வியாழன், 4 மார்ச், 2010

நன்று செய்தாய் சுவாமி நித்தியானதம்... பெட்ரோல் டீசல் விலை உயர்வு பின்னுக்கு போனது.

பார்வை ஒன்று:
    கடந்த இரண்டாம் தேதி சென்னையில் அலுவலக வேலையை முடித்துவிட்டு ரெயில் மூலமாக தோழர்களுடன் பாண்டி சென்றுக்கொண்டிருந்தேன். திடீரென குறுஞ்செய்திகள் நிறைய வர ஆரம்பித்தது எல்லாவற்றிலும் ஒரே தகவல்தான் உடனே சன் டீவியை பார்க்கவும். சுவாமி நித்தியானதத்தின் மறுபக்கம் என்று. 

      மிகவும் தேர்ந்த வியாபார தந்திரத்துடன், விளம்பரம் செய்ய நேரம் எடுத்து, காட்சிகளை எடிட் செய்து, பின்னணியில் இசையும் குரலும் சேர்த்து, காட்சிகளை பார்க்க நேயர்களையும் திரட்டி மிகவும் சுவராசியமாக ஒரு மனிதனின் அந்தரங்கத்தை அரங்கேற்றியது சன் தொலைகாட்சி. ஆங்கிலத்தில் "ஆர்" என்ற எழுத்து கொண்ட நடிகையுடன் சாமிகளின் சல்லாபம் என்று முதல் செய்தி. மக்களுடைய துப்பரியும் மூளை விழித்துக்கொண்டது. பார்கின்ற பார்வையாளர்கள் ராதிகாவா, ரஞ்சிதாவா, ரம்யாவா, ரம்யாகிருஷ்னனா, ராகவியா, ரம்பாவா, ராகவியா என உலகமகா கண்டுபிடிப்பை செய்ய தூண்டியது. அது நான்கு எழுத்து நடிகை என கண்டுபிடிப்புக்கு தொலைகாட்சியே அடுத்த செய்தியில் உதவி செய்தது. மறுநாள் அது ரஞ்சிதா என்று உலகமகா ரகசியத்தை வெளியிட்டது.

   நித்தியானந்தம் நடிகையுடன் சல்லாபம் என்று செய்தி வந்ததும், ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14 ஆம் தேதி கையில் தலியுடன் அலையும், காதலர் தினத்தை எதிர்த்து "இந்திய கலாச்சாரத்தை" பாதுகாக்க புறப்படும்?!  அரை கிறுக்கு  இந்து மதவெறி அமைப்புகள் முந்திக்கொண்டன. நித்தியானந்தத்தின் படங்களை கொளுத்துவது, செருப்பால் அடிப்பது என போராட கிளம்பினர். காரணம் பிற முற்போக்கு இயக்கங்கள் போராட்டத்தில் இறங்கினால் அனைத்து சாமியார்களின் முகமுடிகளும் கிழியும் எனவே மற்றவர்களை பாதுகாக்க அவர்கள் போராட்டத்தில் இறங்கினர்.

    ஆனால் இந்த இந்து மதவாத அமைப்புகள் நெருப்போடும் கையில் செருப்போடும் போகவேண்டிய இடங்களின் பட்டியல் நம்மிடம் நிறைய  உள்ளது.
நித்தியாணந்தம் செய்த லீலைகள் தவறு. சரி ஒரு ஆணும் பெண்ணும் கொஞ்சி  குலாவும் காட்சி  சுவற்றுக்குள் அல்ல, லட்சம்பேர் கூடும் இடத்தில் நடந்தால்  என்ன செய்யலாம்? வகைவகையாய், கூட்டமாய் பாலியல் உறவு கொள்ளும் காட்சிகளை வைத்து பல்லாயிரம் பேர் அதை ஊர்முழுக்க் இழுத்துச்சென்று காட்டினால் என்ன செய்யலாம்? செருப்பும் நெருப்பும் சேர்த்து பரிசாய் கொடுக்கலாம?
எங்கே இந்த அநீதி, ஆபாசம், கொடுமை, விவேகமற்ற செயல், கலாச்சார சீரழிவு,   என்று கொதித்தெழுந்தால், அதை திக்கிரையாக்க  இந்த கலாச்சார காவலர்கள் உடன் புறப்பட வேண்டிய இடம் சிதம்பரம் நடராசர் ஆலயம். மேலவீதி கோபுரத்தில் உமையாள் மற்றும் நடனசபேசனும் கொஞ்சி குலவி காட்சிதருவார். தில்லை மாநகர வீதிகளில் ஆறு மாதத்திற்கு ஒருமுறை இழுக்கப்படும் தேர் முழுவதும் விதவிதமாய் பாலியல் உறவுகாட்சிகள் செதுக்கப்பட்டுள்ளது. அதைதான் அனைவரும் இழுத்து செல்கின்றனர். இப்படி பல ஆலையங்களில் சித்திரங்கள் உள.
இவைகளை எதிர்த்து முற்போக்கு இயக்கங்கள் செருப்பை கையில் எடுக்க யோகிதை இருக்கிறது ஏனெனில் எப்போதும் அவர்கள் சாமியார்களை ஆதரித்தது இல்லை. ஆனால் நித்தியானந்தத்தை கடந்த 1 தேதி இரவு வரை கடவுளாக மக்கள் முன் நிறுத்திய இந்து மத அமைப்புகளுக்கு செருப்பை கையில் எடுக்க எந்த உரிமையும் இல்லை. வேண்டுமானால் ஒன்று செய்யலாம்! "தன்னுடைய செருப்பை எடுத்து........" சரி விடுங்க. 

    நித்தியானந்தம் மட்டுமல்ல பல சாமியார்கள் இப்படிபட்ட சரசலீலைகளில் ஈடுபட்டதும், ஈடுபட்டு வருவதும் நடந்துக்கொண்டுதான் இருக்கிறது. அவர்களும் மனிதர்கள்தானே! அவர்களுக்கு இயற்கையான உணர்வுகள் இருப்பது இயல்புதானே! ஆனால் தன்னை கடவுளாக சித்தரித்து அதைவைத்து மக்களை ஏமாற்றுவதுதான் இதைவிட மிகப்பெரிய ஆபாசம். அதை நோக்கி மக்களின் கோபம் திரும்பாமல் இருக்க காமகலியாட்டங்களை முன்னுக்கு வைத்து, அதை காட்சி பொருளாக மாற்றி விவாதங்ககளை அந்த மட்டத்தோடு நிறுத்தி பின் அடுத்த பரபரப்பு செய்திகளுக்கு நமது ஊடகங்கள் சென்றுவிடும். நமது மக்களும் அடுத்த செய்திகளுக்கு சென்றுவிடுவார்கள். அடுத்து ஒரு சாமியார் வந்து இப்படி மாட்டும் வரை மக்களுக்கு அருளுரை வழங்கிக் கொண்டிருப்பார்.

    கொஞ்சம் யோசித்து பாருங்கள் இந்த வீடியோ காட்சிகள் வெளியாகமல் இருந்திருந்தால் இப்போதும் நித்தியானந்தம் மனிதருள் புனிதராய் வரும் பெண்களை அணைத்து ஆசி வழங்கிக் கொண்டிருப்பார். அது பக்தி பரவசம் என்று நமது அப்பாவிகளும் நினைத்துக்கொண்டிருப்பார்கள். ஆனா பெரிய தமாசு என்னவென்றால்  தம்பி நித்தியானந்தம் "கதவை திற காத்து வரட்டும்!" என்று அருளாசி கட்டுரை எழுதினார். ஆனால் திறந்த கதவின் வழியே கேமிரா வந்ததை பார்க்க தவறிவிட்டதுதான்.
பார்வை இரண்டு:
    நமது நாட்டில் தொடர்ந்து திடீர் சாமியார்கள் வருவது அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. பீர் சாமியார், பீடி சாமியார், பான்பராக் சாமியார், புடவை சாமியார், சாக்கடை சாமியார், சுடுகாட்டு சாமியார் என்றும், நீண்ட நளாக மன்றங்கள் வைத்து செயல்படும் மேல்மருவத்தூர் அம்மா, நாராயனி அம்மா, அமிர்தானதமாயி அம்மா பிறகு சிறி.சிறி.ரவிசங்கர், ஜக்கிவாசுதேவ் போன்ற கார்ப்ரேட் சாமியார்கள்  எனவும்  பட்டியல் நீண்டுக்கொண்டே செல்கிறது.
இத்துனை சாமியார்கள் நச்சு கிருமிகளாய் ஓங்கி வளர காரணம் என்ன? நமது மக்களின் அறியாமையும் அதனால் எழும் மூடநம்பிக்கையும் அல்லவா? அறியமைக்கு காரணம் நெருக்கடிகளிலிருந்து தப்பிக்க முடியாத பொருளாதார வாழ்வியல்தானே? பொருளாதார வாழ்வியலின் நெருக்கடிதன் படித்த கூட்டத்தையும் அமைதி தேடி அலைய வைக்கிறது. "மனசே ரிலாக்ஸ் பிலீஸ்" என்று பேசும் சாமியார்களிடம் அழைத்துச் செல்கிறது.
    
நமது ஊடகங்கள் எரியும் தீயில் எண்ணெயை ஊற்றுவது போல மகாபாரதம், ராமாயணம் , அனுமன் கதை, கிருஷ்னலீலை என்று மீண்டும் மீண்டும் கதைகளை  ஒளிபரப்பு செய்துகொண்டே இருக்கின்றன. ஆவியுடன் ஒரு சேனல் பேட்டி எடுக்கிறது. ஆவியுடன் பேசலம் வாங்க என ஒரு சேனல் அழைக்கிறது. விடியல்  காலையில் எந்த் தொலைகாட்சியை திறந்தாலும் ஏதாவது ஒரு சாமியார் உபதேசம் செய்கிறார்.

    ஆக, சாமியார்கள் மற்றும் சகலவித  மூட நம்பிக்கைகளை உடைத்தெறிய வேண்டுமெனில்   நமது  மக்கள் வாழ்வியல் பிரச்சனையை போராட்ட களத்தில் சந்திக்கும் போதுதான் முடியும். ஆனால் ஆளும் வர்க்கங்களுக்கு இது ஆவாத வேலை என்பதால் அவர்கள் மக்களை ஒரு மாயவலைக்குள் கட்டுக்கோப்பாக வைத்திட இத்தனையையும் செய்து வருகின்றனர்.

    உதாரணத்திற்கு நித்தியானந்த சுவாமிகள் பிரச்சனையை எடுத்துக்கொள்வோம். பெட்ரோல் டீசல் விலையேற்றம் மக்களை வாட்டிவதைக்கும் பட்ஜெட் காலத்தில் வெளிவந்துள்ளது. இந்த  செய்தி  அந்த முக்கிய  பிரச்சனைகள் பின்னுக்கு தள்ளப்பட்டு இந்த செய்தியே அனைத்திலும் ஆக்ரமித்துக்கொண்டது.
பெட்ரோல் டீசல் விலையேற்றத்தை கண்டித்து நாடு முழுவதும் மக்கள் இயக்கங்கள் போராடிய செய்தியை விட இந்த செய்தியே மூன்று தினங்களாக முக்கிய செய்தியாய் இடம்பிடுத்துள்ளது. இவை மட்டுமல்ல  இன்னும் வரும். இந்த செய்தி  போரடித்து மீடியாக்களின் ரேட்டிங் குறைந்தால் அடுத்த பரபரப்பு செய்திகளை கையில் வைத்திருப்பார்கள். ஆனால் தப்பித் தவறி கூட போராட்டங்கள் முக்கிய செய்தியாய் மாறாது.
    ஆகவே..
    1. நித்தியானதம் வெளிப்படையாக மாட்டிக்கொண்டதால் அவருக்கு உரிய தண்டனையை சட்டம் வழங்கட்டும், ஆனால் இன்னும் மக்களை ஏமாற்றும், வெளியில் தெரியாமல் தவறு செய்யும் சாமியார்களை என்ன செய்வதாய் உத்தேசம்?
    2. பரபரப்பு செய்திகளை மட்டுமே செய்திகளாக்கி மக்கள் பிரச்சனைகளை பின்னுக்கு தள்ளும் ஊடக கலச்சாரத்தை என்ன செய்ய போகிறோம்?
    3. இவைகளை தொடர்ந்து ஆதரிக்கின்ற ஆளும் வர்க்கத்தை என்ன செய்யலாம்?
இணைந்து யோசிப்போம் வாருங்கள் நண்பர்களே!

20 கருத்துகள்:

  1. நல்ல கருத்து

    உண்மைதான் இன்னும் வேறு ஒரு பரபரப்பு செய்தி வந்து விட்டால் இதை மறப்பது மக்களின் பண்பு

    பதிலளிநீக்கு
  2. நல்ல கருத்து

    உண்மைதான் இன்னும் வேறு ஒரு பரபரப்பு செய்தி வந்து விட்டால் இதை மறப்பது மக்களின் பண்பு

    பதிலளிநீக்கு
  3. //கொஞ்சம் யோசித்து பாருங்கள் இந்த வீடியோ காட்சிகள் வெளியாகமல் இருந்திருந்தால் இப்போதும் நித்தியானந்தம் மனிதருள் புனிதராய் வரும் பெண்களை அணைத்து ஆசி வழங்கிக்கொண்டிருப்பார்//

    நூற்றுக்கு நூறு உண்மைதான்...

    //பரபரப்பு செய்திகளை மட்டுமே செய்திகளாக்கி மக்கள் பிரச்சனைகளை பின்னுக்கு தள்ளும் ஊடக கலச்சாரத்தை என்ன செய்ய போகிறோம்?//

    நிச்சயம் இது கவனிக்கப்படவேண்டிய கேள்விதான்..

    பதிலளிநீக்கு
  4. இந்த பரபரப்பில், சன் டிவி பண்ண அநியாயத்தை எல்லோரும் மறந்து விட்டோம். முதல் குற்றவாளி சன் டிவி தான். கிட்ட தட்ட ஒரு நீல படத்தை, நம்ம வீட்டுக்குள் ஓட்டிவிட்டனர். வயசுக்கு வந்த பொம்பள பசங்க இருக்க வீட்டுல, எல்லோரும் கூசி போனார்கள்.
    சன் டிவி இப்போ ஒரு படி மேல ஏறி இருக்கு..

    முதல் இடம்,இந்த பரபரப்பில், சன் டிவி பண்ண அநியாயத்தை எல்லோரும் மறந்து விட்டோம். முதல் குற்றவாளி சன் டிவி தான். கிட்ட தட்ட ஒரு நீல படத்தை, நம்ம வீட்டுக்குள் ஓட்டிவிட்டனர். வயசுக்கு வந்த பொம்பள பசங்க இருக்க வீட்டுல, எல்லோரும் கூசி போனார்கள்.பக்கத்துக்கு வீட்ல கேபிள் கட் பண்ண சொல்லிட்டாங்க.
    சன் டிவி இப்போ ஒரு படி மேல ஏறி இருக்கு..

    முதல் இடம்,சன் டிவி , ரெண்டாவது இடம் பரங்கி மலை. இவர்கள் என்ன யோக்கியமா...

    பதிலளிநீக்கு
  5. idai oru seithiya parappum anbargal avasiyam padikka vendum.

    பதிலளிநீக்கு
  6. குடும்ப சண்டையில் தன்னுடைய நாழிதழ் ஊழியரை தீயிட்டு கொளுத்தியவர்களுக்கு, குடியரசு தலைவரிடம் சென்றாவது தண்டணை பெற்று தருவேன் என வீரா வசனம் பேசி, குடும்ப பிரச்சனை தீர்ந்தவுடன் வழக்கை மறந்தவர்கள் தானே சன் குழுமத்தினர். இது அவர்களுக்கு பரபரப்பு செய்தி தான்

    பதிலளிநீக்கு
  7. நன்றி யாநிலாவின் தந்தை.. தங்களுடைய வலைப்பதிவிலும் நீங்கள் இது குறித்து எழுதுங்கள் நண்பர்களையும் எழுத சொல்லுங்கள்

    பதிலளிநீக்கு
  8. குகன்..
    இன்னும் பார்க்கவில்லை என்று வருத்தமா, ஆதங்கமா, அல்லது கோபமா

    பதிலளிநீக்கு
  9. ".......சன் டிவி பண்ண அநியாயத்தை எல்லோரும் மறந்து விட்டோம். முதல் குற்றவாளி சன் டிவி தான். கிட்ட தட்ட ஒரு நீல படத்தை, நம்ம வீட்டுக்குள் ஓட்டிவிட்டனர். வயசுக்கு வந்த பொம்பள பசங்க இருக்க வீட்டுல, எல்லோரும் கூசி போனார்கள்...."
    டியர் ஆனத்.. தங்களின் கூற்று உண்மை... இது மிகவும் கொடுமை. பணம் கிடைக்கும் என்றால் சன் தொலைகாட்சி எதையும் செய்யும் என்பதற்கு இது சிறந்த உதாரணம்

    பதிலளிநீக்கு
  10. அணாணி... மற்றும் நண்பர் அரவிந்தன் ஆகியோருக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  11. Nee Manithan Endral....... Maaruvatharkku idhu podhum......
    Yaaraiyum thiruttha vendam.....
    Naam thirundhuvom......
    Ellam Suththamagum..
    Jai Hind

    பதிலளிநீக்கு
  12. நல்ல பதிவு...


    நானும் தொடர்புடைய பதிவு எழுதியிருக்கிறேன்... படியுங்களேன்...

    http://summaadhaan.blogspot.com/2010/03/blog-post_06.html

    பதிலளிநீக்கு
  13. ////////நட்புடன் ரமேஷ் said...
    ".......சன் டிவி பண்ண அநியாயத்தை எல்லோரும் மறந்து விட்டோம். முதல் குற்றவாளி சன் டிவி தான். கிட்ட தட்ட ஒரு நீல படத்தை, நம்ம வீட்டுக்குள் ஓட்டிவிட்டனர். வயசுக்கு வந்த பொம்பள பசங்க இருக்க வீட்டுல, எல்லோரும் கூசி போனார்கள்...."

    டியர் ஆனத்.. தங்களின் கூற்று உண்மை... இது மிகவும் கொடுமை. பணம் கிடைக்கும் என்றால் சன் தொலைகாட்சி எதையும் செய்யும் என்பதற்கு இது சிறந்த உதாரணம்

    March 5, 2010 11:02 AM///////

    நண்பர்களே,

    இது மட்டுமா சிறந்த உதாரனம்! கருணாநிதியின் குடும்பத் தொலைக்காட்சி தான் இன்றைய தினம் ஊடக விபச்சாரத்தில் கொடிகட்டிப் பறக்கிறது. சன் டிவியும் கலைஞர் டிவியும் நிகழ்த்துகின்ற ஆபாச நிகச்சிகளைப் பொருத்தவரை, இந்த சாமியார் மேட்டரெல்லாம் ரொம்ப ரொம்ப சாதாரணமானது.

    சன் டிவிக்கு தனது ரேட்டிங்ஸ்-சை ஏற்றிக் கொள்ளவும் வழக்கமான ஆபாச நிகழ்ச்சியிலிருந்து மாறுபட்டு மேலும் சற்று வன்மமாக இருப்பதாலும் இளசுகளை கிளுகிளுப்பிற்குள் ஆழ்த்துவதற்கு, நித்தியானந்த சாமியார் பெரிதும் பனபட்டிருக்கிறார் அவ்வளவுதான்.

    ஆமாம், நித்தியானந்தத்தின் பாலியல் உணர்வுகளுக்காக பச்சாதாபபட்டிருக்கிறாரே, நம்ம எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன்; அது எப்படியிருக்கு?!

    பதிலளிநீக்கு
  14. A clear message which should reach each and every common man so that they will not be cheated.

    பதிலளிநீக்கு
  15. நல்ல தகவல்.... ஆனால் ஒரு சந்தேகம்.

    நாட்டில் ஏதாவது முக்கிய பிரச்சனை வரும்போது பட்ஜெட் மூலம் பெட்ரோல் / டீசல் விலை உயர்வு, பட்ஜெட்டே இன்னும் மக்களை சென்றடைய வில்லை. அதை மறைக்கத்தான் இப்படி பரபரப்பு செய்தி வெள்யிடுவர்க்ளை என்னவோ..

    நான் நிச்சயமாக நித்யானந்தாவை குற்றம் கூற மாட்டேன். அவருடைய அந்தரங்கத்தை வெளியிட இவர்களுக்கு என்ன யோக்கிதை இருக்கிறது. குமுதம் நக்கீரன், ஆ.விகடன் எல்லா ஊடகங்கள் தான் மக்களை துன்பங்களிலிருந்து விடுவிக்க சாமியார்களிடம் அழைத்துச்சென்றது.

    ஒன்றல்ல எல்லா சமியார் பசங்களும் அயோக்கியர்கள் தான் என இனியாவது மக்கள் விழித்துக்கொள்ளட்ட்டும்.

    மதம்/கடவுள் என்பது பிணிக்கு மருந்தல்ல போதை என்பது விளங்கட்டும்.

    பகுத்தறிவு காவலன் முடிந்தால் அம்மா பகவான், மேல்மருவத்தூர் சாமி, ஜக்கி கல்கி எல்லார் மேலேயும் நடவடிக்கை எடுக்கட்டும் அவரை பாராட்டலாம்.

    பதிலளிநீக்கு