மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!மட்ட பந்து கோவாலு நெலம பாத்தியா!
மொட்டப்போட்டு தேசபக்தி படத்த காட்டுறான்.
மசுருவெட்டி கலரடிச்சு மேப்பு போடுறான்!
மேட்ச்ஃபிக்சிங் தகவல்வந்தா சோர்ந்து போகுறான்.

பெப்சிகாரன் பணத்தகொடுத்து நடிக்க வைக்கிறான்!
கிரிக்கெட்ஸ்டாரு அதைவாங்கி குடிச்சித் தொலைக்கிறான்.
விளம்பரத்துல தாவித்தாவி கேட்சு பிடிக்கிறான்!
ஆட்டத்துல ஆடும்போது கோட்டை விடுகிறான்.

விளம்பரத்துக்கு நடுவுலதான் ஆட்டம் நடக்குது!
ஆட்டத்துக்கு பின்னாலதான் பணமும் சிரிக்குது.
டிக்கெட்டுக்கு கியூவில்நிக்க போலிஸ் ஒதைக்குது!
பிளாக்டிக்கெட் காரனுக்கு சலாம் போடுது.

பாரம்பரிய ஆட்டமெல்லாம் தொலைஞ்சு போச்சுது!
மட்டபந்து ஆட்டம் மட்டும் தாவிகுதிக்குது.
காமன்வெல்த் உழல் இப்போ சந்திசிரிக்குது!
உலககோப்பை தடுகிடுதான் காத்து நிக்குது.

நாடுபோகும் நெலமைய-நீ பார்த்து நடந்துக்கோ!
விளையாட்ட விளையாட்டா ரசிக்க கத்துக்கோ.
ராசாக்கள் மந்திரியாகும் நாடு இதுதான்பா!
எதிர்க்கலனா தேசத்துக்கே மொட்ட தானப்பா.  1 Responses to ஏய் கிரிகெட் பைத்தியமே .. கொஞ்சம் கவனி !!

  1. எக்சாமுக்கு படிக்கிறதே விளம்பர இடைவேளைல தானே!

     
bookmark
bookmark
bookmark
bookmark
bookmark