மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!

தமிழக முதல்வர் நேற்று வெளியிட்டுள்ள ஒரு  அறிக்கையில்  திமுக குடும்ப முன்னேற்ற கழகமல்ல என்பதை கோபத்துடன்,  ஆழமாக, ஆணித்தரமாக, அழுத்தந்திருத்தமாக அறிவித்துள்ளார்.....


இது குறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையின் சுருக்கம் :

////////////////"மாநில சுயாட்சி மற்றும் மத்திய- மாநில உறவுகளுக்குக் குரல் கொடுத்த கட்சிகளில் முன்னோடியாக விளங்கியது திமுக. அத்தகைய பாரம்பரியம் கொண்ட ஒரு கட்சி மிகவும் தரம் தாழ்ந்து இன்றைய தினம் ஒரு குடும்ப முன்னேற்றக் கழகமாக மாறி, கொள்ளையடித்த பணத்தைத் தேர்தலிலும் பயன்படுத்தி ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள முயல்வதைப் பார்க்கும்போது மிகவும் பரிதாபமாக இருக்கிறது' -இவ்வாறு பிரகாஷ் காரத் கூறியிருக்கிறார்.
அவர் எழுப்பியுள்ள குடும்ப முன்னேற்றக் கழகம் என்ற குற்றச்சாட்டுக்கு அவரோடு இணைந்து பணியாற்றும் பிருந்தா காரத் விடையாகவும் விளக்கமாகவும் விளங்கும்போது அந்தக் குற்றச்சாட்டை தவிர்த்து, "ஆட்சியைத் தக்க வைத்து கொள்ள முயல்வதைப் பார்க்கும்போது மிகவும் பரிதாபமாக இருக்கிறது' என்ற அவரது மற்றொரு குற்றச்சாட்டுக்கு மாத்திரம் பதில் சொல்ல விரும்புகிறேன். கொள்கை அடிப்படையில் நானும் என் தலைமையில் உள்ள கழகமும் விடாப்பிடியாக இருந்து இலங்கைப் பிரச்னைகளிலும் மத்திய, மாநில உறவுகள் பிரச்னையிலும்- நெருக்கடி கால கொடுமைக்கு ஈடு கொடுத்து இந்தியாவிலேயே சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கும் இடம் தமிழ்நாடு தான் என்று ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட் சென்னை கூட்டத்தில் பாராட்டிய அளவுக்கு நானும் என் தலைமையிலே உள்ள கழகமும் நிமிர்ந்து நின்றபோது அதைப் பார்க்காமல் இருந்து விட்டாரே- அல்லது பார்த்தும் இப்போது அதை மறந்து விட்டாரே காரத் என்பதை நினைக்கும்போது தான் எனக்கு மிகவும் பரிதாபமாக இருக்கிறது என்று கருணாநிதி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்./////////////////

ஆக அய்யா கலைஞர் சொல்ல வரும் கருத்து யாதெனில் அவர் கட்சி குடும்ப ஆதிக்கத்தில் இல்லை. பிரகாஷ் காரத் தன்னுடைய மனைவியுடன் அரசியலில்  பங்கெடுப்பதால் அவருக்கு குடும்ப அரசியல் குறித்து பேச உரிமை இல்லை.
1 . பிரகாஷ் காரத் மனைவியான பிறகு பிருந்தா அரசியலுக்கு வரவில்லை. மாணவ பருவத்தில் பல போர்களங்களில் நின்றவர் அவர். போராட்ட காலங்களில் இணைந்து நின்றவர்கள் வாழ்விலும் இணைந்து நின்றனர். 
2 . அரசியலில் உள்ள ஒருவரின் குடும்ப உறுப்பினர்கள் அரசியலுக்கு வரவேண்டாம் என மார்க்சிஸ்டுகள் எப்போதும் சொன்னதில்லை. குடும்பத்துடன் அரசியலில் ஈடுபடுவது ஆரோக்கியமானது. ஆனால் குடும்பத்திற்குள் கட்சியை முடக்குவதுதான் ஆபத்து திமுகவை போல..
3 . திமுக என்ற மிகப்பெரிய இயக்கம், பல லட்சம் உடன்பிறப்புகளின் தியாகத்தால் வளர்ந்த கட்சி இன்று ஒரு குடும்ப சொத்தாக மாறியதுதான் வரலாற்று சோகம்.
4 . திமுகவில் பதவி வேண்டுமெனில் முதல்வரின் பேரனுடன் கிரிகெட் விளையாடி விசுவாசத்தை காட்டினால்தான் முடியும் என்ற நிலை உருவானது எப்படி? 
5 . சினிமா, சாராயம், ரியல் எஸ்டேட், கல்லூரிகள், ஷாப்பிங் மால்கள், ஹோட்டல்கள், மருத்துவமனைகள், தொலைகாட்சி, ரேடியோ, கந்துவட்டி, கட்டபஞ்சாயத்து என தமிழகத்தின் புகழ் பெற்ற அனைத்து துறைகளிலும் முதல்வரின் குடும்பம் மட்டும் கோலோச்சுவது எப்படி? 
அதனால்தான் இந்த இயக்கத்தை குடும்ப முன்னேற்ற கழகம் என பிரகாஷ் கூறினார். தலைவர் இதற்கு கோபப்படலாமா? 

அடுத்து தலிவர் கூறும் ஒப்பற்ற கருத்து யாதெனில் இலங்கை பிரச்சனையில் விடாப்பிடியாக அவரும் திமுகவும் இருந்ததாம். இவர்களின் செயல்பாட்டை நாடே பார்த்து சிரிக்கும் போதும் இவர்களுக்கு புரிய மறுக்கிறது. உடன்பிறப்புக்கு கடிதம் எழுதுவது போல இலங்கை பிரச்சனைக்கும் கடிதம் எழுதுவதை தவிர தலிவர் வேறு என்ன செய்தார்?

ஒருகாலத்தில் மாநில உரிமைகள் கோருவதில் பக்கத்து மாநில முதல்வராய் இருந்த ஈ.எம்.எஸ் பாராட்டும்படி இருந்த திமுக, அந்த கொள்கையை கைவிட்டு  ராசாவின் அகில உலக புகழ் பெற்ற ஸ்பெக்ட்ரம் கொள்ளை காரணமாக காங்கிரசிடம் சரணாகதி அடைந்ததது. இதைதான் பிரகாஷ் கூறினார் .இந்த கருத்து உலகம் அறிந்த உண்மை, இதை  ஒப்புக்கொள்ள மனம் இல்லாமல் தலைவர் கலைஞர் பிரகாஷ் காரத் மிது பாய்வது ஏனோ?    

இவரது அர்த்தமற்ற கோபம் ஒன்றுக்கு வேண்டுமானால் உதவலாம்.. அவரது குடும்ப பத்திரிக்கையான குங்குமத்தில் அறிக்கையை வெளியிட்டு , அவரது குடும்ப டி.வி யில் 
திமுக குடும்ப முன்னேற்ற கழகமா: கருணாநிதி ஆவேசம்!!! க்குங்குமம்ம்ம்ம் இந்தவாரம்! வாங்கிவிட்டிர்களாஆ ஆஆ.... ...........   என விளம்பரம் செய்யலாம் !!
எவ்வுளோ செஞ்ச குடும்பம் இத செய்யாதா பாஸ்......   

18 comments

  1. பாலா Says:
  2. சூப்பர் சவுக்கடி பாஸ்

     
  3. தோழர் தயவு செய்து எதை பத்திரிகை செய்தியாக கொடுங்கள்

     
  4. Superb!

     
  5. prabhu Says:
  6. ivan nadakam ellam mudivukku varum..........

     
  7. இதை படித்தது இவரின் இன்னொரு திறமையை அறிய செய்ததற்க்கு பல கோடி நன்றிகள்

     
  8. பாலா பின்னூட்டத்திற்கு நன்றி

     
  9. குமரி மாவட்ட அறிவியல் இயக்க தோழர்களுக்கு நன்றி.. அனுப்பலாம்..ஆனால் இதை விட இன்னும் நல்ல கட்டுரைகள் வரும். பின்னூட்டத்திற்கு நன்றி..

     
  10. பிரபு மற்றும் மாதவி தங்களின் தொடர் பின்னூடங்களுக்கு மிக்க நன்றி!

     
  11. நண்பன் அவர்களே,.. இதுல இப்படி ஒரு சிக்கல் இருக்குதா??? ஹா ஹா ஹா... தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி!

     
  12. உண்மையை சொன்னிங்க தோழர் சரியான அடி

     
  13. அனானி தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி

     
  14. கே.ஆர்.சத்தியா ... உண்மையைச் சொல்லதானே நீங்களும் நானும். உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி..!

     
  15. hariharan Says:
  16. குடும்பத்தோடு அரசியல் ஆரோக்கியம்..
    ஆனால் குடும்பம் மட்டுமே அரசியல் ஆபத்தானது.

    நல்ல பகிர்வு

     
  17. எவ்வளவோ அடிச்சுப்பார்த்தாச்சு!அவர் மசியற மாதிரி தெரியலை:)

     
  18. தொடர்ந்து உங்கள் படைப்புகளை வாசித்து வருகிறேன்.தொடருங்கள்.
    நட்புடன்
    தமிழ்

     
  19. ஹரி உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி ..

     
  20. அஹா ... தமிழ்
    கடந்த நான்கு வருடங்களா நான் எதிர்பார்த்த ஒரு பின்னூட்டம் உங்களுடையதுதான் .. நன்றி ...

     
  21. நன்றி ஆனந்தி தங்களுடைய வலைத்தளத்தை பார்த்தேன். நிறைய தளங்களை படித்து மிகவும் சிறப்பாக பதிவிட்டுள்ளீர்கள் வாழ்த்துக்கள்.

     
bookmark
bookmark
bookmark
bookmark
bookmark