மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!


கடந்த ஆட்சிக் காலத்தில் திமுகவினர் அடாவடியாக சொத்துக்களை சேர்த்துள்ளனர். அவற்றை மீட்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

பெட்ரோல் விலை உயர்வு கண்டிக்கத்தக்கது. பெட்ரோல் மீதான வரியை குறைப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம் என ஜெயலலிதா தெரிவித்தார்.

தமிழகத்தில் எம்ஜிஆர் காலத்திலேயே சட்ட மேலவை தேவையில்லை என முடிவுசெய்யப்பட்டது. தற்போதும் சட்ட மேலவை தேவையில்லை. எனவே அது அமையாது என்றார் அவர்.

பள்ளிக் கட்டண விவகாரத்தில் அரசு நேரடியாகத் தலையிடாது. அதற்காக அமைக்கப்பட்டுள்ள ரவிராஜபாண்டியன் குழுவின் முடிவை அரசு அமல்படுத்தும். பள்ளிகள் கேட்டுக்கொண்டால் கட்டண விவகாரத்தில் அரசு தலையிடும் என ஜெயலலிதா கூறினார்.

தமிழகத்தில் நிலவிவரும் மின்வெட்டு பிரச்னையை தீர்க்க அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்றார் அவர்.

மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவது குறித்து ஆளுநர் உரையில் அறிவிப்பு வெளியாகும். தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்ட அனைத்தையும் நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்கும் என ஜெயலலிதா தனது பேட்டியின்போது தெரிவித்தார்.

இது 2011 மே 24  ஆம் தேதி அம்மையாரிடம் நிருபர்கள் எடுத்த பேட்டியின் பதில்கள். ஆனால் கேள்விகள் எல்லாம் வெளியாகவில்லை.

நாம் எழுப்ப வேண்டிய கேள்விகள் இன்னும் இருக்கிறது .

1 . பள்ளிக் கட்டண விவகாரத்தில் அரசு நேரடியாகத் தலையிடாது. அதற்காக அமைக்கப்பட்டுள்ள ரவிராஜபாண்டியன் குழுவின் முடிவை அரசு அமல்படுத்தும். நீதிபதி  கோவிந்தராஜன் சொன்னது என்னானது?  

2 . இந்த ஆண்டும் நன்கொடை கொள்ளையை தடுத்து நிறுத்த முடியாதா? 

3 . சமச்சீர் கல்வி என்ன ஆனது ? 

4 .   பள்ளிகள் கேட்டுக்கொண்டால் கட்டண விவகாரத்தில் அரசு தலையிடும்  என்றால் பெற்றோர்கள் கேட்டால் கடந்த ஆட்சியை போல தர்ம அடிதானா? 

5 . தமிழகத்தில் எம்ஜிஆர் காலத்திலேயே சட்ட மேலவை தேவையில்லை என முடிவுசெய்யப்பட்டது. தற்போதும் சட்ட மேலவை தேவையில்லை. எனவே அது அமையாது சரியான முடிவு .. சபாஷ் .. ஆனால்  

மதுவிலக்கு அமுலாகும் என்றார் தலைவர் அம்மாவும் அமுலாக்குவார்களா?


2 comments

  1. சமச்சீர் கல்வி நிராகரிக்கப் பட்டது பொன்றதொரு மாயை உருவாக்கப் படுகிறது தோழர். உண்மை அதுவல்ல. சமச்சீர் கல்விக்கு நாம் இன்னும் நிறையப் படிகள் ஏறிப் போகவேண்டும். இந்தப் பாடப் புத்தகங்கள் என்பது ஒத்த பாடத் திட்டம் அவ்வளவே. அதற்கே இவ்வளவு கலகம். அவன் கையிலும் இவன் கையிலும் ஒரே புத்தகம். அதையே தாங்க முடியவில்லை இவர்களுக்கு.

    நமது ஆசை அவன் கையில் உள்ள நோட்டும் இவன் கையில் உள்ள நோட்டும் ஒன்றாகவும் மாற வேண்டும் . அவனது உடையும் இவனது உடையும் ஒன்றாகவேண்டும்.இருவருக்கும் ஒரே கல்விச் சூழல் இருவருக்கும் ஒரே கல்வி சாதனம் என்றாகும் போதுதான் சமச்சீர் கல்வியாகும்.

    அதற்கு நீண்ட போராட்டம் தேவைப் படும். இந்த மட்டும் ஆனமைக்கு இந்திய மாணவர் சங்கம் பொன்ற அமைப்புகள் செய்த தியாகத்தையும் பட்ட அடிகளையும் என்றும் நன்றியோடு நினைத்துப் பார்ப்போம்

     
  2. // தமிழகத்தில் எம்ஜிஆர் காலத்திலேயே சட்ட மேலவை தேவையில்லை என முடிவுசெய்யப்பட்டது. தற்போதும் சட்ட மேலவை தேவையில்லை. எனவே அது அமையாது சரியான முடிவு .. சபாஷ் .. ஆனால் //

    என்னது ம.கோ.இரா. செத்துட்டாரா?

    இன்றைய நிலைக்கு தேவையா இல்லையான்னு மட்டும் பார்க்கனும். அதவிட்டுட்டு மன்னர்மன்னன் காலத்துல மாட்டு வண்டில போனாங்கன்னும் இன்னைக்கும் அதே மாதிரி போகலாமா?

    என்ன கொடுமை இது சரவனன்?

    ------------------
    தறுதலை
    (தெனாவெட்டுக் குறிப்புகள் - மே '2011)

     
bookmark
bookmark
bookmark
bookmark
bookmark