வியாழன், 21 ஜூலை, 2011

செக்ஸ் தொழிலாளிகள்: பெருமைபடுகிறோம் நீதிமான்களே!



நமது வரலாற்றின் வழி நெடுகிலும் பெண்கள் குறித்த பெருமிதம் நிறம்பி வழிகிறது. தாய்மண், தாய் நாடு, நீர் நிலைகளுக்கு பெண்கள் பெயர்கள் என நமது வாய்வீச்சும், எழுத்து பிரதாபங்களும் சொல்லில் அடங்காது. இருப்பினும் பத்தினி பெண்களும் பரத்தையர் வீதிகளும் நிறைந்த நாடாய்தான் நமது நாடு அறியப்படுகிறது. நமது இந்திய நாடு மிகப்பெரிய பாரம்பரியங்களை கொண்டதாக அறியப்பட்டாலும், அதன் வேர்கள் பழமையை உடுத்தியே அலைகிறது. சங்க இலக்கியம் துவங்கி நவீன இலக்கியம் வரை குடும்பம் என்ற அமைப்பிற்கு இணையாக பொதுமகளிர் தேவைகள் மற்றும் அவர்களது சேவைகள் குறித்து பேசப்படுகிற பண்பாடே நம்முடைய பண்பாடு. பரத்தையர், பொதுமகளிர், தேவரடியாள், விலைமகள், தாசி என்றெல்லாம் அழைகப்படும் பெண்கள் குறித்து நமது மனதிற்குள் இருக்கும் சித்திரம் பல்வேறாக இருக்கிறது. 

பேருந்தில் செல்லும் சமயங்களில், பேருந்து நிலையத்தில் நிற்கும் சமயங்களில் இவ்வாரான பெண்கள் நமது கண்களில் தென்படுவார்கள். அப்படியான சமயங்களில் மனித சிந்தனையோட்டம் தாழபறப்பது தவிர்க்க முடியாதது. சொல்லில் அடங்காத வார்த்தைகளை வாய் நிறைய வைத்துத் திரியும் அந்த பாவப்பட்ட பெண்களின் பிரச்சனைகளை பேசுவதே பாவமாய் அறியப்படுகிற நாற்றம் எடுத்த சமூகம் நமது சமூகம்.

அரசியல் தலைவர்கள் இவர்கள் குறித்து பேசத்தயங்கும் சமூக சூழலில் நாம் வாழ்கிறோம். ஆனால் நமது உச்ச நீதிமன்றம் அவர்கள் வாழ்வு மரியாதை நிறைந்த வாழ்க்கையாக அமைய உதவிட வழிகாடுதல் நிலையை மேற்கொண்டுள்ளது. இந்த நிலைபாடு வாழ்த்துக்களுக்கு உறியது மட்டுமல்ல, மனித நேயத்தின் சிறந்த எடுத்துக்காட்டாகவும் இருக்கிறது.

கடந்த 2011 ஜூலை 19 ஆம் தேதி நமது நாட்டின் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மார்கண்டேய கட்சு, கயன் சுதா மிஷ்ரா ஆகியோர் இரண்டு வாரத்திற்குள் இந்திய நாடு முழுவதும் செக்ஸ் தொழிலாளிகளின் கருத்துக்களை கேட்டறிந்து, அவர்களின் கணக்கீட்டை செய்து, அவர்களில் யார் மறுவாழ்வுக்கு திரும்புகிறார்கள் என்ற விபரங்களுடன்  மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய, மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர். நல்லது அந்த நீதிமான்களை வாழ்த்துகிறோம்.

ஆனால் பிரச்சனை மறுவாழ்வு கொடுப்பது மட்டுமல்ல. மறுவாழ்வு கொடுத்தால் இந்த நரகத்தில் வீழ்ந்து கிடக்கும் அனைத்து பெண்களும் எழுந்து வரவே தயாராக இருப்பர்கள். இந்திய அரசியால் சாசன சட்டம் 21 ஆம் பகுதியில் கூறும் "மரியாதைக்குறிய வாழ்க்கையை" வாழ அவர்களும் தயாராகவே இருக்கிறார்கள். ஆனால் நமது சமூக அமைப்பு அவர்களை வாழ அனுமதிக்குமா என்பதுதான் பிரச்சனை. 

பண்ணாட்டு நிறுவனங்களும், இந்திய முதளாலித்துவ சமூக அமைப்பும் பெண்களின் உடலை மைய்யமாய் வைத்தே தங்களது வர்த்தக விளம்பரங்களை வளர்த்தெடுக்கும் போது அவர்களுக்கு இத்தகைய சதை வியாபார சந்தை தேவைப்படுகிறது. இவர்களை ஒழிக்காதவரை இவைகளை ஒழிக்க முடியாது என்பதே நிதர்சனம்.
ஆக முதலில் ஒழிக்க வேண்டியது ??????????????????

3 கருத்துகள்: