விழுப்புரம் மாவட்டம் காங்கியனூர், கடந்த 9 மாதங்களாக தமிழகம் முழுவதும் தீண்டாமைக் கொடுமைக்கான ஆதாரங்களில் ஒன்றாக அனைவராலும் பேசப்பட்ட கிராமம். அவ்வூர் ஆதிதிராவிட மக்கள் ஆலயத்திற்குள் நுழையத்தடை விதிக்கப்பட்டிருந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் இத்தடையை அகற்றிட தமிழக அரசையும், விழுப்புரம் மாவட்ட அரசு நிர்வாகத்தையும் வலியுறுத்தியது. பலனில்லை. 2009 செப்டம்பர் 30ம்நாள் ஆலயப்பிரவேசத்திற்கு ஆதிதிராவிட மக்களுடன் அனைத்து சமூகத்தினரை யும் அழைத்துச்சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் உட்பட அனைவரையும் ஊருக்கு முன்னாலேயே தடுத்து நிறுத்தி தடியடித்தாக்குதல் நடத்தி, 103 பேரை கைது செய்து, கடலூர் மத்திய சிறையில் அடைத்தது. மாவட்ட காவல்துறை எஸ்.பி.அமல்ராஜூம், கோட்டாட்சியர் ராஜேந்திரனும், டிஎஸ்பி முத்து நல்லியப்பன் ஆகியோரால் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.லதா அடிவயிறு சிதைக்கப்பட்டு, சுமார் 3 மாதத்திற்கு மேல் சிகிச்சையளிக்கப்பட்டு உயிர்மீண்டார் என்றால் இவர்களின் கொடூரத்தை புரிந்து கொள்ள முடியாதா? தீண்டாமை சட்டப்படி குற்றம் என்பது உண்மையானால், சாதியைச் சொல்லி தலித்துகள் கோவிலுக்கு செல்லக்கூடாது என்ற ஆதிக்கச் சாதியினரும், சட்டம்ஒழுங்கைச் சொல்லி ஆதிதிராவிடர்களை கோயிலுக்கு செல்ல விடாமல் மிருகவெறித் தாக்குதல் நடத்திய காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளும் சட்டப்படி குற்றவாளிகள்தானே? தலித்துகளை கோயிலுக்குள் நுழையக்கூடாதெனத் தடுத்திட்ட ஆதிக்கச் சாதியினர் மீதும் நடவடிக்கை இல்லை. ஆதிதிராவிட மக்களையும் மற்ற அனைவரையும் கோயிலுக்குள் செல்லக்கூடா தென அடித்து, அதிகாரத்தை பயன்படுத்தி பொய்வழக்கு போட்டு சிறையிலடைத்த போலீஸ் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை இல்லை. மாறாக தமிழக அரசு, எஸ்.பி.அமல் ராஜூக்கு டிஐஜி பதவி உயர்வு கொடுத்து ‘பாராட்டியது’. டிஎஸ்பி முத்துநல்லியப் பனை ஏடிஎஸ்பி ஆக பதவி உயர்வளித்து கவுரவித்தது. சட்டவிரோதமாக தடியடி நடத்தி, சட்டமன்ற உறுப்பினர் லதாவையும் கொடூர மாகத் தாக்கிய காவல்துறை கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்காமல் பதவி உயர்வல்லவா கொடுத்துள்ளீர்கள்; என சட்டமன்றத்திலேயே எழுப்பப்பட்ட கேள்விக்கு, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், போலீஸ் வாகனங்கள் உடைக்கப் பட்டதாகவும், சட்டம் அமைதியைப் பாதுகாக்கவே சிறு பலப்பிரயோகம் செய்ததாகவும், போலீஸ் கொடுத்த பொய்யறிக்கை யையே தமது பதிலுரையாக பகன்றாரே; இது உண்மையை மூடிமறைத்திடும் பதிலல்லவா? இமயமலையையே இட்லிக்குள் மறைத்திடும் புதிய யுக்தியல்லவா? தம்மை தாக்கி, தமது சக தோழர்கள் மீதும் தாக்குதல் நடத்திய, பொய் வழக்கு போட்டு சிறையிலடைத்து தமது அதிகாரத்தை தவறாக தமது சொந்த உணர்ச்சிகளுக்கு சாதகமாய் பயன்படுத்திய எஸ்.பி அமல்ராஜ் மற்றுமுள்ளவர்கள் மீதும் சட் டப்படியான நடவடிக்கை எடுக்க வேண் டுமென சட்டமன்ற உறுப்பினர் ஜி.லதா 18.3.2010ல் புகார் கொடுத்த பின்னணியில் இப்புகாரின் அடிப்படையில் உண்மையை கண்டறிந்து அறிக்கையளிக்க விழுப்புரம் மாவட்ட வருவாய் அலுவலருக்கு உத்தரவு போடப்பட்டது. இவ்வுத்தரவின்படி ஏப்ரல் 8, ஜூன் 4, 18 ஆகிய தேதிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்தில் நேரில் சென்று இதுவரை 23 பேர் சாட்சியமளித்துள்ளனர். 18.6.2010 காலையில் ஜி.லதா எம்எல் ஏவும் மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டச் செய லாளர் ஜி.ஆனந்தனும், மாவட்ட வருவாய் அலுவலரிடம் நேரில் தமது சாட்சியங்களை எழுத்துப்பூர்வமாக அளித்தனர். அதன் பின்னர் மாலை 4.30 மணிக்கு காங்கியனூர் சென்றனர். காங்கியனூர் மேட்டுச் சேரியில் வசிக்கும் ஆதிதிராவிடர் மக்கள் ‘நாங்கள் திரௌபதை அம்மன் ஆலயத் திற்கு உள்ளே சென்று வழிபட வேண்டுமென’ ஆர்வத்தை வெளியிட்டனர். அதன் பின்னர் காங்கியனூர் திரௌபதை அம்மன் ஆலயத்திற்கு ஜி.லதா எம்எல்ஏவும் சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி.ஆனந்தன், வாலிபர் சங்க மாநிலத்தலைவர் எஸ். ஜி.ரமேஷ்பாபு, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் எஸ்.முத்துக்குமரன், சிபிஎம் வட்டச் செயலாளர் எஸ்.வேல்மாறன் உள்ளிட்டவர்கள் அந்த மக்களுடன் ஆலயத்திற்குள் சென் றனர். ஆதிக்கத்தின் பெயரால் இதுவரை இருந்திட்ட சாதி அழுக்குகள் அகற்றப்பட் டன. ஆதிதிராவிடர் மக்கள் சூடம் ஏற்றி சூறைத்தேங்காய் உடைத்து தமது உணர்வின் மகிழ்ச்சியை ஒருவரோடொருவர் பரிமாறிக்கொண்டனர். ஆலயத்திற்கு வெளியில் ஆதிதிரா விடர் மக்களும், காங்கியனூரின் பிற சமூக மக்களும் கூடிநின்ற இடத்தில் பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ஜி.லதா எம்எல்ஏ, இன்றுபோல் என்றும் இவ்வூர் மக்களிடையே ஒற்றுமை தொடர வேண்டும். இவ்வூரின் அடிப்படையான மக்கள் தேவைக்கு ஒன்றிணைந்து குரலெழுப்ப வேண்டும். சாதி ஒடுக்குமுறையும், ஏற்றத்தாழ்வான வாழ்க்கையை நியாயப் படுத்தும் சமூக ஒடுக்குமுறையும் முற்றாக அகற்றப்பட அனைவரும் இணைந்து போராடுவோம் என்றார். அது அர்த்தமுள்ள அறைகூவல் அல்லவா? இளைஞர்கள் ஒன்றுசேர்ந்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை அமைத்து அதற்கான துவக்க விழாவையும் கலை நிகழ்ச்சியோடு நடத்தினார்கள். பெண் களும் ஊர்ப்பெரியவர்களும் அனைவருக் கும் உணவுகொடுத்து உபசரித்து மகிழ்ந் தார்கள். காவல்துறையினரும் தமது பங்கிற்கு சுமார் 100 பேருக்க மேல் திரண்டிருந்த னர். ஆயினும் என்ன? ஆலய வழிபாடு அமைதியாக நடந்தது. அன்றிருந்த எஸ்.பி. அமல்ராஜ் இன்று இல்லை. அன் றிருந்த டிஎஸ்பி முத்துநல்லியப்பன் இன்று இல்லை. அன்றிருந்த கோட்டாட் சியர் ராஜேந்திரன் இன்று இல்லை. இன்று செஞ்சி டிஎஸ்பி ராஜேந்திரனின் சாதுர்யத்தால் போலீஸ் குவிக்கப்பட்டிருந்தாலும் எந்தப் பதட்டமும் இல்லாமல் அமைதியாக அனைத்தும் நிறைவே றியதே! செப்டம்பர் 30ல் நடந்த தடியடித் தாக்குதலுக்கு ஆதிக்க சாதிவெறிக்கு துணைநின்ற எஸ்.பி.அமல்ராஜூம், டிஎஸ்பி முத்துநல்லியப்பனும், கோட்டாட் சியர் ராஜேந்திரனும்தான் காரணம் என் பதை இப்பொழுதாகிலும் தமிழக அரசு உணருமா? வன்கொடுமை தடுப்பு, அதி கார துஷ்பிரயோகத் தடுப்புச் சட்டப் பிரி வுகளின்கீழ் இவர்கள் தண்டிக்கப்படு வார்களா? ஆதிதிராவிட மக்களின் சுயமரியா தைக்காகப் போராடியவர்கள் மீது போடப் பட்ட பொய்வழக்குகள் வாபஸ் பெறப்படுமா? -ஜி.ஆனந்தன், மார்க்சிஸ்ட் கட்சி விழுப்புரம் மாவட்டச் செயலாளர். |
புதன், 23 ஜூன், 2010
சாதிய ஆதிக்கத் தடை தொடர் போராட்டத்தால் தகர்ந்தது!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
விடுதலை போரில் பெண்கள் - 5 வீழும் வரை போரிடு! விழும்போது விதையாய் விழு! இந்தியாவை மெல்ல மெல்ல ஆக்ரமித்த ஆங்கிலேயர்கள் ஒன்ற...
-
ஆர்ப்பாட்டத்தை மறியலாக மாற்றிய காவல்துறை ஒரு தொழிற்சாலையில் சங்கம் வைக்கும் அடிப்படை உரிமையை மறுக்கும் நிகழ்வுக்கு எதிராக ...
-
1930ல் சென்னையில் மறியல் போராட்டத்திற்கு புறப்படும் பெண்கள் எங்கும் நிறைந்துள்ள பெண் போராளிகள் - ஒ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக