மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!உடையும்? உடையாது!
உடையும்! உடையாது?
உடையும்? உடையாது!
கட்டு.. கட்டாதே.
கட்டு.. கட்டாதே.
கட்டு. கட்டாதே..

இரு பக்கமும் விவாதங்கள்
உடைந்தால் அங்கும் சேதம்
உடைந்தால்தானே..?
இங்கு வாதம்.

கட்டினால் கிடைக்காது
கட்டாவிடால் பிழைக்காது
ஆதலினால் கட்டுவோம்!
எனவே கட்டாதே!

உங்களுக்குள் ஆயிரம் அரசியல்
உங்களுக்குள் ஆயிரம் ஆலோசனைகள்..
எங்களுக்கோ  வாழ்க்கை குறித்த கவலை
எங்கள் கண்களில் நீர் திவலை.

பேசுவதை கடந்துவிட்டோம்
என நாங்களும்
பேசினால் என்ன தவறு
என நீங்களும் ....

என்றாகிலும்
கட்டப்போவதில்லை நீங்களும்
எதுவாகினும்
விடப்போவதில்லை நாங்களும்..

யார் அறிவார் உண்மையில்
பிரச்சனையின் மையம் எதுவென?
அறிந்தவர் கூறார்
அன்பில் உள்ளது உண்மையென!

உங்களின் தேவை
நீண்ட நாள் அரசியில்!
எங்களின் தேவை
ஒரு நாள் அரிசியில்?

ஒருவேலை..
உங்கள் தேர்தலுக்கு முன்பும்
இல்லையெனில்..
எங்கள் தேவைகளுக்கு பின்பும்
எப்படி முகம் பார்ப்போம்.

எல்லையோரம் கொய்யா விற்று
அப்பிழைப்பில் லாபம் பெற்று
எங்கள் பிழைப்பு நடப்பதினை
யாராரிவார்? என்றறிவார்?

3 comments

 1. Saravanan Says:
 2. உழைப்பாளர்களை பற்றி கவலை கொள்ளும் அரசியல் இங்கே எதுவென தேட வேண்டிஉள்ளது ஆனாலும் நம்பிக்கை உள்ளது இடது சாரிகளால் அது சாத்தியம் என்று .....

   
 3. Anonymous Says:
 4. tholar enaku entha video pathivu thara mudiyuma nan pay panukiraiyaen pls call 9442125633 leadens

   
 5. "உங்களின் தேவை
  நீண்ட நாள் அரசியில்!"

  அரசியல் என்று எழுத முனைந்தீரா...??

   
bookmark
bookmark
bookmark
bookmark
bookmark