ஜூன் 19, 1947 இந்தியாவில் பிறந்த பிரித்தானிய எழுத்தாளர் சர் அகமத் சல்மான் ருஷ்டி. இவரின் 1981இல் வெளிவந்த இரண்டாம் புதினம் "மிட்னைட்ஸ் சில்ட்ரென்" காரணமாக பெரும் புகழ் அடைந்தார். இந்த நாவல் புக்கர் பரிசு வென்றது. இவரது நாவல் இந்திய தீபகற்பம்|இந்தியச் சூழலில் எழுதப்பட்டவைகளாகும்.. இவரது இலக்கிய வகை மாய யதார்த்தவாதம் என்ற தன்மையிலானது. கிழக்கு மற்றும் மேற்கு உலகங்களிடையே உள்ள தொடர்புகள். தாக்கங்கள் மற்றும் குடிப்பெயர்வுகளை அதுசார்ந்த பிரச்சனைகளை அடிப்படையாக கொண்டு எழுதுபவர்.
1988இல் இவரின் நான்காம் நாவலான த சாத்தானிக் வெர்சஸ் வெளிவந்தது. இந்த நாவல் இஸ்லாமிட அடிப்படை வாதத்தை கேள்வி எழுப்பிய காரணத்தால் உலகில் பல முஸ்லிம் அமைப்புகள் ருஷ்டிக்கு எதிராக போராட்டம் செய்தனர். அப்போதைய ஈரானின் தலைவர் அயத்தொல்லா கொமெனி ருஷ்டியை கொலை செய்யவேண்டும் என்று பெப்ரவரி 14, 1989 அன்று ஒரு ஃபத்வா வெளியிட்டுள்ளார். இதனால் ருஷ்டிக்கு பிரித்தானிய காவல்துறை பாதுகாப்பு கொடுத்துள்ளது. ஜப்பானில் இப்புதினத்தை மொழிபெயர்ப்பு செய்தவர் 1991இல் கொல்லப்பட்டார்.
2007ஆம் ஆண்டில் பிரித்தானிய அரசி இவரது இலக்கியச் சேவைக்காக "நைட் பேச்சிலர்" என்ற சர் பட்டம் வழங்கியது. பிரான்சின் கலை மற்றும் எழுத்திற்கான கௌரவ அமைப்பில் இவருக்கு கமாண்டர் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 2007இல் அட்லான்டா, ஜோர்ஜியாவின் எமரி பல்கலைக்கழகத்தில் சிறந்த எழுத்தாளர் என்ற ஐந்தாண்டு பதவியில் அமர்ந்தார். 2008இல் அமெரிக்க கலை மற்றும் எழுத்து அகாடெமியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். டைம்சு இதழ் 1945க்குப் பிறகான 50 மிகச்சிறந்த பிரித்தானிய எழுத்தாளர்களில் இவரை பதின்மூன்றாவது இடத்தில் மதிப்பிட்டுள்ளது.
இவரது அண்மைய புதினம் லூக்கா அண்ட் ஃபயர் ஆஃப் லைஃப் நவம்பர் 2010இல் வெளியாகியுள்ளது. தனது நினைவுக்குறிப்புகளை எழுதப்போவதாக அறிவித்துள்ளார். தற்போது ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடக்கும் இலக்கிய விழாவில் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி வீடியோ கான்பரன்சிக் மூலமாக பேசும் நிகழ்ச்சிக்கு ஏராளமான எதிர்ப்புகள் கிளம்பியதால், அது ரத்து செய்யப்பட்டு விட்டது. ராஜஸ்தான் அரசும், முஸ்லிம் மக்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். இன்று 24.01.12 காலை முதலே இலக்கிய விழா நடைபெறும் அரங்கிற்கு முன்பாக பல்வேறு அமைப்புகள் சார்பில் தொடர்ந்து எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெற்றதால், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படக் கூடாது என்பதால் நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் சல்மான் ருஷ்டி நிகழ்ச்சியை ரத்து செய்வதாக அறிவித்துள்ளனர்.
"ஜெய்ப்பூரில் நடக்கும் இலக்கிய விழாவில் தான் கலந்துகொள்வதைத் தடுத்துடன், வீடியோ கான்பரன்ஸிங் மூலம் பேசுவதற்கும் அனுமதிக்காமல் இருந்ததற்காக இந்தியாவில் பேச்சு சுதந்திரம் பறிபோய்விட்டது" என குற்றச்சாட்டைக் கூறியுள்ளார் சல்மான் ருஷ்டி.
"ஜெய்ப்பூர் போலீஸார் இந்த விவகாரத்தில் இரட்டை வேடம் போடுவதாகவும், தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும், தான் கலந்து கொண்டால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதை உத்தேசித்து பெரும் பிரச்னைகள் ஏற்படலாம் என்று எச்சரிக்கப்பட்டதாகவும் போலீஸார் கூறினர். அதனால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் வற்புறுத்தலால் பயணத்தை ரத்து செய்துவிட்டு, வீடியோ கான்பரன்ஸிங் மூலம் பேசுவதற்கு எண்ணினேன். ஆனால், குறிப்பிட்ட ஒரு சிலருக்காக போலீஸார் அதையும் அனுமதிக்க மறுத்துவிட்டனர். இந்தியா எங்கு போய்க்கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை." என அவர் கூறியது ஜனநாயகம் குறித்து பேசுவோர் யோசிக்க வேண்டிய விஷயமாகும்.
எதிர் கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்ள முடியாத இலாமிய அடிப்படை வாதிகள் இந்து அடிப்படைவாதிகளுக்கு கொஞ்சமும் சலைத்தவர்கள் அல்ல என்பது மீண்டும் நிருபனமாகியுள்ளது. எந்த மதம் சார்ந்து வந்தாலும் அடிப்படைவாதமும், பயங்கரவாதமும் எதிர்க்கக்கூடியதாக இருந்தால்தான் ஒரு நாடு தன்னை ஜனநாயக நாடு என பறைசாற்ற முடியும். இந்தியா ஜனநாயகம் பேசும் நாடு என நம்பப்பட்டாலும் கயர்லாஞ்சி துவங்கி பரமகுடிவரை தலித் மக்களுக்கு எதிரான வன்முறைகளிலும், தஸ்லிமா நஸ்ரின், சல்மான் ருஷ்டி போன்ற எழுத்தாளர்கள் சம்பவங்களிலும் அப்பட்டமாய் ஜனநாயா முகம் கிழிந்து நிற்பது அருவருப்பாய்தான் இருக்கிறது. எழுத்தாளனை விரட்டும் தேசம் யாரை வாழவைக்கும்?
click to read
பதிலளிநீக்கு>>>> பெண் பித்தனும் சர்வதேச எழுத்து விபச்சாரனுமாகிய சல்மான் ருஷ்டிக்கு விளம்பர விழாவா? சர்வதேச இலக்கிய விழாவா ? ருஷ்டிக்கு ஆப்பு! வச்சது யாரு? <<<<<
.
நல்ல பதிவு... அடிப்படை வாதிகளின் எதிர்வாதம் கேட்பதற்கு கூட சரியானதாக தோன்றவில்லை... // பெண் பித்தனும் சர்வதேச எழுத்து விபச்சாரனுமாகிய சல்மான் ருஷ்டிக்கு விளம்பர விழாவா?// என்று ஒருவனுக்கு ஏதேனும் ஒரு கேவலமான அடைமொழி தந்து அவர்களுடைய கருத்துகள் மீது மக்கள் கவனம் குவியாமல் அவர்களிடம் வெறுப்பை உருவாக்குவதே இவர்கக்ளின் லாவகம்... கருத்து சுதந்திரம் மட்டும் அல்ல; வியாபார சுதந்திரம் தவற வேற ஒன்றுமே இல்லாமல் போய் கொண்டிருக்கிறது
பதிலளிநீக்கு