வெள்ளி, 4 பிப்ரவரி, 2011

"கைப்புள்ள கெலப்புடா வண்டிய" - மானமிகு. கி.வீரமணி

 அய்யாவ கண்டுபிடி பார்க்கலாம் .......
தமிழகத்தில் உள்ள ஒரே மானமிகு தலைவரும், திடாவிட கழக பி.லிட் கம்பெனியின் உரிமையாளரும், பெரியாரை மொத்தக் குத்தகைக்கு எடுத்திருப்பவருமான அய்யா கி.வீரமணி அவர்கள்  சிலப்பதிகார நாயகன் கோவலனுடன் ஊழல் நாயகன் ஆ.ராசாவுடன் இணைத்து பேசியதை ஒருவேளை கண்ணகி கேட்டிருந்தால்???? பாண்டிய மன்னனுக்கு முன் காலிலிருந்து சிலம்பை கழற்றியவள் மானமிகு அய்யாவுக்கு எதிராக எதை கழற்றி இருப்பாள் என்பது நமக்கு தேவையற்ற விவாதம் என்பதால் அய்யாவின் பேச்சின் சாரத்தை மட்டும் பார்க்கலாம்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் திமுகவின் சார்பில் தகவல் தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த ஆ.ராசா, தனது ஆட்சிக் காலத்தில் செய்த மிகப்பெரிய சாதனை, ஏழை - எளிய மக்கள் குறைந்த கட்டணத்தில் (20, 30 காசு) தொலைப்பேசியில் பேசிடும் வாய்ப்பை ஏற்படுத்தி வரலாறு படைத்ததாகும்.

60 விழுக்காடு அலைக்கற்றைகள் இராணுவத்தால் பயன்படுத்தப்படாமல் இருந்தது அறிந்து, அவைகளைப் பெற்று வெகுஜனப் பயன்பாட்டிற்குப் பயன்படும்படிச் செய்தார்.செய்யாத குற்றத்திற்காகப் பழி சுமப்பது, குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுவது தமிழ்நாட்டிற்குப் புதிதல்ல. காவிய காலந்தொட்டே கண்ட காட்சி. குற்றம் புரியாத கோவலனைத் தண்டித்த சிலப்பதிகார காவியத்தைக் கண்ட தமிழ்நாடு, மத்திய ஆட்சியின் சிறப்பதிகாரத்தின் கீழ் குற்றவாளியாக்கப்பட்டுள்ள ராசாவையும் பார்க்கிறது.

இதுபோன்ற அரசியல் நடவடிக்கைகளால் கரைந்துவிட திமுக ஒன்றும் மெழுகு பொம்மை அல்ல. தக்கக்கட்டி போன்றது. நெருப்பில் போடப்போட அது தகத்தகாய ஒளியோடு மெருகேறி நிற்கும். காரணம், அதன் ஆற்றல்மிகு தலைவர் கலைஞர், அய்யா - அண்ணா வழியில் வந்த வைர நெஞ்சம் பாய்ந்தவர். அதன் தொண்டர்கள் கொள்கை உணர்வைக் கட்டுப்பாட்டோடு காக்கும் தோழர்கள். அது இனி விஸ்வரூபம் எடுக்கும் என்பதில் உறுதி. அண்ணா நினைவு நாளில் அது உறுதி.
ராசா வகிக்கும் கொள்ளைக பரப்பு செயலாளர் பதவியிலிருந்து அவர் ராஜினாமா செய்ததும். அதை திமுக பொதுக்குழு நிராகரித்தும் பொதுமக்கள் அறிந்ததே. அந்த இடத்திற்கு தனது விண்ணப்பத்தை இந்த அறிக்கை மூலமாக மானமிகு அய்யா வெளியிட்டு  இருப்பதாக அரசியல் வட்டாரங்கள்  தெரிவிக்கின்றன. இந்த ஆட்சியில் மட்டுமல்ல எந்த ஆட்சி வந்தாலும் உடனடியாக கைப்புள்ள கிளப்புடா வண்டிய என்று அவர்களுக்கு ஆதரவளிப்பது இவருக்கு கைவந்த கலை. எவ்வித போட்டியும் இல்லாமல் தமிழாக மக்களை சிரிக்க வைத்துக்கொண்டிருக்கும் வடிவேலுவுக்கு நமது மானமிகு அய்யா போட்டியாக வந்துவிடுவாரோ என்ற கவலை வடிவேலுவின் சகாக்களுக்கு வந்துள்ளதுதான் இப்போதைய பிரச்சனை.  
"பார்ப்போம் இன்னும் நடக்கும் வேடிக்கைகளை "

9 கருத்துகள்:

  1. // தமிழகத்தில் உள்ள ஒரே மானமிகு தலைவரும், திடாவிட கழக பி.லிட் கம்பெனியின் உரிமையாளரும், பெரியாரை மொத்தக் குத்தகைக்கு எடுத்திருப்பவருமான அய்யா கி.வீரமணி அவர்கள் சிலப்பதிகார நாயகன் கோவலனுடன் ஊழல் நாயகன் ஆ.ராசாவுடன் இணைத்து பேசியதை ஒருவேளை கண்ணகி கேட்டிருந்தால்???? //


    அதன் கண்ணகி போய் சேர்ந்துவிட்டால்.

    கி.வீரமணி இவன் ஒரு பச்சோந்தி.இவன இப்ப யார் மதிக்கறா? விடுங்க பாஸ் இவன் ஒரு ஆளு

    பதிலளிநீக்கு
  2. வீர மணி போன்றவர்களுக்காக ஒரு பதிவா? வேஸ்ட். !!

    பதிலளிநீக்கு
  3. வடிவேலுவின் ஒரு வசனத்த நீங்க சொல்லிட்டீங்க
    "கைப்புள்ள கெலப்புடா வண்டிய"

    வடிவேலுவின் அடுத்த வசனத்த மக்களே நெனச்சிக்குவாங்க
    " இன்னுமா இந்த ஊரு நம்மள நம்புது"

    பதிலளிநீக்கு
  4. அவர் மானமிகு வீரமணி!அல்ல கணம் பொருந்திய பேரமணி////////////

    பதிலளிநீக்கு
  5. அவர் மானமிகு வீரமணி!அல்ல கணம் பொருந்திய பேரமணி////////////

    பதிலளிநீக்கு
  6. ம்ம்... இவய்ங்க நம்ம பொழப்புல மண்ணள்ளி போட்டுவாய்ங்களோ - மானமிகு (?) வீரமணி,

    பதிலளிநீக்கு
  7. /////////கி.வீரமணி இவன் ஒரு பச்சோந்தி.இவன இப்ப யார் மதிக்கறா? விடுங்க பாஸ் இவன் ஒரு ஆளு////////
    தமிழ்மகன் மிகவும் சரியாக சொன்னிர்கள் உங்கள் பின்னுட்டத்திற்குநன்றி

    பதிலளிநீக்கு
  8. பின்னுட்டம் அனுப்பிய
    கக்கு மாணிக்கம், நிலா, குமார், சிதம்பரம் சாதிக், காம் நந்து அனைவருக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  9. Boss Nammma Kani(namma kanni) Ippo Arya voda link ayidicham. Any thoughts on that

    பதிலளிநீக்கு