மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!


அறிவு நிறம்பி வழியும் மன்மோகன்சிங் தலைமை ஏற்றிருக்கும் மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக உள்ளவர்களுக்கே நல்லது செய்யும் நிதி நிலை அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்த 2010-2011 ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கை எந்த விதத்திலும் தேசத்தின் வளர்ச்சியை தூண்டுவதாக அமையவில்லை. மக்கள் மீது கடுமையான சுமையை விதிக்கும் வகையில் நிதி நிலை அறிக்கையை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே கடந்த பல மாதங்களாக வரலாறு காணாத விலைவாசி உயர்வால் அவதியுறும் மக்களுக்கு நிவாரணம் அளிப்பதாக மத்திய பட்ஜெட் இல்லை. மாறாக பற்றாக்குறையை சரி செய்வதற்காக அனைத்து விதமான மறைமுக வரிகளையும் உயர்த்த அரசு எடுத்துள்ள முடிவு, மக்கள் மீது கடுமையான தாக்குதலை தொடுக்கும். அரசின் பற்றாகுறையை சமாளிக்க மாற்று வழிகளைப் பற்றி கொஞ்சமும் யோசிக்காமல் தொடுக்கப்பட்டுள்ள தாக்குதல் இது.
விலைவாசி உயர்வால் மக்கள் அவதிப்படுவதால் ரயில்வே சரக்கு கட்டணத்தை உயர்த்தவில்லை என்று மகள் மீது கரிசனம் பொங்க அக்கா மம்தா பானர்ஜி பேசுகிறார். மறுபக்கம் அவர் அங்கம் வகிக்கும் அரசின் நிதியமைச்சரோ பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த வழிவகுத்து, அதன் மீதான வரிகளை கடுமையாக உயர்த்தி அறிவிக்கிறார். "கேக்கிறவன் கேனயனா இருந்தா"... என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது.
இந்த நிதி நிலை அறிக்கையின் எதிரொலியாக நாடு முழுவதும் உடனே லாரி வாடகை உயர்ந்துவிட்டது. இதனால் இந்த வாகனங்களில் கொண்டு வரப்படும் சரக்குகளும் விலை உயரும் என்பதை சொல்லவேண்டியதில்லை. ஏற்கெனவே 20 விழுக்காடு அளவிற்கு உணவுப்பொருட்களின் விலை உயர்ந்துள்ள நிலையில், இந்த நிதி நிலை அறிக்கையின் பலனாய் பணவீக்கம் மேலும் அதிகரிக்கவே செய்யும். உணவுப் பாதுகாப்புக்காக சட்டம் நிறைவேற்றப் போவதாக கூறும் மத்திய அரசு, மறுபுறத்தில் உணவு மானியத்தை குறைத்து சாமானிய மக்களுக்கு வேட்டு வைக்கிறது. உணவு தாணிய கிடங்கில் எலிகளுக்கு உணவாக பயன்படும் தாணியங்கள் பட்டினியால் வாடும் மக்களின் உயிரை பாதுகாக்க வெளிவருவதில்லை.
செல்வந்தர்களை குஷிபடுத்தும் வகையில் ரியல் எஸ்டேட் அதிபர்கள், பெரும் ஹேட்டல் அதிபர்கள், வர்த்தக நிறுவனங்கள் உள்பட அதிக வருமானம் ஈட்டும் பிரிவினருக்கு நேர்முக வரியில் இருந்து ரூ.26 ஆயிரம் கோடி ரூபாய் வரை சலுகைகளை அளித்துள்ளது. அந்நிய, இந்திய முதலாளிகளுக்கு ஏற்கெனவே கடந்த இரண்டு ஆண்டுகளில் கொடுத்துள்ள ஏறத்தாழ 5 லட்சம் கோடி ரூபாய் சலுகைகளில், ஒரு பகுதியை மறை முக வரிகளை சற்று உயர்த்தித் திருப்பிக் கொள்வது போன்ற தோற்றத்தை ஒருபுறம் கொடுத்துக்கொண்டே, மறுபுறம் செல்வந்தர்களுக்கு நேர்முக வரி சலுகைகளாக ரூ.26,000 கோடியை அள்ளி வீசியுள்ளது.
ஆனால் நேர்முக வரிகள் குறைப்பால் மத்திய அரசு 26,000 கோடி ரூபாய் இழக்கும் என்று பட்ஜெட் கூறுகிறது. மறுபுறம், மறைமுக வரிகளைக் கூட்டி அதனால் 46,000 கோடி ரூபாய் கூடுதலாகக் கிடைக்கும் என்று பட்ஜெட் சொல்கிறது. இது முழுமையும் சாமானிய உழைப்பாளி மக்களின் மீது பெரும் சுமையாக, விலைவாசி உயர்வு மூலம் விழும்.
  2009-10 நிதியாண்டில் ரூ.25,000 கோடிக்கும் அதிகமாக பொதுத்துறை பங்குகளை விற்றுள்ளது. இடதுசாரி கட்சிகளின் ஆதரவின்றி அரசு இருக்க முடியாது என்ற நிலை 2004-2009ல் இருந்ததால் பொதுத்துறை பங்குகளை விற்க முடியாமல் இருந்தது. இப்பொழுது நிலைமை மாறியுள்ளதால் குறைந்தபட்ச பொதுத்திட்டத்தில் சொல்லப் பட்டுள்ளதற்கு விரோதமாக, லாபகர பொதுத் துறை நிறுவனங்களையும் தனியார்மயமாக்கும் வேலை நடந்து வருகிறது. 2010-11 பட் ஜெட்டில் மேலும் ரூ.40,000 கோடிவரை பொதுத்துறை பங்குகள் விற்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2009-10ம் ஆண்டில் மத்திய திட்டச் செலவு ரூ.3,25,148 கோடி என்று கடந்த பட் ஜெட் நேரத்தில் அறிவிக்கப் பட்டிருந்தது. ஆனால் ரூ.3,15,176 கோடிதான் என்று திருத்தப்பட்ட மதிப்பீடு கூறுகிறது. 2010-11க்கு சென்ற ஆண்டு பட்ஜெட் மதிப் பீட்டை விட 14 சதவீதம் கூடுதல் என்று உள்ளது. இது, பண வீக்கத்தைக் கணக்கில் கொண்டால் மிகவும் சொற்பமே.
அரசின் திட்ட ஒதுக்கீடுகள் எங்கே செல்கின்றன? ஊரக வளர்ச்சிக்கு சென்ற ஆண்டு அறிவித்தது ரூ.51,769 கோடி, 2010-11ல் ரூ.55,190 கோடி மட்டுமே. விலைவாசி உயர்வைக் கணக்கில் கொண்டால் இது சரிவே, உயர்வு அல்ல. வேளாண்மை, பாசனம் மற்றும் வெள்ளக்கட்டுப்பாடு ஆகியவற்றுக்கான மொத்த ஒதுக்கீடு சுமார் ரூ.11,000 கோடியி லிருந்து ரூ.12,500 கோடியாக மட்டுமே உயர்த் தப்பட்டுள்ளது. இதுவும் உண்மையளவில் சரிவுதான். ஊரக வேலை வாய்ப்புத்திட்டத் திற்கு பட்ஜெட்டில் ஒதுக் கப்பட்டுள்ள தொகையும் மிக சொற்பமே ஆகும். ஆக வளர்ச்சி சார்ந்த பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு மிகவும் குறைவு. ஆனால் ராணுவத்திற்கு ஒதுக்கீடு 1,47,344 கோடி இது கடந்த ஆண்டைவிட 5,641 கோடி அதிகம். ஆனால் கைவிகான ஒதுக்கீடு 45,711 கோடிதான். இது கடந்த ஆண்டை விட 9,211 கோடியே ஆதிகம். அதாவது ராணுவத்திற்கு 5,641 கோடி அதிகம் கல்விக்கு வெறும் 9,211 கோடிதான். சாமானிய மக்களின் பிள்ளைகள்தானே பாதிக்கப்படுவது. ஆட்சியாளர்களுக்கு என்ன கவலை?
அனால் தமிழக முதல்வர் தனது உடன் பிறப்புகளுக்கு கடிதம் எழுதுவது போல மத்திய அரசுக்கு கடிதம் எழுதுகிறார். மத்திய அரசை எதிர்த்து போராட்டம் எதையும் நடத்த அவர் தயார் இல்லை. இலங்கை பிரச்சனையில் காங்கிரஸ் கூட்டம் நடத்தாமல் இருந்ததற்கு கைமாறு இது போலும். தமிழகத்தின் வளர்ச்சி 80 ஆயிரம் கோடி கடனில் வளர்கிறது. இலவசங்கள் தினம் ஒரு அறிவிப்பு என கலைஞர் அரசு பல்லாயிரம் கோடி கடன் பெற்று அடுத்த தேர்தலை கணக்கில் கொண்டு ஆட்சி நடத்துகிறது. அடுத்த தெர்தல் முடிந்ததும் நமக்து தமிழக மக்கள் வட்டியும் முதலும் சேர்த்து இவைகளை கொடுக்க வேண்டும்.
கடந்த முறை இடதுசாரிகளின் ஆதரவேடு இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, அந்தக் கட்சிகளின் நிர்ப்பந்தம் காரணமாக மக்கள் விரோத நடவடிக்கைகளை அமல்படுத்த முடியாமல் ஒத்திப்போட்டது. ஆனால் இன்றே அத்தகைய சூழ்நிலை இல்லாத கெடுவாய்ப்பின் காரணமாக கடிவாளம் இல்லாத குதிரைபோல் ஒடுகிறது மத்தியஅரசு. இதுபோன்ற குதிரையை மக்கள் போராட்டம் என்ற கடிவாளத்தை கொண்டே தடுத்து நிறுத்த முடியும்.

1 Responses to சாதரண மனிதர்களை பற்றி கவலைப்படாத மத்திய பட்ஜெட்.

  1. அப்டியெல்லாம் சொல்லக் கூடாது.... அது தான் பலூன் விலையை குறைச்சிட்டோம்ல... ஆளுக்கொன்னு வாங்கி வேளைக்கொன்னு வச்சி ஊதிக்கிற வேண்டியது தானே?

     
bookmark
bookmark
bookmark
bookmark
bookmark