வியாழன், 1 ஏப்ரல், 2010

போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி


முதலில் ஒரு பத்திரிகை செய்தி
பிப்ரவரி ௨ ஆம் தேதி தீக்கதிர் நாளிதழ்

இளைஞர்களின் வயிற்றில் அடிக்கும் அரசாணையை ரத்துசெய்க!  இன்று கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

ஓய்வுபெற்றோருக்கு பணி நியமனம் அளித்து, இளைஞர்களின் வயிற்றில் அடிக்கும், திமுக அரசின் கொள்கையை எதிர்த்து பிப்ரவரி 3 புதன்கிழமை தமிழகம் முழுவதும் வாலி பர்கள் கருப்புக்கொடி ஆர்ப் பாட்ட இயக்கத்தை நடத்து கின்றனர்

இந்திய ஜனநாயக வாலி பர் சங்கம் இப்போராட்டத்தை நடத்துகிறது.

மாநில திமுக அரசு, ஓய்வுபெற்றோருக்கு மறு பணி நியமனம் குறித்து அரசாணை 170ஐ வெளி யிட்டு இரண்டு மாதங்கள் ஆகிறது. இதை எதிர்த்து வாலிபர் சங்கம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர் வாணையம் முன்பும், அரசு அலுவலகங்கள் முன்பும் போராட்டங்களை நடத்தியது.

சட்டமன்றத்தில் ஆளுநர் உரையின் போதும், மாநில முதல்வர் நேரடியாகவும், மேற்படி அரசாணை தற் காலிகமானது என்றும், இளைஞர்களை பாதிக்காது என்றும் குறிப்பிட்டார். மாநிலத்தில் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப் போர் 62 லட்சமாக இருக்கும் நிலையில், ஆளுநர் மற்றும் முதல்வரின் அறிவிப்புகள் இளைஞர்களை கொந்தளிப்படையவே செய்துள்ளது.

தமிழகத்தில் தேர்வாணையம் மூலமாகவோ, வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலமாகவோ பணி நியமனங்கள் நடைபெறுவதில்லை. குறுக்கு வழியில், அரசுக்கு வேண்டியவர்களே, பெரும்பாலும் தற்காலிகப் பணியிடங்களில் நியமிக்கப்படுகிறார்கள். இந்த தவறான நடவடிக்கை காரணமாகவும், மாநில திமுக அரசு இளைஞர்களின் பெற்றோர்களின் அதிருப்திக்கு ஆளாகிவருகிறது.

பல்வேறு துறைகளில், இரண்டு லட்சத்திற்கும், அதிகமான அரசு ஊழியர் பணியிடங்கள் காலியாக இருக்கும்போது மேற்படி அரசாணையை பிறப்பித்தது இளைஞர்களின் எதிர் காலத்தை நம்பிக்கையிழக்க செய்வதாகும்.

அரசு ஊழியர் அமைப்புகள், ஓய்வுபெற்ற அரசு ஊழியர் அமைப்புகள் பல்வேறு அரசியல் கட்சிகள், இந்த உத்தரவிற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்த பின்னரும், சட்டமன்றத்தில் இடதுசாரி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும், திமுக அரசு தனது நிலையை மாற்றிக் கொள்ள முன்வரவில்லை. மேலும் ஜனநாயக நாட்டில் தனது கட்சியின் பொருளாதாரக் கொள்கையை இறுமாப்புடன் அமலாக்க எத்தனிப்பது ஜனநாயக விரோத செயலாகும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கூறியுள்ளது.

தொடர் எதிர்ப்புகளுக்கு செவிசாய்க்காமல், தனது இளைஞர் விரோதக் கொள்கையை அமலாக்கத் துணிந்துள்ள மாநில திமுக அரசினை கண்டித்து மாநிலம் முழுவதும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் பிப்ரவரி 3 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு முன்பாக கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.

மாநிலத்தலைவர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு, செயலாளர் எஸ்.கண்ணன் உள்ளிட்ட சங்கத்தின் தலைவர்கள், தலைமையேற்கின்றனர்.

சீர்குலைக்க முயற்சி

இதனிடையே, திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர் மாவட்டங்களில் துணை முதலமைச்சர் ஸ்டாலின் வருகையையொட்டி வாலிபர்களின் போராட்டத்தை நடத்தக் கூடாது என்று காவல்துறையினர் மிரட்டி வருகின்றனர். எனினும் திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என்று சங்கத் தலைவர்கள்அறிவித்துள்ளனர்

இந்த நிலையில் தமிழாக்கம் முழுவதும் போராட்டம் நடந்தது 

வேலைவாய்ப்பை பறிப்பதா? கருப்புக்கொடி ஏந்தி ஆவேசம்: வாலிபர்கள் ஆர்ப்பாட்டம்: 600 பேரை சிறையிலடைத்து போலீசார்அராஜகம்

தமிழகம் முழுவதும் 29 மாவட்டங்களில் இப் போராட்டம் எழுச்சியான முறையில் நடைபெற்று உள்ளது. 
லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் நிலையில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்தும் தமிழக அரசின் செயலைக் கண்டித்து தமிழகம் முழுவதும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் புதனன்று பிப்ரவரி 3, 2010 அன்று எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பத்து மாவட்டங்களில் ஆயிரத்து 200 பேர் கைது செய்யப்பட்டனர். கோவை, ஈரோடு, திருவண்ணாமலை, பெரம்பலூர், நாகை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற வாலிபர் சங்க தோழர்கள் 600க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

காவல்துறையினர் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தை நடத்த விடாமல் பல்வேறு வகைகளில் அச் சுறுத்தினர். குறிப்பாக பெரம்பலூர் மாவட்டத்தில் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் 4ஆம் தேதி வருவதைத் தொடர்ந்து மிகுந்த கெடுபிடி செய்துள்ளனர். பொது இடங்களில் கூடுவதற்கு அனுமதி அளிக்காத காவல்துறை, நாலா திசையிலும் இருந்து வந்து இறங்கிய வாலிபர் சங்கத் தோழர்களை அச்சுறுத்தி விரட்டிய டித்தனர்.
அநேகமாக அனைத்து மாவட்டங்களிலும் காவல் துறையினருக்கும், வாலிபர் சங்கத்திற்குமிடையே கடு மையான தள்ளு முள்ளுகள் நடந்துள்ளது. இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறிக்கின்ற அரசாணை எண் 170-ஐ திரும்பப் பெற முன்வராத திமுக அரசு, காவல்துறையை ஏவிவிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை அச்சுறுத்துவதும், அடக்குவதும் அராஜகமான வேலையை காட்டியது. 

ஆர்ப்பாட்டத்தில்ஈடுபட்ட 600க்கும்மேற்பட்ட வாலிபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தது. பலர் 10௦ நாட்கள் வரை திருச்சி, வேலூர், தஞ்சை போன்ற சிறையிலிருந்து வெளியே வந்தனர்.  



இந்த பின்னணியில் போராட வெற்றி செய்தி 

காலியாகவுள்ள அரசுப் பணிகளுக்கு ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களை மறு நியமனம் செய்ய தமிழக அரசு 2009 டிசம்பர் 18ல் அரசாணை 170-ஐ பிறப்பித்தது. தமிழகத்தில் வேலையின்றி லட்சக்கணக் கான இளைஞர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் போது, இருக்கிற காலிப் பணியிடங்களில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களை மறு நிய மனம் செய்யும் திமுக அரசின் உத்தரவை அப் போதே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்  கண் டித்ததோடு, காலிப் பணியிடங்களில் முறை யான பணி நியமனம் செய்யவும் வற்புறுத்தியது.

அரசின் முடிவிற்கு தமிழ்நாடு வரு வாய்த்துறை அலுவலர்கள் சங்கம், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் அரசாணையை எதிர்த்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தமிழகம் முழுவதும் கண்டன இயக்கங்கள் நடத்தியது. அந்த போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்க இளைஞர் கள் கைது செய்யப்பட்டு, சிறையிலும் அடைக்கப்பட்டனர். பல இடங்களில் காவல் துறையினர் போராடிய வாலிபர் சங்க உழியர்களை கடுமையாக தாக்கினர். இருப்பினும் தமிழாக்கம் முழுவதும் போராட்டங்கள் தொடர்ந்தது. தமிழாக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் வேலைக்காக படிந்துள்ள வாலிபர்களின் எண்ணிக்கை 62 லட்சம். ஆனால் இவர்களுக்கு வேலை கொடுக்க துப்பில்லாத தமிழாக அரசு ஒய்வு பெற்ற அரசு உழியர்களுக்கு மிண்டும் வேலை கொடுக்க அரசானை எண் 170 ஐ கொண்டு வந்தது.

இந்த அரசாணையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொது நல வழக்கில், அரசாணையில் மாற்றம் செய்வதாகவும், தட்டச்சர், இளநிலை உதவியாளர் போன்ற பணியிடங்களுக்கு ஓய்வு பெற்றோர் நியமிக்கப்படமாட்டார்கள் என்றும், வேலைவாய்ப்பு அலுவலகங்கள் அல்லது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் முறையான நியமனம் செய்யப்படும் என்றும் தமிழக அரசு, நீதிமன்றத்தில் தெரி வித்துள்ளது. இது வேலைவாய்ப்பை பறிக்கும் அரசாணைக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.

எனவே, தமிழக அரசு, உயர்நீதிமன்றத்தில் உறுதியளித்தபடி அனைத்து காலிப் பணி யிடங்களுக்கும் முறையான நியமனம் செய்து காலிப் பணியிடங்களை நிரப்ப உடனடி நடவ டிக்கை எடுக்க வேண்டும. அதுமட்டுமல்ல தமிழ் நாட்டில் காலியாக உள்ள அரசு துறை காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். கிராமபுரங்களில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வாழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த வெற்றி கிடைத்த நேரத்தில் இந்த அரசாணையை எதிர்த்து போராடிய, தடியடிபட்ட, சிறைக்கு சென்ற அனைத்து வாலிபர் சங்க தோழகளுக்கும் மனதார வாழ்த்துக்களையும் புரட்சிகர வணக்கங்களையும் தெரிவித்துக்கொள்வோம். 


1 கருத்து: