ஆறுகாலுடைய எருமைக்கன்று, மூன்று கண்ணுடைய மாடு, ஆண்பெண் இல்லாது இடையில் இருக்கும் கோழி, இருப்பக்கம் தலையுள்ள பாம்பு, கிளைகளை உடைய பனைமரம், பறக்காகத காகம் போன்றவற்றை இயற்கை விசித்திரம் என்பார், இயற்க்கைக்கு இவை மாறுபட்டிருப்பதால். இவற்றை நம்புவது தவறல்ல, அறிவற்ற செயலுமல்ல, சில விசித்திரங்கள் நடப்பதுண்டு கனிமொழி கவிஞர் என்று நம்பப்படுவதை போல..?
சிவலிங்கம் சாட்சி சொல்வது, எலும்பு பெண்ணுருவாவது, பனை ஓலைத்துண்டு வெள்ளத்தை எதிர்த்துச்செல்வது, கருங்கல் பாறை மிதப்பது, நரி பரியாவது, அறுத்து கறி சமைத்த பிள்ளை உயிர் பெற்று எழுந்து வருவது, பன்றியும் அன்னமும் அடிமுடி தேடுவது, ஒருவர் முதுகில் பிறம்பால் அடித்தால் அனைவர் முதுகிலும் அடிவிழுவது, யானை கதறினதும் யானை வருவது, சிலந்தி பந்தல் போடுவது, சிவனரைப் பூஜித்த யானை சிவபாதம் அடைவது, ஆவிக்குறிய கூட்டங்கள் நடத்தி குருடர்கள் பார்வை பெருவது, முடவர்கள் நடப்பது என்பவை எல்லாம் நடக்காது என்பதால் யாரும் நம்புவதில்லை, ஆ.ராசா ஊழல் செய்யவில்லை என்பதை போன்று. இவற்றை எல்லாம் நம்ப முடியுமா? நம்பினால் இந்த உலகம்தான் ஒப்புமா?
இப்படிதான் நம்ப முடியாத கருத்துகளை சொல்கிறார் நமது பிரதமர். பத்திரிகை ஆசிரியர்களுடன் அவர் நடத்திய உரையில் ... அது அவர்களுடனான பேட்டி அல்ல என்பது பார்த்தவர்களுக்கு தெரியும். இருக்கட்டும் பேட்டி என்றே வைத்துக்கொள்வோம். அவர்களுடன் பேசிய போது நடந்தது எதுவும் தனக்கு தெரியாது அல்லது தனக்கு சம்பந்தமில்லை என்கிறார். தன்னை நல்லவன் என்று நிருபனம் செய்வதில் முனைப்பாக இருந்ததாலேயே அம்பலப்பட்டு போனார். அவருக்கு எதுவுமே தெரியாமல் நடந்தால் பிரதமர் என்று அவரை நாம் அழைப்பது நமக்கு கேவலம் இல்லையா? அனைத்து அதிகாரங்களும் பிரதமருக்கு இருப்பதாக இதுநாள் வரை நம்பப்பட்டது, இப்போதுதான் தெரிகிறது இந்நாட்டின் ஜனாதிபதியை போல பிரதமர் பதவியும் வெறும் தலையாடி பொம்மை வேலை என.
ஆதர்ஷ், காமன்வெல்த், ஸ்பெக்ட்ரம், இஸ்ரோ, என நாளுக்கு நாள் கொள்ளையடிக்கும் தொகை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது மிஸ்டர் மன்மோகன். எதுவுமே தெரியாது என நிங்கள் சொல்வது கடைந்தெடுத்த பொய் என அனைவருக்கும் தெரியும். இதுவரை தேர்தலில் நிற்காமலேயே தாங்கள் வெற்றியடைந்தது எப்படியென இப்போதுதான் தெரிகிறது. எலும்புகளுக்கு அலைந்தாடும் பிராணிகள் எப்போதாவது கோபப்படும் பிரதமரே .. ஆனால் நீங்கள் ??
எங்கள் தேசத்தில் காவி இருள் படர்ந்தபோது அதை நாங்கள் விரட்டினோம் எப்படியெனில் அது மதவெறியை கொண்டுவந்த காரணத்தால்..... இப்போது கள்ளமவுன நிழல் நல்ல மனிதர் என்ற போர்வையில் கவிழ்ந்திருக்கிறது என்ன செய்வது ? உலகத்தில் பலநாடுகளில் ஆட்சியாளர்கள் ஓடி ஒளிவதை பார்த்துக்கொண்டுதானே இருக்கிறிர்கள். நல்லது.
வெட்கமாய் இருக்கிறது பிரதமரே உங்களுக்கு எதுவும் தெரியாமல் இருப்பது!?!?
பாரதப்பிரதமர்....ர்..ர்...ர்..ர்..... படம் பிரமாதம். பதிவு அதைவிடப் பிரமாதம். பூம்பூம்மாட்டின் ஒவ்வொரு தலையாட்டலுக்கும் ஒவ்வொரு அர்த்தம் சொல்வான் வித்தைக்காரன். அவனையே அசத்திவிட்டார் நம் அசகாய சூரர். ஆனாலும் ரமேசு ' நாட்டின் மானம் காக்கவேண்டும்.விஷயத்தை வெளியே சொல்லாதீங்கோ' என்று சொல்லியுள்ள அவரின் தேசப்பற்றை பாருங்க தலைவா! தொடரட்டும் உமது பணி. வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குநன்றி தோழர்.. உங்களது பின்னூட்டத்திற்கு நன்றி
பதிலளிநீக்குஎப்படி இருக்கிங்க ரமேஷ்? இன்னும் கொஞ்சம் விரிவாகவும் ஆழ்ந்தும் எழுதியிருக்கலாமோ இந்த பதிவை...?
பதிலளிநீக்குஉண்மைத்தான் இன்னும் ஆழமாக எழுதி இருக்கலாம்தான்.. கொஞ்சம் அவசரம். இனி இப்படி நடக்காது. நன்றி உங்கள் பின்னுட்டத்திற்கு. நிறமில்லா சிந்தனை.. உங்கள் பெயர் தெரிந்துவிட்டது. நலம் தாங்கள் நலமா. இவ்வார புதிய தலைமுறையில் என்னுடைய பேட்டி வந்துள்ளது. அதே புகைப்படத்துடன். நன்றி. சந்திப்போம்.
பதிலளிநீக்கு