வியாழன், 4 நவம்பர், 2010

ஒபாமா வருகையும் 10 கேள்விகளும்!

அமெரிக்காவின்  450 ஆண்டு வரலாற்றில் ஒரு கருப்பினத்தை சார்ந்த மனிதனான ஒபாமா அதிபரானது வாழ்த்துக்குறியது. நிறம் மாற்றம் மட்டும் மாற்றத்தை தராது. என்பதை அவரது கொள்கை நிருபித்துள்ளது. மற்ற நாடுகளை கொள்ளையடிக்கும் அமெரிக்க கொள்கையைத்தான் இவரும் கடைபிடிக்கிறார். உலக மக்களை கொன்று  இரத்த  சகதியின் மீது அமெரிக்காவை கட்டி எழுப்புகிறார் எனவே  மிஸ்டர் ஒபாமா வருக வருக என்று வரவேற்க முடியவில்லை. மற்றொன்று அவரது வருகையை முன்வைத்து இங்கு நடக்கும் ஏற்பாடு இந்தியர்களை அவமானம் கொள்ளச்செய்கிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில்  இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சராக இருந்த  ஜார்ஜ் பெர்னாண்டஸ் இருந்த சமயம் அவர் அமெரிக்கா சென்றார். அப்படி அங்கு சென்ற அவரை அமெரிக்க விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தினர். அவர் இந்தியாவின் அதாவது அமெரிக்காவை போல நான்கு மடங்கு ஜனத்தொகை கொண்ட ஒரு நாட்டின் அமைச்சர் என தெரிந்தே நிறுத்தினர். சோதனை என்ற பெயரில் அவரது உடைகளை  மொத்தமாய் உருவி கேவலப்படுத்தினார். அனைத்து பத்திரிக்கைகளும் பக்கம் பக்கமாய் எழுதி ஆதங்கப்பட்டனர். அனால் பி.ஜே.பி யின் அமெரிக்க அடிவருடி குணமும் அமெரிக்க பாசமும்  ஒரு வார்த்தையையும் இதை கண்டித்து பேச அனுமதிக்கவில்லை. அப்போது காங்கிரஸ் கட்சியும் இந்த கேவலத்தை கண்டிக்கவில்லை. இடதுசாரிகள் மட்டுமே கண்டித்தனர். பல இடங்களில் அமெரிக்காவை எதிர்த்து போராட்டங்களை நடத்தினர். 
அதன் பிறகு இந்திய அரசு பலமுறை அமெரிக்க பயணத்தை நடத்தி உள்ளது. அப்போதெல்லாம் இங்கிருந்து சில அதிகாரிகள் சென்று பிரதமரின்  பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிப்பார்கள். ஆனால் அமெரிக்க அதிபர்கள் இங்கு வந்தால் அடிக்கும் கொட்டத்திற்கு அளவில்லை. ஏற்கனவே கிளிண்டன் வந்தபோது நடந்ததை விட ஒபாமாவின் வருகை இந்தியாவை மிகவும் கேவலப்படுத்துவதாக அமைந்துள்ளது.
முதலில் செய்தியை படிக்கலாம்!
அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்தியா வருவதை முன்னிட்டு அவருடைய அதிநவீன `சூப்பர்' காரும் இந்தியா வருகிறது. ரசாயன, உயிரி தாக்குதல் மற்றும் வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்தாலும் பாதுகாப்பாக இருக்கும் அந்த காருக்குள் அணுகுண்டு போட உத்தரவிடும் `விசை' இடம் பெற்றுள்ளது.
7 டன் எடை; அமெரிக்க அதிபர் ஒபாமா, வருகிற சனிக்கிழமையன்று இந்தியா வருகிறார். இந்தியாவில் 4 நாட்கள் தங்கி இருக்கும் அவர், மும்பை மற்றும் டெல்லியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். எனவே, அவர் பயணம் செய்வதற்காக அமெரிக்க அதிபரின் பிரத்தியேக கார் இந்தியா வருகிறது. மொத்தம் ஏழு டன் (7 ஆயிரம் கிலோ) எடை கொண்டது, அந்த கார்.

ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தால் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள அந்த கார், `காடிலாக் ஒன்' என அழைக்கப்படுகிறது. மிக, மிக அதிக பாதுகாப்பு ஏற்பாடுகளை கொண்டதாக அந்த கார் உள்ளது. ரசாயன தாக்குதல், உயிரி தாக்குதல் மற்றும் வெடிகுண்டு தாக்குதல் என எந்தவித தாக்குதலும் அந்த காரை ஒன்றும் செய்ய முடியாது.
அணுகுண்டு போட உத்தரவிடலாம்; காரின் மேற்புறத்தில் ராணுவ தரத்திலான பாதுகாப்பு ஸ்டீல் கவசங்கள் பொருத்தப்பட்டுள்ளன. எனவே, துப்பாக்கிக் குண்டுகளும் காரை துளைக்காது. கார் ஜன்னல் கண்ணாடிகள் ஒவ்வொன்றும் 5 அங்குலம் தடிமன் கொண்டவை. மேலும், உடைக்க முடியாத தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டவை ஆகும். இந்த பிரபஞ்சத்திலேயே உச்சகட்ட பாதுகாப்பு வசதிகள் கொண்ட ஒரே சூப்பர் வாகனம், அமெரிக்க அதிபரின் கார் என்றால் மிகையாகாது.
அந்த காருக்குள் இருந்தபடியே அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகை, துணை ஜனாதிபதி மற்றும் அமெரிக்க ராணுவ தலைமை தளபதி ஆகியோரை எந்த நேரமும் ஒபாமா தொடர்பு கொள்ளும் வகையில் அதிநவீன தொலைத் தொடர்பு வசதிகளும் பொருத்தப்பட்டுள்ளன. அதுமட்டுமல்ல, காருக்குள் இருந்தபடியே அணு ஆயுத தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் உத்தரவிடும் வகையில் `சிறப்பு பட்டன்' (விசை) காருக்குள் உள்ளது.
40 விமானங்கள், 6 கார்கள்
  ; இந்தியாவுக்கு அதிபர் ஒபாமா வருவதால் இந்த காரும் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. டெல்லி நகரத் தெருக்களில் இது வலம் வரும். இது தவிர, ஒபாமா வருகையை முன்னிட்டு அமெரிக்காவில் இருந்து 40 விமானங்கள், 6 ஆயுதம் தாங்கிய கார்கள் ஆகியவையும் வருகின்றன. அமெரிக்க உளவுப் பிரிவு சார்பாக மும்பை மற்றும் டெல்லி ஆகிய நகரங்களில் இரண்டு சிறப்பு முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன.  இந்தியாவுக்குள் அதிபர் ஒபாமா செல்லும் ஒவ்வொரு அங்குல இடத்தையும் அந்த உளவுப் பிரிவினர் உன்னிப்பாக கண்காணிப்பார்கள். ஒபாமா மற்றும் அவருடைய மனைவி செல்வதற்காக 3 கடற்படை ஹெலிகாப்டர்களும் நவீனமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும், ஒபாமா பாதுகாப்பு பணிகளில் 30 மோப்ப நாய்களும் ஈடுபடுத்தப்படுகின்றன.
மாநிலங்களுக்கு எச்சரிக்கை: இந்தியாவில் ஒபாமா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என உளவுத் துறை உஷார் படுத்தியுள்ளது. எனவே, மராட்டியம், டெல்லி மற்றும் காஷ்மீர் மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சார்பாக எச்சரிக்கை அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது. தீபாவளி விழாக்காலம் என்பதால் டெல்லியில் உள்ள முக்கிய சந்தைகளில் ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தற்போது, ஒபாமா வருகையும் இருப்பதால் கூடுதலாக 10 சந்தைகளில் கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், அனைத்து மாநில அரசுகள் மற்றும் ïனியன் பிரதேச அரசுகளுக்கும் தீவிரவாத தாக்குதல் தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பை மத்திய அரசு அனுப்பியுள்ளது.

இப்போது சொல்லுங்கள் ............
1 இந்திய ஒரு ஜனநாயக நாடு இங்கு ஒரு அரசு உள்ளது. இங்கு ராணுவம், உளவுதுறை, காவல்துறை உள்ளிட்ட ஏற்பாடுகள் உள்ளது அப்படிதானே? 
2 உலகின் மிகச்சிறந்த ராணுவத்தை கொண்ட நாடு என சுதந்திர தினத்திலும், குடியரசு தினத்திலும் நமது பிரதமர் பேசுவது சும்மாவா? 
3 ஒரு மாற்று நாட்டு அதிபரை சுற்றுபிரயாணம்  செய்யும் வரை  நம்மால் பாதுகாப்பாக வைத்க்திருக்க முடியும்தானே?
4 ஒருவேளை அமெரிக்கா செல்லும் போது நமது பிரதமர் அல்லது குடியரசு தலைவர் இத்தகைய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய அமெரிக்காக அனுமதிக்குமா? 
5 ஈரான் என்கிற நாடு அணுகுண்டு செய்வதாக செய்தியை கேள்விப்பட்டாலே கொதிக்கும் அமெரிக்க அதிபர் அவருடைய  கையில் காருக்குள் இருந்தபடியே அணு ஆயுத தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் உத்தரவிடும் வகையில் `சிறப்பு பட்டன்' (விசை)யுடன் வருவது சரியா?
6   அமெரிக்காவில் இருந்து 40 விமானங்கள், 6 ஆயுதம் தாங்கிய கார்கள் ஆகியவையும் வருகின்றன. ஒபாமா மற்றும் அவருடைய மனைவி செல்வதற்காக 3 கடற்படை ஹெலிகாப்டர்களும் நவீனமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இவைகளை ஏற்பாடு செய்ய முடியாத வக்கற்ற நாடா நம்முடையது ?
7 அமெரிக்காவிலிருந்து  பாதுகாப்பு  பணிகளில் 30 மோப்ப நாய்களும் ஈடுபடுத்தப்படுகின்றன. போங்கடாங்.. என்று சொல்லும்  அளவு இது இல்லையா? ஆட்சியாளர்களுக்கு பிரச்சனையில்லை. நமது நாட்டு மோப்ப நாய்கள் இதை மன்னிக்குமா?
8 அமெரிக்க உளவுப் பிரிவு சார்பாக மும்பை மற்றும் டெல்லி ஆகிய நகரங்களில் இரண்டு சிறப்பு முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன.  இந்தியாவுக்குள் அதிபர் ஒபாமா செல்லும் ஒவ்வொரு அங்குல இடத்தையும் அந்த உளவுப் பிரிவினர் உன்னிப்பாக கண்காணிப்பார்கள். அப்படி எனில் நமது உளவுப்பிரிவுக்கு அன்று விடுமுறையா?
9 ஒருவேளை இந்தியா போட்ட அணுஆயுத ஒப்பந்தத்தில் இதுவும் ஒரு ஷரத்தா?
10 இந்தியா இவர்களை தலைமை இடத்தில் வைத்துக்கொண்டு நாங்க வல்லரசு ஆவுறோம் என்று ஓலமிட்டால்  உலகம் சிரிக்காதா?


15 கருத்துகள்:

  1. yes , this question must be forward to Indian who talk about America the great

    பதிலளிநீக்கு
  2. கேள்விகளுக்கு முன் ஒரு முன்னோட்டம் ... அதன் பின் வைக்கப்படும் கேள்விகளுக்கு எந்த பதிலும் அளிக்க முடியுமா? தெரியவில்லை.. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. இதில், அமெரிக்கா செய்வது எதுவும் தவறில்லை, நமக்கும் அமெரிக்காவில் இதே போல் செய்யும் உரிமை இருந்தால்.

    பதிலளிநீக்கு
  4. உண்மையிலேயே அமெரிக்காவிடம் உள்ள ராணுவ தொழில்நுட்பம், வாகன தொழில் நுட்பம் நம்மிடம் இன்னும் இல்லை. நாம் அதை நோக்கி முயன்று கொண்டிருக்கிறோம்.

    சமீபத்தில் ஆந்திராவில் முதல்வர் பயணம் செய்த ஹெலிகாப்டரை அடர்ந்த காட்டுக்குள் தேடும் தொழில் நுட்பம் கூட நம்மிடம் இன்னும் வர வில்லை.

    ஒபாமாவின் பயணம் நமது வேண்டுகோளால் ஏற்பட்டது. எனவே அமரிக்கா சொல்படி நாம் நடக்க/கேட்க வேண்டிய நிலையில் உள்ளோம்.

    பத்து ஆண்டுகளுக்கு பின்பு வேண்டுமானால் நம் நிலைமை மாறலாம்.

    பதிலளிநீக்கு
  5. Indian Govt(ministers) Successful Projects 2G, Commonwealth Games, Adharsh Appartments. Obama & American Govt Knows this success. So they have a strong confident for us.

    பதிலளிநீக்கு
  6. American Govt knows one important Person also. That Person Name Anderson. Then how he escape from India after his technical work.

    பதிலளிநீக்கு
  7. தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி சரவணன்

    பதிலளிநீக்கு
  8. தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி மதுரை சரவணன்

    பதிலளிநீக்கு
  9. தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி bandhu....
    ஆனால் எந்த காலத்திலும் இப்படி கொள்கை கொண்ட ஒரு நாட்டால் அமெரிக்காவில் அப்படி செய்ய முடியாது

    பதிலளிநீக்கு
  10. தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி தோழர் ராம்ஜி....
    ""'ஒபாமாவின் பயணம் நமது வேண்டுகோளால் ஏற்பட்டது. எனவே அமரிக்கா சொல்படி நாம் நடக்க/கேட்க வேண்டிய நிலையில் உள்ளோம். பத்து ஆண்டுகளுக்கு பின்பு வேண்டுமானால் நம் நிலைமை மாறலாம்."""
    அப்படியெனில் அவர்கள் சொல்வதை எல்லாம் நாம் கேட்பது நமது இறயாண்மையை பாதிக்காதா? இன்னும் பத்து ஆண்டுகள் கழிந்தாலும் கொள்கை மாறாமல் நிலமை மாறாது எண கருதுகிறேன். சரிதானே?

    பதிலளிநீக்கு
  11. தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி பகத்...

    பதிலளிநீக்கு
  12. தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி பகத்...

    பதிலளிநீக்கு
  13. விடுங்கள் ரமேஷ், "பாரத நாடு பழம் பெரும் நாடு நீரதன் புதல்வர்" . தாங்கள் இந்த மண்ணின் புதல்வர்கள் என்பதை உணராத மேதைகளே அரசியலில் , பொறுப்புகளில், ஆட்சியில் என்பதை உணர்ந்துதான் எட்டயப் புரத்துக் கிறுக்கன் "நீரதன் புதல்வர் அமெரிக்காவின் அடிமைகளல்ல என்று சொல்லிச் சென்றான்.

    பதிலளிநீக்கு
  14. தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி எட்வின். நலமா? சந்தித்து நீண்ட நட்கள் ஆகிறது. அமெரிக்க தாசர்கள் குறித்து மிகவும் சரியாக பதிந்துள்ளீர்கள்

    பதிலளிநீக்கு
  15. yes surely
    our government activities conform it
    why not? it is surely possible.....
    impossible one
    urkuku tan ubadasem comrade namakku illai
    may be possible for your question?
    conformily. indian dogs not forgave them
    i think they got deepawlli holides
    may be they done it
    perfectly it is real

    பதிலளிநீக்கு