மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!

லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் நிலையில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்தும் தமிழக அரசின் செயலைக் கண்டித்து தமிழகம் முழுவதும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் 03.02.2010 புதனன்று கருப்புக்கொடி ஏந்தி எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பத்து மாவட்டங்களில் ஆயிரத்து 200 பேர் கைது செய்யப்பட்டனர். கோவை, ஈரோடு, திருவண்ணாமலை, பெரம்பலூர், நாகை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற வாலிபர் சங்க தோழர்கள் 600க்கும் மேற்பட்டவர் களை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ள அரசாணை எண் 170 -ஐ உடனே வாபஸ் வாங்க வேண்டும் தமிழகம் முழுவதும் 29 மாவட்டங்களில் இப்போராட்டம் எழுச்சியான முறையில் நடைபெற்று உள்ளது. காவல்துறையினர் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தை நடத்த விடாமல் பல்வேறு வகைகளில் அச்சுறுத்தினர். குறிப்பாக பெரம்பலூர் மாவட்டத்தில் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் 4ஆம் தேதி வருவதைத் தொடர்ந்து மிகுந்த கெடுபிடி செய்துள்ளனர். பொது இடங்களில் கூடுவதற்கு அனுமதி அளிக்காத காவல்துறை, நாலா திசையிலும் இருந்து வந்து இறங்கிய வாலிபர் சங்கத் தோழர்களை அச்சுறுத்தி விரட்டியடித்தனர்.

அநேகமாக அனைத்து மாவட்டங்களிலும் காவல் துறையினருக்கும், வாலிபர் சங்கத்திற்குமிடையே கடு மையான தள்ளு முள்ளுகள் நடந்துள்ளது. இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கின்ற அரசாணை எண் 170-ஐ திரும்பப் பெற முன்வராத திமுக அரசு, காவல்துறையை ஏவிவிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை அச்சுறுத்துவதும், அடக்குவதும் அராஜகமானது. தன்னுடைய அராஜக நடவடிக்கைகளை கைவிட்டு திமுக அரசு அரசாணை எண் 170-ஐ திரும்பப் பெறவேண்டும், இளைஞர்களின் வேலை வாய்ப்பை உறுதி செய்ய முடியாத அரசாங்கம் இளைஞர்களை அடக்குவதல் பிரச்சனையை திசைதிருப்ப முயல்வது கேவலமான அனுகுமுறையாகும்.

18.12.2009-ல் ஓய்வு பெற்றேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் அரசு உத்தரவை வெளியிட்ட நாள் முதல் மாநிலத்தின் பல்வேறு ஜனநாயக அமைப்புகளும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால் முதல்வர் கிளிப்பிள்ளைச் சொன்னதைப்போல், திரும்பத், திரும்ப ஒரே வரியைச் சொல்லி வருகிறார். அதாவது ``ஓய்வு பெற்றேருக்கு வேலை என்பது தற்காலிகமானதே. இளைஞர்களை எந்த வகையிலும் பாதிக்காது என்று முதல்வர், ஆளுனர், துணை முதல்வர் ஆகியோர் குறிப்பிடுகின்றனர்.

கடந்த 4 ஆண்டுகால திமுக ஆட்சியில் மட்டும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்கள் சுமார் 34 லட்சம் பேர். கடந்த 4 ஆண்டுகளில் திமுக ஆட்சியில் நிரந்தர வேலை பெற்றேர் சுமார் 70 ஆயிரம்பேர். மற்றபடி தனியார் நிறுவனங்கள் நியமிப்பதுபோல் அரசும் தினக்கூலிக்கான ஆட்களை நியமனம் செய்து வருகிறது. இது சமூகப் பாதுகாப்புடனான வேலை அல்ல என்பதை அரசு நன்றாக அறியும். எனவே கொள்கையை மாற்றாமல்; உத்தரவை திரும்பப் பெறாமல், புதிய உத்தரவு என தனது இளைஞர் விரோத கொள்கையை நியாயப் படுத்துவது, அநியாயமானது. அதுமட்டுமல்ல, அரசின் மேற்படிச் செயல்கள் அனைத்தும் அரசுத்துறையில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்படு வதற்கு வழிவகை செய்யாது. வேலைவாய்ப்பு அலுவலகங்கள் சமீபத்தில் ஆசிரியர் பணிக்கு பரிந்துரைகளைக் கொடுத்துள்ளது. அதில். தமிழ் துறைக்கு 1988-ல் பதிவு செய்தவர்தான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சுமார் 20 ஆண்டுகாலம் மூப்பு அடிப்படையில் உள்ளேருக்கே வேலைகிடைக்கும் நிலை இருக்கிறது. இந்த அவலங்கள் நீங்க வேண்டுமானால், காலிப் பணியிடங்கள் அனைத்தும் இளைஞர்களால் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.

0 comments

bookmark
bookmark
bookmark
bookmark
bookmark