மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!


வினை வித்தைத்து வினை அறுத்த கதை


புருலியா மாவட்டத்தில் நக்ஸல்களால் சுட்டுக் கொல்லப்பட்ட திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தொண்டர் ஒருவரின் உறவினர்களுக்கு ஆறுதல்.  

மேற்கு வங்க மாநிலம் புருலியா மாவட்டம் பெலராம்பூர் பகுதியில் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் 2 பேரை நக்ஸல்கள் 2 நாள்களுக்கு முன்பு சுட்டுக் கொன்றனர். சுட்டுக் கொல்லப்பட்ட திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்களின் குடும்பத்தினரை சந்தித்த பின் மம்தா "நக்ஸல்களுக்கு எதிரான வேட்டையை 4 மாதங்களுக்கு அரசு நிறுத்தி வைத்தால், நாங்களும் தாக்குதல் நடத்த மாட்டோம் என்று நக்ஸல்கள் அறிவித்திருந்தனர். ஆனால் இந்த அறிவிப்பு வந்த ஒரே நாளிலேயே அவர்கள் தாக்குதல் நடத்தி திரிணமூல் காங்கிரஸச் சேர்ந்த 2 பேரைக் கொன்றுள்ளனர்" என்றார்.
"பயங்கரவாதிகளை விட நக்ஸல்கள் ஆபத்தானவர்கள்.இந்த கொடுமையான தாக்குதலை எங்கள் அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். அவர்கள் தொடர்ந்து கொலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது நாம் வாயில் விரலை வைத்துக் கொண்டு வேடிக்கை பார்க்க முடியாது". 
"நக்ஸல்கள் திருந்தி வாழ நினைத்தால் அவர்கள் ஆயுதங்களைப் போட்டுவிட்டு சரண் அடையவேண்டும். அப்போது அவர்களுக்குத் தேவையானவற்றை அரசு செய்து கொடுக்கும். பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது மாநில அரசின் பொறுப்பு. நக்ஸல்களுக்கு பண உதவியையும், தங்க இடவசதியையும் சிலர் அளித்து வருவதாக அரசுக்குத் தெரியவந்துள்ளது. நக்ஸல்களுக்கு புகலிடம் தருபவர்களை அரசு கண்காணித்து வருகிறது. இதுபோன்ற நபர்கள் குறித்து பொதுமக்கள் விழிப்பாக இருக்கவேண்டும். எல்லாரும் கெட்டவர்கள் என்று நான் கூறவில்லை. ஆனாலும் பொதுமக்கள் விழிப்புடன் இருப்பது நல்லது. குறிப்பாக ஹ¨க்ளி மாவட்டத்திலுள்ள உத்தர்பரா பகுதியில் கண்காணிப்பை பலப்படுத்துவது அவசியம்". 

இதெல்லாம் அம்மா மம்தா கக்கிய முத்துக்கள்.

"மேற்கு மிதுனபுரி, புருலியா மாவட்டங்களில் நக்ஸல் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அப்பகுதியில் போலீஸார் புதன்கிழமை நடத்திய தேடுதல் வேட்டையில் ஏராளமான ஆயுதங்கள் கிடைத்துள்ளன. இன்சாஸ் ரைபிள்கள் 2, ஏகே 47 ரக துப்பாக்கிகளில் பயன்படுத்தக்கூடிய தோட்டக்காள், 60 கிலோ வெடிபொருள்கள், கண்ணி வெடிகள், ஜெலட்டின் குச்சிகள், வயர்கள் ஆகியவை புர்னபாணி பகுதியில் கிடைத்துள்ளன" இது போலீஸ் கண்காணிப்பாளர் பிரவீண் திரிபாதி சொன்னது.

# அதுசரி இந்த நக்சல்களுடன் கைகோர்த்து மார்க்ஸிஸ்ட் கட்சி ஊழியர்கள் நூற்றுக்கணக்கானோரை படுகொலை செய்த போது அவர்கள் தீவிரவதிகளாக, பயங்கரவாதிகளாக என மம்தாவின் கண்ணுக்கு தெரியாதது ஏன்?
# வெடிகுண்டுகளுடன் வந்த அந்த பயங்கரவாதிகளுக்கு திரினாமூல் கட்சி தலைவர்கள் தங்களது இல்லங்களில் தஞ்சம் அளித்தது, உணவும் அளித்தது ஏன்?

# மேற்கு மிதுனபுரி மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகங்களை நக்சல்கள் கொளுத்தி  விளையாடிய போது அம்மையார் அப்பாவியாக இருந்தது ஏன்?


# தான் ஆட்சிக்கு வருவதற்காக நக்ஸல்கள் படுகொலை செய்தால் அவர்கள் தியாகிகள், புரட்சியாளர்கள். தங்கள் கட்சியினரை படுகொலை செய்தால் அவர்கள் பயங்கரவாதிகள்  அப்படிதானே மம்தாஜி?

# நக்ஸல்கள் சுயரூபம் தெரிந்துதான் அவர்களை மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிராக கூலிப்படையாக பயன்படுத்தினீர்கள் இல்லையா மம்தாஜி?


# இரண்டு பக்கம் கூருள்ள கத்தியை பயன்படுத்தினால் இதுதான் நடக்கும் என்பதை அறியாதவார நீங்கள்?

# சி.ஐ.ஏ பணத்தை பயண்படுத்தி, நக்சல்களை கூலிப்பட்டாளமாய் ஏவி ஆட்சியை பிடித்தீர்கள். சரி. வினை விதைத்தால் அதை அறுவடை செய்துதானே ஆக வேண்டும்.  இது அறுவடை காலம் அம்மையே?

இது துவக்கம்தான்.
பாவம் உங்களை நம்பியவர்கள்.
வேண்டுமானால் பாருங்கள்
இதற்காகவும்
அங்கு மார்க்சிஸ்டுகள்தான்
போராட போகிறார்கள்.
அதாவது அப்பாவிகளின் உயிரை பாதுகாக்க ..
ஏனெனில் மனித உயிரின்
மகத்துவம் அவர்களுக்கு தெரியும்.


2 comments

  1. நூல் அறிமுகம் மெத்யுன் நன்றாக இருக்கின்றது.படிப்பதை விட கேட்பது எளிதாக இருக்கின்றது.மேன்மேலும் தொடரவும்.வாழ்த்துக்கள். ரவீந்திரன் கடலூர்

     
  2. ஆயுதமேந்தியவனும், மிருகமும் சமம்! வளர்த்தவனையும் கொல்லும்!

     
bookmark
bookmark
bookmark
bookmark
bookmark