புதன், 2 பிப்ரவரி, 2011

என்கவுன்டர் எனும் அய்யோக்கியத்தனம்....?!!!!!!!!!!!

மணிப்பூரைச் சேர்ந்தவர் இரோம் ஷர்மிளா என்ற பெண்மணி. ஆயுதப்படையினர் சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்கக்கோரி 10 ஆண்டுகளாக தனி நபராக நின்று உண்ணாநிலைப் போராட்டம் நடத்தி வருகிறார் என்பது பலரும் அறிந்த செய்தி. ஆனால் அவர் இந்த போராட்டத்தை துவக்கிய புள்ளி மிகவும் முக்கியமானது. 2000 ஆம் ஆண்டு நவம்பர் 2ஆம் தேதி மணிப்பூர் மாநிலம் மல்லோம் என்ற இடத்தில் அஸாம் துப்பாக்கிப் படையினர் நடத்திய காட்டுமிராண்டித் தனமான 'என்கவுண்டரில்' ஒரு நடுவயது பெண்மணி உட்பட 10 அப்பாவி மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.இந்த கொடுரத்தை பார்த்த அதனால் அதிர்ச்சியுற்ற இரோம் ஷர்மிளா அன்றைய தினம் தனது உண்ணாநிலைப் போராட்டத்தைத் துவங்கினார், மத்திய அரசு மணிப்பூர் மீது விதித்துள்ள ஆயுதப்படையினர் சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்கக்கோரி 10 ஆண்டுகளாக தனி நபராக நின்று உண்ணாநிலைப் போராட்டம் நடத்தி வருகிறார்.

ஊடகங்கள் தொடர்ந்து தமிழகத்தில் நடக்கின்ற  என்கவுன்டர் கொலைகளை ஆதரித்து செய்திகளை வெளியிடுவதை வழமையாக கொண்டுள்ளன. ஒரு கொடுரமான கொலை நடந்ததும்  அதில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகளை காவல்துறை என்கவுன்ட்டரில் போட்டுத்தள்ளுவது ஏதோ வீரம் மிகுந்த சாகச செயல்போல சித்தரிக்கப்படுகிறது.  கையில் விலங்கிட்டு அழைத்து செல்லும் குற்றவாளியை சுட்டுத் தள்ளுவதில் என்ன வெண்டைக்காய் வீரம் என புரியவில்லை.உதாரணத்திற்கு கடைசியாக என்கவுன்டர் நடந்த கோவை முஸ்கன் என்ற பெண் குழந்தையை கடத்தி கொலை செய்த கொடுர பாதகர்களை காவல்துறை கைது செய்து தப்பி ஓடிய மோகன கிருஷ்ணனை என்கவுன்டர் செய்த சம்பவத்தை எடுத்துக்கொள்வோம். எல்லா என்கவுண்டர்களைப்போல இதிலும் ஒரே வசனம்தான். அதாவது குற்றவாளி தப்பி ஓடியபோது வேறு வழியல்லாமல் சுட்டதில் மரணம் நடந்தது .
கொடுமையாக நடந்த இந்த குழந்தையின்  கொலை மன்னிக்க முடியாத குற்றம் என்பதில் மாற்று கருத்து இல்லை. மீண்டும் இப்படி ஒரு வெறிச்செயல் நட்டக்காமல் இருக்கவேண்டும். ஆனால் காவல்துறை மனோகர் என்ற நபர்தான் அக்குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்தது என புலனாய்வு செய்து கண்டுபிடித்தனர். ஆனால் அவசர அவரசமாக கொலைசெய்தது மோகனகிருஷ்ணனை. அவசரகதியில் காவல்துறை கொலை செய்ய காரணம் மக்களிடம் இருந்த கோபத்தை சாதகமாக வைத்து தங்கள் புகழை உயர்த்திக்கொள்வதுதான்  அவர்களுக்கு முக்கியமாக இருந்தது.   ஒருசிலர் இனிப்பு கொடுத்து கொண்டாடியதை மீண்டும் மீண்டும் ஒளிபரப்பி அனைவரையும் முட்டாய் கொடுக்க ஊடகங்கள் தூண்டியது.  அதாவது தனிமனித உணர்வுகளை சமுக உணர்வாக கட்டமைப்பதில் மிகவும் ஆபத்து உள்ளது என்பதை உணர்வதில் உண்டாகும் குழப்பத்தின் வெளிப்பாடு இது. பாலியல் கொடுமை செய்தவன் என்ன ஆனான்? அதெல்லாம் பின்னுக்குச்சென்று விட்டது.

"வெள்ளைக்காரன் ஆண்டப்ப நாடு ரொம்ப நல்லா இருந்தது"... 
"மிலிட்டிரி ஆட்சி வந்தாத்தான் சார் சரிவரும்" ... போன்ற டுபாகூர் வசனங்களை பேசும் நபர்களை போல என்கவுன்டர் என்ற அய்யோக்கிய தனத்தை கொண்டாடுகிற மனநிலையை ஆதரிக்கின்ற வேலைகளை ஊடகங்கள் தொடர்ந்து செய்வது மிகவும் ஆபத்தானது மட்டுமல்ல மக்கள் இயக்கங்களுக்கு அச்சுறுத்தலானதும் ஆகும். குஜராத்திலிருந்து வெளிவரும் தகவல்கள் மிகவும் அச்சுறுத்துவதாக உள்ளது. தங்கள் பதவி உயர்வுக்காக அப்பாவி இஸ்லாமியர்கள் என்கவுன்டர் செய்யும் அய்யோக்கியர்கள் அங்கு காவல்துறை அதிகாரிகளாக உள்ளனர். மும்பையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்  100 போட்ட போலீஸ் அதிகாரி என தயாநாயக் என்ற அதிகாரி பற்றி கொண்டாடப்பட்டது. அதாவது 100 என்கவுன்டர் செய்தவராம் அவர். அதன்பின்பு அவர்மீது சட்டவிரோதமாக கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தாக வழக்கு பதியப்பட்டது. பின்புதான் அவர் லட்சணம் வெளியே வந்தது. மும்பை தாதா தாவூத் இப்ராஹிமின் ஆட்களிடம் பணம் பெற்றுக்கொண்டு சோடாராஜன் ஆட்களை மட்டுமே ‘என் கவுண்டர்’ பண்ணியதாக அவர்மீது குற்றச்சாட்டு வந்தது. 100 கோடி சொத்து எப்படிச் சேர்ந்தது என்பது இப்போது விளங்கியிருக்கும். இதேபோல இன்னொரு அதிகாரி ஷர்மா என்பவரும் என்கவுன்டர் ஸ்பெசலிஸ்ட் என்று பெயர் எடுத்தவர். இவரது லட்சணமும் இதுதான்.  ஷர்மாவின் மீதும் நாயக்கின் மீதும், “பணம் கொடு. இல்லாவிட்டால் ‘என்கவுண்டர்’ என்று சொல்லிக் கொன்றுவிடுவேன்” என மிரட்டியதாக பழைய இரும்பு வணிகர் ஒருவர் வழக்குத்தொடர்ந்துள்ளார். சோட்டா ஷகிலிடம் ஒரு ‘காரியத்திற்காக’ 5 கோடி ரூபாய் பெற்றுக்கொண்டதாக இன்னொரு வழக்கு. ஆனால் இவர்கள் புகழடைய காரணம் தனிமனித உணர்வுகள்  சமுக உணர்வாக கட்டமைக்கப்பட்டதுதான்.

தேசிய மனித உரிமை ஆணையம் துவக்கப்பட்டபின் வந்துள்ள 1502 புகார்களில் 12 என்கவுண்டர்கள் போலியானவை என கண்டறியப்பட்டுள்ளன. அதே நேரம் 1993 முதல் 2010 வரையில் பெறப்பட்டுள்ள 1560 புகார்களில் 856 போலி என்கவுண்டர்கள் நடந்துள்ளதாக தேசிய மனித உரிமை ஆணையமே தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் என்கவுன்டர் கலாச்சாரம் திமுக ஆட்சியிலும் தொடர்வது கவலைக்குரியது. ஆனால ஒரு விபரம் இல்லாத  குடிமகனின் அணுகுமுறைதான் ஆட்சியாளர்களின் அணுகுமுறையிலும் தெரிகிறது.  2010 மே மாதம் 10 ஆம் தேதி சட்டபேரவையில் நடைபெற்ற காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் 2007 ஆம் ஆண்டு 1521 கொலைகளும், 2008 ல் 1630 கொலைகளும், 2009 ல் 1644 கொலைகளும் நடந்திருப்பதாகக் குறிப்பிட்டு அவைகள் எந்தெந்த காரணங்களுக்காக நடந்துள்ளது என்றும் குறிப்பிடுகிறார். மேலும் காவல் நிலையத்தில் லாக்‍அப்‍பிலே இருக்கக் கூடியவர்கள் சிறைக்கோ, நீதிமன்றத்திற்கோ அழைத்துச் செல்லப்படுகிற நேரத்தில் சில சந்தர்ப்பங்களில் இதுபோன்ற சம்பங்கள் நடைபெற்றுவிடுகின்றன. இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கைகளை தயங்காமல் எடுத்து வருகிறது. கடந்த 2001 முதல் 2006 வலையிலான அதிமுக ஆட்சியில் காவல்துறை பாதுகாப்பில் 35 மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகவும், 2006 முதல் 2010 மே வரையில் திமுக ஆட்சியின் 4 ஆண்டு காலங்களில் 15 தான் நடந்துள்ளதாகவும்  கூறியுள்ளார். 
 13.05.2006 அன்று புதிய அரசு பதவி ஏற்ற பின் நடந்த தமிழகத்தில் நடந்துள்ள காவல்துறை பொருப்பிலான என்கவுன்டர் கொலைகள் இவை.
1. 29.05.2006 ராஜன் என்ற உருண்டை ராஜன்- கன்னியாகுமரி
2. 07.06.2006 நாகூர் மீரான்- சென்னை
3. 12.08.2006 செந்தில் குமார்-சென்னை
4. 22.10.2006 ரவி என்ற முட்டைரவி-திருச்சி
5. 12.12.2006 குமார் என்ற பங்க் குமார்-சென்னை
6. 17.11.2006 கிருஷ்ணன் என்ற கொர கிருஷ்ணன்-காஞ்சிபுரம்
7. 13.01.2007 மாரிமுத்து என்ற டோரி மாரி- மதுரை
8. 05.02.2007 சங்கர் என்ற மணல்மேடு சங்கர்-நாகை
9. 01.08.2007 1. வெள்ளை ரவி- சென்னை 2. குணா - சென்னை
10.03.04.2008 மிதுன் சக்கரவர்த்தி-தஞ்சாவூர்
11.11.04.2008 ஜெயக்குமார்-தூத்துக்குடி 2. சுடலைமணி-தூத்துக்குடி
12.19.04.2008 நவீன் பிரசாத்- கொடைகானல்
13.28.04.2008 பாம் பாலாஜி- தஞ்சாவூர்
14.11.07.2008 பாப சுரேஸ்- காசிமேடு சென்னை
15.16.11.2008 கோபி-சேலம்
16.19.01.2009 தெய்வேந்திரன் -திண்டுக்கல்
17.06.02.2009 சண்முகம்-சிவகங்கை
18.09.07.2009 தனசேகரன்- சென்னை
19.29.7.2009 சுந்தரமூர்த்தி- விருதுநகர்-சிவகாசி
20.02.10.2009 செந்தில் @ குரங்கு செந்தில்-நாகை
21.18.01.2010 அசோக்குமார்- விழுப்புரம்
22.08.02.2010 1.பாண்டியன் -– சென்னை 2. வேலு -– சென்னை
23.16.02.2010 1.கவியரசு - மதுரை 2.கலலுமண்டையன்- மதுரை
24.26.03.2010 கொர நடராஜன் - காஞ்சிபுரம்
25.29.04.2010 குமார்- சாத்தூர்- விருதுநகர்
26.09.11.2010 மோகன்ராஜ் - கோவை . 26  சம்பவங்களில் 30 கொலைகள் நடந்துள்ளது. இப்படியே தொடரும் என சொன்னால் தமிழக காவல்துறை யாரையும் குற்றவாளி என கட்டமைத்து சுட்டுக்கொலை செய்யலாம் என்றாகிவிடும். குற்றவாளிகளின் குற்றப்பின்னணி சமுக பின்னணியுடன் இணைந்தது என்ற புரிதல் இல்லாமல் என்கவுன்டரை ஆதரிக்கும் மடத்தனம் தொடர்வதை அனுமதிக்க  முடியுமா?

வறுமையான குடும்ப சூழலும், நெருக்கடியான வாழ்வியல் அமைப்பும், பணம், உல்லாச வாழ்க்கையின்  மீதான ஆசைகளும் இளைஞர்களை  குற்றவாளியாக மாற்றும் சமுக சூழலை  மாற்றாமல் குற்றங்களை தடுக்க என்கவுன்டர்கள் தீர்வு என சொன்னால் எல்லா குற்றங்களுக்கும் இது பொருந்துமா என்ற கேள்வியும் இயல்பாக எழும்தானே? காஞ்சிபுரம் சங்கரராமனை கொலைசெய்த, தினகரன் அலுவலத்தை எரித்து அதன் உள்ளே மூன்று உயிரை வேகவைத்த, தா.கிருட்டிணனை  கொலை செய்த, சமிபத்தில் பேரளத்தில் மக்கள் உழியர் நாவலனை கொலை செய்த குற்றவாளிகளுக்கு எதிராக காவல்துறையின் துப்பாக்கி கடமையாற்ற மறுத்தது ஏன்? இப்படிப்பட்ட கேள்விகள் எழுப்பப்படவேண்டிய அவசியம் இருக்கிறது. கடைசியாக ஒன்று குற்றங்களுக்கான பின்னணியை அப்படியே வைத்துக்கொண்டு குற்றவாளிகளை மட்டும் நொந்துக்கொல்வது அறிவுடை செயலா என்பதை மட்டும் யோசிக்கவேண்டும்.

                                                      போலி என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட சொராபுதின்

16 கருத்துகள்:

  1. உங்களுடைய கட்டுரை பொருள் பொதிந்தது. வளர்ந்து வரும் சூழலுக்கேற்ப மனித உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதும் உரிமைகளை பாதுகாப்பதும் அவசியமானது. வரலாறும் அதைத்தான் காட்டுகிறது. முதலாளித்துவ அரசின் கொள்கைகளும் கோட்பாடுகளும் எத்தகைய வஞ்சகமானது என்பது நாம் அறிந்ததே. அந்த அளவிலேயே இத்தகைய என்கௌண்டரையும் பயன் படுத்திக்கொள்கிறார்கள் என்பதை உள்ளீடாக கட்டுரையை வாசிக்கும்போது உணர முடிகிறது.

    பதிலளிநீக்கு
  2. comrade nalla iruku katturai ....aanal sattam sariyana thandanaiyai udanadiyaga alithaal.. makkal encounter mela irukura nambikai koraiyum la.

    பதிலளிநீக்கு
  3. மிக அவசியமான் கட்டுரை.
    இதற்கு எதிராக நிறையப் போராட வேண்டும்.
    இதில் தானே சிறந்தவன் என்று மார் தட்டிக் கொள்ளும் அதிகாரிகள் மனித உரிமை மீறல் சடத்தில் தண்டிக்கப் பட வேண்டியவர்கள்.

    பதிலளிநீக்கு
  4. அன்புள்ள குமார் வணக்கம்,
    //////////// வளர்ந்து வரும் சூழலுக்கேற்ப மனித உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதும் உரிமைகளை பாதுகாப்பதும் அவசியமானது//////////////////// என்ற உங்கள் கருத்து நியாயமானது. தங்கள் பின்னுட்டத்திற்கு நன்றி

    பதிலளிநீக்கு
  5. அன்புள்ள செயபால் வணக்கம்,
    ///////////////////இதற்கு எதிராக நிறையப் போராட வேண்டும்/////////////உங்கள் கருத்து நியாயமானது மட்டுமல்ல பாராட்டப்பட வேண்டியது. மனித உரிமைகளை பாதுகாக்க களத்தில்போராடுவோம் . தங்கள் பின்னுட்டத்திற்கு நன்றி

    பதிலளிநீக்கு
  6. அன்புள்ள டக்கால்டி மற்றும் தமிழன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமைப்படும் நண்பருக்கும் வணக்கம், தங்கள் பின்னுட்டத்திற்கு நன்றி

    பதிலளிநீக்கு
  7. என்கவுண்டர்களை நியாயபடுத்தவே மனித இனம் ஏற்றுகொள்ள முடியாத குற்றம் புரிந்த குற்றவாளிகளை சட்டப்படி தண்டிக்காமல் மோகன்ராஜ் போன்றவர்களை

    கொள்கிறது நமது அரசு கட்டுரை அருமை என்கவுண்டர் குறித்த சரியான புரிதலை ஏற்படுத்தியது கட்டுரை ........எ.சாதிக் அலி

    பதிலளிநீக்கு
  8. தங்கள் பின்னுட்டத்திற்கு மிகவும் நன்றி சாதிக்

    பதிலளிநீக்கு
  9. நல்ல கட்டுரை, ஒரு காமெடியன் சொல்வார் தண்டனைகள் கடுமையானால்தான் குற்றங்கள் குறையும் என்று,,, இன்னும் சொல்லப்போனால் அதுதான் சரியும்கூட, கொலைக்கு கொலையே சரி, விசாரணை செய்து உண்மையிலேயே அப்படி ஒரு தவறு நடந்திருந்தால் தண்டனை கடுமையாக இருக்க வேண்டும், ஆனால் அவை சட்டங்களாக்கப்பட்டிருக்கவேண்டும், நீதிமன்றம் அந்த கடுமையான குற்றத்திற்கு தண்டனை வழங்கவேண்டும், சட்டத்தை போலீஸ்துறை கையிலெடுக்க கூடாது. இந்தியாவில் நடக்கும் மோதல் கொலைகள் போலீஸ் சோடித்ததே!!

    பதிலளிநீக்கு
  10. தங்கள் பின்னுட்டத்திற்கு நன்றி ஆர்.கே.சதிஷ்குமார்

    பதிலளிநீக்கு
  11. தங்கள் பின்னுட்டத்திற்கு நன்றி உங்களுடன் ஒருவன்...
    உங்களுடைய கருத்தில் எனக்கு முழு உடன்பாடு

    பதிலளிநீக்கு
  12. you are absolutely correct.SIR
    nowadays we can able to see many encounters in our routine life.so we must be take any action among this...

    பதிலளிநீக்கு
  13. Dear Ramesh, Ofcourse i remember that the former chief justice once said "Police are the Organised Criminals" but one thing i would like to say is the crimes violations of human rights by the bureaucrats is greatly depended by the attitude of the people and i think the state,politicians,bureaucrats had planned not to educate this society in terms of socio-political entities...the only solution for these human violations are the education ( education not for getting a job rather to equip one's inbound potential) also personally feel that the democratic movements are still lacking vastly in reaching and organisingf people and also i think that in this neo liberised world the movements,approach should be reviewed and should be taken forward in a vast and different means...so i think we can further discuss about on how to organise students,youth and women for an alternative society......

    பதிலளிநீக்கு