மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!


அன்பான தமிழர்களே! ஆற்றல் மிகு மறவர்களே! கல் தோன்றி மண்தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி மக்களே.. எனவே உங்களுக்கு சொல்லுகிறேன்,


இந்திய நாட்டில் அதுவும் குறிப்பாக தமிழகத்தில் உள்ளது போல சிறப்பான நீதிதுறையை நீங்கள் எங்கும் கான முடியாது. கன்றின் மீது தேர் ஏற்றிய குற்றத்திற்காக தனது மகன் மீது தேர் ஏற்றிக்கொன்ற "வெவரம் கெட்ட" கதைகளை கேட்டு வளர்ந்த தமிழர்களாகிய நாம் மிகவும் சிரமப்பட்டு, சிறுவயது முதல் கடுமையாக கழனியில் ஒழச்சி அதன் மூலம் பல ஏக்கர் நிலங்களை சேர்த்து வைக்கும் தினகரன் போன்ற "உழைப்பால் உயர்ந்த உத்தம" நீதி மான்களை கொண்ட பெருமைமிகு தேசத்தில் வாழ்கிறோம் என்பதில் நாம் மேலும் பெருமை கொள்ளலாம். மாமுல் வாங்காமல், கட்டப் பஞ்சாயத்து செய்யாமல், கள்ளச்சாராய வியாபாரிகளிடம் சலாம் போட்டு வழியாமல், நேர்மை தவராத மிகச்சிறந்த காவல்துறை தமிழகத்தை தவிர உலகில் வேறு எங்கும் கிடையாது என்பதில் பச்சை தமிழர்களாகிய மிகவும் மகிழ்ச்சிக் கொள்ளலாம். தற்போது நாகை மாவட்டத்தில் உள்ள கீழ்வெண்மணி துவங்கி உத்திர பிரதேசத்தில் உள்ள கயர்லாஞ்சி வழியாக மதுரைக்கு நீங்கள் வந்தால் அங்கு நடந்த சம்பவங்களில் கிடைத்திருக்கும் நீதிகளை பார்த்தால் பெருமிதத்தில் உங்கள் நரம்புகள் புடைத்து, உணர்வுகள் கிளம்பி உங்கள் ஆடைகள் ஈரமாகும். ஈரமாக காரணம் வியர்வை என்பதையறிக.

எல்லோருக்கும் "பொதுவான" நீதிமன்றம், காவல் துறை போன்றவற்றை வெவரம் கெட்ட பலர் தவராக விமர்சனம் செய்வதை நம்மால் புரிந்துக்கொள்ளவே முடியவில்லை. காவல்துறையினர் தங்கள் தடிகளை (கையில் இருப்பது) நீட்டி பயிற்சி எடுக்கும் போது அந்தப்பக்கம் வந்த அடிப்பட்ட வாசாத்தி பெண்களும், மீண்டும் அவர்கள் அவ்வாறு தமிழகம் முழுவதும் பயிற்சி எடுக்கும் போது தமிழகத்தில் பல இடங்களில் குறுக்கே புகுந்து அடிபடும் பல்வேறு தரப்பினரும் அவர்கள் மீது குற்றத்தை வைத்துக்கொண்டு காவல் துறையை குற்றம் செய்வது எந்த வகையில் நியாயம் என்பதை பொதுமக்கள் புரிந்து கொள்ள மறுக்கின்றனர். என்னா சார் நாயம் இது?.

09.12.09 அன்று நமது நீதிதேவதை தனக்கு கிடைத்த மிகச்சிறந்த பரிசை நினைத்து ஆனந்தக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறாள். அவள் ஆனந்த கண்ணீர் நீதிமன்றங்களில் பெருகி... நிரம்பி... வழிந்து... நமது நாட்டின் வீதிகள்தோறும் ஓடுவது உங்களுக்கு தெரிகிறதா? நமது நீதிமன்றஙக்ள் தாங்கள் நடத்தும் வழக்குகளில் சாட்சிகள் சந்தேகத்துக்கு இடமில்லாமல் சாட்சி சொன்னால்தான் நீதியை நிலைநாட்ட முடியும் என்பதை இந்த முட்டாள் பொதுமக்கள் எப்போதுதான் புரிந்துக்கொள்வார்கள்.

சரி சரி போதும் பொத்திகிட்டு போய்யா என தாங்கள் சொல்வதால் இத்தோடு முடித்துக்கொள்கிறேன். இனிவரும் செய்திக்கும் மேற்கண்ட சிற்றுரைக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்பதை "ங்கொப்புரானே சத்தியமா" சொல்லிக்"கொல்ல" கடமைப்பட்டுள்ளேன். நன்றி வணக்கம். வால்க தமில், வால்க தமில் நாடு.
 
தினகரன் ஊழியர்கள் எரிப்பு வழக்கு ‘அனைவரும் விடுதலை’


மதுரை தினகரன் நாளி தழ் அலுவலகம் தாக்கப் பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 17 பேரை விடுதலை செய்து நீதிமன் றம் உத்தரவிட்டுள்ளது.

திமுகவில் யாருக்கு செல் வாக்கு அதிகம் என தின கரன் நாளிதழ் கருத்துக் கணிப்பு வெளியிட்டது. இதில் மு.க.ஸ்டாலினுக்கு செல்வாக்கு அதிகம் என மதுரை தினகரன் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து மு.க.அழகிரி ஆதரவாளர் கள், கடந்த 9.5.2007 அன்று மதுரை உத் தங்குடியில் உள்ள தினகன் நாளிதழ் அலுவலகத்தை அடித்து நொறுக்கி தீவைத்தனர். இத்தாக்குதலில் தினகரன் ஊழியர்களான பொறியாளர் கள் கோபிநாதன், வினோத் குமார், காவலர் முத்துராம லிங்கம் ஆகியோர் உயிரிழந் தனர். அவர்களுக்கு தினக ரன் சார்பாக கலாநிதி மாறன் தலா 15 லட்ச ரூபாயை வழங்கினார். இவ்வழக்கில் நீதி கிடைக்கும் வரை விட மாட்டேன் என கலாநிதி மாறன் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் கூறி னார்.

இந்நிலையில் மாறன் சகோதரர்களுக்குப் போட்டி யாக மு.க.அழகிரி, ராயல் கேபிள் டி.வியைத் துவக்கி னார். இதனால் திமுகவுக்கும், மாறன் சகோதரர்களுக்கும் மோதல் வெடித்தது. திமுக விற்கு எதிரான கருத்துக் களை தங்களுடைய தொலைக் காட்சியில் தொடர்ந்து ஒளிபரப்ப ஆரம்பித்தார் கள். இதனால் அறிவாலயத் தில் இருந்த சன் டி.வி. அலு வலகத்தை காலி செய்ய உத்தரவிடப்பட்டது. அத்து டன் மத்திய அமைச்சராக இருந்த தயாநிதிமாறன் பதவி பறிக்கப்பட்டது. சன் டி.வி. சார்பாக தயாரிக்கப் பட்ட படம் மதுரையில் ஓடவிடாமல் தடுக்கப்பட் டது. அத்துடன் அப்படத் தின் சி.டி. இலவசமாக பொது மக்களிடம் வழங்கப்பட்டது.மதுரையில் தினகரன் நாளிதழ் அலுவலகம் தாக் கப்பட்டதில் 3 ஊழியர்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து உரிய நீதிவிசாரணை நடத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தியது. இதற்காக மது ரையில் மாபெரும் போராட் டத்தையும் நடத்தியது. இதையடுத்து இவ்வழக்கை சிபிஐ விசாரிக்கும் என சட்ட மன்றத்தில் முதலமைச்சர் 19.5.2007 அன்று அறிவித்தார்.

இச்சம்பவம் தொடர் பாக அட்டாக் பாண்டி, திருச் செல்வம், பிரபு,சரவண முத்து, முருகன், விஜய பாண்டி, கந்தசாமி, ரமேஷ்பாண்டி, ராமையாபாண்டி, வழி விட்டான், சாலைமுத்து, சுதாகர்,ரமேஷ்குமார், திரு முருகன் (எ) காட்டுவாசி, ரூபன், மாலிக்பாட்சா மற் றும் காவல்துறை டிஎஸ்பி ராஜாராம் உள்ளிட்ட 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு மதுரை மாவட்ட செஷன்ஸ் நீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து திமுகவுடனான மோதலை மாறன் சகோதரர்கள் முடி வுக்குக் கொண்டு வந்தனர். திமுகவில் போதிய வெளிச் சமற்று இருந்த தயாநிதி மாறனுக்கு மீண்டும் நாடா ளுமன்றத் தேர்தலில் போட் டியிட திமுக வாய்ப்பு வழங் கியது. அத்துடன் மீண்டும் அவர் மத்திய அமைச்சராக் கப்பட்டார்.

இந்த நிலையில் நடை பெற்று வந்த தினகரன் நாளி தழ் தாக்கப்பட்ட வழக்கில் 85 சாட்சிகள் விசாரிக் கப்பட்டனர். நீதிமன்றத்தில் சிலர் பிறழ்சாட்சியளித்தனர்.

இவ்வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு புதனன்று வழங்கப்பட்டது. இவ்வழக்கில் குற்றம் சாட் டப்பட்ட 17 பேரையும் விடு தலை செய்து நீதிபதி ரத்தி னராஜ் உத்தரவிட்டார்

10 comments

 1. குற்றவாளிகளை விடுவிக்கும் வழக்குகள் அனைத்தும் விரைவில் முடிக்கப்படுகின்றன. தண்டிக்கும்படியான வழக்குகள் கடைசிவரை இழுத்தடிக்கப்படுகின்றன. அது ஏனோ இன்னும் புரியவில்லை.

  நீதித்துறை துறைகளிடம் விலைபோய்விட்டு வெகு நாட்கள் ஆகிவிட்டது தல.

  பாவம் அந்த மூவரின் குடும்பம். :-(

   
 2. தமிழ்மணத்திலும் இணைத்துவிட்டேன் தல.

   
 3. குறைகளை நம்மிடம் வைத்துக் கொண்டு அவர்களை திட்டுவதில் பயன் இல்லை. நீதிமன்ற தீர்ப்புக்குப் பின் அதை பட்டாசு வெடித்து கொண்டாடுபவனும் நம்மைப் போன்ற ஒருவன் தானே......!

   
 4. Ravi Says:
 5. அந்த மூவரும் தற்கொலை செய்து கொண்டார்கள் என்று தீர்ப்பில் சொன்னாலும் சொல்லியிருப்பார்கள்.

  கொடுமை!

   
 6. இந்த செய்தி தினகரனில் வந்தாலும் ஆச்சரியம் இல்லை.

   
 7. Anonymous Says:
 8. இப்போ தெரியுதா யாருக்கு செல்வாக்கு அதிகம்மென்று......

   
 9. நண்பர் ரோஸ்விக் வணக்கம், தங்கள் பின்னூட்டத்தில் சொல்லி இருக்கும்

  "குற்றவாளிகளை விடுவிக்கும் வழக்குகள் அனைத்தும் விரைவில் முடிக்கப்படுகின்றன. தண்டிக்கும்படியான வழக்குகள் கடைசிவரை இழுத்தடிக்கப்படுகின்றன. அது ஏனோ இன்னும் புரியவில்லை"

  வரிகள் உண்மை. விடுவிக்கும் வழக்குகளில்தான். கவனிப்பு இருக்கும்.

  பிறகு இக்கட்டுரையை தமிழ் மனத்தில் இணைத்தற்கு நன்றி.

   
 10. நண்பர் ராம் வணக்கம், தங்கள் பின்னூட்டத்தில் சொல்லி இருக்கும் வரிகளில் உங்கள் வலியை உணர முடிகிறது. ஆனால் நம்மைப்போன்றவர்கள் இதை எதிர்த்து விணையாற்றுவது அதிகரிக்க வேண்டும். சரிதானே

   
 11. நண்பர் ரவி வணக்கம், தங்கள் பின்னூட்டத்தில் சொல்லி இருக்கும் வரிகளை நான் எழுத நினைத்தேன் தாங்கள் எழுதியதற்கு நன்றி

   
 12. பின்னூட்டம் பதிந்துள்ள நண்பர் ஒரு காசு வுக்கு நன்றி

   
bookmark
bookmark
bookmark
bookmark
bookmark