மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!



தீக்கதிரில் தொடராய் வந்த போது பலரால் கவனிக்கபட்ட - தோழர் சு.பொ.அகத்தியலிங்கம் எழுதிய ஜீவாவின் கவிதைப் பயணம் குறித்த ஒரு அறிமுகம் இப்போது நூலாய் வெளி வந்துளது. தொடராய் படித்ததை விட ஒரு புத்தகமாய் படிக் கின்ற போது கவிஞர் ஜீவாவின் ஆளுமை குறித்த நுலாசிரிய ரின் மதிப்பீடு ஆச்சரியம் அளிக்கிறது. இலக்கியத்தின் பயன் பாடு குறித்த புரிதலில், மார்க்சிய பார்வை எனும் நேர்கோட் டில் சரியாய் பயணிக்கிற அரசியல் இருந்தால் மட்டுமே வரு கிற அவதனிப்பு இது. ஜீவாவின் லட்சிய கனவு எது என கேள்வி எழுப்பி அதற்கு இப்படி பதிலளிக்கிறார், தேச விடுதலையில் காலூன்றி, சுயமரி யாதையில் கிளை விரித்து, பொதுவுடைமையில் பூத்துக்குலுங்கும் கனவு அது என் கிறார். இந்த கனவை நிறைவேற்ற தனது பேச்சாற்றலை, எழுத்தாற்றலை சாதனமாக, வாகனமாக பயன்படுத்திய கவிஞர் ஜீவா சுரண்டலை பற்றி ஒப்பாரி வைக்காமல் சுரண் டல் எதிர்ப்பு போருக்கு பேராயுதமாய் தனது கவிதைகளை பயன்படுத்தியதாகக் கூறுகிறார்.

தோழர் ஜீவாவை பற்றி தமிழகம் அறிந்த அளவு கவிஞர் ஜீவாவை தமிழகம் அறிய வில்லை என்ற ஆதங்கத்தில் விளைந்ததே இந்த புத்தகம் என நூலாசிரியர் குறிப்பிடு கிறார். அந்த கூற்றுக்கு உண்மையாக இப்புத்தகத்தில் கவிஞர் ஜீவாவின் கவிதாசாரத் தின் ஆளுமையை, அரசியலை, பெண்விடுதலை கருத்துக்களை, பொதுஉடைமை சிந்தனைகளை, மௌடீக எதிர்ப்பு பிரச்சாரத்தை, சாதிய ஒடுக்கு முறைக்கு எதிரான கோபத்தை கவிஞரின் கவிதைகளின் மூலம் நிறுவிச்செல்கிறார்.  1906 ஆம் ஆண்டு சொரிமுத்துவாய் பிறந்து 1963 ஆம் ஆண்டு ஜீவானந்தமாய் மறைந்தார். 

ஜீவானந்தம் மாபெரும் கவிஞனாய், பாட்டாளிகளின் தோழனாய் 40 ஆண்டுகள் பொதுவாழ்வில் ஒரு பொதுவுடைமைவாதியாய், தன்னலமற்ற அரசியல்வாதியாய் இயங்கிய ஒரு மகத்தான ஆளுமை. அவர் கண்ட கனவு தமிழகம் எது?  புதிய தமிழகத்தில் சாதியில் லாத, வருணாசிரமம் பேசும் வம்பர்கள் இல்லாத, சேரி அக்ரகாரம் என பிரிவினை யில்லாத, இழந்தோனும் எத்தனும் என்ற பேதம் இல்லாத, பொருளை சூறையாடும் கோவில்கள் இல்லாத, பீடைமதக் கூத்தடிக்கும் பித்தர் கூட்டம் இல்லாத தமிழகம் தான் அவரது கனவு. இப்படி பல வடிவங்களில் பல பொருட்கள் குறித்த அவரது கனவுகள் பாடல்களாய், கவிதைகளாய் விரிந்துச் செல்கிறது.

யானை போல கொழுத்த மேனியும், இடர் செய்யும் நஞ்சு நெஞ்சும், பூனை போல திருட்டு எண்ணமும், பொய்புலை நிறைந்த வாழ்வும், ஏனையோர் குடிகெடுத்தலும், யத்தனமான பொழுது போக்கும் கொண்ட, பானைபோல் வயிறு கொண்ட பணத்திமிர் வீழ்க! வீழ்க! என்று பாட்டாளிகளுக்கு பனத்திமிரின் அடையாளத்தை சுட்டிக்காட் டும் அதே நேரம், புலமைசெறி ஆதிக்க வகுப்பா ரெல்லாம் பொதுவுடைமை புரட்சியி னால் நடுங்கி வீழ்வார் என அவர்கள் வீழும் காலத்தையும் அடையாளம் காட்டுகிரார். புரட்சிக்கு அணிவகுக்கச் சொல்லும் அவர் கவிதைகள் உணர்வு ததும்பி நிற்பவை. 

இப்புத்தகத்தின் இறுதி பகுதியாக இன்றைய சூழலுக்கும் கச்சிதமாய் பொருந்த கூடிய 29 பாடல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது சிறப்புக்குரியது.   ஜீவா வின் பாடல்களும் கவிதைகளுமாய் 122  படைப்புகள் கிடைத்துள்ளன. இவற்றில் 25 பாடலகள் பெண் விடுதலையையும். 48 பாடல்கள் தொழிலாளி வர்க்க எழுச்சி, சோஷ லிசம் குறித்தும். 7 பாடல்கள் கட்சி, தியாகம் குறித்தும். 5 பாடல்கள் புரட்சி குறித்தும். 6 பாடல்கள் பாசிசம், யுத்தம் குறித்தும். 11 பாடல்கள் சுயமரியாதை, பகுத்தறிவு குறித்தும். 15 பாடல்கள் தேசியம் குறித்தும். 2 பாடல்கள் தமிழகம் குறித்தும் மற்றும் 3 பாடல்கள் சேர்த்து 122 பாடல்களை 10 வகையாக பிரித்து இந்த நூலில் அனுகி 15 தலைப்புகளில் எழுதி இருப்பது படிக்க மிகவும் எளிதாகவும் சுவையாகவும் உள்ளது.

இந்த நூலின் இறுதி பகுதியில் வியர்வை குலத்தின் பக்கம் உறுதியாக ஊசலாட்டம் இல்லாமல் நின்று, அவர்கள்படும் துயரத்தின் மூலகாரணம் சுரண்டலும், ஏகாதிய பத்தியமும் என்பதையும் அடையாளம் காட்டியதால் அவரை ஆளும் வர்க்கம் கண்டு கொள்ளமல்விட்டது. வர்க்க நலன் காக்கும் அறிவுஜீவி கூட்டமும் மறைத்தன. கவித்துவம் இல்லை என தூற்றினர். இயையெல்லாம் கவிஞரின் உழைக்கும் வர்க்கம் சார்ந்த நிலைபாட்டால் அவர் மீது விழுந்த சுமைகள். ஆனால் பாட்டாளி வர்க்கம் தனது சொந்த கவிஞனை மறக்கலாமா? காலத்தை வென்று இன்றைய சூழ்நிலையில் பயன் படுத்தப்படும் பாடல்களை இசைக்க தடையாக இருப்பது எது?  கம்யூனிஸ்ட் கட்சிக்குள் ஏற்பட்ட பிளவு இந்த கவிஞன் மீதும் தூசு தும்பு படிய காரணமாய் இருக்குமோ? என்பன போன்ற கேள்விகளை நூலாசிரியர் எழுப்புகிறார். விவாதிக் கப்பட வேண்டிய கேள்விகளே இவை. விவாதங்களை துவக்கிய இந்த  நூலை வாங்கி படிப்பதிலிருந்து விவாதங்களை துவக்குவோம்.

கோடிக்கால் பூதமடா...
(ஜீவாவின் கவிதைப் பயணம்)
ஆசிரியர்: சு.பொ.அகத்தியலிங்கம்
வெளியீடு: நாம் தமிழர் பதிப்பகம்,
10/14, தோப்பு வெங்கடாசலம் தெரு,
திருவல்லிக்கேணி, சென்னை - 600 005
பக். 104, விலை ரூ. 50/-

(தீக்கதீர் நாளிதழில் இந்த புத்த்கத்திற்கு நான் எழுதிய நூல் அறிமுகம்)

0 comments

bookmark
bookmark
bookmark
bookmark
bookmark