.jpg)

நேரு, சொன்னது போ
ல், “பெரும்பான்மை வகுப்பு வாதம் சிறுபான்மை வகுப்பு வாதத்தை வளர்க்கும்” என்று சொன்னதை மனதில் நிறுத்த வேண்டிய நேரம் இது. ஏனெனில் பாபர் மசூதி இடிப்பும், அதை தொடர்ந்து நடந்த கலவரங்களையும், குஜராத்தில் நடந்த இன அழிப்பு பிரச்சனையும் நமது தேசத்தில் சிறுபான்மை இளைஞர்களை தீவிரவாத பாதையை நோக்கி தள்ளியதை யாரும் மறுக்க முடியாது. நமது நாட்டில் உள்ள தீவிரவாதிகளுக்கு வெளிநாட்டில் உள்ள சீர்குலைவு சக்திகளும், உள்நாட்டில் உள்ள சமூக விரோத சக்திகளும் உதவி செய்வதும் தொடர்ந்து நிகழ்ந்து வரும் ஒரு செயலாக மாறி உள்ளது. நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்து அரசியல் மாற்றம் நடந்துள்ள இந்தச் சூழலில் நடந்த வெடிகுண்டு நிகழ்வுகள் பல்வேறு கேள்விகளை எழுப்புவதாக அமைந்துள்ளது.

அதே போல் நமது நாட்டின் உளவு அமைப்புகளின் தோல்வி மிகப்பெரிய அதிர்ச்சிக்குரிய ஒன்று. தீவிரவாதிகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்று மார்தட்டும் மத்திய, மாநில அரசுகள் இப்படி கோட்டை விடுவது மக்கள் மனதில் அவநம்பிக்கையை விதைக்கும். மத்தியில் தொடர்ந்து ஆட்சிக்கு வரும் ஆளும் வர்க்கங்கள் பெரும்பான்மை வகுப்புவாதிகளுக்கு ஆதரவு கொடுப்பது சிறுபான்மையினர் மத்தியில் அச்சத்தை விதைக்கிறது.
.jpg)
சச்சார்குழு பரிந்துரைகள் சொல்லியது போல சிறுபான்மை சமூக மக்களுக்கு கல்வி, வேலை, சுகாதாரம், வாழ்க்கைத் தரம் ஆகியவற்றை முன்னேற்றுவது அவர்கள் மத்தியில் ஊடுருவும் தீவிரவாதத்தை தனிமைப்படுத்தும் அந்த தனிமைப்படுத்துதல் பெரும்பான்மை தீவிரவாதத்தை கட்டுப்படுத்தும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக