொரதினப்ப வேட்டிய தூக்கி கட்டிகிட்டு ஓடினாரே அந்த கட‌வுள மறந்துருங்க‌

  சம்பத்

   
bookmark
bookmark
bookmark
bookmark
bookmark