இலங்கை பிரச்சனை குறித்து பலரும் பலவிதமான கருத்துக்களை சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். அங்குள்ள பாதிக்கப்பட்ட மக்கள் வாழ்க்கையை முன்னிலை படுத்தி பேசுவதைவிடுத்து, தமிழகத்தில் ஒருவர் மீது ஒருவர் சேற்றை வாரி இறைத்துக் கொள்வதிலேயே காலத்தை கழிக்கின்றனர். தமிழக முதல்வர் தனது கட்சி மற்றும் தோழமை கட்சிகளின் தூதுக்குழு சென்று வந்ததும் அங்கு பிரச்சனைகள் தீர்ந்துவிட்டதாக மார்தட்டிக்கொண்டிருக்கிறார். அவரது கட்சியினர் நான்கு நாட்களில் இலங்கை பிரச்சனையை தீர்த்துவைத்த தலைவா என பெருமிதத்தோடு போஸ்டர்களை ஒட்டி மகிழ்கின்றனர். ஆக்கப்புர்வமான நடவடிக்கைகளை எதிர்பார்க்கும் தமிழர்களின் பிரச்சனைகளை யாரும் பேசுவது கிடையாது.
தமிழ் அமைப்புகள் கலைஞரை திட்டுவதிலேயே காலம் கடத்துகின்றனர். தீவிர புரட்சியாளர்களாக தம்மை அடையாளப் படுத்திக்கொள்பவர்கள் பிற்போக்கு வாதிகள் இணைய தளத்தில் இரண்டு முகம் காட்டுகின்றனர். இந்த சூழலில் மார்க்சிஸ்ட் கட்சியின் மக்களைவை உறுப்பினர், கட்சியின் மத்தியகுழு உறுப்பினர், தொடர்ந்து மக்கள் பிரச்சனைக்கு களத்தில் நின்று போராடும் தோழர் டி.கே ரங்கராஜன் அவர்கள் மக்களவையில் பேசிய பேச்சு மிகவும் முகியத்துவம் வாய்த்தது. அந்த உரையினை உங்களுக்கு சமர்பிக்கின்றேன். நன்றி
அன்புடன்
எஸ்.ஜி.ரமேஷ்பாபு
இலங்கை: பிரச்சனை யில் இந்திய அரசு உரிய நேரத்தில் தலையிட்டிருந் தால் பெரும் ரத்தக்களரியை தடுத்திருக்க முடியும் என்று நாடாளுமன்ற மாநிலங்கள வையில் டி.கே.ரங்கராஜன் குற்றம் சாட்டினார்.
நாடாளுமன்ற குளிர் காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற மாநிலங்கள வையில் இலங்கையின் வட பகுதியில் தற்போதுள்ள நிலைமை என்ற தலைப்பில் மத்திய அயல்துறை அமைச் சர் ஓர் அறிக்கை சமர்ப்பித் தார். அதன் மீது நடை பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு டி.கே.ரங்கரா ஜன் பேசியதாவது:
“அமைச்சர் அளித் துள்ள அறிக்கை எந்தவிதத் திலும் மனநிறைவை அளித் திடவில்லை. இலங்கைத் தமிழர் பிரச்சனையை மத் திய அரசும், அயல்துறை அமைச்சரும் இந்தியப் பிரச் சனையாக பார்க்க வேண்டும்.
இதனை வெறும் தமிழர் பிரச்சனையாக தமிழ் அர சியல் கட்சிகளின் பிரச் சனையாக பார்க்காதீர்கள். 21ஆம் நூற்றாண்டின் ஆரம் பத்தில் இலங்கையில் நடை பெற்றுள்ள நிகழ்வுகள் மிகவும் துயரம் மிகுந்தவை. சரியான நேரத்தில் மத்திய அரசு தலையிட்டிருந்தால், இலங்கைத் தமிழர் பிரச் சனையைத் தீர்த்திருக்கமுடி யும், அங்கே ஏற்பட்டுள்ள ரத்தக்களரியைத் தவிர்த் திருக்க முடியும். மத்திய அயல்துறை அமைச்சர் தன் அறிக்கையில், புலம் பெயர்ந்த மக்கள் ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் மீண்டும் தங்கள் இடங்களில் மீள் குடியமர்த்தப்பட்டு விட் டார்கள் என்று சொல்லி யிருக்கிறார். இலங்கை அர சாங்கத்தின் தரப்பில் 1 லட் சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அவ்வாறு தங்கள் சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்பட்டு விட்டார்கள் என்றும், சுமார் 1 லட்சத்து 45 ஆயிரம் பேர் இன்னமும் முகாம் களில் இருப்பதாகவும் கூறி யிருக்கிறது.
அவர்கள் அவ்வாறு மீள் குடியமர்த்தப்பட்டிருக் கிறார்கள் என்றால், எங்கே மீள்குடியமர்த்தப்பட்டிருக் கிறார்கள்? அவர்களுடைய கிராமங்களிலா? அங்கே வீடுகளே இல்லை. கூரை கிடையாது. அங்கே செயல் பட்டுக்கொண்டிருக்கும் சேவை அமைப்புகள் மூல மாக எனக்குக் கிடைத்த தக வல் என்னவெனில், அவர் கள் ஒரு முகாமிலிருந்து இன்னொரு முகாமுக்கு மாற்றப்பட்டிருக்கிறார்கள் என்பதுதான். இதுதான் மீள் குடியமர்வா? மீள்குடிய மர்வு என்றால் அவர்கள் தங்கள் சொந்தக் கிராமங் களுக்குச் செல்ல வேண்டும். அவர்கள் தங்களின் சொந்த உடைமைகளைப் பெற வேண்டும்.
இலங்கையில் அமைக் கப்பட்டுள்ள முகாம்களில் பி.எச்டி. படித்தவர்கள் இருக்கிறார்கள், மருத்துவ டாக்டர்கள் இருக்கிறார் கள், ஆசிரியர்கள், வழக்கறி ஞர்கள், அறிவுஜீவிகள் என்று அனைத்துத் தரப் பினரும் முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கிறார் கள். அவர்கள் மிகக் கடுமை யான துன்பதுயரங்களுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.
இலங்கை அரசாங்கமா னது, முகாம்களில் அடைக் கப்பட்டுள்ள இளைஞர் களை விடுவிக்கப்போவதில் லை என்று எனக்குத் தக வல்கள் வந்துள்ளன. ஏனெ னில் அவர்கள் உடலில் எல்டிடிஇ ரத்தம் ஓடுகிற தாம். இதுதான் இலங்கை அரசாங்கத்தின் அணுகு முறை. அந்த அரசாங்கமா னது தங்கள் நாட்டின் சொந் தப் பிரஜைகளையே கிரிமி னல்களை விட மோசமான விதத்தில் நடத்திக்கொண்டி ருக்கிறது. இதனை மத்திய அரசு குறித்துக் கொள்ள வேண்டும். நாங்கள் கூறு வதை நம்புங்கள். நாங்கள் அங்கே பல்வேறு பிரிவின ருடன் விவாதித்திருக்கி றோம்.
பல்வேறு சேவை அமைப்புகள் நடைபெற்ற யுத்தத்தில் அநாதைகளாகி விட்ட குழந்தைகளை எடுத்து வளர்க்கத் தயாராக இருக்கின்றன. ஆனால் இலங்கை அரசு அதற்கு அனுமதிக்கவில்லை. எனவே, இலங்கைத் தமிழர் அவலத்தைச் சரியான முறையில் முறையாகப் புரிந்துகொள்ள வேண்டும். எனவே இதுதொடர்பாக அரசு தன் நிலையினை அவைக்கும் நாட்டுக்கும் தெரிவிக்க வேண்டும்.
முகாம்களில் வைக்கப் பட்டுள்ள தமிழர்கள் 180 நாட்களுக்குள் தங்கள் இல்லங்களுக்குத் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று நம்முடைய அயல் துறை அமைச்சரும், தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் கூறினார்கள். இப்போது 180 நாட்கள் ஓடிவிட்டன. இன் னமும் அவர்கள் அவலங் கள் தொடர்கின்றன. இதற்கு நாட்டு மக்களுக்கு அரசு பதில் சொல்ல வேண்டும். அவர்கள் அவர்களது சொந்த இல்லங்களுக்கு இன்னமும் ஏன் அனுப்பப் படவில்லை?
இலங்கைக்கு மத்திய அரசின் சார்பில் குழு அனுப்பி வைக்கப்பட்டி ருக்க வேண்டும்.
மீனவர் பிரச்சனை
இலங்கை நம்முடைய நட்பு நாடு. நம்முடைய கட லோரக் காவல்படையினர் இலங்கைக் கடலோரக் காவல் படையினருடன் மிகவும் நட்புரீதியாக பழகிக் கொண்டிருக்கிறார்கள். இவ்விரு நாடுகளைச் சேர்ந்த கடலோரக் காவல் படையினரும் மீனவர்க ளுக்கு உதவ வேண்டுமே தவிர, அவர்களைத் துரத் திடக் கூடாது. மீனவர்க ளுக்கு மீன்பிடிப்பது வாழ் வாதாரம். 1983க்கு முன்பு இருந்ததுபோல் தொடர்ந்து அவர்கள் உரிமைகளுடன் மீன்பிடித் தொழிலைத் தொடர வேண்டும்.
இந்தியா தொழில் முனைவோரை இலங் கைக்கு அனுப்பியிருக்கிறது. ஏற்கனவே 250 பெட்ரோல் பங்குகள் திறந்திருக்கிறோம். நாம் பள்ளிக்கூடங்களை அங்கே திறந்திருக்கிறோம். அவர்களுடைய சிமெண்ட் தொழிற்சாலைகளையும் மற்ற தொழிற்சாலை களை யும் மீளவும் புனரமைத்துக் கொடுத்திருக்கிறோம். மத்திய அரசு அங்கு ஏரா ளமான உதவிகளைச் செய் திருக்கிறது. ஆயினும் அங் குள்ள தமிழ் மக்களுக்கும் உதவிடுங்கள். அப்போது தான் அவர்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியும்.
இலங்கை அரசுடன் இந் திய அரசு பேசி, பிரச்சனை களுக்குத் தீர்வு காண முன் வர வேண்டும். தமிழ் மக்க ளின் பிரச்சனைக்கு அரசி யல் தீர்வு காண்பதில் மேலும் காலதாமதம் கூடாது. (ந.நி.)
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
விடுதலை போரில் பெண்கள் - 5 வீழும் வரை போரிடு! விழும்போது விதையாய் விழு! இந்தியாவை மெல்ல மெல்ல ஆக்ரமித்த ஆங்கிலேயர்கள் ஒன்ற...
-
ஆர்ப்பாட்டத்தை மறியலாக மாற்றிய காவல்துறை ஒரு தொழிற்சாலையில் சங்கம் வைக்கும் அடிப்படை உரிமையை மறுக்கும் நிகழ்வுக்கு எதிராக ...
-
1930ல் சென்னையில் மறியல் போராட்டத்திற்கு புறப்படும் பெண்கள் எங்கும் நிறைந்துள்ள பெண் போராளிகள் - ஒ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக