வியாழன், 16 ஏப்ரல், 2009

70 லட்சம் கோடி.... ஜெய் ஹோ!


70 லட்சம் கோடி ரூபாய். கேட்க மலைப்பாக, திகைப்பாக, கற்பனைக்கு எட்டாததாக இருக்கும் இந்த தொகை இந்தியாவில் உள்ள கருப்புப் பண முதலைகள் வெளிநாட்டு வங்கியில் போட்டிருக்கும் தொகை. ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் விவசாயிகள் கடன் தொல்லையால் தற்கொலை செய்துக்கொள்ளும் நாட்டை சார்ந்த பெருங்குடிமகன்கள் தங்கள் பரம்பரை சுகமாய் வாழ சேர்த்து வைத்த தொகைதான் இது.
இந்த பணம் எப்படி? எங்கே? யாரால்? எதற்காக? யாருக்கு? ஏன்? கொடுக்கப்பட்டது என்று யாருக்கும் தெரியாது. இந்திய நாட்டின் நிலை என்ன என்பதற்கு ஒரு சிறிய உதாரணம் பார்க்கலாம்.

இடதுசாரிகள் போராடி கொண்டு வந்த நூறுநாள் வேலை உறுதி சட்டத்திற்கு என்று பட்ஜெட்டில் காங்கிரஸ் அரசாங்கம் ஒதுக்கி இருக்கும் 30,100 கோடி அதாவது ஆண்டிற்கு ஐந்து கோடி மக்கள் பயன் பெரும் திட்டம் இது.

இதை 15 ஆண்டுகளுக்கு கணக்கிட்டால் 75 கோடி மக்களுக்கு வெறும் 2 லட்சம் கோடி. ஆனால் ஒரு சிலருக்கு 70 லட்சம் கோடி.

இன்னூம் கொஞ்சம் யோசிப்போம்... இந்த பணத்தை வைத்து என்னென்ன செய்யலாம். ............
- இந்தியாவிற்கு 10 ஆண்டிற்கு பட்ஜெட் போடலாம்.
- தமிழகத்திற்கு 115 ஆண்டிற்கு பட்ஜெட் போடலாம்
- புதுச்சேரிக்கு 250 ஆண்டிற்கு பட்ஜெட் போடலாம்.
- கலைஞர் மாதரி யோசித்தால் 70 லட்சம் கோடி மக்களுக்கு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு தரலாம். உலக மக்கள் தொகை 600 கோடி என்பதை நினைவில் கொள்க...
- 35 ஆயிரம் மதிப்புக்கொண்ட ஹோம்தியேட்டர் வண்ண தொலக்காட்சி 14,000 கோடி மக்களுக்கு இலவசமாக கொடுக்கலாம்.
- 10 கோடி மதிப்பிலான நேரு யுவகேந்திரா பள்ளி எத்துனை கட்டலம்
- 16,534 கோடி சுகாதாரத்திற்கு ஒதுக்கும் நமது நாட்டில் இப்பணத்தை வைத்து என்னென்ன செய்யலாம் என்று ஒரு பெரிய பட்டியலை தயாரித்து பொழுது போக்கலாம்......

பத்தும் ஐம்பதும் கேட்ட அந்த சாதரண சிப்பந்திகளை கைது செய்து தனது நேர்மையை பறைசாற்றும் நமது சமூகம். செய்திதாள்களில், காட்சி ஊடகங்களில் பல லட்சம், பல கோடி கொள்ளையடிப்பவர்கள் சிரித்துக்கொண்டு கையாட்டுவதை பார்த்தால் வெட்ட வேண்டும் என்று தோன்றுகிறது (கையைத்தான்) ஆனால் இந்தியா ஒரு ஜனாநாயக நாடு என்ற காரணத்தால் கட்டுரை எழுதிக்கொண்டிருக்கிறோம். (வன்முறையை அசூசையாய் நினைக்கிறவர்கள் கன்களை மூடிக்கொள்க)

கொஞ்சம் வரைமுறை கடந்து வன்முறை வந்ததிற்கக வாசகர்கள் பொருத்தருள்க. மானாட - மயிலாட பார்த்து ரசிக்கும் மனோபாவத்துடன் மாமா - மாப்பிள்ளை (முன்னொரு காலத்தில் நடந்த மாறன் - அழகிரி பிரச்சினையோ என நினைத்தால் கம்பெனி பொறுப்பேற்காது) காட்சிகளை பார்க்கின்ற நாடு இது என்பதால், வெட்டு குத்து வார்த்தைகளுக்கு பதில் ஓட்டு வேட்டு என்ற வார்த்தைகளை பயன் படுத்தலாம். சரியா? (தேர்தல், ஒட்டு என்றால் வெகுண்டெழும் அக்மார்க் புரட்சியாளர்கள் ஐம்புலன்களையும் மூடிக்கொள்க)
65 லட்சம் ஊழல் பிரச்சினைக்காக இந்திராகாந்தியை தூக்கியெரிந்தவர்கள் நமது மக்கள், 60 கோடி ஊழல் செய்ததிற்காக ராஜிவ்காந்தியை உதாசின படுத்தியவர்கள் நமது மக்கள், பங்காரு லட்சுமனன் தொலைக்காட்சி முன்னால் அமபலப்பட்டு பி.ஜெ.பி யின் உண்மை முகத்தை அம்மபலப் படுத்திய போது அந்த இயக்கத்தை உரித்தெரிந்தவர்கள் நமது மகாஜனம். எனவே அவர்கள் மீதும், அவர்கள் கையில் உள்ள வாக்கு சீட்டு மீதும் நம்ம்பிக்கை வைப்போம்.

அவர்கள் அவர்களுடைய பணமான 70 லட்சம் கோடியை இங்கே கொண்டு வருவார்கள். அவர்களுக்குக்காக எழுதுவோம். பேசுவோம், அவர்களுடன் வாக்களிப்போம்.

தெருக்கோடியில் எந்த வித பாதுகாப்பும் இல்லாமல், நிலயற்ற வாழ்க்கையை வாழ்கின்ற மக்கள் நிறைந்த நாட்டின் வரியேய்ப்பு பணம்தான் இந்த 70 லட்சம் கோடி. அதாவது இந்த நாட்டுக்கு சட்டப்பூர்வமாக வரவேண்டிய பணம் இது. ஆனால் ஆளுகிறவர்களுக்கு இதைப்பற்றி கொஞ்சமும் கவலை கிடையாது. சாலையோரத்தில்
காது விடைத்துப் பார்க்கும் நாய்களின் மீதுகூட பயம் உண்டு,
ஆனால்.....
நன்றி.... வனாக்கம்... நமோஸ்கார்... பாரத மாதாகி ஜே!... ஜெய் ஹோ!

5 கருத்துகள்:

  1. ரமேஷ்,

    நல்ல பதிப்பு.

    முதலாளித்துவமும் சாதிமத பேதங்களும் ஓங்கி இருக்கும் வரை இதை ஒற்றிய புலனாய்வு நடக்க வாய்ப்பில்லை. புகழும் செல்வமும் கிடைக்கும் வரை அரசியல்வாதிகள் ஊதிப் பார்ப்பர். பின்பு அடங்கிப் போய்விடும்.

    பெரியார் சொன்னது போல, நம் மக்கள் நீண்ட காலமாய் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். சாட்டையால் அடித்து மட்டுமே எழுப்ப முடியும்.

    தமிழ்மணம், தமிழிஷ் போன்ற தளங்களில் பதிவு செய்தால் இன்னும் அதிகமானோர் படிப்பர்.

    நிறைய எழுதுங்கள்.

    ஜெகதீசன்.

    பதிலளிநீக்கு
  2. நன்றி ஜெகதீஷ், தாங்கள் சொன்ன தளங்களில் பதிகிறேன்

    பதிலளிநீக்கு
  3. மக்கள் நல திட்டங்களுக்காக பணம் ஒதுக்க பஞ்சப்பாட்டு பாடும் நமது நிதி அமைச்சர்களுக்கும்
    அரசின் செலவிற்காக பொது துறை நிறுவனங்களை விற்க்க துடிபோர்க்கும்...
    இந்த பணம்தான் கண்ணில் படுமோ அல்லது பட்டால்தான் அதை கைப்பற்ற தான் நடவடிக்கை இருக்குமோ?

    என்னருமை தேசத்து மக்களோ இந்த தகவல்கள் அறியாமல் 100க்கும் 200க்கும் தங்கள் வாக்குகளை விற்கும் நிலைதான் மாறுமோ?
    அந்த மாற்றம் காண மக்கள் அரசியல் விழிபுணர்வடைய, எம் போன்ற இணயதளத்து வாசகர்கள் மக்கள் களம் காண வேண்டுமன்றோ

    நா.நாராயணன்

    பதிலளிநீக்கு
  4. The block money isue has to be reached to millions of people.All the "likeminded"blogers have to be "united" and do the propaganda more effectively.If it is happen we shall feel some little bit of happy.-R.Vimalavidya-Chalakkudy

    பதிலளிநீக்கு
  5. நன்றி நாராயணன் மற்றும் விமலா.. தேர்தல் களம் சூடாகும் போது மக்களை திரட்ட இணயதளத்தையும் பயன்படுத்திட நமது கருத்துக்களை பரவலாக்குவோம்

    பதிலளிநீக்கு