அரவான் என்கிற பிருமாண்டமான திரைப்படம் வசந்தபாலன் இயக்கத்தில் மிக விரைவில் வெளிவர இருக்கிறது. அந்த படத்தின் பாடல் வெளியிட்டுவிழா சமிபத்தில் நடந்தது. நேற்றைய முன்தினம்தான் அமைதியான ஒரு வேளையில் அப்படத்தின் பாடல்களை கேட்டுக்கொண்டிருந்தேன். அதில் களவு குறித்த ஒரு பாடல் மிகவும் அற்புதமாக அமைந்திருந்தது. அற்புதமாக அமைந்தது மட்டுமல்ல வாசிப்பின் உச்சத்தில் உருவாகும் பாடலாகவும் அது இருந்தது.
இப்படம் முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநில பொது செயலாளர் சு.வெங்கடேசன் எழுதிய 1048 பக்கங்களை கொண்ட 590 விலையுள்ள தமிழினி பதிப்பகத்தில் வெளிவந்த காவல் கோட்டம் என்ற நாவலின் சிலப்பக்கங்க்களை கதையாகக் கொண்டது.
துசிப்படிந்து துருவேறிய போர்வாளை தனக்காவே சாமி அறைக்குளிருந்து கண்களில் பொங்கும் பெருமிதத்துடன் வெளியில் எடுத்துக்காட்டிய தாதனுர் மக்கள் வாழ்க்கையை, மாலிக்கபூர் மதுரையை நோக்கி படை எடுத்த காலத்தில் துவங்கி 300 ஆண்டுகளை கடந்த மதுரையின் வரலாற்றை 10 ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து எழுதிய அந்த எழுத்தாளனின் வரலாறு புனைவு இது.
புனைவு உலக இலக்கியங்களின் வரிசையை நோக்கி நடைபோடும் இந்த நாவலை முழுமையாக படிக்காமல் இவ்வுளவு சிறப்பாக ஒரு பாடலை எழுத முடியாது. களவில் விழுந்து களவில் எழுந்து களவோடு வாழ்ந்த கள்ளர்களின் களவை கொண்டாடும் இந்த பாடல் அப்புத்தகத்தின் பல்ல்வேறு பக்கங்களில் சிதறி விழும் மாணிக்க பரல்களை கோர்த்த மாலை போன்றது.
மிகசசிறப்புடைய காவல் கோட்டம் நாவலின் அறிமுகமாக.. (அல்லது) அரவான் படத்தின் அறிமுகமாக இந்த பாடலை எழுதிய ந.முத்துகுமாருக்கு வாழ்த்துக்கள். பாடலை படியுங்கள் அப்படியே கேளுங்கள் .. முடிந்தால் காவல் கோட்டம் நாவலை வாங்கி படியுங்கள்.
அரவானை பார்க்க ஆவல் உண்டாகும் பாடல் இது.
பூசாரி பட்டி களவு
கோடாங்கி பட்டி களவு
கொலைகாரன் பட்டி களவு
கோடாலி பட்டி களவு
பேய்க்காரன் பட்டி களவு
காநாடு காத்தான் களவு
நாட்டமை பட்டி...........
என் சாமி பேரு கருப்பு
இம்புட்டு பேரு நெருப்பு
கன்னக்கோல் எங்க துருப்பு
களவுக்கு நாங்க பொறுப்பு
கவுதாரி போல வதந்தி
வவ்வால போல தப்பிச்சி
இங்கிட்டு எல்லாம் மறைஞ்சி
காத்தடிச்சு கெளம்புடா
சாராயத்த ஊத்தி தாரேன்
ரத்த துளி நானும் தாரேன்
போற வழி காட்டு வழி
பாதை எல்லாம் கூட வாடி
ஜக்கம்மா ஜக்கம்மா
மலையா தாண்டி
போகும் போதும்
மறுவ தாண்டி
போகும் போதும்
மனசுக்குள்ள
ரொம்ப தாடி
களவு களவு களவு
களவு களவு களவு
களவு களவு களவு
இன்பமிங்கே களவு
இம்புட்டு களவாணி பயலுகள பிடிங்களேன்
ஈன எடுவட்ட பயலுகள புடிங்க புடிங்க புடிங்க
போட்ட களவுக்கும் பீட்டா களவுக்கும்
உடும்ப பிடிச்சாச்சு
ஆட்டுக் களவுக்கும்
மாட்டுக் களவுக்கும்
சலங்கைய அவுத்தாச்சு
கடவுளும் நம்ம போல களவுக்கு வந்தவன்
கன்னதாசாச்சு
களவுல மாட்டிகிட்டு கழுத்த இழந்தவன்
கம்புக்கு பேராச்சு
கொண்டி கம்போடு தயாளு நம்மோடு
கடத்து ராசா களவுக்கு வா
டே எடு எடு எடு முந்திக்கோ
புடி புடி புடி கொண்டி கம்பு
தொடு தொடு கண்ணா வாசல் தோடு
பேட்டை கிளி கெளம்பு
இது களவுக்கு மந்திரமே
என் சாமி பேரு கருப்பு
இம்புட்டு பேரு நெருப்பு
கன்னக்கோல் எங்க துருப்பு
களவுக்கு நாங்க பொறுப்பு
கவுதாரி போல வதந்தி
வவ்வால போல தப்பிச்சி
இங்கிட்டு எல்லாம் மறைஞ்சி
காத்தடிச்சு கெளம்புடா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக