மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!

கோச்சடையன் என்ற பெயர்தான் சரியான தமிழ்! இதை கோ சடையன் என்றும், கோ கோ சடையன் என்று ஸ்டைலாக அழைப்பது தவறு என தமிழ் ஆர்வளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

இப்போது பார்ப்போம்...

கோ என்றால் மன்னன், மாடு எனவாறு பல அர்த்தங்கள் உண்டு என்பதை தமிழ் ஆர்வளர்கள் அறிவார்கள். 

கோ கோ என்றால்? யாரறிவார்?

கோ கோ என்றால் ஒரு இந்தியவிளையாட்டாகும். களத்தில் உள்ள 9 பேர்களையும் தொட்டு புறம் போக்குவதே எதிரணி ஆட்டக்காரரின் நோக்கமாகும். சடுகுடு விளையாட்டைப் போன்றது எனினும் இது அதனிலும் வேறுபட்டது. களத்தில் ஓர் அணியின் வீரர்கள் ஓர் வரிசையில், அடுத்தடுத்தவர்கள் எதிர்திசையை நோக்கியவாறு அமர்ந்திருப்பர். எதிரணி இரண்டு அல்லது மூன்று வீரர்களை களத்தில் இறக்குவர். அமர்ந்திருக்கும் அணியின் நோக்கம் எதிரணியின் போட்டியாளரை துரத்தி தொட்டு வெளியேற்றுவது. ஆனால் அவர்கள் ஒரே திசையில்தான் ஓட வேண்டும்; 

அமர்ந்திருப்பவர்களுக்கிடையே குறுக்கே புக முடியாது. மாற்றாக ஓடும் எதிரணியினர் அவ்வாறு குறுக்கே செல்லலாம். துரத்துபவர்கள் வரிசையின் கடைசி வரை ஓடி அதன் பின்னரே மற்ற திசையில் ஓட முடியும். துரத்தும் பணியை தனக்கு முதுகு காட்டி அமர்ந்து கொண்டிருக்கும் நபரிடம் மாற்றி விடலாம். அப்போது கோ என ஒலி எழுப்புவர். இது துரத்துபவர் மாறுவதைக் குறிக்கும். எந்த அணி குறைந்த நேரத்தில் எதிரணியின் அனைத்து வீரர்களையும் வெளியேற்றுகிறார்களோ அவர்களே வெற்றி பெற்றவர்கள்.

சரி நாம் கோச்சடையன் படத்திற்கு வருவோம்..

ஆங்கிலத்தில் சிந்த்திதுத் தமிழில் எழுதவோ அல்லது பேசவோ செய்கின்ற காலக் கட்டத்தில் வாழ்கின்ற காரணத்தால் ஒரு தவறு நேர்ந்துவிட்டது. ரணதீரன் என்ற பெயரிலேயே விக்கிபீடியாவில் எழுதப்பட்டிருந்ததால் ஆங்கில விக்கிபீடியாவை அடிப்படையாகக் கொண்டு கோச்சடையான் என்ற பெயர் பரவிவிட்டது. ஏன்டா அம்பி ரணதீரன் என்பது ரந்தீர், ரன்டீன், ரணம்தினம் என்றெல்லாம் ஆகாமல் எப்படி கோச்சடையன் ஆனது என குழ்ம்பவேண்டாம் சூப்பரு ஸ்ஸ்டாரு நடிப்பதால்..

ரணதீரன் கோச்சடையன் என்று சேர்த்து அழைப்பதே சரி. திரைத்துறையினர் அவர்கள் ராசிக்கு ஒற்றெழுத்தை விட்டு விடுவார்கள். தேவை இல்லாத இடத்தில் சேர்த்துக் கொள்வார்கள். எப்படியோ ஏழாவது அறிவுக்குச் சமமாகவோ அல்லது அதைவிட ஒருபடி கீழாகவோ அல்லது ஐந்து அறிவை பயன்படுத்தியோ ஒரு படம் தந்தாகவேண்டும்.  சினிமாகாரர் நினைத்தால் சாதாரணப்பெயரும் முக்கியத்துவம் பெறும். அருணாசலம், பாபா, படையப்பா, நாயகன், கஜினி, சிவாஜி, அட்ராசக்கை, அவளின்டே ராவு கதா, ஷகிலா போன்ற வரிசையில் கோச்சடையன்.

அது சரிங்க கதை சரியா தப்பான்னு கேட்க்க மாட்டோம் வரலாறு முக்கியம் (வரலாறு முக்கியம் அமைச்சரே..) அதைச்சொல்லுங்கள். அப்போதுதான் தமிழர்கள் நரம்புகள் துடிக்கும், குடிக்கும், கடிக்கும், படிக்கும், முடிக்கும்,  வெடிக்கும்... அதலினால் வரலாறு முக்கியம்.

ரணதீரன் கி.பி. 670 முதல் 710 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான். அரிகேசரியின் மகனான இவன் தனது தந்தை கி.பி. 670 ஆம் ஆண்டளவில் இறந்தபின்னர் அரியணை ஏறினான். கடல் போன்ற சேனை உடையவன் எனப்படுகிறான். ரணதீரன் கோச்சடையன் என அழைக்கப்பட்டான். செங்கோல் தென்னன், வானவன், செம்யன், மதுரகருநாடகன், கொங்கர்கோமான், மன்னர் மன்னன் போன்ற பல பட்டப் பெயர்களைக் கொண்டிருந்தான். (வைரமுத்து வகையற்றாகள் வயிறு எரிய வேண்டாம் உங்களுக்கு இவ்வாறான பட்டங்கள் 2015ல் கிடைக்கும்)

இதற்குச் சான்றாக வேள்விக்குடிச் செப்பேடு இருப்பது குறிப்பிடத்தக்கது. படையெடுத்துச் சென்ற இவன் முதலில் சேரநாட்டை வென்றான். பின்னர் சோழநாடு, கொங்கு நாடு வென்று அனைவரையும் கப்பம் கட்டுமாறு ஆணையிட்ட இவன் மருதூரில் நடைபெற்ற போரில் பொதிய மலைத் தலைவன் ஆய்வேளையும், மங்கலபுரத்தில் மாரதரையும் வெற்றி கொண்டவனாவான்.

சாளுக்கிய மன்னனான விக்கிரமாதித்தனுடன் போர் புரிந்து வெற்றி பெற்றுப் பட்டம் பெற்றான் ரணதீரன். இவ்வாறு வேள்விக்குடிச் செப்பேடும் கேந்தூர்க் கல்வெட்டும், கூறுவது குறிப்பிடத்தக்கது. ரணதீரன் ஆட்சிக் காலத்தில் மதுரைக்கு வந்து அங்கு பாண்டியன் மகளை மணந்து, சோழ மன்னன் ஒருவனையும் சந்தித்தார். திருவாலவாய் இறைவனையும், திருப்பரங்குன்றப் பெருமானையும் பின் வணங்கினார் எனப் பெரிய புராணம் மற்றும் சுந்தரர் தேவாரமும் கூறுவதும் குறிப்பிடத்தக்கது. (பெரிய-கழறி-91-2) (சுந்தரர் தேவாரம் திருப்பரங்குன்றப் பதிகம்-பாட்டு-11).

இடைக்காலப் பாண்டியன் ரணதீரன் கி.பி. 710 ஆம் ஆண்டில் மரணமடைந்தான்.

  வேள்விக்குடிச் செப்பேடும் கேந்தூர்க் கல்வெட்டும் "சூப்பர் ஸ்டார்" ரஜினிகாத்ந் என்கிற ரண்தீரன் கோச்சடையன் பேசிய பஞ்ச் டயலாகை குறித்து வைத்துள்ளது. 

(ஏன்யா பேதி தர்மனை நம்பும் இந்த ஊர் நம்ம கோச்சடையனை நம்பாது?# டவுட்டு)

(இது ரஜினிகாந்த் படம் எதுவும் நடக்கலாம்) 

வசனங்கள் பின்வருமாறு....

"தம்பி என் பேருதான் கோச்சடையன்.. நான் அடிச்சா நீ கோ கோ மடையன்"

"தம்பி என் நாடு பாண்டி.. நான் போவேன் உன்னை தாண்டி"

"கண்ணு.. எங்கிட்ட இருக்கு சேனை.. உங்கிட்ட இருக்குறது பானை"

"தம்பி.. அனுஷ்காவும் அரியனையும் ஒன்னுதான். ரெண்டு மேலையும் ஆசை வரும், ஆனா தூரத்திலிருந்தான் பாக்க முடியும் .. ஹிஹாஹா ஹா ஹா" 

(போங்கடா நீங்களும் உங்க பஞ்ச் டயலாக்கும்)  டீக் ஹை.. (சரியா)

(இவ்வாறான சம்பந்தமில்லாத கதைகளையும், வார்த்தைகளையு கேட்டும், பேசியும், பார்த்துப் பார்த்து பழகிய மூத்த தமிழ்குடி மக்கள் கோச்சடையனையும் வாழ்வைப்பார்கள் என்ற நம்பிக்கையில் படம் எடுக்கப்படுகிறது) 

0 comments

bookmark
bookmark
bookmark
bookmark
bookmark