செவ்வாய், 8 ஜூன், 2010

அன்பானவர்கள் காத்திருக்கின்றனர்.

நீங்கள் பயணம் செய்யும் போது வழியில் ஏதாவது விபத்தை பார்க்க நேரிட்டால் உடன் உங்கள் நெருங்கிய நண்பர்கள் அல்லது உறவினர்கள் நினைவுக்கு வருவது தவிர்க இயலாததாகிறது அல்லவா? அதுவும் வேலை நிமித்தமாக அடிக்கடி பேருந்தில் அல்லது காரில் பயணம் செய்பவர்களுக்கு இவைகள் தவிர்க்க முடியாது. கடந்த ஆண்டு மட்டும் தமிசகத்தில் 24 ஆயிரம் பேருக்கு மேல் காலை விபத்தில் தமிசகத்தில் மரணமடைந்துள்ளனர்.  அதுவும் சமீபத்தில் தமிழகத்தில் அதிக சாலை விபத்துகள் நடப்பதால் ஏற்படும் பதட்டம் சொல்லி மாளது.
இப்படி நடக்கும் விபத்துகளில் பெரும்பான்மையானவை தூக்கம் இன்மையால் மற்றும் அலைபேசி பேசிக்கொண்டே வாகனம் ஓட்டும்போது ஏற்படுபவையே.
மேலே கண்ட இந்த விளம்பரப்படம் வாகனம் ஓட்டும் போது ஏற்படும் விபத்தை அதனால் தனது சொந்தம் படும் அதிர்ச்சியை உணரவைக்கும் விளம்பரம். இந்த விளம்பரத்தை பார்க்கும் எவரும் ஒரு கணம் அதிர்ந்தே போவார்கள். சிறந்த இந்த விளம்பர படம் ஆர்குட்டில் நணபரக்ள் அனுப்பியது. வாகனம் ஓட்டும் போது அலைபேசியில் பேசுவதை தவிர்ப்போம். அன்பானவர்கள் வீட்டில், அலுவலகங்களில் நமக்காக காத்திருக்கின்றனர்.
நன்றி -----------------------------------------------------------------------------------"தீக்கதிர்" வண்ணக்கதிர்
                                          

9 கருத்துகள்:

  1. ஒரு பத்திரிகையில் வந்த செய்தி என்றால் அதற்கு நன்றி குறிப்பிட்டுத்தான் போட வேண்டும்.

    பதிலளிநீக்கு
  2. அன்பிற்குறிய பெரிதாய் ஒன்றுமில்லை வணக்கம்.
    தீக்கதிர் வண்ணக்கதிரில் நான் தான் எழுதினேன் இருப்பினும் தாங்கள் சொன்னது சரியே திருத்தி விடுகிறேன். நன்றி

    பதிலளிநீக்கு
  3. அன்பிற்குறிய பெரிதாய் ஒன்றுமில்லை வணக்கம்.
    தீக்கதிர் வண்ணக்கதிரில் நான் தான் எழுதினேன் இருப்பினும் தாங்கள் சொன்னது சரியே திருத்தி விடுகிறேன். நன்றி

    பதிலளிநீக்கு
  4. இந்தப் படமே என்னவோச் செய்கிறது...

    பதிலளிநீக்கு
  5. நன்றி மாது. இந்த படம் குறித்து தாங்கள் எழுதினால் இன்னும் சிறப்பாக இருக்கும்

    பதிலளிநீக்கு
  6. கவனத்தில் கொள்ளவேண்டிய பதிவுங்க... பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு