செவ்வாய், 4 ஜனவரி, 2011

தி.மு.க.,வுக்கு தேர்தல் நிதியாக ஒரேநாளில் 44 லட்சம்- ஆ.ராசா கவலை


தி.மு.க.,உயர்மட்டக்குழு தலைவர்கள் இன்று (04 - 01- 2011 )அறிவாலயத்தில் அவசரமாக கூடி விவாதித்தனர். தேர்தல் பணி மற்றும் கூட்டணி வியூகங்கள் குறித்து ஆலோசிக்க வரும் பிப். 3 ம் தேதி தி.மு.க., பொதுக்குழு கூட்டுவது என தீர்மானிக்கப்பட்டது.

கட்சி தலைவர் கருணாநிதி தலைமையில் நடந்த ஆலோசனையில் மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர். தொடர்ந்து தேர்தல் நிதி திரட்டுவது குறித்து முடிவு எடுக்கப்பட்டது. இதன்படி அனைத்து மாவட்ட செயலர்களும் இந்த பணியை துவக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதனையடுத்து முதல்நாளில் முதல்வர் கருணாநிதி ரூ.11 லட்சம் வழங்கி நிதி பெறும் முயற்சியை துவக்கி வைத்தார்.

தொடர்ந்து பொதுசெயலர் அன்பழகன் ரூ. ஒரு லட்சமும், துணை முதல்வர் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 250, அமைச்சர்கள் ஆற்காடு வீராச்சாமி ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 500 , துரைமுருகன் ஒரு லட்சத்து 25 ஆயிரம், வீரபாண்டி ஆறுமுகம் 5லட்சத்து 10 ஆயிரம், கே.என்நேரு, பன்னீர்செல்வம், சுரேஷ்ராஜன், மற்றும் சுப்பு லட்சுமி ஜெகதீசன், கல்யாணசுந்தரம், டி.கே.எஸ்., இளங்கோவன், கண்ணப்பன் உள்பட பலர் நிதி வழங்கினர். மொத்தம் ஒரே நாளில் 44 லட்சத்து 17 ஆயிரத்து 250 தேர்தல் நிதியாக கிடைத்தது.
மேற்கண்டவை இன்றைய செய்தி ....
செய்திக்கு பின்னால் சேர்க்கவேண்டியது??
இவைகள் நடக்கும் போது இந்த தகவல் முன்னாள் தகவல் தொழில்நுட்ப மந்திரியான  ராசாவுக்கு தெரியாது என்ற காரணத்தினால் இந்த அளவுடன் இன்றைய நிதி வசூல் முடிந்ததாக நம்பப்படுகிறது.
இந்த நிதிவசூல் தனக்கும் தனது கட்சிக்கும் பெரும் அவமானத்தை ஏற்படுத்து என்பதால் அவர் மிகவும் கவலை அடைந்தார். கோடிகணக்கில் தான் கட்சிக்கு புகழை தேடித்தரும் போது இந்த வசூல் கணக்கு தன்னை மிகவும் வேதனைக்குள்ளாக்குவதாக தனக்கு நெருக்கமான வட்டாரங்களிடம் புலம்பி உள்ளார் .
தங்களிடம் உள்ள கருப்பு பணங்களை தேர்தல் சமயத்தில் வெள்ளையாக மாற்ற இப்படிப்பட்ட நாடகங்கள் நடத்த வேண்டும் எனினும் இனி திமுக கட்சி லட்சங்களில் பேசினால் மக்கள் மத்தியில் மதிப்பும் நம்பிக்கையும் வராது என அவர் கருதுவது கவனிக்கத்தக்கது.

அண்ணன் ராசாவுக்கு ஏதோ நம்மால முடிந்த உதவி !?

7 கருத்துகள்:

  1. அடடா, சுடச்சுட போட்டுத் தாக்குறது இது தானா? நல்லா இருக்குங்க.

    பதிலளிநீக்கு
  2. எங்களை விடவும் யாராவது பணக்காரராவது நடக்கிற காரியமா?ராசா,ஆழம் தெரியாமல் கால வுட்டுட்டியேப்பா????????,

    பதிலளிநீக்கு
  3. ம்ம்ம்ம்ம்ம்..............க‌ல‌க்கிடிங்க‌

    பதிலளிநீக்கு
  4. நிதிவசூல் தனக்கும் தனது கட்சிக்கும் பெரும் அவமானத்தை ஏற்படுத்து என்பதால் அவர் மிகவும் கவலை அடைந்தார். கோடிகணக்கில் தான் கட்சிக்கு புகழை தேடித்தரும் போது இந்த வசூல் கணக்கு தன்னை மிகவும் வேதனைக்குள்ளாக்குவதாக தனக்கு நெருக்கமான வட்டாரங்களிடம் புலம்பி உள்ளார் .

    பதிலளிநீக்கு
  5. பின்னூட்டம் அனுப்பிய மதுராஜ், ராஜதுரை, யோகா, புரட்சியாளன், விடுதலை அனைத்து நண்பர்களுக்கும் நன்றி..

    பதிலளிநீக்கு
  6. எந்த டிவி, ரேடியோவிலும் வராத செய்தி. சிறப்பு செய்தி

    பதிலளிநீக்கு