பிரியமுள்ள நண்பர்களே! ஒவ்வொரு வாரமும் என் கண்ணில் பட்டு நான் ரசித்த கவிதைகளை உங்களிடமும் பகிர்ந்துக்கொள்ள ஆசைபடுகிறேன். நம்மை சுற்றி நடக்கும் பல சம்பவங்களை கவிதையாக மொழிபெயர்க்கும் அற்புதமான படைப்பாளிகள் எழுந்து வருகிற காலமாய் இன்றைய காலம் உள்ளது. எல்லோருக்கும் அறிந்த கவிஞர்களாய் இருக்கலாம் அல்லது பெயர் தெரியாத புதிய கவிஞர்களாய் இருக்கலாம் அவர்களது கவிதை நம்மை ஈர்ப்பதாய் இருப்பின் அவைகளை பிறருடன் பகிர்த்துககொள்வது மகிழ்ச்சியான விடயம்தானே.
இந்த வாரம் நான் ரசித்த கவிதைகளில் மூன்றை தருகிறேன். இவை மூன்றும் கவிஞர் ஜெயபாஸ்கரன் கடந்த வார ஆனந்தவிகடன் இதழில் எழுதிய கவிதைகள். ஓங்கிக்குரல் எடுத்து உரக்க பேசவேண்டியவைகளை எப்படி பெண்கள் விழுங்கி செரிக்கின்றனர் என்பதை மிகவும் நுட்பத்துடன் எழுதி இருக்கிறார். என்னைப் பெண் பார்த்த படலம் என்ற தலைப்பில் அவர் எழுதி இருக்கும் எட்டுக் கவிதையில் இவை மூன்று.
எழுகுரலும் அழுகுரலும்
அமர்ந்த நிலையிலேயே
அப்பா அதிர அதிர
சன்னமான குரலில்
நிதானமாக அரங்கேற்றிய
வரதட்சணை பேரத்தின்
வலி தங்க முடியாமல்
கதவை சாத்திக்கொண்டு
காற்றொலியோடு கட்டுப்படுத்தி
குலுங்கியழுகிறேன்
எஞ்சியிருந்த
என் கைப்பையைப்
பறித்துக்கொண்டு ஓடிய
எவனோ ஒருவனைத் துரத்தி
விடாதே பிடியென்று
வீதியே திரும்பிப் பார்க்க
குரலெழுப்பிய நான்!
பார்க்க வந்தவர்கள்
அவர்கள்
கேட்டால் சொல்வதற்கு
என்னிடம்
ஏராளமான செய்திகள்
இருக்கின்றன.
அவர்களோ
என்னைப் பார்க்க மட்டுமே
வந்திருக்கிறாரகளாம்!
எனக்கும் மாப்பிள்ளைக்கும்
என்னைப் பெண் பார்க்க வரும்
மாப்பிள்ளை வீட்டார் முன்பு
அடக்க ஒடுக்கமாக
நடந்துகொள்ளும்படியும்
அவ்வாறே நடந்து வருமாறும்
அதட்டலான உரத்த குரலில்
அறிவுறுத்தப்பட்டேன் நான்.
நிமிர்ந்து உட்காருமாறு
காத்துக்குள்
கிசுகிசுப்பாகச் சொல்லபட்டது
மாப்பிள்ளைக்கு!
நண்பர்களே உங்களுக்கு பிடித்த கவிதையை அல்லது உங்களுடைய கவிதையை கட்டாயம் இந்த ஈ மெயில் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். வாரம் ஒருமுறை பதிவிடலாம்.
sgrbabu@yahoo.com
அமர்ந்த நிலையிலேயே
அப்பா அதிர அதிர
சன்னமான குரலில்
நிதானமாக அரங்கேற்றிய
வரதட்சணை பேரத்தின்
வலி தங்க முடியாமல்
கதவை சாத்திக்கொண்டு
காற்றொலியோடு கட்டுப்படுத்தி
குலுங்கியழுகிறேன்
எஞ்சியிருந்த
என் கைப்பையைப்
பறித்துக்கொண்டு ஓடிய
எவனோ ஒருவனைத் துரத்தி
விடாதே பிடியென்று
வீதியே திரும்பிப் பார்க்க
குரலெழுப்பிய நான்!
பார்க்க வந்தவர்கள்
அவர்கள்
கேட்டால் சொல்வதற்கு
என்னிடம்
ஏராளமான செய்திகள்
இருக்கின்றன.
அவர்களோ
என்னைப் பார்க்க மட்டுமே
வந்திருக்கிறாரகளாம்!
எனக்கும் மாப்பிள்ளைக்கும்
என்னைப் பெண் பார்க்க வரும்
மாப்பிள்ளை வீட்டார் முன்பு
அடக்க ஒடுக்கமாக
நடந்துகொள்ளும்படியும்
அவ்வாறே நடந்து வருமாறும்
அதட்டலான உரத்த குரலில்
அறிவுறுத்தப்பட்டேன் நான்.
நிமிர்ந்து உட்காருமாறு
காத்துக்குள்
கிசுகிசுப்பாகச் சொல்லபட்டது
மாப்பிள்ளைக்கு!
நண்பர்களே உங்களுக்கு பிடித்த கவிதையை அல்லது உங்களுடைய கவிதையை கட்டாயம் இந்த ஈ மெயில் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். வாரம் ஒருமுறை பதிவிடலாம்.
sgrbabu@yahoo.com
கவிதை பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குGoon Thing.
பதிலளிநீக்குKeep going. Thanks.
மதுரை சரவணன் மற்றும் செல்வராஜ் ஜெகதீசன் இருவருக்கும் நன்றி...
பதிலளிநீக்கு