மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!அறுபது வயது முதியவரான பிரஜா பௌரி வேறுவழியில்லாததனால்தான் இந்த முடிவுக்கு வந்தார். ‘உயிரே போனாலும் சரி, சொந்த நிலத்தைவிட்டு வெளியேறமாட்டேன்’ என்பதே அந்த முடிவு. “நீங்கள் என்னை அடிக்கலாம்; கொல்லலாம்; ஆனால் உயிருள்ள வரை என் நிலத்தை விட்டுத் தரமாட்டேன். அதற்காக இந்த மண்ணிலேயே என் உயிரை விடுவேன்” - இந்த தீரமிக்க உறுதிக்கு முன்னால் திரிணாமுல் குண்டர்களும் பழைய நிலச்சுவான்தாரும் பின்வாங்கினர். நிலத்திற்கு பாதுகாப்புத் தரவேண்டுமெனக் கோரி நிலப் பட்டாவுடன் அரசு அலுவலகங்களுக்கும், காவல் நிலையத்திற்கும் ஏறி இறங்கியும் பயன் ஏதும் ஏற்படாத போது தான் அவர் தன் நிலத்தை தானே பாது காக்க முன்வந்தார். பாங்குரா மாவட்டத்தைச் சேர்ந்த இந்துப்பூர்க்கு அருகில் உள்ள சாக்ளதோடு என்ற கிராமத்தைச் சேர்ந்த பிரஜா பௌரி தனித்துவிடப்பட்ட ஒற்றை ஆளல்ல. மற்ற விவசாயிகளும் இப்போது அவருக்கு ஆதரவாக உள்ளனர். அவரது நிலத்தைப் பறிக்க வருவோரை விவசாயிகளும் அவருடன் சேர்ந்து எதிர்க் கிறார்கள்

முதியவர் பிரஜா பௌரிக்கு கிர்மணிப் பூர் கிராமத்தில் 38 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்திற்கு 1990 ல் இடது முன்னணி அரசு பட்டா வழங்கியது. இந்நிலத்தில் விவசாயம் செய்துதான் இவரது குடும்பம் வாழ்கிறது. சாக்ளதோடு கிராமத்தில் மகர்பௌரி, ஸ்வபன் பௌரி, பிரஹலாத் பௌரி, அன்ன பௌரி, சாவித்ரி பௌரி, ரஸனா பௌரி ஆகியவர்களின் பட்டா நிலங் களைத் தட்டிப் பறிப்பதற்கு பழைய பெரும் நிலச்சுவான்களின் குண்டர் படையும் திரி ணாமுல்காரர்களும் முயன்றாலும் இவர்களின் எதிர்ப்பெல்லாம் பலனளிக்கவில்லை. உபரி நிலத்தை நிலமில்லாத ஏழை விவசாயிகளுக்குப் பட்டா போட்டு வழங்கும் இடது முன்னணி அரசின் முடிவுக்கு எதிராக நிலப்பிரபுக்கள் உச்சநீதிமன்றம் வரை சென்று வழக்குப் போட்டனர். ஆனால், அரசாங்கத்தின் உத்தரவை சட்ட விரோத மானது என்று அறிவிக்க நீதிமன்றம் தயாரில்லை. குத்தகைக்கு விவசாயம் செய்பவர்களுக்கு நிலத்தில் நிரந்தரமாக விவசாயம் செய்வதற்கான உரிமை இல்லையென்று இவர்கள் நீதிமன்றத்தில் வாதாடினர். ஆனால் இப்போதைய நிலை அப்படியே தொடர வேண்டு மென்றும், குத்தகைக்கு விவசாயம் செய்பவர்களை அதிலிருந்து வெளியேற் றக்கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது

நிலத்தைக் கைப்பற்றும் முயற்சியை என்ன விலை கொடுத்தேனும் எதிர்ப்போம் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சூர்யகாந்த மிஸ்ராவும் தெரிவித்துள்ளார்.போராட்டங்கள் மூலம் தான் விவசாயிகள் நிலத்தின் உரிமையாளர்கள் ஆனார்கள். வங்கத்தில் 1990 வரை இத்தகைய போராட்டங்கள் நடைபெற்றன. நிலச்சீர் திருத்தத்தைச் சீர்குலைக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். மம்தாவின் ஆட்சியில் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டியவர்களே சட்டத்தை மீறுவதற்கு உதவுகிறார்கள். நீதி மீறப்படுவதை போராட்டங்கள் மூலமாகவும் நீதிமன்றம் மூலமாகவும், எதிர்ப்போம் என்றார் சூர்யகாந்த மிஸ்ரா.

மேற்குவங்கத்தில் தொடர்ந்து சி.பி.எம் ஊழியர்களை படுகொலை செய்தனர் . பின்பு தொழிற்சங்க ஊழியர்கள் மீது, அதன் பின்  அலுவலகங்கள் மீது தாக்குதல் தொடர்கிறது. இதோ அடுத்த கட்டமாக நிலங்களை இழந்த நில முதலைகளை திருப்திபடுத்தும் பணியை மம்தா கட்சியினர் துவக்கி உள்ளனர். ஆக மேற்குவங்கத்தில் உரிமைகளை பறிக்கும் செயல் துவங்கிவிட்டது. தமிழகத்தில் மேற்குவங்க ஆட்சிக்கு எதிராக தொடர்ந்து தூற்றிவந்த மம்தாயிஸ்டுகள் இப்போது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என நம்பலாம்.

0 comments

bookmark
bookmark
bookmark
bookmark
bookmark