மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!


கண் வனப்புக் கண்ணோட்டம்கால் வனப்புச் செல்லாமை;எண் வனப்பு, 'இத் துணை ஆம்என்று உரைத்தல்பண் வனப்புக்
கேட்டார்நன்று என்றல்கிளர் வேந்தன் தன் நாடு
வாட்டான்நன்று என்றல் வனப்பு
கண்ணுக்கழகு கண்ணோட்டம்காலுக்கழகு பிறரிடம் பிச்சை கேட்க  செல்லாமைஆராய்ச்சிக்கு அழகு தன்கருத்துக்களைத் யாருக்கும் பயப்படாமல் துணிந்து சொல்லுதல்இசைக்கு அழகு அந்த இசையை கேட்பவர் நன்று என்று கூறுதல்அரசனுக்கு அழகு அவனது ஆட்சியில் உள்ள குடிமக்கள் அவனைநல்லவனென்று கூறுதல்.
                                                                                           ----- சிறுபஞ்சமூலம்அன்புள்ள தமிழக முதல்வருக்கு வணக்கம். 

தாங்கள் மிகவும் மகிழ்சியாக இருக்கிற தருணம் இது. உங்களுக்கும் உங்கள் கட்சியினருக்கும் வாழ்த்துக்கள். 

தமிழக மக்கள் கொடுத்திருக்கிற மகத்தான தீர்ப்பால் உங்கள் கட்சி மகத்தான வெற்றியை அடைந்துள்ளது. இந்த வெற்றிக்கு தாங்கள் நன்றி சொல்ல வேண்டிய முதல் நபர் கலைஞர் கருணாநிதி என்பதை மறந்துவிடாதிர்கள். அவரது ஆட்சியின் அநியாயங்கள்தான் உங்களுக்கு மகத்தான வெற்றியை கொடுத்துள்ளது. குடும்ப ஆட்சியும், குடும்ப உறுபினர்களின் கொள்ளை அடிக்கும் நோக்கமுமே அவர்களை பாழாக்கியது. ஊடகங்கள்  துவங்கி திரைத்துறை, கல்வி நிறுவனங்கள், ரியல் எஸ்ட்டேட், சாராய விற்பனை, அதிகார மிரட்டல் என அனைத்தையும் பயன்படுத்தியதன் விளைவு அவர்கள் இன்று ஆட்சியை இழந்து நிற்கின்றனர். இமால கொளையடித்த ராசாவை கடைசி வரைக்கும் காப்பாற்ற அவர்கள் செய்த  சாகசங்கள் அம்மபலப்பட்டது இந்த தேர்தலில் மக்களை கொதிக்க வைத்தது. அதைவிட விலைவாசி உயர்வு என்பது மக்களை கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்றது. காத்திருந்தனர் மக்கள். நேரம் வந்தது மொத்தமாய் கணக்கை முடித்தனர். 

அதிகாரம் இருப்பதால் அதை தாங்களும் நக்கிப் பிழைக்க பல அடிவருடிகள் பக்கத்தில் நின்று அதிகாரம் இருப்பவர்கள் செய்வதெல்லாம் அற்புதம் என்று வாழ்த்துச்சொல்லி ஆடுவார்கள். ஆனால் அவர்கள் ஆபத்து வரும் நேரம் உடன் இருக்க மாட்டார்கள். இது உங்களுக்கு தெரியாததல்ல. உங்களது கடந்தகால ஆட்சியின் அனுபவங்களை தாங்களும் தமிழக மக்களும்  அவ்வுளவு எளிதில் மறந்திருக்க வாய்ப்பில்லை. உங்களது கசப்பு மருந்து தொண்டைவரை இறங்கி சொல்லொண்ணா இன்னலுக்கு ஆளானவர்கள்தான் இப்போது உங்களை மிண்டும் நம்பிக்கையுடன் அமர வைத்துள்ளனர்.  நிச்சயம் உங்களிடம் மாற்றம் இருக்கும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு. 

கடந்த ஐந்தாண்டுகால ஆட்சியில் வேலையிலா திண்டாட்டம் தமிழக இளைஞர்களை ஆட்டி படைத்தது. வேலைவாய்ப்பு முகம் என ஆளும் கட்சி பிரமுகர்கள் ஒவ்வொரு ஊரிலும் நாடகம் நடத்தினர். ஆனால் வேலை இல்லாத வாலிபனின் வலியை அவர்களால் புரிந்துக்கொள்ள முடியவில்லை. அந்த இளம் தலைமுறையின் இளைஞர்கள் ஒரு மாற்றத்தை எதிர்ப்பார்த்து உங்களுக்கு வாக்களித்துள்ளார்கள். 2001 ஆண்டு ஆட்சிக்கு வரும்முன் தாங்கள் ஒன்றியத்திற்கு ஒரு தொழிற்சாலை திறப்பேன் என சொல்லித்தான் ஆட்சியை பிடித்திர்கள் ஆனால் அந்த ஐந்து ஆண்டுகளில் அதை செய்யாமல் ஆட்சியை விட்டு போனிர்கள். இம்முறை வேலைவாய்ப்பை உருவாக்க முயற்சி செய்யுங்கள்.

கேபிள் டி.வி.யை அரசுடைமையாக்குவதில் தொடங்கி, மின் தட்டுப்பாடு, மணல் கொள்ளை, அரிசிக் கடத்தல், கலைஞர் காப்பீட்டுத் திட்டத்துக்குப் பதிலாக அரசு மருத்துவமனைகளைச் சீர்படுத்தி மக்கள் நல்வாழ்வுத் துறையை உண்மையிலேயே மக்களின் நல்வாழ்வுக்குத் சேவைசெய்யும் துறையாக மாற்றுவது, காவிரிப் பிரச்னை, முல்லைப் பெரியாறு பிரச்னைக்குத் தீர்வு, இலங்கைவாழ் தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுத்து அவர்கள் நல்வாழ்வுக்கு உத்தரவாதம் அளிப்பது, தெருவுக்குத் தெரு காளான்களாகி இருக்கும் "டாஸ்மாக்' கடைகள், கல்விக் கொள்ளை, உயர் கல்வியில் நடக்கும் ஊழல்கள் என்று தமிழகத்தை எதிர்நோக்கும் அத்தனை பிரச்னைகளையும் கடந்த ஓராண்டாக எல்லா கூட்டங்களிலும் தாங்கள் பேசி வந்துள்ளதால் இவைகளை தீர்க்க முயற்சி செய்வீர்கள் என நினைக்கிறேன். 

ஆனால் ஒரு உண்மையை நாங்கள் தெரிந்தே இருக்கிறோம்.. இந்த முதலாளித்துவ சமுக அமைப்பின் பிரதிநிதியான தங்களால் எங்கள் பிரச்சனையை  தீர்த்தது வைக்க முடியாது ஏனெனில் இதுவல்ல உங்கள் நோக்கம் .. இருப்பினும் எங்கள் பிரச்சனையை தீர்த்தது வைக்கதான் மக்கள் உங்களை தேர்ந்தெடுத்தார்கள் என்பதை மறந்துவிடாதிர்கள். ஏனெனில்  காத்திருந்தனர் மக்கள். இப்போதும் காத்திருக்கின்றனர். மாற்றம் வரும் என்ற நம்பிக்கையுடன். உண்மையான மற்று நிச்சயம்  வரும்.

நன்றி .

6 comments

 1. Anonymous Says:
 2. //வாலிபனின் வழியை //
  isn't it
  வாலிபனின் வலியை ?

   
 3. Anonymous Says:
 4. ஜெவிடம் பணிவான விண்ணப்பமா(பிச்சையா) ?
  வேண்டும் என்று கேட்க மனமில்லை.

  தங்களின் தாழ்மையான வேண்டகோள் ஒரு கனவாக போகாமல், நனவாக வாழ்த்துகள்.

   
 5. நன்றி நண்பா.. பிழையை சரிசெய்துவிட்டேன்...

   
 6. அனானி நண்பா.. ஒருவரிடம் கோரிக்கை வைப்பதே பிச்சையெனில் என்ன சொல்வது? இருக்கட்டும் முதல்ல கேட்போம் தருவார்களா என பார்ப்போம். கேட்டு கிடைக்கவில்லையெனில் தட்டிதான் திறக்க வேண்டும்.

   
 7. Rajan Says:
 8. தோழர் அவர்களே, உங்கள் பதிவு மிக நன்று, கடைசி வரிகளில் உண்மையை நன்றாக உணர்த்தி இருக்கிறீர்கள். மக்கள் ஒரு திருடனிடம் இருந்து சாவியை பிடுங்கி இன்னொரு திருடனிடம் கொடுத்து இருக்கிறார்கள். இதில் நம்முடைய இயக்கமும் ஒரு சர்வாதிகாரியின் கீழ் இருக்கின்றதே என்ற ஒரு அச்சமும், நம்முடைய மக்கள் சார்பான குரலுக்கு அம்மையார் செவி சாய்திடுவாரா? என்பதையும் காலம் பதில் சொல்ல வேண்டும். அம்மாவின் ஊழல்கள் இன்றும் நம் மனதை விட்டு அகலாது இருப்பது நிச்சயம். ஆனாலும் குடும்ப அரசியலக்கு மக்கள் கொடுத்த தீர்ப்பு சரியானதே. வாழ்த்துக்கள்

   
 9. AARU Says:
 10. ஒன்றரை வருடத்தில் சொல்லியதைச் செய்வேன் என்றவர், மீதி 3.5 வருடங்களில் ...

   
bookmark
bookmark
bookmark
bookmark
bookmark