செவ்வாய், 1 அக்டோபர், 2024

மீண்டும் வலைப்பூ பக்கம்..

அன்புள்ள நண்பர்களே! தோழர்களே! வணக்கம். 2007 ஆம் ஆண்டு நான் எனது வலைப்பூ பக்கத்தை துவங்கினேன். 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக அதில் எழுதி வந்தேன். ஆனால் அதன் பிறகு பல்வேறு பணிச்சுமை காரணமாக வலைப்பூவை தொடர்ந்து கண்காணித்து எழுத இயலவில்லை. அதுமட்டுமல்ல காலப்போக்கில் அந்த வலைப்பூ சரியாக இயங்கவும் இல்லை. அதை சரிசெய்யவும் முடியவில்லை. இதற்கிடையில் நான் எழுதிய பல்வேறு கட்டுரைகளை வலைப்பூவில் பதிய முடியாமல் போனது. அதுமட்டுமல்ல இது நமது எழுத்துக்களை சேகரிக்கும் வங்கியாகவும் இருப்பதால் பல ஆண்டுகளாக நமது எழுத்தின் தன்மை மாறுவதையும் நம்மால் அவதானிக்க முடியும். தற்சமயம் பாண்டிச்சேரியை சேர்ந்த நண்பர் ரமேஷ் முருகேசன் என் வலைப்பூவை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வந்து உதவி செய்துள்ளார். 200க்கும் மேற்பட்ட கட்டுரைகள் என் வலைப்பூவில் உள்ளது. இடைபட்ட ஆண்டுகளில் எழுதிய கட்டுரைகளையும் இனி இணைக்க உள்ளேன். என்னதான் டிஜிட்டல் யுகம் எனினும் எழுத்துக்களை வாசிப்பது ஒரு சுகம்தான். தொடர்ந்து வலைப்பூவில் சந்திக்கலாம். தோழமையுடன் எஸ்.ஜி.ரமேஷ்பாபு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக