மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!
எல்லாம் தெரிந்தே நடந்தது
நடக்குமென அறியாமல்..
நடக்குமென தெரிந்திருந்தும்
நடக்காது என்ற நம்பிக்கை இருந்தது.

மாற்றம் மட்டுமே மாறாது
என்றெல்லாம் கதைத்தோம்
மாற்றம் கானும்... 
இவரிடமும்
மாற்றம் வரும் என நம்பினோம்.

வந்தது குறைவு என்கிறார்கள்
உடன் வராதவர்கள்..
வருவது இன்னும் துவங்கவில்லை 
என்கிறார்கள் உடன் வந்தவர்கள்..
வந்ததே தாங்கவில்லை
வருவதை எப்படி தாங்க..
வருந்துகிறார்கள் 
பொதுவாய் நின்ற பலர்..

அதலினால் உலக்கத்தீரே
அல்லல் பட்டு அழுது - கண்ணீர்
ஆறாய் பெருகி வந்தும்  
ஆவதொன்றுமில்லை ஏனெனில் எல்லாம் தெரிந்தே நடந்தது
நடக்குமென அறியாமல்..
நடக்குமென தெரிந்திருந்தும்
நடக்காது என்ற நம்பிக்கை இருந்தது.


(பின் குறிப்பு படத்திற்கும் மேற்கண்ட வரிகளுக்கும் கொஞ்சம்கூட சம்பந்தம் இல்லை..இல்லை.. இல்லவே இல்லை)

2 comments

 1. உங்கள் பதிவை மேலும் பிரபலப் படுத்த / அதிக வாசகர்களைப் பெற உங்கள் பதிவுகளை தமிழ்10 தளத்தில் இணையுங்கள் . ஓட்டளிப்பில் புதிய மாற்றம் செய்யப்பட்டு இருப்பதால் இப்போது தரமான பதிவுகள் அனைத்தும் முன்பை விட விரைவிலேயே பிரபலமான பக்கங்களுக்கு வந்து விடும் .தளத்தை இணைக்க இங்கே செல்லவும்

  http://www.tamil10.com/

  ஒட்டுப்பட்டை பெற  நன்றி

   
 2. bharathi Says:
 3. மாற்றிக்கொண்டேதான் இருக்கிறோம்.மாற்றங்களும் மாறிக்கொண்டேதான் இருக்கிறது.மீண்டும் மாற்றுவோம். மாற்றம் என்பதுதான் மாறாதது...

   
bookmark
bookmark
bookmark
bookmark
bookmark