மே 28-29, புதுக்கோட்டை
மே 29-ல் எழுச்சிமிகு பேரணி!! அணி திரள்வீர்! ஆதரவு தாரீர்!!
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் முதலாவது மாநில மாநாடு 2010 மே 28, 29 தேதிகளில் புதுக்கோட்டையில் எழுச்சிகரமாக நடைபெறுகிறது. தமிழ்நாடு முழுவதிலும் நுற்றுக்கணக்கான பிரதிநிதகள் பங்கேற்கிறார்கள்.
நடைபெற்ற போராட்டங்களை பரிசீலித்து எதிர்காலப் போராட்டங்களுக்குத் திட்டமிடுகிறார்கள். மாபெரும் பேரணி நடைபெறுகிறது. அமைப்பு உருவாக்கப்பட்டு 3 ஆண்டுகள் மட்டுமே முடிந்துள்ள போதிலும், தீண்டாமை ஒழிப்பு மற்றும் தலித் மக்களின் உரிமைகளை நிலைநாட்டும் போராட்டங்களில் தனி முத்திரை பதிதத இயக்கமாக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணிசெயல்பட்டு வந்துள்ளது.
உத்தபுரம், கோவை பெரியார் நகர் தீண்டாமை சுவர்கள் உடைப்பு
அருந்ததியர் அமைப்புகளுடன் இணைந்து போராடி அம்மக்களுக்கு 3 சத உள்ஒதுக்கீடு வெற்றி
- சென்னை கோட்டை நோக்கி 20 ஆயிரம் அருந்ததியர் பேரணி என பல கட்ட இயக்கங்கள், மாவட்டங்களில் எழுச்சிமிக்க மறியல் போராட்டங்கள்,
10 மாவட்டங்களில் பல்லாயிரக் கணக்கானோர் பங்கேற்ற மாவட்ட மாநாடுகள் நடந்தன. தமிழகஅரசு வேலை வாய்ப்பில் உள்ஒதுக்கீடு அமலாக்காததைக் கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.
2009 அக்டோபர் 27ல் 15 ஆயிரம் பேர் அணிதிரண்டு செனனைகோட்டை நேக்கிய தலித் உரிமைப் பேரணி- முதலமைச்சரிடம் கோரிக்கை சாசனம் 15 ஆலயங்களில் தலித் மக்களின் வெற்றிகரமான ஆலய நுழைவுப் போராட்டங்கள்
- காங்கியனூரில் காவல்துறை தாக்குதலையும், செட்டிபுலத்தில் ஆதிக்க சக்திகளின் வன்முறைகளையும் எதிர் கொண்டு நடந்தவை
நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக கிராமங்களில் நேரடி நடவடிக்கைகள் மூலம் இரட்டைக்குவளை முறை ஒழிப்பு, பொதுப்பாதை பயன்பாடு, சலூன்களில் முடிவெட்டும் உரிமை, சலவையக உரிமை, மயான உரிமை, மயானப்பாதை உரிமை, பொதுச்சொத்தில் பங்கு பெறும் உரிமை உள்ளிட்ட உரிமைகளை நிலை நாட்டியது.
ஏராளமான கிராமங்களில் வன்கொடுமைகள், சமூக பகிஷ்காரம் போன்ற ஆதிக்க சக்திகளின் தாக்குதல்களை எதிர்கொண்டு முறியடித்தது.
தலித் கிறித்தவர்களை பட்டியல் இனப்பிரிவில் இணைத்து உரிமைகள், சலுகைகள் வழங்கக் கோரி திருச்சி, நெல்லை மாநகரங்களில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற எழுச்சிமிகு மாநாடுகள்-மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டங்கள்.
சாதிய சக்திகளின் வன்முறைகளை அம்பலப்படுத்தியும், சமூகநீதி கோரியும் நடத்தப்பட்ட விருதுநகர் பொதுவிசாரணை மற்றும் பல தீண்டாமை ஒழிப்பு மாநாடுகள்... தலித் பழங்குடி மக்கள்தொகைக்கு ஏற்ப உபதிட்ட நிதி ஒதுக்கீடு, ஒதுக்கப்ப்டட நிதியை முழுமையாகச் செலவிடுவது, பின்னடைவு காலியிடங்களை நிரப்புவது போன்ற கோரிக்கைகளுக்காகச் சென்னையில் சிறப்பு மாநாடு. மனித மலத்தை மனிதன் அள்ளும் கொடுமைக்கு முடிவு கட்ட, வெட்டியான என்ற இழிபெயரை மயான உதவியாளர்களாக பெயர் மாற்றி அரசு ஊழியராக நியமனம் பெற,செருப்பு தையல் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற சென்னையில் சிறப்பு மாநாடு.
தலித் மக்களுக்கு குடிமனைப்பட்டா வழங்கிட, தலித் மக்களின் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை மீட்டிட, பஞ்சமி நிலங்களை மீட்டுத் தந்திட பேரணிகள் ஆர்ப்பாட்டங்கள்...
நகர்ப்புற தலித் மக்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகள் மற்றும் அடிப்படை வசதிகள் நிறைவேற்றித் தர மதுரை மாநகரில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற பேரணி....
விடுதலைப் போராளி ஒண்டி வீரனுக்கு நினைவிடம் எழுப்பிட - தற்போது தமிழக அரசு நினைவுச்சின்னம் என அறிவித்ததை ஒண்டிவீரன் மணிமண்டமாக அமைக்க வலியுறுத்தி இயக்கங்கள்...
தலித் பெண்களின் பிரச்சனைகளையும், கோரிக்கைகளையும் முன் நிறுத்தி ஈரோட்டில் தலித் பெண்கள் மாநாடு...
தலித் குழந்தைகள் - இளைஞர்களின் கல்வி, வேலை வாய்ப்பில் முன்னேற்றம் காண கோவை மாநகரில் டாக்டர் அம்பேத்கார் கல்வி வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் வெற்றிகரமான செயல்பாடு - இதர 11 மையங்களில் இத்தகைய மையங்கள் அமைய ஏற்பாடு
தலித் மக்களின் எழுச்சியையும், உணர்வுகளையும் பிரதிபலிக்கும் எழுச்சிமிக்க திருச்சி கலைவிழா. புதுச்சேரி மாநிலத்திலும் அருந்ததியர் உள்ஒதுக்கீடு, பழங்குடி மக்கள் இடஒதுக்கீடு, புலம் பெயர்ந்த தலித்துகளுக்கும் சமஉரிமை கோரி சமூக நீதி மாநாடு
இப்படி 3 ஆண்டுகளில் நடைபெற்ற ஏராளமான இயக்கங்களையும் சாதனைகளையும் அடுக்கிக் கொண்டே போகலாம். சாதியமைப்பைத் தகர்க்கவும், தீண்டாமை கொடுமைகளுக்கு முடிவு கட்டி தலித் மக்களின் சமூக பொருளாதார உரிமைகளை நிலை நாட்டவும், எதிர்காலத்தில் மேலும் தீவிரமாகச் செயலாற்ற தீர்மானித்துள்ளது தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி. இதற்காகத் திட்டமிடவே புதுககோட்டையில் மாநில மாநாடு கூடுகிறது.
மேற்குறிப்பிட்ட அம்சங்களில் நிறைவேற்றப்படாத கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வைப்பதற்கு உறுதி பூண்டுள்ளோம். இதோடு
* சாதி ஒடுக்குமுறைகள், வன்கொடுமைகள், சமூக பகிஷ்காரம் உள்பட தலித் மக்களுக்கு எதிரான அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் முடிவு கட்டிட
* தீண்டாமை ஒழிப்பு வன்கொடுமைத் தடுப்புச் சட்டங்களை உறுதியுடன் அமல்படுத்திட, இதில் அரசு நிர்வாகம் காவல்துறையின் தவறான போக்கிற்கு முடிவு கட்டிட, மலம் அள்ளுவது உள்பட இழி தொழில்களிலிருந்து தலித் மக்களை விடுவித்திட
* தலித் இட ஒதுக்கீட்டை மக்கள் தொகைக்கு ஏற்ப 18 சதவிகிதத்திலிருந்து 19 சதமாக உயர்த்திட
* தலித் பழங்குடி இடஒதுக்கீட்டை மத்திய மாநில அரசுகள் உறுதியுடன் அமல்படுத்திட, காலியிடங்களை, பின்னடைவு காலியிடங்களை உடனடியாக நிறைவேற்றிட, அருந்ததியர் உள்ஒதுக்கீட்டை உறுதியுடன் அமல்படுத்திட
* தலித் மக்களுக்கு முன்னுரிமை அளித்து தமிழக அரசு நிலம் வழங்கிட, பஞ்சமி நிலங்களை மீட்டுத்தர, தலித் மக்கள் உட்பட ஏழைகளக்கு குடிமனைப்பட்டா வழங்கிட, பழுதடைந்த தொகுப்பு வீடுகளை உடனடியாக பழுது நீக்கித் தந்திட
வனஉரிமைச் சட்டத்தை உறுதியுடன் தமிழக அரசு அமல்படுத்திட, பழங்குடி மக்களுக்கு நிலஉரிமை, சாதிச்சான்றிதழ் கிடைத்திட
மே 29ல் 50 ஆயிரம் பேர் பங்கேற்கும் சாதி ஒழிப்பு - தீண்டாமை ஒழிப்புப் பேரணி நடைபெறுகிறது. தலித் மக்கள் மட்டுமல்ல, தலித் விடுதலையில் அக்கறையுள்ள உழைப்பாளிகளும், ஜனநாயக சக்திகளும் பங்கேற்கும் சமூக நீதிப்பேரணியாகவும் இந்தப் பேரணி அமையும்.
மாநாட்டுப் பேரணியில் பங்கேற்க மே 29 மாலை 3 மணிக்கு புதுக்கோட்டை நோக்கி அணிதிரண்டு வருமாறு தலித் மக்களையும், உழைப்பாளி மக்களையும் அறைகூவி அழைக்கிறோம். முழுஆதரவு நல்குமாறு அனைத்துத் தரப்பு மக்களையும் வேண்டிக் கொள்கிறோம்.
மாநாடு வெற்றி பெறவும் சமத்துவம் பெருகவும் வாழ்த்துக்கள் தோழரே ...
பதிலளிநீக்குநேரம் கிடைத்தால் புதுக்கோட்டைக்கு வருகிறேன் ...
_____________
advt.
நண்பர்களே...
தமிழக நிகர்நிலை பல்கலைகழகங்கள் குறித்த டாண்டன் குழுவினர் அறிக்கைக்கு ...
http://neo-periyarist.blogspot.com/2010/05/blog-post_19.html
தீண்டாமை ஒழிக்க ஒடுக்கப்பட்ட மக்களை அணி திரட்டும் இந்த மாநாடு வெற்றி பெற வாழ்த்துக்கள் ....
பதிலளிநீக்குமாநாடு வெற்றி பெற வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குமாநாடு வெற்றி பெற எனது புரட்சிகரமான வாழ்த்துக்கள் தோழா !
பதிலளிநீக்குநமது போராட்டம் தொடரட்டும் ...
புரட்சி வெடி வெடிக்கட்டும் ......
nice comrade
பதிலளிநீக்குபின்னூட்டம் செய்த
பதிலளிநீக்குநியோ, மதுசூதனன், தோழா, கவியருவி, தமிழ்செல்வன் அனைவருக்கும் நன்றி. தீண்டாமைக்கு எதிரான போர் களத்தில் சந்திப்போம்.