தமிழக முதல்வர் கருணாநிதிக்கு "நானிலம் போற்றும் நல்லிணக்க நாயகர்" என்ற விருதை தாம்பரத்தில் டிசம்பர் 11ஆம் தேதி நடைபெறும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாட்டில் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள இஸ்லாமி மக்களை இன்றும் ஏமாற்று வேலைகளால் கலைஞர் ஏமாற்றி வருவது யாரும் அறியாதது அல்ல. விருதுகள் அதை கொடுக்கும் பாராட்டு விழாக்கள் இல்லை எனில் மாத இறுதியில் துக்கம் இல்லாமல் தவிக்கும் தலைவர் கலைஞர் தானே தனக்கு விருது கொடுக்கும் அளவு சென்று விடுவார்.
அவருக்கு ஜால்ரா அடிக்கும் கும்பல் அடிக்கின்ற லூட்டிகள் தமிழகம் முழுவதும் சிரிப்பையும் அருவருப்பையும் ஏற்படுத்தினாலும் அவர்களுக்கு அதுகுறித்து கவலை இல்லை. வாழும் சமத்துவ பெரியார் என்று திருமா கொடுத்த பட்டத்தை உவகையுடன் பெற்று மகிழ்ந்தவர்தானே இவர். ( அதுசரி இந்த திருமாவுக்கும் யாருக்காவது பட்டம் கொடுக்கலைனா துக்கம் வராதோ ? தமிழ் குடி தாங்கி என்று ராமதாசுக்கு பட்டம் கொடுத்தவர் அல்லவா இவர் ) பெரியார் கொள்கைகளை குழிதோண்டி புதைத்துவிட்டு இந்த விருதையும் பெற்றுக்கொண்டார். பிறகு அம்பேத்கர் சுடர் விருதையும் பெற்றுக்கொண்டார். அதாவது தலித் மக்களுக்கு சேர வேண்டிய சிறப்பு நிதியை கொடுக்காமல் ஏமாற்றியதற்காக இந்த விருதை அவர் கொடுக்க இவர் பெற்றுக்கொண்டார் போல ... சரி போகட்டும் இப்போது நமக்கு வருகின்ற கேள்வி இதுதான்.
இஸ்லாமிய அமைப்பு கொடுக்கும் "நானிலம் போற்றும் நல்லிணக்க நாயகர்" என்ற விருது அவரின் இஸ்லாமிய விரோத நடவடிக்கை தெரிந்தே கொடுக்கப்படுகிறதா என்பதுதான். கோவையில் ஆருண்பாஷா உள்ளிட்ட இஸ்லாமிய இளைஞர்களுக்கு ஏற்பட்ட கதியை இவர்கள் அறிவார்களா? வெடிகுண்டு வைத்திருந்ததாக பொய்வழக்கு புனையப்பட்டு சிறைக்குள் அடைக்கப்பட்ட அந்த இளைஞர்களின் வாழ்க்கையில் அந்த நேரத்தில் அடைந்த துன்பத்தை வார்த்தைகளால் வடிக்க முடியாது. இஸ்லாமியர்கள் என்ற காரணத்தினால் அந்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டது கலைஞருக்கு தெரியாமல் நடந்ததா? இத்தனைக்கும் காவல்துறையினர் பொய்யான குற்றச்சாட்டால் அவர்கள் பாதிக்கப்பட்டதை சி.பி.சி.ஐ.டி கண்டுபிடித்துக் சொல்லியும் இவர் நடவடிக்கை எடுக்காததை அறிந்தே இந்த விருது கொடுக்கப்படுகிறதா?
ஒரு மாதகால சிறைவாசம், விசாரணையில் பட்ட மன உலைச்சல். அந்த ஐந்து இஸ்லாமிய குடும்பங்களும் அடைந்த வேதனை. சமூகத்தில் பட்ட அவமானங்கள். குண்டு மீண்டும் வெடிக்குமோ என்ற பீதி. அதனால் அதிர்ந்து போன அப்பாவி மக்கள். இதற்கெல்லாம் என்ன நடவடிக்கை? இந்த காயத்திற்கு மருந்திடுவது யார்? சி.பி.சி.ஐ.டி அறிக்கை அளித்து இரண்டு மூன்று ஆண்டுகளாகியும் பொய்யான குற்றச்சாட்டு புனைந்து பீதியை உண்டாக்கிய போலீஸ் அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. எந்த தண்டனையுமின்றி வெடிகுண்டு தயாரிப்பாளர் ரத்தினசபாபதி அதே கோவையில் மது விலக்கு பிரிவு கூடுதல் கண்காணிப்பாளராக தொடர்கிறார். இந்த சம்பவம் நடந்தது கலைஞர் ஆட்சியில்தான். காவல்துறையின் மீது குற்றம்சாட்டப்பட்டதும் அவர் ஆட்சியில்தான். சிறுபான்மையினர் நலன்காப்பதாக தம்பட்டம் அடித்துக்கொள்ளும் கலைஞர் இதுவரை மவுனம் சாதிப்பது எதனால். மைனாரிட்டி திமுக என அதிமுக தலைவி பேசியதை பார்த்து கொதித்தெழுந்து கோவையில் பேசிய முதல்வர் “ஆமாம் நாங்கள் மைனாரிட்டிதான் அதாவது மைனாரிட்டியை ஆதரிக்கும் மைனாரிட்டிகளின் ஆட்சி” என்று வார்த்தை ஜாலங்களை வீசுகிறார். வார்த்தைகளை அடுக்கி விளையாடும் எளிதான காரியமல்ல இது. குஜராத்தைப் போல அதிகாரத்தின் அடுக்குகளில் மறைந்து தனது கோரமுகத்தை இந்துத்துவா நிறுவுவதை எதிர்த்து சமர் புரிய வேண்டிய தருணம் இது. பெரியாரின் சுண்டு விரலை பிடித்து வந்ததாக தம்பட்டம் அடிப்பவர் என்ன செய்ய போகிறார்?
இந்த சம்பவங்களை முழுமையாக படிக்க இங்கே சொடுக்கவும்
இருக்கட்டும் இப்படியாக பட்டங்களை கொடுத்துக்கொண்டே இருங்கள் வரலாறு எல்லாவற்றையும் குறித்துவைத்து பதில் கொடுக்கும் என்பதை மட்டும் மறந்துவிடாதிர்கள் நண்பர்களே.
நானும் பதிவு போட்டிருக்கிறேன்...
பதிலளிநீக்குhttp://ram-all.blogspot.com/2010/12/blog-post_13.html