மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!


மேற்குவங்கத்தில் ஆட்சி மாறியதை தமிழகத்தில் ம.க.இ.க போன்ற இன்டர்நெட் புரட்சியாளர்கள் மிகவும் சந்தோஷத்துடன் கொண்டாடுகின்றனர். இவர்கள் டுபாக்கூர் புரட்சியாளர்கள் மட்டுமல்ல மம்தாயிஸ்டுகளின் தமிழக வார்ப்பாகவும் இருக்கிறார்கள். அங்கு 34 ஆண்டுகள் மக்களின் அடிப்படை வாழ்வியல் முன்னேற்றத்திற்காக உழைத்த இடதுசாரி ஊழியர்களின் படுகொலைகளை கொஞ்சமும் கண்டு கொல்லாமல் மார்க்சிஸ்டுகளின் எதிர்ப்பை மட்டுமே முதன்மையாக வைத்து பரிதாபமாக அரசியல் நடத்தி வருகின்றனர். 

நிலபிரபுத்துவ முதலாளித்துவ அரசியல் ஏஜென்ட் மம்தாவின் வெற்றி இவர்களுக்கு மிகவும் உற்சாகம் அளிக்கிறது. அமெரிக்க ஆதரவுடன் மம்தாவும் மாவோயிஸ்டுகள் என்ற கூலிக்கு மாரடிக்கும் கொலை பட்டாளமும் மார்க்சிஸ்ட் கட்சியின் ஊழியர்களை நூற்றுக்கணக்கில் படுகொலை செய்ததை இவர்கள் மார்க்சிஸ்டுகளின் ரவுடியிஸமாக வடிவமைத்தனர். நிலசீர்திருத்தம் செய்து மக்கள் வாழ்க்கையில் ஒளிவிளக்கேற்றிய மார்க்சிஸ்டுகளை வெல்ல முடியாமல் தவித்த மம்தா, அந்த மாநிலத்தில் தொழில் வளர்ச்சி இல்லை என கூப்பாடு போட்டார். ஒட்டுண்ணி காங்கிரஸ்  அதற்கு மத்திய அரசிலிருந்து ஆதரவு அளித்தது. தொழிற்சாலைகள் துவக்க அந்த இடது முன்னணி அரசு முயற்சி எடுத்த போது உழைப்பளிகளின்  நிலங்களை பிடுங்குவதாக அபாண்டமாக பழி கூறினர். அங்குள்ள முதலாளித்துவ ஊடகங்கள் ஒவ்வொரு நிமிடமும் இடதுசாரி அரசாங்கத்திற்கு எதிராக பொய்களை கட்டவிழ்த்து விட்டனர்.

சிங்கூரும் நந்திகிராமும் நல்ல வாய்ப்பாக அவரக்ளுக்கு அமைந்தது. இப்பிரச்சனையை வைத்து கொடூரமக படுகொலைகளை அரங்கேற்றினர். மத்திய காங்கிரஸ் அரசு இதற்கு முழு ஒத்துழைப்பை வழங்கியது. இந்தியா முழுவதும் அந்த ஆட்சிக்கு எதிராக கடுமையான பிரசாரங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டது. அந்த ஊடகங்களின் எச்சத்தை தமிழக இணைய புரட்சியாளர்களான "டுபாக்கூர் வீரர்கள்" ம.க.இ.க போன்றோர்கள் அப்படியே வாந்தி எடுத்தனர். 

மேற்கு வங்கத்தில் கொள்ளையடித்த நிலங்களை இழந்த நிலக்கிழார்களும், கொள்ளை லாபம் அடிக்க முடியாத முதலாளிகளும், கள்ள சந்தைகாரர்களும் ஒன்றினைந்து ஒரு மக்கள் ஆட்சியை வீழ்த்தி உள்ளனர். இப்போது ஒரு தேவதூதனாக மம்தாவை சித்தரிக்கின்றனர். இப்போதும் பல லட்சம் மக்கள் ஆதரவு உள்ள ஒரு இயக்கத்தை மொத்தமாய் அழிக்க முயற்சிக்கின்றனர். மம்தா வெற்றி அடைந்ததும் அவரகள் படுகொலைகளை துவக்கி விட்டனர். மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்களும் ஊழியர்களும் கொடூரமாக படுகொலை செய்யப்படுகின்றனர். அரசியல் படுகொலைகளை காங்கிரஸ் கட்சி 1977 இல் செய்ததை போல இப்போது மம்தா துவக்கி உள்ளார்.

ஒன்று மட்டும் நிச்சயம் வரலாற்று பக்கம் எப்போது இத்தகைய கொலைகாரர்களை விரட்டிய வரலாற்றைதான் பதிந்து வைத்திருக்கிறது. இவர்கள் வென்றதாக சரித்திரம் இல்லை. மக்களுக்காக பல தியாகங்களை செய்த மார்க்சிஸ்டுகள் மீண்டும் எழுவார்கள் முன்பைவிட வீரியத்துடன். தமிழகத்தில் மார்க்சிஸ்டுகள் ஒழிந்துவிட்டதாக ஓலமிடும் டுபாக்கூர் புரட்சியாளர்கள் கொஞ்சம் பொறுத்திருப்பது அவசியம். துரோகத்தால் வீழ்த்தப்பாட்டர்களே ஒழிய மார்க்சிஸ்டுகளை அங்கு மம்தா மற்றும் மத்தாயிஸ்டுகளான மாவோயிஸ்டுகளும் ஒட்டுண்ணி காங்கிரசும் நேர்மையாய் வெற்றி கொள்ளவில்லை என்பதை நினைவில் வைப்பது அனைவருக்கும் நல்லது.  

10 comments

 1. Anas Says:
 2. தவிர்க்க முடியாத நிலையில் ஒரு நக்சல் {பு.ஜ.தொ.மு} கூட்டதில் கலந்துக்கொண்டேன். அரபிய நாடுகளில் ஏற்ப்பட்டுள்ள மக்கள் புரட்சி பற்றி கலந்தாய்வு கூட்டம் நட்ந்து கொண்டு இருந்தது ...கூட்டம் நடந்த 1 மணி நேரதில் சுமார் 50 தடவை போலி கம்யூனிஸ்ட்கள் என்று சொன்னார்கள். ,அரபிய நாடுகளில் எற்ப்பட்ட புரட்சிக்கு இந்தியாவில் உள்ள சி.பி.எம் என்ன செய்யும் ..இவர்கள் எங்குபோனலும் கடவுள் வாழ்த்துமாதிரி சி.பி.எம்மை வசைப்பாடுவதே முதல் வேலை......"டுபாக்கூர் வீரர்கள்" நல்ல வார்த்தை தோழர்

   
 3. மிகச் சரியான நேரத்தில் தரப்பட்ட சரியான பதிவு ரமேஷ். மறைக்காமல் உண்மையை சொல்வதெனில் மனசுக்கு தெம்பைத் தந்தது.

   
 4. பின்னூட்டத்திற்கு நன்றி அனாஸ்.. இதுவாவது பரவாயில்லை அரபிய நாடுகள் குறித்த கலந்தாய்வில் திட்டியது. இன்னும் சில இடங்களில் குழாயில் தண்ணீர் வரவில்லை என்றால்கூட சி.பி.எம் கட்சியே காரணம் என்று வசைபாடுவதும் உண்டு. அவர்களிடம் தெரியாமல் மாட்டிக்கொண்டிருக்கும் உண்மையான அப்பாவி தோழர்கள் குறித்துதான் கவலைபட வேண்டியுள்ளது.

   
 5. நன்றி எட்வின் தோழர்.. பின்ன என்ன சும்மா 10 பெயரில் நெட்டில் கணக்கை துவக்கி வைத்துக்கொண்டு ஏதோ உலகமே இவர்கள் பின்னால் சுற்றுவதாக நினைத்துக்கொண்டு எல்லாவற்றுக்கும் தீர்ப்பு வழங்கும் கட்டபஞ்சாயத்துகாரர்களை என்னதான் செய்வது.

   
 6. இளவல் ரமேஷ்!

  நானும் அவர்களிடம் பலமுறை கேட்டு சலித்துவிட்டேன், அசல் கம்யூனிஸ்ட்களை அடையாளம் காட்டுமாறு! அது போகட்டும்! அவர்களின் கூச்சல் கணீணீயோடு அடங்கிவிடும்!

  மேற்கு வங்க அரசை கூட்டு வியூகம் வீழ்த்திவிட்டது எனினும் கம்யூனிஸ கட்சி/அரசின் மேல், அம்மாநில மக்கள் வெறுப்படைந்திருக்கிறார்கள் என்பதையும் ஒப்ப்புக்கொண்டேயாக வேண்டும்!

  சுயவிமர்சனத்திற்கும், மாற்றங்களுக்கும் கம்யுனிஸ கட்சிகள் உட்பட்டேயாக வேண்டும்!

   
 7. kaviaruvi Says:
 8. Well Said ....

   
 9. நீங்க போலி இல்லேன்னு நிருபிங்கப்பா?

   
 10. Thanks kaviaruvi...

   
 11. அன்புள்ள ரம்மி.. உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. உங்கள் கருத்து நியாயமானதுதான். மக்கள் அரசின் மீது கோபம் இல்லை எனில் இந்த தோல்வி கிடைத்திருக்காது. உண்மைதான். அந்த கோபம் இளம் தலைமுறையின் கோபம். அவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை என்ற கோபம். அதுதான் பிரச்சனை. புதிய முயற்சிகளை எடுக்கும் போது தடைகள் ஏற்படுத்தியவர்களை இன்னும் அம்பலப்படுத்தியிருந்தால் இந்த கோபம் உண்மையான திசை பக்கம் மாறி இருக்கும். நிச்சயம் தங்களின் தவறுகளை அங்கு மார்க்சிஸ்டுகள் சுயவிமர்சனத்திற்கு உட்படுத்துவார்கள்.

   
 12. வலிபோக்கன்.. நிச்சயம் நிருபிப்போம்

   
bookmark
bookmark
bookmark
bookmark
bookmark